Tuesday, June 30, 2015

யாருக்கு அதிக மரியாதை தர வெண்டும்?

நல்லவர்களை மதித்து வாழ்வோம்..
யாருக்கு அதிக மரியாதை தர வெண்டும்? - www.v4all.org
எல்லோருக்கும் நாம் மரியாதை தர வேண்டும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இருந்தாலும் நாம் சமுதாயத்தில் சிலருக்கு அதிக மரியாதை அளிக்கிறோம் என்பதையும் மறுக்க முடியாது. ஒரு சிலரை நாம் மதிப்பதே இல்லை என்பதும் ஒரு கசப்பான உண்மை தானே?
பொதுவாக நாம் பணம் இருப்பவரை இயல்பாக மதிக்க ஆரம்பித்து விடுகிறோம். பெரிய பதவியில் இருப்பவரை நாம் ரொம்பவே மதிப்போம்.புகழ் உள்ளவரையும் நாம் மதிக்கின்றோம். ரஜினிகாந்த், சச்சின் டெண்டுல்கர், இளைய ராஜா, பாடகி ஜானகி போன்றோரையும் மிகவும் மதிக்கின்றோம்.
நல்ல மனிதர்களை நாம் மதிக்கின்றோமா?
முன்பெல்லாம் பெரியவர்களை நாம் நன்கு மதித்து வந்தோம். பண்டைய காலங்களில் ஆன்மிகவாதிகளை மக்கள் மிகவும் மதித்திருக்கிறார்கள். தசரதன் போன்ற பேரரசர்கள் கூட விசுவாமித்திரர், வசிஷ்டர் போன்ற மாமுனிவர்களை சிரம் தாழ்த்தி வணங்கியிருக்கிறார்கள். வேத வியாசர் குரு வமிச மன்னர்களால் பெரிதும் மதிக்கப்பட்டார்.
ஆன்மிகவாதிகள் தன்னை உணர்ந்தவர்கள். கடவுளை அறித்தவர்கள். இந்த பிரபஞ்சத்தையே காப்பவர்கள். ஆகையால் அதிக அளவில் மதிக்க ப்படவேண்டியவர்கள் ஆன்மிகவாதிகளே. இன்று ஆசிரமங்களில் காவி அணிந்து பாவிகளாய் வாழும் போலிச் சாமியார்களை ஆன்மிகவாதிகள் என்று தயவு செய்து நினைத்து விடாதீர்கள். .
பணிவுடையவர்களை, பிறருக்காக வாழ்பவர்களை, பெரியவர்களை மதிப்பவர்களை நாமும் மதிக்கலாம்.
தீய வழிகளில் பணம் சம்பாதித்தவன் என்று தெரிந்தும் பணக்காரனை கூச்சமே இல்லாமல் நாம் மதிப்பது கேவலமான செயல் அல்லவா?
அன்பானவர்களை, பண்பானவர்களை, நல்லவர்களை மதிப்போம். பணக்காரன் நல்லவனாயின் அவனையும் மதிப்போம்..


வாசியை அறிந்தவன்'s photo.

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?
காமம் என்பது எல்லா உயிரினங்களின் இயல்பான ஒரு உணர்வு ஆகும். இயற்கையான உணர்வு என்று கூட சொல்லலாம்.
பருவ வயது வந்தவுடன் நம் உடலில் உள்ள சில பல ஹார்மோன்கள் 'ஓவர்டைம்' போட்டு வேலை செய்யும்போது நாம் தடுமாறித்தான் போகின்றோம். மன்மதலீலையை வென்றார் உண்டோ?
சில பெரிய மனிதர்கள் குறிப்பாக ஆன்மிகத்தில் உள்ளவர்கள் காமத்தை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா? அது நிஜமாகவே முடியுமா? மேலே படியுங்கள்.....
சில ஆன்மிக குருமார்கள் காமத்தைக் கட்டுபடுத்த வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். விந்தை அடக்கி மேல் நோக்கி செலுத்தினால் நன்மைகள் கோடி உண்டு என்று சொல்லுகின்றார்கள். விஞ்ஞானத்தில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. காம உணர்ச்சி தவறானது என்றால் இயற்கை அந்த உணர்வை அத்தனை ஜீவராசிகளுக்கும் கொடுத்திருக்குமா என்கின்ற கேள்வி எழுகின்றது. இயற்கையான எதுவும் தவறாக இருக்க முடியாது என்பது விதி. அப்படி பார்க்கின்ற போது காமம் தவறில்லை என்றே தோன்றுகிறது.
ஆனால் அதற்காக 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே இருத்தலும் தவறு தான். காமத்தை அடக்கக் கூடாது என்பது பொது விதி. ஆனால் கல்யாணம் வரை நாம் காத்து இருக்கத் தான் வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் காமக் களியாட்டங்களில் முழுமையாக ஈடுபட்டு இன்பத்தை துய்க்கலாமே?
உடலின் எந்த தேவைகளையுமே நாம் அடக்கக் கூடாது என்பதே நிஜம். காமமும் அப்படியே. ஆனால் சில நேரங்களில் நமக்குக் கட்டுப்பாடு நிச்சயம் தேவைப் படுகின்றது என்பது உண்மை தான். அந்த கட்டுப் பாடு தான் ஒரு வேளை நம்மை மிருகங்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றதோ?
பொதுவாக காமத்தைக் கட்டுப் படுத்தக் கூடாது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதே சமயம் இடம் பொருள் ஏவல் பார்த்தது அளவுடன் வைத்துக் கொள்ளுவது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

நேர்மையானவர்கள் இன்று உண்மையில் இவ்வுலகில் இருக்கின்றார்களா?

நேர்மையானவர்கள் இன்று உண்மையில் இவ்வுலகில் இருக்கின்றார்களா? - www,v4all.org

இன்று உலகின் சுற்று சூழல் எவ்வளவு மாசு பட்டிருக்கிறதோ அதை விட அழ மடங்கு அவ்வுலகில் வாழும் மக்களின் மனங்களும் மாசு பட்டிருக்கின்றன என்றால் அது மிகையாகாது. நேர்மை என்பது அகராதியில் மட்டுமே பார்க்கக் கூடிய வார்த்தை ஆகிப் போனது. கடை பிடிக்க ஆளில்லை என்பது நிஜம். தப்பி தவறி ஓரிருவர் நேர்மையாக இருந்தால் இவ்வுலகம் அவர்களை ஏமாளிகள் என்றும் கோமாளிகள் என்றும் முத்திரை குத்தி விடுகின்றது. நேர்மையானவர்கள் இன்று உண்மையில் இவ்வுலகில் இருக்கின்றார்களா? மேலே படியுங்கள்.....
போன நூற்றாண்டு வரை ஓரளவுக்கு மக்கள் நீதி நேர்மைக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து வாழ்ந்திருந்தார்கள். பணம் வாழ்வின் பிரதானம் ஆகத் தொடங்கிய பின் நேர்மை பின்னுக்குத் தள்ளப் பட்டு விட்டது என்பது உண்மை தான்.
பெரிய வியாபர நிறுவனங்களே இன்று நேர்மையின்றி செயல் படுவதை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றோம். சிறிய வியாபாரிகளும் நாங்கள் அவர்களுக்கு சளைத்தவர்களில்லை என்று போட்டி போட்டுக் கொண்டு நேர்மையை கூறு போட்டு விற்றுக் கொண்டிருக்கின்றனர் என்றால் அது மிகையாகாது.
உறவுகளிலும் நேர்மை குறைந்து வருகின்றது. கணவன் மனைவியிடையே கூட நேர்மை என்பது அரிதாகி கொண்டு வருகின்றது என்பது தான் கொடுமை. எங்கே போய்க் கொண்டிருக்கிறது இந்த உலகம்? இனி நேர்மையான மக்களைப் பார்க்கவே முடியாதா?
எல்லாமே ஒரு சுழற்சி முறையில் தான் இவ்வுலகில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மேலிருப்பவன் கீழே செல்லுவதும், கீழே இருப்பவன் மேலே செல்லுவதும் விதி. கொடுங்கோன்மையின் உச்சக் கட்டத்தில் புரட்சி வெடிக்கும். ஊழலும் ஒரு நாள் நம் நாட்டிலிருந்து அப்புறப் படுத்தப் படும். மீண்டும் நேர்மை இவ்வுலகை ஆட்சி செய்யும். இதெல்லாம் நிச்சயம் நடக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். ஆனால் எவ்வளவு சீக்கிரம் நடக்கும் என்பது தான் நம் முன்னே நிற்கும் பெரிய கேள்விக் குறி ஆகும். நம் தலை முறையிலேயே நடந்து விட்டால் நாம் பாக்கியசாலிகள் ஆவோம். நடக்குமா? நம்பிக்கை தான் வாழ்க்கை.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

பணக்கார முட்டாளாக இருக்க விரும்புவீ ர்களா? அல்லது புத்திசாலி ஏழையாக இருக்க விருப்பமா?

