"கோடிக்கணக்கான பிரபஞ்சத்தில் ஏதோ ஒரு பிரபஞ்சத்தில் கோடிக்கணக்கான சூரியக் குடும்பத்தில் ஏதோ ஒரு சூரியக் குடும்பத்தில் பல்லாயிரக் கணக்கான தொலைவிற்கு அப்பால் ஏதோ ஒரு புள்ளிய போன்று இருக்கும் இவ்வுலகத்தில் இருக்கும் நாம் ஏன் இப் பிரபஞ்சத்தில் தோன்றி இப்பிரபஞ்சமாகவும், இப்பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இருக்கும் நாம் ஏன் சுக போக வாழ்க்கையில் ஆழ்ந்து அகந்தை கொண்டு இருக்கும் வரை, நமக்கு தெரிந்த விஷிய ஞானம் யாவும் முட்டாள் தனமானமாகும். நமக்கு மட்டுமே பகுத்தறிவு இருக்கிறது என்பதும், நாம் மட்டுமே படைப்பதற்கும் சிந்திப்பதற்கும் நம் இனத்திற்கே உரித்தானது என்று நினைப்பது அறிவீனமாகும். நம்மை மட்டுமே நினைப்பது சுய நலமாகும். நம்மைவிட ஆறாவது அறிவைவிட ஏழாவது எட்டாவுது அறிவு உள்ளவர்கள் யாராவது இருக்கலாம் அங்கு நமது ஞானங்கள் அனைத்தும் தவிடு பொடியாகலாம். மனிதன் கண்டுபிடித்த அனைத்தும் மதம் மொழி கலாச்சாரம் தூள்தூளாகலாம், நம்மைவிட ஒருபடி மேலாக மதம் மொழி இனம் அனைத்திலும் உட்சபட்ச நிலையை அடைந்தவனாக கூட இருக்கலாம் இருப்பினும் உனது மனம், தான்னென்று அகந்தையிலும் சிந்தனையில் வீழ்ந்து அற்ப சுகத்தில் மடிந்தும் போகலாம். நீ பிரபஞ்சமாக மாறாதவரை, நீ நீயாக இருப்பதை உணராதவரை நீ (உனக்குள்) மாபெரும் ஞான வெடிப்புக்குள் உள்ளாகத வரை உன்னைவிட அறிவிலோ செயல்களிலோ விந்தையான பிரபஞ்ச மனிதர்கள் உற்பத்தியாகலாம். நாமும் நம்மை மறந்து அடிமையாக கூட மாறி போகலாம். இருந்தும் என்ன பயன், முட்டாள் தனமான குறியீடுகளையும், பழக்கவழக்கம், கலாச்சார மோதல்களில் விழுந்து மடிந்து கொண்டே இருப்பாய் இருப்பதுதான் சமுதாயத்தின் வழக்கமாகவே இருக்கிறது. நீ செய்யும் செயல்களுக்கு ஒரு சாக்காடு கற்பித்துக் கொண்டு இருப்பாய். அப்பொழும் குழு மனபான்மையில் இருப்பாய். தேடலில் இருந்த ஞானிகளின் உபதேசங்களும், வியாக்கனம், உன் உலகில் உட்சபட்ச நிலையில் நிகழ்ந்த நிகழ்வுகளை மையப்படுத்தி ஒப்பிட்டு பார்த்துக் கொண்டு அதே கற்பிதத்தில் லயத்து மாண்டு போவதுதான் மிச்சம். உன்னை உணர வழிகளை காணத வரை நீயும் மனிதன் என்ற போர்வையில் இருக்கும் விழங்கினத்தின் கீழாய் வாழ்ந்து இருப்பாய் வாழ்ந்து கொண்டும் இருப்பாய். உன்னையோ உனக்கான உலகமோ நீ நம்பிய கடவுளும் கூட உன் இறுதிச் சடங்கில் இருக்காது என்பதை நீ உணராத வரை. அணைத்தும் எட்டாத கனியாகவே இருக்கும்".
"சொல்லுவது அறியேன் வாழி முறையோ தரியேன் நாயேன் தான் எனைச் செய்தது தெரியேன் ஆ ஆ செத்தேன் அடியேற்கு அருளியது அறியேன் பருகியும் ஆரேன் விழுங்கியும் ஒல்லகில்லேன்"
- திருவண்டப் பகுதி திருவாசகம்
- திருவண்டப் பகுதி திருவாசகம்
No comments:
Post a Comment