ஒரு நண்பன் என்பவன் உங்களை அழிக்கக்கூடிய அளவுக்கு உங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவன். ஆனால் அழிக்க மாட்டான்.
நீங்கள் உங்கள் மீதே நம்பிக்கையிழக்கும்போதும் உங்களை நம்புவன்தான் நண்பன்.
ஒரு நண்பன் என்பவன் கடவுள் அனுப்பியதுபோல எல்லா வகையிலும் உதவுபவன். எதிரி என்பவன் உங்களை உங்கள் லட்சியத்தை அடைய விடாமல் செய்பவன். நண்பன் உங்களை நல்வழி நோக்கித் தள்ளக்கூடியவனாக இருப்பான். எதிரி உங்களை நல்வழியிலிருந்து விலக்குபவனாக இருப்பான்.
ஒரு நண்பன் என்பவன், ஒரு நபராகவோ, இடமாகவோ அல்லது பொருளாகவோ இருக்கலாம். உங்களை
மேலும் நல்ல மனிதனாக மாற்றுவதற்கு உதவுவான். நீங்கள் போகும் இடங்கள் உங்களைச் சிறப்பான நபராக மாற்றியுள்ளனவா? நீங்கள் யாருடன் பழகுகிறீர்களோ அவர்கள் உங்களைச்
சிறப்பான நபராக மாற்றுகிறார்களா?
யாருடன் வெற்றிகளைக் கொண்டாட முடியாது?
நான் ஒரு புதிய வகைக் காரை வாங்கியபோது என் மனக் கிளர்ச்சியை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ள விரும்பினேன். நான் என் மனைவியை முதலில் அழைத்தேன். அவள் என்னைக் குறித்து மிகவும் பெருமைப்பட்டாள். அவள் என் உண்மையான தோழி. அவள் என்னைக் கொண்டாடினாள்.
எனது நிலையைப் பார்த்து உண்மையிலேயே சந்தோஷப்படும் மற்றொரு நபரைப் பற்றி யோசிப்பதுகூட எனக்குச் சவாலாக இருந்தது. புதிய காரைச் சில குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் காண் பித்தேன். ஆனால் ஒரு சிலரே என்னைக்குறித்துப் பெருமைப்பட்டனர்.
நான் அதற்காக ஏங்கவில்லை. ஆனால் ஒரு நாய்க்குக்கூட அவ்வப்போது தலையில் ஒரு செல்லத் தட்டு தேவைப்படுகிறது.
என் சந்தோஷத்தை யாரிடம் பகிர்ந்துகொள்ளலாம், யாருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்பது ஏற்கனவே என் ஆழ்மனதிற்குத் தெரிந்தே இருந்தது. யாருடன் நான் என் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள முடிந்ததோ அவர்களிடத்தில் நான் நானாகவே இருந்தேன். யாருடன் என் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள முடியவில்லையோ அவர்களிடம் என் வெற்றிக்காக மன்னிப்புக் கோரும் விதத்தில் நடந்துகொண்டேன். அதாவது, நான் ஏதோ தப்பு செய்துவிட்டு அவர்களிடம் விளக்கம் அளிப்பதைப் போன்ற மனநிலையை உணர்ந்தேன்.
கார் பற்றியும் அதன் வசதிகள் பற்றியும் பேசவில்லை. எப்படி மலிவான விலைக்கு அதை என்னால் வாங்க முடிந்தது என்று விளக்கினேன். நான் வெற்றி பெற்று அதன் விளைவாக கார் வாங்கியதாகச் சொல்லவில்லை. பேரம் நன்றாக இருந்ததால் வாங்கியதாகச் சொன்னேன்.
உங்கள் வெற்றியைப் பற்றிப் பேசாமல் நீங்கள் அடைந்த பொருளின் மதிப்பைக் குறித்தும் அதை ஏன் வாங்கினேன் என்பது குறித்தும் ஒருவரிடம் விளக்க முனைகிறீர்கள் என்றால் நீங்கள் ஒரு எதிரியுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். நன்றாக கவனியுங்கள். இந்தக் குறிப்பிட்ட வகை எதிரிகள் உங்களது நண்பர்கள் அல்ல என்று நான் சொல்லவில்லை. அவர்கள் உண்மையான நண்பர்கள் இல்லையென்று சொல்கிறேன். அவர்களுடன் இருக்கும்போது நீங்கள் இயல்பாக இருக்க முடியாது. நீங்கள் உங்களின் லட்சியத்தை அடைய விடாமல் அவர்கள் தடுப்பார்கள். உங்கள் இலக்கை அடைவதில் உங்களைத் தாமதம் செய்வார்கள்.
அமெரிக்க தன்னம்பிக்கைப் பேச்சாளர் ஜானி டி. விம்ப்ரே எழுதி சக்சஸ் ஞான், சென்னை வெளியிட்டுள்ள from the HOOO to doing GOOD எனும் நூலிலிருந்து தொகுப்பு : நீதி
No comments:
Post a Comment