உங்களுடைய தேர்வு என்னவோ?
பணக்கார முட்டாளாக இருக்க விரும்புவீ ர்களா? அல்லது புத்திசாலி ஏழையாக இருக்க விருப்பமா? - www.v4all.org
நாம் எல்லோரும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க விரும்புகிறோம். அதே சமயம் பணக்காரனாகவும், புத்திசாலியாகவும் இருக்கத்தான் விரும்புவோம். கடவுள் உங்கள் முன் தோன்றி 'பணக்கார முட்டாள்' அல்லது 'புத்திசாலி ஏழை' இவ்விரண்டில் ஒன்றை தேர்வு செய்ய சொன்னால், நீங்கள் எதை தேர்வு செய்வீர்கள்?
சிலர் பணக்கார முட்டாளாக விரும்புவர். சிலர் புத்திசாலி ஏழையாக இருக்க விரும்புவர்.
நமக்கு பணம் புத்திசாலித்தனம் இவை இரண்டில் எது ரொம்ப முக்கியம்?
என்னைப் பொருத்த வரையில் என்னால் ஏழையாகக் கூட இருந்து விட முடியும். ஆனால் முட்டாளாக இருப்பதை என்னால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை. என்னுடைய தேர்வு நிச்சயமாக புத்திசாலித்தனம் தான். எனது தேர்வு ஒரு வேளை முட்டாள்த்தனமாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றினால் நீங்கள் புத்திசாலியோ?


அட, அதான்யா வாழ்க்கை

அட, அதான்யா வாழ்க்கை! - www.v4all.org
வாழ்க்கையின் தத்துவத்தை நாம் எளிதில் அறிந்து கொள்ளுவதில்லை.
வாழ் நாள் முழுவதும் பணத்தைத் துரத்துவதிலேயே செலவழிக்கிறோம். சரி, ஒருவர் நன்றாக சம்பாதித்து விட்டார் என்று வைத்து கொள்வோம். கடல் போல் பெரிய பங்களா கட்டி விட்டார். கப்பல் போல் பெரிய சொகுசுக் காரும் வாங்கி விட்டார். வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்றார். அன்பான மனைவியும், நல்ல குழந்தைகளும் இருக்கிறார்கள். அதிக புகழும் அடைந்து விட்டார் என்றே வைத்துக்கொள்வோம்.
அவர் நாளைக் காலையில் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்றால் 'அவர்' என்கின்ற மரியாதை உடனே போய் 'உடல் மருத்துவமனையிலிருந்து எப்பொழுது வரும்'? என்றே கேட்பார்கள்.
அவரது, பங்களாவோ, காரோ, பணமோ அவரோடு மயானத்திற்கு வராது. உயிருக்குயிராய் நேசித்த மனைவியும் வீட்டிலிருந்தபடியே டாட்டா காண்பித்து விடுவார். சில நாட்கள் கழித்து அவரது குடும்பத்தினர் தொலைக்காட்சியில் வரும் ஜோக்கிற்கு விழுந்து விழுந்து சிரிக்கத்தான் போகின்றனர்.
அட அதான்யா வாழ்க்கை!
இந்த உலகத்தையே வென்ற அலெக்ஸாண்டர் தான் இறப்பதற்கு முந்தைய நாள் தனது உதவியாளர்களைக் கூப்பிட்டு, 'நாளை நான் இறந்தபின் என்னை அடக்கம் செய்ய எடுத்து செல்லும் போது என் கை சவப்பெட்டியின் வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்' என்றாராம்.
ஏன் அப்படி செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது என்ன சொன்னார் தெரியுமா? 'இந்த உலகத்தையே வென்ற மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்தபின் தன்னோடு ஒரு சல்லிக் காசு கூட எடுத்து செல்ல முடியவில்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ளட்டும்' என்றாராம்.
அட அதான்யா வாழ்க்கை!
நீர்க்குமிழிப் போன்ற இந்த குறுகிய வாழ்க்கையில்
மதக்கலவரங்கள் எதற்கு?
சண்டைகள் எதற்கு?
பழி வாங்கும் நினைப்பு எதற்கு?
புறம் பேசுவது எதற்கு?
குறை சொல்லுவது, விமர்சிப்பது எதற்கு?
வெறுப்பை சுமப்பது எதற்கு?
பேராசை எதற்கு?
பொறாமை எதற்கு?
எல்லா உயிர்களையும் நேசிப்போம். பெரிய கனவுகள் காண்போம். பிடித்த தொழிலைத் தேர்ந்தெடுப்போம். கடுமையாக உழைப்போம். இருப்பதில் திருப்திக் கொண்டு ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.


வாசியை அறிந்தவன்'s photo.

நவீன உலகில் வேகம் ,விவேகம்

நவீன உலகில் வேகம் ,விவேகம் - www.v4all.org
இன்று நாம் அவசரமான உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். எங்கும் அவசரம். எதிலும் அவசரம். உலகம் பணத்தை சுற்றி சுற்றியே சுழன்று கொண்டிருக்கிறது. எதிலும் போட்டி அதிகரித்து விட்டது. அதனால் எங்கும் அவசரம், எதிலும் அவசரம் என்று ஆகி போனது உலகம். நவீன உலகில் வேகம் தேவை தான், அவசரம் அல்ல.
இன்று நாம் தேவைக்கு அதிகமாக பரபரப்பாகவும் அவசரமாகவும் இயங்கி கொண்டிருப்பதாகவேத் தோன்றுகிறது. முடிவுகளும் வேகமாக எடுக்க வேண்டிய சூழ்நிலைகள் இன்று உருவாகி வருகிறது என்றால் அது மிகையாகாது. வேகம் இன்றைய அவசரமான உலகில் தேவை தான். ஆனால் அதுவே அவசரமாக ஆகி விடக் கூடாது. அவசரத்தில் எடுக்கும் முடிவுகளும், செய்யும் வேலைகளும் பெரும்பாலும் சொதப்பி விடுகின்றன என்பதே நிஜம்.
அவசரமாக காதலிக்கின்றனர் இளைஞர்கள். அவசரமாக கல்யாணமும் செய்து கொள்ளுகின்றனர். ஆனால் அவசரமாக விவாகரத்து கோரும் போது வாழ்க்கை சிக்கலாகிப் போகிறது. தொட்டதெற்கெல்லாம் விவாகரத்து கோருவது மேற்கத்திய மரபு. நாம் ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல் மேற்கத்திய கலாச்சாரத்தை பாதி கடைப் பிடித்து பாதி தயங்கி நிற்கிறோம். அதனால் தான் இங்கு விவாகரத்து அதிகமாக நம் வாழ்வை பாதிக்கிறது என்று சொல்லலாம்.
வேகம் என்பது வேறு. அவசரம் என்பது வேறு. வேகம் என்பது விவேகத்துடன் கூடியது. அவசரம் என்பது விவேகம் இல்லாதது எனலாம். விவேகத்துடன் கூடிய வேகம் பெரும்பாலும் நல்ல பலன்களையே தரும். அவசரம் பெரும்பாலும் கெடுதலான பலன்களையே தரும். இன்று நாம் அதிக வேலைப் பளுவுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடுமையான போட்டி எல்லாத் துறைகளிலும் இருக்கின்றதைப் பார்க்கின்றோம். நாம் நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அயராது பாடுபடுகிறோம் என்பதும் உண்மை தான். அதனால் இன்று நாம் நம் வாழ்க்கையில் வேகத்தைக் கடை பிடிப்பது அத்தியாவசியமாகிறது.
ஆக, வேகம் மற்றும் சுறுசுறுப்பு இன்றைக்கு அவசியம் தான். ஆனால் அது விவேகத்துடன் கூடியதாக இருக்கட்டும். அவசரம் ஆபத்தானது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

திருமணத்தில் மொய் வைக்கும் வழக்கம் , மணமக்களுக்கு சொல்லும் வாழ்க்கைப் பாடம் .

