உங்கள் லட்சியத்தை வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டியது முக்கியமானது.
உங்கள் லட்சியத்தை வெளிப்படையாக எழுதி வைக்க வேண்டியது முக்கியமானது. என் வீட்டின் லட்சியத்தை நான் திட்ட அறிக்கையாக வைத்திருக்கிறேன். அது எங்களின் எதிர்காலத் திட்டமாக இருக்கும்.
வாழ்வின் ஊக்கம்
அந்தத் திட்ட அறிக்கை நாம் வாழ்க்கையைப் பற்றி ஊக்கமான வார்த்தைகளில் பேசப்போகிறோம் என்பதைச் சொல்கிறது. கடின உழைப்பு மற்றும் தளராத மனஉறுதி மூலமாகப் பெரும் செல்வத்தைச் சேர்ப்போம் என்பதையும், பணத்தைச் சரியான வழிகளில் முதலீடு செய்வோம் என்பதையும், அதன் வாயிலாக நமது குழந்தைகளின் குழந்தைகளும் மரபு வழியாகப் பெரும் செல்வத்தைப் பெறுவார்கள் என்பதையும் அது கூறுகிறது.
இதை வாசிப்பவர் இளையராக இருக்கலாம். வயதானவர்களாக இருக்கலாம். ஆணாக, பெண்ணாக, கருப்பராக, வெள்ளையராக அல்லது ஆசிய நாடுகளைச் சேர்ந்தவராக இருக்கலாம். நீங்கள் யாராக இருந்தாலும் சரி, உங்கள் லட்சியத் திட்டத்தை வெளிப்படையாக எழுதிவையுங்கள். அதை உரக்கப் படியுங்கள், மன உறுதிப்பாட்டுடன் ஒருநாளில் அதனை இரண்டு முறையாவது படியுங்கள். எதை மன உறுதியுடன் பேசுகிறீர்களோ அது உங்களை நோக்கி வருகிறதா என்று பாருங்கள்.
மீண்டும்
இதை உரக்க வாசியுங்கள்: “மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!” மீண்டும் வாசியுங்கள். “மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!” மீண்டும் வாசியுங்கள். “மற்றவர்கள் செய்யாத ஒன்றை நான் இன்று செய்வேன். அதனால் பிறருக்குக் கிடைக்காத நாளை எனக்குக் கிடைக்கும்!”
மதிப்பிற்குரியவர்களே, இது மிகவும் எளிமையானது. உங்களால் முடியும் என்று நீங்கள் சொன்னீர்களானால் உங்களால் முடியும். உங்களால் முடியாது என்று சொன்னால் முடியாது. உங்கள் உதடுகளிலிருந்து வரும் எல்லா வார்த்தைகளும் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். எந்த எதிர்மறையான எண்ணமும் உங்களைச் சிறையில் முடக்கும் என்று எண்ணுங்கள். எதிர்மறையான மனிதர்களிடம் இருந்து விலகி இருங்கள். வெற்றிகரமான, நேர்மறையான, ஆற்றல்மிக்க மனிதர்களுடன் உறவை வைத்துக்கொள்ளுங்கள்.
சாத்தியம்தான்
என்னால் முடியும் என்று சொல்வதை விட அது சாத்தியம் என்று சொல்வதுதான் முக்கியமானது என்று லெஸ் ப்ரவுன் என்ற அமெரிக்கத் தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஒருமுறை சொன்னார்.
நான் அப்படிப்பட்ட ஒரு நபர்தான். “வேறு ஒருவரால் செய்ய முடியுமென்றால், என்னாலும் செய்ய முடியும்”. இன்னொருவருக்குச் சாத்தியமாகும் ஒன்று எனக்கும் சாத்தியம்தான். நீங்கள் தான் அந்தச் சாத்தியம்! சிகரத்தை எட்டுங்கள். ஆழ உழுதுகொண்டே செல்லுங்கள். தொடர்ந்து முன்னேறுங்கள். அது சாத்தியம் என்று சொல்லுங்கள்!
வெற்றி நமக்குத்தான்.
No comments:
Post a Comment