Saturday, January 3, 2015

எதனால் மறந்தார் ஜெயலலிதா , எம் ஜிஆரின் வார்த்தைகளை...?

"உன்னை அறிந்தால்…நீ உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்.."
என்று எப்போதோ சொல்லி விட்டுப் போய் விட்டார் எம்.ஜி.ஆர்...!

ஆனாலும் எம்.ஜி.ஆரின் இந்த வார்த்தைகளை கடைப்பிடித்து தன்னையும் , தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களையும் கவனிக்க மறந்ததால் , ஜெயலலிதா சந்தித்த கஷ்டங்களும் , நஷ்டங்களும் ஏராளம்...!

எதனால் மறந்தார் ஜெயலலிதா , எம் ஜிஆரின் வார்த்தைகளை...?

தோழியால் வந்த பிரச்சினைகள் ஒரு பக்கம்..
தொலைக்காட்சியை கவனிக்க வேண்டிய கட்டாயம் மறு பக்கம்..

ஆம்...விடுபட முடியாத அளவுக்கு வேலைப் பளு இருந்தாலும் , விடாமல் ஜெயா டி.வி. நிகழ்சிகளைக் கவனித்து வருவாராம் ஜெயலலிதா ...

ஜெயா டிவியில் செய்தி வாசிப்பவர்கள் “சுப்பிரமணிய சாமி” என்று சொன்னால் ...”அது சுப்பிரமணிய சாமி இல்லை… சுவாமி” என்று திருத்தம் சொல்வாராம்...
அது மட்டும் அல்ல... “ஹில்லாரி இல்லை ஹிலாரி”....அப்புறம் “ சோ இல்லை சோ ராமசாமி”..இப்படியெல்லாம் கவனித்து திருத்தம் கொடுப்பாராம் ஜெயலலிதா ..

உலக விஷயங்களை உன்னிப்பாகக் கவனித்து திருத்திய ஜெயலலிதா , தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை உணர்ந்து திருத்துவதில் தவறு செய்து விட்டார்...

அதனால் என்ன..?
இப்போது தனிமையில் இருந்து ,தன்னைத் தானே ஆய்வு செய்து வரும் ஜெயலலிதா , நிச்சயம் தன்னம்பிக்கையோடும் தளராத உறுதியோடும் வெளிவருவார்...

“பட்டிக்காடா பட்டணமா?” படத்தில் ஒரு பாடலில் சிவாஜி , ஜெயலிதாவுக்கு கொடுத்த அட்வைஸ்தான் நினைவுக்கு வருகிறது...

“யாரிடம் குறை இல்லை
யாரிடம் தவறில்லை
வாழ்வது ஒரு முறை
வாழ்த்தட்டும் தலைமுறை வா…வா..வா..வா..”

# எம்.ஜி.ஆரும் ,சிவாஜியும் சொல்வது இருக்கட்டும்...
எப்போதோ திருமூலர் திருமந்திரத்தில் சொல்லி விட்டுப் போய் விட்டார்...
நாம்தான் அதை மறந்து விட்டோம்...

“தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்”


from - John Durai Asir Chelliah

No comments:

Post a Comment