“திருமணத்தில் மொய் வைக்கும் வழக்கம் , மணமக்களுக்கு சொல்லும் வாழ்க்கைப் பாடம் ...
அன்போ , வெறுப்போ - நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ .. அதைத் திரும்பப் பெறுவீர்கள்..”
# ஆம்...இதுதானே உலக வழக்கம்...!
பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ.....அதன் பிரதிபலிப்பாகத்தானே நாமும் நடந்து கொள்கிறோம்..!
எம்.ஜி.ஆரை மட்டுமே வைத்து 16 படங்களுக்கு மேல் எடுத்த சின்னப்ப தேவர் , சிவாஜியை வைத்து ஒரு படம் கூட எடுத்ததில்லை...
ஆனால் தேவருக்கான மணிவிழாவில் சிவாஜி ஆர்வத்துடன் கலந்து கொண்டு , மலர்மாலை சூட்டி , மலர்க்கிரீடம் வைத்து ...தன் மனப்பூர்வமான அன்பை வெளிப்படுத்துகிறார்...
என்ன ஒரு அபூர்வமான காட்சி...!
# இது போலவே சிவாஜியை மட்டுமே வைத்து படங்கள் எடுத்த தயாரிப்பாளர் – நடிகர் ஒருவர் இருந்தார்...
அவர்தான் கே.பாலாஜி...!
எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத கே.பாலாஜியை , ஒவ்வொரு வருடப் பிறப்பன்றும் தன் வீட்டுக்கு அழைத்து நூறு ரூபாய் அன்பளிப்பு வழங்குவது எம்.ஜி.ஆரின் வழக்கமாம்...!
# அன்போ , வெறுப்போ - பிறர் எதைக் கொடுத்தாலும் அன்பை மட்டுமே பிரதிபலிக்கும் குணம்...
அது ஆண்டவன் வாழும் - மனம்..!
# இன்னொரு நண்பரின் ஒரு வரி பதிவு , இப்போது என் உள்ளத்தில் உதிக்கிறது.....
“மொய் தேடும் உலகில் மெய் தேடும் சிலர்...!”

www.v4all.org
John Durai Asir Chelliah's photo.

சுயநலம்

சுயநலம் - www.v4all.org
இன்று உலகம் அதிக அளவில் சுய நலமாகி போனது என்பது நிஜம். மக்கள் உறவுகளுக்கும், அன்புக்கும் முக்கியத்துவம் கொடுத்த காலங்கள் மலையேறி விட்டன. இன்று மக்கள், பணத்திற்கும், பதவிக்கும் தான் மரியாதை கொடுக்கிறார்கள் என்கின்ற கசப்பான உண்மையை யாரும் மறுக்க இயலாது. எல்லோரும் சுயநலமாக இருக்கும் பொழுது, நாமும் கொஞ்சம் சுயநலமாகத் தான் இருக்க வேண்டுமோ? மேலே படியுங்கள்.....
நாம் இன்று கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று பணம் பந்தியிலும் குணம் குப்பையிலும் வாசம் செய்வது உண்மை தான். மக்கள் பணம் வைத்திருப்பவரை மதிக்கின்றார்கள் அவர்கள் தவறான வழிகளில் அந்த பணத்தை சம்பாதித்திருந்தாலும். பணம் பாதாளம் வரை பாயும் என்பார்கள். இன்று அங்கெங்கெனாதபடி எங்கும் பணம் பாய்வதை பார்க்க முடிகிறது.
இன்று குடும்ப உறவுகளிலும் சுய நலம் தலை விரித்தாடுவதை பார்க்கிறோம். கணவன் மனைவிக்குள் கூட இன்று சுய நலம் அதிக அளவில் காணப் படிகிறது. பெற்றோர்களின் அன்பில் மட்டுமே இன்று சுய நலம் கலக்காமல் இருக்கின்றது.
இன்றும் கூட ஒரு சிலர் சுய நலம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இவ்வுலகம் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும், அப்பாவிகள் என்றும், முட்டாள்கள் என்றும் முத்திரை குத்தி கேலி பேசுகின்றனர். அம்மண தேசத்தில் கோமணம் கட்டியவன் கோமாளி தானே?
நம்மை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் முற்றிலும் சுயநலமாய் இருக்கும் பொழுது நாம் மட்டும் சுய நலமின்றி இருப்பது நமது முன்னேற்றத்தையும், வாழ்க்கையையும் பாதிக்கலாம்.


முயற்சி செய்துப் பார்க்கலாமே?

முயற்சி செய்துப் பார்க்கலாமே? வாழ்க வளமுடன் = www.v4all.org
இந்த சின்ன விஷயங்கள் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
சில சின்ன விஷயங்கள், எளிதான விஷயங்கள் நம் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தமுடியும். ஆனால் நாம் அவற்றைக் கடை பிடிக்காததால் பெரிய வெற்றிகளை வாழ்க்கையில் பெற இயலாமல் வாழ்கிறோம்.
புன்னகை: நாம் புன்னகைக்க ஒரு பைசா கூட செலவு செய்ய வேண்டியதில்ல. ஆனால் புன்னகையினால் ஏற்படும் பலன்களோ ஏராளம். நம்மில் எத்தனை பேர் புன்னகையை அணிந்து வலம் வருகிறோம்?
உற்சாகம்: ஒரு சிலர் எப்பொழுதும் உற்சாகத்துடுன் இருப்பார். அவர்களுக்கு எல்லோரும் எளிதில் உதவுவர்.
உடல் தோற்றம்: ஒரு சிலர் உடலை சுத்தமாக வைத்திருப்பர். உடைகள் சுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருக்கும். அவர்களை எல்லோரும் விரும்புவர் என்பதை சொல்லவும் வேண்டுமோ?
பண்பாக: சிலர் பொது இடங்களில் மிகவும் இங்கிதமாகவும், பண்பாகவும் நடந்து கொள்வர். அதனால் மற்றவர்கள் அவர்களை மிகவும் நேசிப்பர். அவர்களுக்கு எந்த உதவியையும் செய்வார்கள்.
கனிவாக பேசுவது: பேசுவது என்பது ஒரு அரிய கலை. சிலர் அதில் வல்லவர்களாக இருப்பார்கள். இனிக்க இனிக்கவும், நகைச்சுவையுடனும் பேசுபவர்கள் எல்லோராலும் விரும்பப்படுவர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
நன்றி சொல்தல்: நன்றி சொல்லுவது ஒரு எளிதான செயல். அனால் அதைக் கூட நிறையப் பேர் செய்வதில்லை என்பது தான் கொடுமை.
மன்னிப்பு வேண்டுதல்: தவறு செய்வது என்பது மனித இயற்கை. கடவுளேக் கூட தவறு செய்யாமல் இருக்க முடியாது இந்த கலியுகத்தில். நீங்களும், நானும் எம்மாத்திரம்? தவறு செய்வது தவறில்லை. செய்த தவற்றிற்கு மன்னிப்பு கேளாமல் இருப்பது தான் தவறாகும்.
ஆக மேற் சொன்ன விஷயங்கள் எல்லாமே சின்ன விஷயங்கள் தான். ஆனால் அவை உங்களுக்கு மிக பெரிய அளவில் வாழ்க்கையில் வெற்றி பெற உதவும் என்பது நிஜம்.


