Thursday, January 8, 2015

பண பிரச்சனையை தீர்க்கும் மகாலட்சுமி மந்திரம்

பண பிரச்சனையை தீர்க்கும் மகாலட்சுமி மந்திரம்
(share) செய்யுங்கள்) .....
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்ரீம் ஓம் ஃபட்
இந்த மந்திரத்தை ஒரு வளர்பிறை புதன்கிழமை இரவு 10 மணிக்குமேல், குளித்து முடித்து சிவப்பு நிறம் கொண்ட ஆடையணிந்து, நெற்றியில் சந்தனம், குங்குமத்தால் பொட்டிட்டு, தெற்குப் பார்த்து அமர்ந்து பூஜையைத் தொடங்க வேண்டும். நாமும் சிவப்பு நிற விரிப்பின் மீதே அமர வேண்டும்.
ஒரு மரப்பலகை மீது சிவப்பு நிற விரிப்பை விரித்து அதன் மீது ஒரு பித்தளைத் தாம்பாளத் தட்டு வைத்து அதன் மத்தியில் குங்குமத்தால் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து கொள்ள வேண்டும். அதன்மேல் ஒரு ஸ்ரீ மகாலட்சுமி யந்திரத்தையும், வலம்புரிச் சங்கையும் வைக்க வேண்டும்.
குங்குமம், அட்சதை, ரோஜா இதழ்கள் ஆகியன கொண்டு அவற்றை அலங்கரித்துப் பூஜை செய்ய வேண்டும். முதலில் விநாயகர் வழிபாடு, பிறகு குரு வணக்கம் ஆகியவற்றை முடித்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட மந்திரத்தை 1008 முறை ஜபம் செய்ய வேண்டும்.
ஜபம் செய்ய தாமரை மணி மாலையைப் பயன்படுத்த வேண்டும். புதன் இரவு, வியாழன் இரவு, வெள்ளி இரவு ஆகிய மூன்று நாட்களும் செய்து முடித்து விட்டு சனிக்கிழமை வரும் சுக்ர ஹோரையன்று ஸ்ரீ மகாலட்சுமி யந்திரம், வலம்புரிச் சங்கு ஆகியவற்றை நமது வியாபார ஸ்தலங்களிலோ, அலுவலகத்திலோ,
தொழிற்கூடங்களிலோ, அல்லது நமது வீட்டின் பூஜையறையிலோ வைத்து தினமும் தூப தீபம் காட்டியும், மேற்கண்ட மந்திரத்தை 11 முறை உச்சாடனமும் செய்து வந்தால் பணம் பல வித வழிகளில் நிச்சயம் வந்து சேரும்.

No comments:

Post a Comment