Friday, January 9, 2015

பத்துமடங்கு பணம் அதிகமாகக் கிடைக்க செல்வம் செழிக்க மந்திரம்

பத்துமடங்கு பணம் அதிகமாகக் கிடைக்க செல்வம் செழிக்க மந்திரம்
(share) செய்யுங்கள்)
மந்திரம்
ஸ்மரம் யோநிம் லக்ஷ்மீம் த்ரிதயமித-மாதௌ தவ மநோ:
நிதாயைகே நித்யே நிரவதி-மஹாபோக-ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி-குண-நிபத்தாக்ஷ-வலயா:
ஸிவாக்நௌ ஜுஹ்வந்த: ஸுரபிக்ருத-தாராஹுதி-ஸதை:
-----------------------------------------------------------------------------------
மோக போக விழைவினார், உன் மூல வித்தை தன்னின் முன்னாக,
மாரன், யோனி, பொன், அணங்கு, அமைத்து நெய்யினால்
யோகம் ஆர் சிவத்தழற்குள், ஓமம் உற்று, விமலையே
தியாக மா மணிக் கொடு, அக்க வலயம் உள் செவிப்பரே.
பொருள்: ஹே தேவியே! உன் பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் முதலில் காம பீஜமான க்லீம், புவனேஸ்வரி பீஜமான ஹ்ரீம், லக்ஷ்மி பீஜமான ஸ்ரீம் ஆகிய மூன்று அக்ஷரங்களையும் சேர்த்து இடைவிடாமல் ஜபித்து அதன் மகிமையை உணர்ந்த சிலர், தொடர்ந்து ஜபம் செய்து, சக்தி முக்கோணத்திலுள்ள அக்னியில் (சிவாக்னி) காமதேனு தந்த நெய்யைப் போன்ற மனமகிழ்ச்சியைக் கொண்டு எண்ணற்ற அர்ப்பணங்களைச் செய்து ஆராதித்து வருகிறார்கள்.
ஜபமுறையும் பலனும்
45 நாட்கள் தினந்தோறும் காலையில், கிழக்கு முகமாக அமர்ந்து மேற்கண்ட ஸ்லோகத்தை 1000 தடவை ஜபித்து வந்தால் செல்வம் மேன்மேலும் வளரும். மற்றும் இந்த சுலோகத்தைப் பாராயணம் செய்யும் போது, தம் கையில் மூடி வைத்துக் கொண்டு மந்திரம்,ஜபித்து வந்தால் அந்த பணத்தைப் போல் பத்துமடங்கு பணம் அதிகமாகக் கிடைக்கும்

DrStar Anand

No comments:

Post a Comment