வாசியை அறிந்தவன்'s photo.

Sunday, June 28, 2015

வெற்றி பெற்றவர் எல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களா?

வெற்றி பெற்றவர் எல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிறார்களா? - www.v4all.org

பொதுவாக பணக்கரர்களைத் தான் நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களாகக் கருதுகிறோம். ஒரு துறையில் மிகவும் சிறந்து விளங்குபவர்களையும் நாம் வெற்றி பெற்றவராய் நினைக்கிறோம்.
அப்படிவாழ்க்கையில் வெற்றி 
பெற்றவர்களெல்லாம் சந்தோஷமாக இருக்கிறார்களா? பணத்தையும், புகழையும் அதிக அளவில் சம்பாதித்தவர்களெல்லாம் மகிழ்ச்சியாய் இருக்கிறர்களா?
நிச்சயம் இல்லை என்று தான் சொல்லத் தோன்றுகிறது. அப்படிப் பார்த்தால் மைக்கேல் ஜாக்சன், மர்லின் மன்ரோ போன்றோர் அத்தனை பணமும், புகழும் இருந்தும் ஏன் பரிதாபகரமான வாழ்க்கை வாழ வேண்டும்?
ஆக பணத்திற்கும் அல்லது புகழிற்கும் மகிழ்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகின்றது.
மகிழ்ச்சி என்பது வெளியிலிருந்து வருவது கிடையாது. அது நம்முள்ளிருந்து வருவது. மகிழ்ச்சி என்பது மனதின் ஒரு நிலை. நம் மனதை நாம் நினைத்தால் எப்போதும் சந்தோஷமாக வைத்திருக்க முடியும். சுருங்கச் சொன்னால் நரகத்தைச் சொர்க்கமாக மாற்றுவதும், சொர்க்கத்தை நரகமாக மாற்றுவதும் நம் கையில் தான் உள்ளது.
அனு தினமும் தியானம் செய்து வந்தால் நம் மனது வலிமைப்படும். எத்தகைய சூழ்நிலையிலும் நம்மால் சந்தோஷமாக வாழ முடியும். வாழ்க வளமுடன்!

www.v4all.org 


கடன் கொடுத்து திரும்ப வராமல் அவதிப்படுபவர்கள் அய்யனாரிடம் முறையிட்டால் போதும்; கடன் வாங்கியவரே வீடு தேடி நேரில் வந்து கொடுக்கும்படிச் செய்யும் ஆற்றல் மிக்கவர்


        புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து பேராவூரணி செல்லும் சாலையில்- ரெத்தினக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகில்- தூத்தாகுடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கிறார் வடவக்கூத்த அய்யனார். கடன் கொடுத்து திரும்ப வராமல் அவதிப்படுபவர்கள் அய்யனாரிடம் முறையிட்டால் போதும்; கடன் வாங்கியவரே வீடு தேடி நேரில் வந்து கொடுக்கும்படிச் செய்யும் ஆற்றல் மிக்கவர் இந்த அய்யனார்.

தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் எழுந்தருளியிருக்கும் அய்யனார், சபரிமலை சாஸ்தாவாகிய ஐயப்பன்தான். ஐயப்பனே அய்யனராக எழுந்தருளியுள்ளதாக நம்பப்படுகிறது. அதிலும் வடவக்கூத்த அய்யனார் பூரணா, புஷ்கலா என இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளது மேலும் சிறப்பு.

இவ்வாலயப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், நாகராஜன், பகளப்பன், லிங்கப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர்.

இந்த அய்யனார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்றும்; ராமேஸ்வரத் திற்கு இந்த வழியாக தீர்த்த யாத்திரை சென்ற அகத்திய மாமுனிவர் தனது யாத்திரை தடையின்றி நிறைவேற இவரை வேண்டிக் கொண்டதாகவும் கூறப் படுகிறது. எட்டியத்தளி அகத்தீஸ்வரர் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருந்த காளிங்கராய மன்னனிடம், வடவக்கூத்த அய்யனாரை வணங்கி திருப்பணியைத் தொடங்கும்படி ஆலோசனை கூறினாராம் அகத்தியர். அதன்படியே அய்யனா ரின் அருளால் அகத்தீஸ்வரர் ஆலயத் திருப் பணியை மன்னன் செய்து முடித்தான் என்பது வரலாறு.

ஆரம்பத்தில் காட்டுப் பகுதியாக இருந்த இந்த இடத்தில் கீற்றுக்கொட்டகையில் மக்கள் இவரை வழிபட்டு வந்தனர். பின்னர் கோவில் ஓட்டுக் கொட்டகையாகவும், ஒருநிலைக் கோபுரமாகவும் உயர்ந்து, தற்போது பரிவார தெய்வங்களுடன் சிறப்பாகக் காட்சியளிக்கிறார் அய்யனார். இவ்வழியாகச் செல்லும் மக்கள் தங்கள் குறைகளை இவரிடம் சொல்ல, குறைகள் உடனுக்குடன் நிவர்த்தியானதால் அய்யனாரை தங்கள் குலதெய்வமாகக் கொண்டு  வழிபட்டு வருகின்றனர்.

சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் தங்களது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடத்த முடிவு செய்தால், இங்கு வந்து திருவுளச் சீட்டு போட்டு அய்யனாரின் அனுமதி பெற்றே செயல்படுகின்றனர். திருமணம் நிச்சயித்த மணமகன்- மணமகளை  அழைத்து வந்து,அய்யனாரைப் பூஜித்து அவருக்கு மாலை அணிவித்த பின்னரே திருமணப் பணிகளைத் தொடங்குவர். அய்யனாரின் அருளால் இப் பகுதியில் பருவமழை தவறுவதோ, விளைச்சல் குறைவதோ இல்லை என்கிறார்கள் பக்தர்கள்.

அய்யனாரிடம் நிமித்தம் கேட்பதும் இக் கோவிலில் நடைமுறையில் இருக்கிறது. தாங்கள் மனதில் நினைத்து வந்த காரியம் நிறைவேறுமா என்று அறிய, மூலவர்முன் எழுந்தருளியுள்ள குதிரைகளின் எதிரில் நின்று அய்யனாரை வணங்கி உத்தரவு கேட்பர். பல்லிச் சத்தம் மூலம் அய்யனார் நிமித்தம் தெரிவிப்பார். பல்லிச் சத்தம் எந்த இடத்தில் நிமித்தம் காட்டுகிறது  என்பதைப் பொறுத்து அவர்கள் அந்தச் செயலைச் செய்யவோ செய் யாமலிருக்கவோ முடிவு செய்வர். அய்யனாரி டம் உத்தரவு கிடைத்துச் செய்த காரியங்கள் எதுவும் தோல்வியடைந்ததே இல்லை என்பது பக்தர்களின் அனுபவம்.

திருமணம், வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல், வெளிநாடு செல்லுதல் என எந்தவொரு செயலுக்கும் இப்பகுதி மக்கள் அய்யனாரின் உத்தரவையே நம்பி இருக்கின்ற னர். அதேபோல கடன் தொல்லை தீர, தீராத நோய் குணமாக, தடைப்படும் திருமணம் நடைபெற, மழலைச் செல்வம் பெற அய்யனாரின் அருளை நாடுகின்றனர். இத்தகைய வேண்டுதல்களுக்கு  அவர்கள் சில நியமங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.

