உயர் ரக மனிதர்களை உற்பத்தி செய்வது எப்படி? - www.v4all.org
எந்த பெற்றோர்களுக்கு தான் தங்களது குழந்தை அறிவாளியாக, ஆரோக்யமாக இருக்க வேண்டும் என்று ஆசை இருக்காது. ஒரு குழந்தை பிறந்த பிறகு அதன் அறிவாற்றலை அதிகரிக்க. அபாக்கஸ் முதலான பயிற்சிகளை தருகிறோம். செஸ், க்யூப் முதலான விளையாட்டுக்களை கற்று தருகிறோம். உடல் வலுவிர்க்கு. நீச்சல், புட் பால், வாலி பால் முதலான விளையாட்டுக்கள். கராத்தே, Ncc முதலான பயிற்ச்சிகள். இவை அனைத்தும் குழந்தை பிறந்த பின் செய்யப்படுவது. ஆனால்?. ஒரு விசயத்தை நன்கு கவனியுங்கள். இப்பொழுது விவசாயத்திற்க்கு என்று தனியாக படிப்பு இருக்கிறது. உயர் ரக நெல்லை உற்பத்தி செய்வது எவ்வாறு என்பதை பற்றி அதில் கற்று தருகிறார்கள். அதே போல். அணைத்து தானியங்கள், காய்கள், பழங்களிலும் உயர் ரகங்களை உற்பத்தி செய்வது எவ்வாறு என்று சொல்லி கொடுக்க கல்லூரிகளும், பல்கலை கழகங்களும் உண்டு. அதே போல். ஆடு, கோழி முதலியவற்றில் உயர் ரகத்தை உற்பத்தி செய்வது எவ்வாறு. அதன் மாமிசம் மிருதுவாக இருக்க என்ன, என்ன செய்ய வேண்டும் என்று கற்று தர. அதுக்குனு தனியா சில கோர்ஸ்கள், சிலபச்கள் இருக்கு.
இதில் வேடிக்கை என்னவென்றால். நெல்லில், ஆட்டில், மாட்டில், கோழியில் உயர் ரகங்களை உற்பத்தி செய்ய தெரிந்த மனித இனம். உயர் ரக மனிதர்களை உற்பத்தி செய்வது எவ்வாறு என்று சிந்திக்க தவறி விட்டது என்று சுக்கி சிவம் அவர்கள் சொல்கிறார். நமது சித்தர்கள், ரிஷிகள் உயர் ரக மனிதர்களை உற்பத்தி செய்யும் வித்தையை நமக்கு கற்று கொடுத்து இருக்கிறார்கள். அன்னியர் படை எடுப்புகளில் நாம் நமது பல மூலங்களை இழந்தோம் அல்லவா. அதில் இதுவும் ஒன்று. அடுத்து திருமணம் ஆக போகிறவர்கள் அனைவரும். சுக்கி சிவம் அவர்களின் இந்த 27 நிமிட காணொளியை அவசியம் பார்க்கவும். அவ்வாறு பார்க்கவில்லையென்றால். அதனால் இழப்பு உங்களுக்கு தான்.
Video Link In Coment.
No comments:
Post a Comment