குழந்தைகளுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்
எந்த வயதில் குழந்தைகளுக்கு யோகாசனம் செய்யக் கற்றுத் தரவேண்டும்? அவர்களுக்குரிய பிரத்யேக யோகாசனங்கள்
இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய
இந்தியப்பண்பாட்டில் யோகாசனத்துக்கு முக்கிய
இடம் உண்டு. நம் சித்தர்கள் கண்டுபிடித்த இது, கால ங்களைக் கடந்து நிற்கும் ஓர் அறிவியல்முறை ஆகும்.
ஆரோக்கியமற்ற குடும்பச்சூழ ல், இணக்கமற்ற சக மாணவர் கள், புரிந்தகொள்ளாத பெற் றோர், பாடத்திட்டப்பளு, தேர் வுகள் தரும் அழுத்தம் போன்ற வற்றால் இந்தக் காலத்து மா ணவர்கள் மன அழுத்த பாதிப்பால் ரொம்பவே அவதி ப்படுகிறார்கள். தொடரும் மன அழுத் தம் காரணமாக உடலில் ஏற்படுகிற ரசாயன மாற்றங்கள் உடல் உறுப்புக ளையும் சேதப்படுத்துகின்றன. இத னால் இளம் வயதிலேயே உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், தைராடு பிரச்னை, முதுகுவலி, கால்வலி என் று நோய்களின் வரிசை நீள்கிறது. இ திலிருந்து விடுதலைபெறவேண்டுமா னால் மாத்திரை மருந்துகள் மட்டும் போதாது; யோகா சனங்களும் தேவை.
குழந்தைக்குஇரண்டு வயதாகிவிட்டாலேயோகப்பயிற் சிகளைக் கற்றுத்தர ஆரம்பி த்துவிடலாம். யோகாவைப் பொறு த்தவரை முறையாக ப் பயிற்சிகளைச் செய்தால் மட்டுமே உரிய பலன் கிடை க்கும். எனவே, தரமான பயி ற்சியாளர் உதவியுடன்யோகாவைக் கற்றுக்கொள்வது நல்லது.
தொடக்கத்தில்எளிய அசைவுகள் உ ள்ள பயிற்சிகளை மட்டுமே செய்ய வேண்டும். பயிற்சி ஒன்றுக்கு ஒரு நிமிடம் வீதம் சுமார் 15 நிமிடங்க ளுக்குச் செய்தால் போதும். யோகப் பயிற்சிகளை வெறும் வயிற்றில் செய்ய வேண்டும்.
சூரிய நமஸ்காரம், பிராணாயாமம், தனுராசனம், சுகாச னம், சவாசனம், சேது பந்தாசனம், புஜங்காசனம், அர்த்த சர்வாசனம், சிங்காசனம், பிரம்மாசனம், பத்மாச னம். போன்றவற்றைத் தினமும் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி செய் ய வேண்டும். முதன்மை ஆசனங்க ளைச் செய்வதற்கு முன்பு கழுத்தை அசைப்பது, கை, கால்களை நீட்டி மடக்குவது, முதுகை வளைத்து, நிமிர்த்துவது போன்ற ஆரம்பகட்ட தசைப்பயிற்சிகளைச் செய்து கொள்வது நல்லது.
குழந்தைப் பருவத்திலேயே யோகா கற்றுக்கொண் டால், உடல்தசைகளின் இயக்கம் எ ளிதாகும். முகத்தில் தெளிவு பிறக்கும். மூட்டுகள் நெகிழ்வு த்தன்மை பெறும். சரியான முறையில் மூச்சுவிட முடி யும். மூச்சு சுத்தமாகும். இதன்மூலம் ரத்த மும் சுத்தமாகும். செய்யும் பணியில் கவன ம் கூடும். கவனச் சிதறல் மறையும். நினை வாற்றல்அதிகரிக்கும். ஆரோக்கிய உணவு முறையைப் பின்பற்றுவார்கள். இதனால் உடல் ஆரோக்கியம் பலப்படும். தன்னம்பிக்கை பெ ருகும். மனதில் அமைதிகுடிபுகு ம். மன அழுத்தம் மறையும். எரி ச்சல், கோபம், வெறுப்பு போன்ற கெட்ட குணங்கள் விலகும். குழ ந்தைகளின் இன்றைய ஆரோக் கியம் மட்டுமல்ல எதிர்கால ஆரோக்கியமும் காக்கப்ப டும்.
=> காரக்குறிச்சி நாராயணன்
No comments:
Post a Comment