முதலில் கோவிலுக்கு வந்துஅய்யனாரிடம் முறையிட்டு வழிபட வேண்டும். பின் பதினொரு நாட்கள் அய்யனாருக்கு விரத மிருக்க வேண்டும். பதினொரு நாட்கள் முடிந்ததும் மீண்டும் வந்து அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர் களுக்கு அவர்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். காரியம் நிறைவேறியதும் அய்யனாருக்கு அபிஷேகம் செய்து குதிரைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

பெரும்பாலான அய்யனார் கோவில்களில், அங்குள்ள பரிவார தெய்வங்களுக்கு ஆடு வெட்டிப் படையலிடும் வழக்கம் உண்டு. ஆனால் வடவக்கூத்த அய்யனார் கோவிலில் இந்த வழக்கமில்லை. சைவப் பொருட்களே இங்கு படைக் கப்படுகின்றன. ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று இங்குசிறப்பாக திருவிழா நடைபெறும். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யனாருக்கு காவடி, பால்குடம், கரும்புத் தொட்டி எடுத்து வழிபடு வார்கள். அன்று அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எண்ணியவை ஈடேற 
அய்யனாரை வழிபடுங்கள்! - www.happy4all.org 

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

நிரந்தர பணவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷிணி லக்ஷ்மி மந்திரம்

                                                                  ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் 



                                         ஸ்ரீ தனவர்ஷிணி  லக்ஷ்மி மந்திரம் 





தொடர்ந்த பணம் மற்றும் செல்வவரவு தரும் ஸ்ரீ தனவர்ஷினி லக்ஷ்மி மந்திர பிரயோகம்   

சித்தர்கள், ரிஷிகளில் பலர் இல்லறத்தில் மனைவியோடும் நிறை செல்வத்தோடும் வாழ்ந்து நன்கு அனுபவித்துப் பின்னரே ஆன்மீகத்தில் உயர்ந்த நிலையை எட்டியுள்ளார்கள்.எந்த ஒரு பலனுக்கும் ஒன்று இரண்டல்ல நமது வேதத்தில் ஏராளமான மந்திரப் பிரயோகங்கள் உள்ளன.

தாந்திரீக மற்றும் மந்திர சாஸ்திரத்தில் உள்ள மறைக்கப்பட்ட பல ரகசியங்களைப் பலரது நல்வாழ்விற்காக வெளியிடுகிறேன்.நான் வெளியிடும் பல மந்திரங்கள் மந்திர சாத்திர நூல்களில் உள்ளவையே இதுவரை தமிழில் புத்தகங்களில் வெளிவராதவை.சில மட்டும் வடமாநில மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.பின்பற்றிப் பலனடையுங்கள்.


ஸ்ரீ விஸ்வாமித்ர மகரிஷி  ஒரு காலத்தில் மிகுந்த வறுமையை அனுபவித்து வந்தார்  அதில் இருந்து விடுபடவும் ,மன்னர்களுக்கே பணத்தட்டுப்பாடு ஏற்பட்டால் செல்வம் அளிக்கும் அளவுக்கு நிறைந்த செல்வவளம் உள்ளவராக விளங்கவும் அவருக்கு உதவியது இந்த மந்திரப் பிரயோகமே .

மேலும் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த மந்திரப் பிரயோகத்தை மிக உயர்வாகக்  குறிப்பிடுவதோடு தமது உடனுறை சீடர்கள் வளவாழ்வு வாழ இந்த மந்திரப் பிரயோகத்தைச் செய்யுமாறு வலியுறுத்தி இருக்கிறார்கள் .


பிரயோக முறை :-

1.ஏதேனும் ஒரு வளர்பிறை புதன்கிழமை அன்று அதிகாலை பிரம்ம முகூர்த்ததில் எழுந்து குளித்து முடித்துப் புத்தாடை அணிந்து மஞ்சள் நிறத்   துணி விரித்து அதில் சிறிது பன்னீர் தெளித்து அதன் மீது கிழக்கு  நோக்கி அமரவும்.

2.நெய் விளக்கேற்றி ஸ்ரீ லக்ஷ்மி யந்திரத்தைக் குங்குமம் மற்றும் பன்னீர் கலந்த நீரால் கழுவி,ஒரு பலகையின் மேல் வெள்ளைத்துணி விரித்து அதில் ஒரு செம்பு அல்லது பித்தளைத் தட்டின் மேல் அந்த யந்திரத்தை வைத்து யந்திரத்திற்கு அட்சதை,குங்குமம் ,பூக்களால் மூலமந்திரம் 108 தடவை ஜெபித்து அர்ச்சனை செய்யவும்.

3.வெற்றிலை,பாக்கு,பால்,பழங்கள்,பாயசம் படைக்கவும்.

4. பின்னர் வலது உள்ளங்கையில் சிறிது நீர் ஊற்றி ஸ்ரீ லக்ஷ்மி தேவியை மந்திரம் சித்தியாக வேண்டி மூன்று முறை மூலமந்திரம் ஜெபித்து அந்த நீரை அருந்தி துளசி மாலையால் மந்திரம் ஜெபிக்கத் தொடங்கவும்.

தியான ஸ்லோகம் :-

ப்ராஹ்மீம் ச வைஷ்ணவீம் பத்ராம் சதுர் புஜாம் ச சதுர்முகீம் |
த்ரிநேத்ரம் கட்க த்ரிசூல சக்ர கதா தராம் |
பீதாம்பர தராம் தேவீம் நானாலங்கார பூஷிதாம் |
தேஜபுஞ்ச தரீம் ஸ்ரேஷ்டம் த்யாயேத் பால குமாரிகாம் ||


மூலமந்த்ரம் :-

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் தனவர்ஷிணி |
லக்ஷ்மீர் ஆகச்ச ஆகச்ச |
மம க்ருஹே திஷ்ட்ட திஷ்ட்ட ஸ்வாஹா |

ஒரு மாதம் கழித்து பூஜைக்கு உபயோகித்த பொருள்களை ஆற்றில் விட்டு விடவும் .நாளுக்கு நாள் செல்வம் பெருகத் தொடங்கும்.

பூஜிக்கப்பட்ட யந்திரம் தேவைக்கு மேலும் விளக்கங்களுக்கு கீழ்க்கண்ட மொபைல் எண்ணில் தொடர்பு கொள்க .




வாழ்க வையகம்||  வாழ்க வளமுடன்||

தடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நரசிம்ஹ மந்திரம்

தடைகள் விலக,தைரியம் வளர,எதிரிகள் நீங்க ஸ்ரீ வீர நரசிம்ஹ மந்திரம்




ஸ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரங்களுள்  மிகச் சிறந்த வரப்ரசாதி ஸ்ரீ நரசிம்ஹர். இவரை உபாசிப்பவர்கள் யாருக்கும் எதற்கும் அஞ்சத் தேவையில்லை.நம் தரப்பில் நியாயம் இருந்தால் நம்மை எந்த விதமான தீமைகளில் இருந்தும் காத்து ரட்சிக்கவல்லவர் என்ற நம்பிக்கையோடு இவரை உபாசிக்கலாம்.சைவ உஅவு உண்பவர்கள் மட்டும் உபாசனை செய்யலாம்.மற்றவர்கள் சுத்தமாக இருக்கும் நாளில் மட்டும் ஜெபிக்கலாம்.


வேதத்திலும் ,தந்திர சாஸ்திரத்திலும் பல இடங்களில் வேறுபட்ட வழிமுறைகளில் இவரை உபாசனை செய்யும் முறைகள் உள்ளன.தந்திர சாஸ்திரம் 9 ரூபங்களில் நரசிம்ஹரை உபாசனை செய்யும் முறைகளையும் அதன் மாறுபட்ட பலன்களையும் விவரிக்கிறது.ஷண்மத ஸ்தாபகர் ஸ்ரீ ஆதிசங்கரர் இந்த வீர நரசிம்ஹரை உபாசனை செய்தார்.இந்த உபாசனையின் பலனாக  அவர் அடைந்த பலன்கள் அநேகம்.நோய் நீங்கப்பெற்றார், காபாலிகர்கள் செய்த அபிசார மாந்திரீகப் பிரயோகங்களை வெற்றி கண்டார் இப்படிப் பலப்பல......


