பொறாமை கொண்டவர்களை எப்படி அறிந்து கொள்வது?
நாம் வாழும் வீட்டிலும் சரி, வெளியே வேலைக்கு செல்லும் இடத்திலும் சரி நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதில் மிகமிக முக்கியமான ஒன்று என்னவென்றால் "நம்மைவிட மற்றவர்கள் முன்னேற விடக் கூடாது" என்ற எண்ணத்தில் பலர் உள்ளனர் என்பது தான். இதனால் எத்தனை பேர் மனநிலை பாதித்து வருகிறார்கள் தெரியுமா? மிக மிக கவலையான விஷயம் தான். இந்த பொறாமை என்ற கெட்ட குணம் இருந்தால் தான் "மற்றவர்கள் முன்னேற கூடாது" என்ற எண்ணம் வரும்.
பொறாமை கொண்டவர்களை எப்படி அறிந்து கொள்வது? நீங்கள் எவ்வளவு நல்ல விஷயத்தை செய்தாலும் சரி அதை விட்டுவிட்டு குறை கூறிக் கொண்டே இருப்பார்கள். அதாவது தவறை மட்டும் கண்டுபிடிக்கப் பார்ப்பார்கள். நீங்கள் செய்த நல்ல விஷயத்தை கண்டு மகிழ முடியாது. மனம் திறந்து பாராட்ட முடியாது. முகமே வாடிவிடும் அதை வைத்து தெரிந்து கொள்ளலாம். பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் நல்ல எண்ணம் இருக்காது. அதைக்கண்டு பல பேர் வருத்தம் அடைகிறோம்.
1. பொறாமை எண்ணம் கொண்டவர்களிடம் உங்கள் வளர்ச்சியை சொல்லத் தேவையில்லை, ஏனென்றால் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளும் மனம் அவர்களிடம் கிடையாது. அதனால் அவர்களிடம் உங்களை நிருபிக்க தேவையில்லை.
2.பொறாமை எண்ணம் கொண்டவர்கள் எவ்வளவு தான் உங்களை குறைவாக நினைத்தாலோ அல்லது கெடுக்க நினைத்தாலோ அது நிச்சயம் நடக்காது என்பதை மட்டும் புரிந்து கொண்டால் போதும். நமக்கு என்ன கிடைக்க இருக்கிறதோ அது கண்டிப்பாக கிடைக்கும்.
3.அவர்களை இரண்டு வார்த்தை புகழ்ந்து பேசினால் போதும் அவர்கள் வாயை அடைக்க செய்துவிடலாம்.(இதெல்லாம் சின்ன டிப்ஸ் தான்). இதையே உபயோகிக்க தேவையில்லை.
4.அதனால் அவர்களை பார்த்து பயப்படத்தேவையில்லை. அவர்கள் என்றும் முன்னேற மாட்டார்கள் என்பது தான் உண்மை.அவர்களின் நிலையை கண்டு பரிதாபப்படவேண்டும்.
No comments:
Post a Comment