செயல்படுவிதைவிட செயல்திட்டம் மிகவும் முக்கியம்.
நம் எல்லோரிடமும் 24 மணி நேரமிருக்கிறது அதனை எவ்வாறு எப்படி பயனுள்ளதாக செலவிட போகிறோம் என்பதனை பொறுத்தே அந்த நாள் இனிய நாளா அல்லது மற்றொரு சாதாராண நாளா என்பது அமையும்
எப்படி அமைகிறது என்பதனை விட எப்படி அமைத்துக்கொள்ள போகிறோம் என்பதே இங்கே கேள்வி
முழு நாளுக்கான செயல்திட்டம் - அலுவல் திட்டம் நம்மிடம் காலை 6.45 க்குள் தயாராக இருக்க வேண்டும்.
எத்தனை மணிக்கு என்ன வேலை யாரை பார்க்க போகிறோம், எவ்வளவு நேரம் எதனை எப்படி செய்ய போகிறோம். குடும்பத்திற்க்கு எவ்வளவு நேரம், நண்பர்களுக்கு எவ்வளவு நேரம், பேஸ்புக்கிற்கு எவ்வளவு நேரம், டிவி பார்க்க எவ்வளவு நேரம், ஒழுங்காய் நமக்கான வேலையினை எவ்வளவு நேரம் செய்ய போகிறோம் எல்லாம் முடிவு செய்து ஒரு தாளில் எழுதிக்கொள்ளுங்கள்.
நமக்கு ஒரு செயல்திட்டம் இருக்கும்போது, அதை நடைமுறைப்படுத்த ஒரு உற்சாகம் வரும். ஒவ்வொரு மணியையும் எதிர்கொள்ள ஆர்வம் ஏற்படும். அதாவாக நடக்குமெனும் அசட்டு தனம் குறையும்
நேற்றைய நாள் நன்றாக இல்லை , இன்று நன்றாக இருக்குமா என்று அரை நம்பிக்கையில் பெருமூச்சு விடுவதைவிட இன்று என்ன செய்ய வேண்டும் என்று திட்டமிடுங்கள் அது இன்றைய தினத்தை சுவாராஸ்யமாக மாற்றும்
செயல்திட்டத்தின்படி நடக்க முயற்சி செய்யுங்கள், அதில் 40 % நல்லபடியாக அமைந்தால் நாம் ஜெயிக்க ஆரம்பித்துவிட்டோம் என அர்த்தம்
80 முதல் 90 % நடக்கும் நாள் தூரத்தில் இல்லை
No comments:
Post a Comment