ஜாதகத்தில் செவ்வாய் ,ராகு,சூரியன் இவர்களில் யாரேனும் ஒருவராவது பலம் பெற்றவர்கள் இவரை முழுமுதற் தெய்வமாக எண்ணி உபாசனை செய்யத் தகுதியானவர்கள்.ஸ்ரீ வீர நரசிம்மர் வழிபாடு எதிரிகளை நீக்கி ,வழக்குகளில் வெற்றி தந்து,நோய்களை நீக்கி,தடைகள் நீக்கி,பயம் போக்கி நிம்மதியான வாழ்வு தரும்.உபாசித்து உயர்வடைவீர்களாக.
ஜெப விதிமுறைகள்  :-

1) ஜெபத்தை வளர்பிறை ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கவேண்டும்.
இரவில் 9 மணிக்கு மேல் ஜெபிக்கவும்.

2) பன்னீரில் நனைத்துக் காய்ந்த  சிகப்புத்துணியைத் திரியாக்கி நெய் விளக்கேற்றவும்.

3) சிகப்பு நிற ஆடை அணியவும்.

4) சிகப்புக் கம்பளி விரித்து அதன் மேல் அமர்ந்து ஜெபிக்கவும்.

5) சிகப்பு மணி மாலையைப் பயன்படுத்தி ஜெபிக்கவும்.

6)  51000எண்ணிக்கை ஜெபிக்க மந்திரம் சித்தியாகும்.


மூலமந்திரம் 

ஓம் க்ஷ்ரௌம் பட் 


பிரயோகம் 

மந்திரம் சித்தியான பின் பசு நெய்யால்  108 எண்ணிக்கை ஹோமம் செய்யவும்.
பின்னர் ஏதேனும் காரியமாக வெளியில் செல்கையில் இம்மந்திரத்தை 3 தடவை ஜெபித்து புருவ நடுவில்குங்குமம் அணிந்து செல்ல எந்தத் தீமையும் ஏற்படாது ரக்ஷையாய்க் காத்து வெற்றி தரும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி மந்திரம்

கல்வி மற்றும் கலைகளில் சிறந்து விளங்க ஸ்ரீ மாதங்கி மந்திரம் - www.happy4all.org 







மந்திரம் 
ஹ்ரீம் ஸ்ரீம் மாதங்க்யை க்ரியாசித்திம் வித்யா ப்ரதாயினி நமஹா ||

ஏதேனும் ஒரு நல்ல நாளில் தொடங்கி இம்மந்திரத்தைத் தினமும் 108 தடவை ஜெபித்து வர ஈடுபடும் கலைகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுப்  புகழுடன் கூடிய நிலையை அடையலாம்.குறிப்பாகப் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகள்,ஆராய்ச்சி சம்பந்தமான கல்வி கற்பவர்கள்,சங்கீதம், பரதம்,ஜோதிடம்,மருத்துவம் போன்ற கடினமான கலைகளைக் கற்பவர்கள் இந்த மந்திர ஜெபத்தின் மூலம் மிகுந்த நன்மைகளைப் பெறலாம்.

வடக்கு முகமாக அமர்ந்து இரவு 10 மணிக்கு மேல் ஜெபிக்க வேண்டும்.

வாழ்க வையகம் || வாழ்க வளமுடன்||

Saturday, June 27, 2015

ஜோதிடம் விஞ்ஞானமா? அல்லது வெறும் ஏமாற்று வேலையா?

ஜோதிடம் விஞ்ஞானமா? அல்லது வெறும் ஏமாற்று வேலையா? - www.v4all.org

ஜோதிடம் ஒரு அற்புத விஞ்ஞானம் என்று ஜோதிடர்கள் சொல்வார்கள்.
ஜோதிடம் விஞ்ஞானம் இல்லைஎன்றாலும்அது ஒரு அற்புத கலை என்று ஒரு சாரார் சொல்லுகிறார்கள். இல்லை, இல்லை, இது வெறும் ஏமாற்று வேலை தான் என்று வேறொரு சாரார் கூறுகின்றார்கள்.
ஜோதிடம் உண்மையா?
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் பாரத தேசத்து முனிவர்கள் வான சாஸ்திரத்திலும், ஜோதிடத்திலும் அதீத புலமை வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். எந்த ஒரு கருவியும், உபகரணமும் இல்லாமலேயே தங்கள் ஞான திருஷ்டியால் பல அற்புதங்களை செய்துகாட்டி சென்றிருக்கிறார்கள்.அவர்கள் ஜோதிட
சாஸ்திரத்தில் சிறந்து விளங்கினார்கள். ஜோதிடம் அவர்கள் காலத்தில் விஞ்ஞானமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.
இப்பொழுது உள்ள ஜோதிடர்கள் முழுமையான ஜோதிட அறிவு பெற்று இருக்க வில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
ஜோதிடர்கள் பொய்க்கலாம். ஆனால் ஜோதிடம் என்றுமே பொய்ப்பதில்லை.
இன்றைய ஜோதிடத்தை நாம் முழுமையாக நம்ப முடியாது. ஆனாலும், நாம் இன்றைய ஜோதிடத்தை ஓரளவுக்கு பயன்படுத்தலாம். ஜோதிடர்கள் நமக்கு நல்லவை நடக்கும் காலங்களையும் கெட்டவை நடக்கும் காலங்களையும் கணக்கிட்டு சொல்வார்கள். நல்ல காலங்களில் நாம் தைரியமாக சில முடிவுகளை எடுக்கலாம். நமக்கு சாதகம் இல்லாதகாலங்களில் நாம் நாம்சற்று ஜாக்கிரதையாய் இருக்கலாம்.
ஜோதிடத்தை பற்றி ஒன்றுமே அறியாமலே சிலர் அதை பொய் என்று கூறுவார்கள்.
ஜோதிடத்தை அளவாக பயன்படுத்தி பயன் பெறுங்கள். அளவுக்கதிகமாக ஜோதிடத்தை பயன்படுத்தி உங்கள் பொன்னான நேரத்தை வீணாக்காதீர்கள்.


வாசியை அறிந்தவன்'s photo.

Friday, June 26, 2015

யார் ஆன்மிகவாதி?

யார் ஆன்மிகவாதி? - www.v4all.org 
ஆன்மா +அகம் =ஆன்மிகம் ,ஆன்மாவை அகத்தில் உணரவேண்டும்
தனக்குள் இருக்கும் சாவியை அறிந்து கொண்டால் பிரபஞ்சத்தின்
பூட்டை திறக்க முடியும்
தன்னை பற்றி அறிய முற்படுபவன் மகான் ஆக போகிறான் என்று அர்த்தம்...உன்னுள் இருக்கும் மகா சக்தியை
அறியும் சித்தி (மனம் ,சாவி) உன்னிடம் மட்டுமேஉள்ளது...
ஆன்மிகவாதிகள் மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் யார் ஆன்மிகவாதிகள் என்பதில் நிறைய மாற்றுக் கருத்துக்கள் நிச்சயம் இருக்கும்.
தாடி வைத்தவரெல்லாம் ஆன்மிகவாதிகள் என்று தங்களைத் தாமே கூறிக் கொள்ளுகிறார்கள். காவி கட்டியவர்களெல்லாம் ஆன்மிகவாதிகளாக உலா வருகிறார்கள்.
தாடி வைத்தவர், காவி கட்டியவர் எல்லாம் ஆன்மிகவாதிகளா?
இன்னும் ஒரு சிலர் கோவிலுக்கு அதிகமாக செல்பவர்கள், பூஜை புனஸ்காரங்கள் செய்பவர்களெல்லாம் ஆன்மிகவாதிகள் என்று நினைக்கின்றனர்.
கோவிலுக்கோ, தேவாலயத்திற்கோ, மசூதிக்கோ செல்வதாலோ, பகவத் கீதை அல்லது பைபிள் அல்லது குரான் படிப்பதாலோ ஒருவர் ஆன்மிகவாதியாக முடியாது.
அப்படி என்றால் யார் ஆன்மிகவாதி?
கடவுளைக் கோவில்களில் தேடுபவன் ஆன்மிகவாதி அல்ல. தன்னை உணர்பவன், தன்னுள் இருக்கும் இறைவனை உணர்பவன் தான் உண்மையான ஆன்மிகவாதி. இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துகின்றவர் ஆன்மிகவாதி.
தன கடமைகளைப் பலன்களை எதிர்பார்க்காமல்
செவ்வனே செய்பவன் ஆன்மிகவாதி. வெற்றிகளையும், தோல்விகளையும் சமமாக பார்ப்பவன், இன்பங்களையும், துன்பங்களையும் சமமாக ஏற்பவன் உண்மையான ஆன்மிகவாதி.
இறைச் சக்தியுடன் தொர்புக் கொள்பவன் ஆன்மிகவாதி. அந்த தொடர்பினால் பேரின்பம் அனுபவிப்பவன் ஆன்மிகவாதி. பொருள் சார்ந்த உலகியல் இன்பங்களில், மற்ற சிற்றின்பங்களில் நாட்டம் இல்லாது, இறைத் தொடர்பால் ஏற்படும் பேரின்பத்தில் திளைப்பவன் தான் ஆன்மிகவாதி.
போலிச் சாமியார்களின் ஆசிரமங்களில் ஆன்மிகத்தைத் தேடுவதை இனியாவது நிறுத்திக் கொள்வோம். நம்மை உணர்வோம். நம்மில் இருக்கும் இறைவனை உணர்வோம். பேரின்பத்தைப் பெறுவோம். வாழ்க வளமுடன்!

Thursday, June 25, 2015

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி…

உண்மையைச் செய்ய முயற்சி செய். அப்பொழுது
உன் தகுதியை உடனே அறிந்து கொள்வாய்.
-கதே
பிறருடைய பழிச்சொல்லுக்கு விடையளிக்க வேண்டுமா?
ஆம் எனில் உன் கடமையைச் செய்துவிட்டு மௌனமாய்
இருந்துவிடு, அதைவிடச் சிறந்த விடை கிடையாது.
-வாஷிங்டன்
செய்து முடிக்கப்பட்ட கடமை, நம்பிக்கைக்குத் தெளிவையும்
உறுதியையும் அளிக்கவல்லது. ஆகவே நம்பிக்கைக்கு பலம்
அளிப்பது கடமையே.
-ட்ரைடன் எட்வர்ட்ஸ்
தீமைகளை விலக்குவது என்பதைக் கடமையாகக்
கொள்ளுதல் நன்மைகளைச் செய்வதற்குச் சமம்.
-காந்தியடிகள்
கடமையைச் செய்ய நேரத்தைக் கடத்தாதே.
அரிய வாய்ப்பு பறந்துவிடும்.
-லாங்ஃபெல்லோ
கடமை ஆற்றும்போது குறுக்கிடும் உன் விருப்பத்தைக்
கூடத் தியாகம் செய்.
-எச். மூர்
சிறு கடமையில் கூடக் கருத்தாயிருத்தல் மகிழ்ச்சியான
வாழ்க்கைக்கு மிகச் சிறந்த வழி.
-ஃபேபர்
கடமைகளை எந்த ஓர் ஆணும், பெண்ணும் தேர்ந்தெடுக்க
முடியாது. ஏனெனில் அவர்களால் அவர்களது தாய் தந்தையரையும்
தேர்ந்தெடுக்க முடியாது.
-ஜி.எலியட்
நம்மால் புறக்கணிக்கப்படும் ஒவ்வொரு கடமையும் நாம்
தெரிந்துகொள்ளத் தவறிய ஓர் உண்மையைப் புலப்படுத்தும்.
-ரஸ்கின்
உன் முன் தோன்றும் முதல் கடமையை உடனே செய்.
அடுத்து நீ செய்ய வேண்டிய கடமை உனக்குத் தெளிவாகப்
புலப்படும்.
-கார்லைல்

இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம்

“மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே” என்ற வார்த்தைகளையே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த உணர்வு நாம் எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில் அனுபவித்திருக்க கூடியது தான். வாழ்க்கையில் இறுக்கமான கட்டங்கள் (மன வேதனையான) ஏற்படும்.
சிலருக்கு எவ்வளவு சிரமமான சிக்கலும் இறுக்கம் தராது. ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. அந்த பட்டியலில் திருமணம்தொழில்காதல்உறவுகள்நிகழ்வுகள்இழப்பு போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே வாழ்வில்இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தைஏற்படுத்தும்.
இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகி விட்டது. “வெளியே சொல்லவும் மொழியில்லை. வேதனை திறவும் வழியில்லை” என்ற அழுவதே ஆறுதல் தரும்.
அழுதுவிடு” என்று சொல்வது அவமானம் படுத்துவதாக ஆகாது. குமறி குமறி உணர்ச்சிகளை அடக்கி உள்ளே வெடிப்பதை விட, பாதி சோகத்தையாவது கண் வழியே இறக்கி வைப்பது நல்லது.
அழுது முடிந்ததும் ஏற்படும் அமைதியை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம். இந்த அமைதி மனதின் பாரம் குறைதத்தினால் வரும் பாதி நிம்மதி. “இவ்வளவு வயசாச்சு இன்னும் அழுரிய” என்ற கேலிக்கு பயப்படுபவர்கள், தனியாகவும் அழலாம். இதை தவிர,சிரிக்க தெரிந்தவனுக்கு பாதி விஷயங்கள் சிக்கலாக தெரியாது.
இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம். நாம் இப்படித்தான் இயங்குகிறோம் என்பதைஉணர்ந்து கொண்டால் எப்படி இயங்கினாலும் சிறப்பை இருக்கும். சிந்தித்துசெயல்பட்டால் வாழ்க்கை அழகா அமையும்.

www.v4all.org

வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
வாழ்க்கையின் பயனுள்ள 33 குறிப்புகள்.
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன்
சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர். கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை
மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை
ஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும்
ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு.
திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய்  பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக
ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் . அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான்
கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.


எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை... பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…”

கங்கை அமரனின் பேட்டி ஒன்று ,
என் கண்களில் பட்டது இன்று ....
“நீங்கள் பல்கலை வித்தகராக இருக்கீங்க... இதில் உங்களின் எந்த முகம் உங்கள் மனைவிக்குப் பிடிக்கும்?” என்று கங்கை அமரனிடம் கேள்வி எழுப்பப்பட...
இதற்கு கங்கை அமரன் சொன்ன இடக்கு மடக்கான பதில்..:
“எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை. ‘வீட்டிலேயே தங்க மாட்டார்… பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…’ இப்படித்தான் புருஷன் மேல் மனைவிகள் விமர்சனம் பண்றாங்க.
பத்து பேர் முன்னாடி ஒரு கணவன் கிட்டே ஒரு மனைவி நடந்துக்கிற விதத்துக்கும்,
எல்லோரும் போன பின்னாடி நடந்துக்கிற விதத்துக்கும் உண்மையிலேயே வித்தியாசம் இருக்கும்...
அவங்களுக்கு நாம ஈஸியா கிடைச்சிடுறோம்… அதனால் நம்ம பெருமை அவங்களுக்குப் பிடிபடுறதில்லை. நம்மைப் பார்க்க எத்தனையோ பேர் தவமிருப்பான். சந்தித்ததைப் பெருமையா நினைப்பான். ஆனால், அவங்களுக்கு ஆஃப்டரால் புருஷன்தான்...
என் அனுபவம் மட்டுமல்ல. (சில வி.ஐ.பி.களின் பெயரைக் குறிப்பிடுகிறார்). இவர்களின் அனுபவங்களும் இப்படித்தான். ”
# கங்கை அமரனின் இந்த பேட்டியைப் படிக்கும்போது , அவர் சொன்ன சில வி.ஐ.பி.க்களின் பெயர்களில் ரஜினியின் பெயரும் கட்டாயம் இருந்திருக்கும் என்று தோன்றியது..
ரஜினியை கே.பாலச்சந்தர் பேட்டி கண்ட , அந்த ஸ்பெஷல் விழா மேடையில்...
ரஜினி தனது குருநாதர் கே.பாலச்சந்தர் முன்னிலையில் உணர்ச்சிவசப்பட்டு உட்கார்ந்திருக்க ....அதை உணர்ந்த லதா ரஜினி கீழே இருந்தபடி , தன் முகத்தில் காட்டிய எக்ஸ்பிரஷன்..:
"ஐயய்யோ...இவர் இந்த மேடையில.., "உதைக்க வேணாம், தூக்கி போட்டு மிதிக்க வேணாம்" ..இப்படி எதுவும் பேசாம இருக்கணுமே..?"
# மறுபடியும் மனதில் நினைவுக்கு வருகிறது ,
கங்கை அமரனின் அந்த பேட்டி :
“எந்த மனைவிக்கும் கணவன்களைப் பிடிப்பதே இல்லை என்பதுதான் உண்மை...
பேசவே தெரியாது… அது பாட்டுக்குப் புலம்பிட்டு இருக்கும்…”
# கங்கை அமரன் சொன்னது உண்மைதானோ..?
www.v4all.org 

ஆழ்நிலை தியானம் செய்வது எப்படி?

ஆழ்நிலை தியானம் செய்வது எப்படி? - www.v4all.org 
ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட அமைதியான காற்றோட்டம் மிகுந்த இடம் வேண்டும். நன்கு சுத்தமான சிறிய அறை கூட போதுமானது. அல்லது கடற்கரை, பூங்கா, மலைவாசஸ் தலங்களில் உள்ள இடங்களில் தனித்து தியானம் செய்யலாம். பொதுவாக தியானம் காலை மற்றும் மாலை நேரங்களில் செய்வது நல்லது.
இப்படி ஆழ்ந்த தியான நிலையில் சரசுவாசம் மூலம் பிராணன் உட்சென்று மூலாதாரத்தை அடையும். அங்கே மூலாதார சக்தியானது வலுவடையும். இதனால் உடலானது பிரபஞ்ச சக்தியோடு இணைந்துகொள்ளும்.
பிரபஞ்ச சக்தியோடு இணைந்து கொண்ட உடல், ஆன்ம சக்திக்கு கட்டுப்படும். இப்படி கட்டுப்பட்ட உடலை ஆன்ம சக்தி பரிபூரணமாக ஆட்கொண்டு முதன்மையான சக்தியாக விளங்கும்.
ஆன்ம சக்தி ஆட்கொண்டதால் உடலும் மனமும் ஒரே நிலையில் ஒருங்கிணையும். இந்த நிலையே ஒருவரை சாந்த சொரூபியாக மாற்றும். இதைத்தான் ஆன்மீக சக்தி என்றும் அழைக்கின்றனர். இப்படிப்பட்ட ஆன்மீக சக்தியை அடைந்தவர்கள் எப்போதும் புன்முறுவலோடும் நிதானத்தோடும் காணப்படுவார்கள். இவர்கள் முக்காலத்தையும் உணரும் சக்தி பெறுவார்கள். இவர்கள் எண்ணிய எண்ணங்கள் எளிதில் ஈடேறும். மேலும் இவர்கள் விருப்பு, வெறுப்பின்றி அனைவரிடமும் அன்பை மட்டுமே செலுத்துவார்கள். இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் தான் தவயோகிகளாகவும், ஞானிகளாகவும், சித்தர்களாகவும் போற்றப் படுகிறார்கள்.
இப்படிப்பட்ட ஆன்ம சக்தி கிடைக்காதவர்கள் உடல் என்ற சக்திக்கு மட்டுமே கட்டுப்படுவார்கள். இவர்களிடம் ஆன்மீக சக்தி பலமிழந்தே காணப்படும். இதனால் இவர்கள் அடிக்கடி தங்களின் எண்ணங்களையும், செயல்களையும் மாற்றிக் கொண்டே இருப்பார்கள். எதிலும் நிதானமின்றி காணப்படுவார்கள். எத்தகைய முடிவையும் இவர்களால் எடுக்க முடியாது.
ஒருசில நேரங்களில் ஆன்மீக சக்தி இழந்தும் காணப்படுவதுண்டு. உலக சஞ்சாரங்களில் எளிதில் சிக்கிக் கொள்வார்கள். இவர்களுக்கு எப்போதும் ஞானம் கிடைக்காது. இவர்களின் மனம் ஒருநிலைப் படாது. இவர்களால் மூலாதார சக்தியையும் பிரபஞ்ச சக்தியையும் ஒருங்கிணைக்க முடியாது. ஆன்மிக சக்தியை பெற்றவர்கள்தான் சித்தர்கள். இதிலிருந்து மாறுபட்டவர்கள் சித்தர்கள் அல்ல. உலகை ஏமாற்றும் பித்தர்கள். இவர்கள் என்றாவது ஒரு நாள் பொதுமக்கள் மத்தியில் பகல் வேஷம் கலைந்து அவர்களின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாவார்கள். இவர்கள் தங்களையும் ஏமாற்றி நம்பி வந்தவர்களையும் ஏமாற்றும் வித்தகர்கள்.
ஆன்மீக சக்தியை ஆட்கொண்டவர்களின் உடலும் உள்ளமும் ஒருங்கிணைந்து இருக்கும். மனம், புத்தி, காமம், குரோதம், அகங்காரம் இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களாக வலம் வருவார்கள்.
இப்படிப்பட்டவர்களை கண்டறிந்து அவர்கள் பெற்ற ஆன்ம சக்தியின் பலத்தையும், ஆசியையும் பெறுவதுதான் ஞானத்திற்கு சிறந்த வழி.
பிராணவாயுவை உள்வாங்கி மூலாதார சக்தியை தூண்ட தவம் செய்வதே சிறந்த வழியாகும். தவநிலையில்தான் சரசுவாசம் நடைபெறும். இந்நிலையில் தான் ஆன்மீக சக்தியைப் பெற முடியும்.
இதைத்தான் இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ அலைகின்றார் ஞான தங்கமே என்றும்,
ஊன் உடம்பே ஆலயம், என்று திருமூலரும் கூறுகிறார்கள். உள்ளத்தை கோவிலாக எண்ணி வழிபட்ட மகான்கள்தான் சித்தர்கள்.
இந்த ஆன்மீக சக்தியை பெற்றவர்கள் கிரகணங்களின் செயல் பாடுகளால் நன்மைகள் பல பெறுவார்கள். அமைதியாக சில நிமிடங்கள் தனியாக அமர்ந்து பிராண வாயுவை உள் வாங்கி வெளியிட்டாலே இவர்கள் ஆன்மீக சக்தியை பெறலாம். இதை விட்டு விட்டு குரு தேடி அலைந்து, ஏமாற்றி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கி ஏமாறத் தேவையில்லை.
சரசுவாசத்தின் மூலம் பிராணன் உட்சென்று மூலத்தில் முழு நிலையடையும். இந்நிலைதான் ஆன்மீக சக்தியை பெற்றுத்தரும். இந்நிலையை அடைந்தவர்களே ஆன்மீகவாதிகள்.