Showing posts with label TEAM BUILDING at chennai. Show all posts
Showing posts with label TEAM BUILDING at chennai. Show all posts

Monday, January 4, 2016

கிடைத்த பணியை திருப்தியாக செய்யுங்கள்

கிடைத்த பணியை திருப்தியாக செய்யுங்கள்

புத்திசாலியான மந்திரி ஒருவர்,ராஜாவுக்கு என்ன பிரச்னை வந்தாலும் அதற்குரிய தீர்வைத் தெளிவாகச் சொல்லி விடுவார். இதனால்,ராஜாவுக்கு மந்திரி மேல் பிரியம் அதிகம். அந்த மந்திரிக்கு ஒரு தம்பி இருந்தார். அவர் ஒரு விவசாயி. தன் மந்திரி அண்ணன் உழைப்பே இல்லாமல் நிறைய சம்பாதிக்கிறானே என்று தம்பிக்கு பொறாமை.

ஒருநாள், தன் அண்ணனிடம், ""நீ கொஞ்சநாள் விவசாயத்தைப் பார். எனக்கு மந்திரி பதவி வாங்கிக்கொடு,''என்றான்.
மந்திரியும் ராஜாவிடம் சிபாரிசு செய்து தம்பியை மந்திரியாக்கி விட்டார். ஒருநாள் சாலையில் சில வண்டிகள் சென்றன.
"எத்தனை வண்டி போகிறது?' என ராஜா பார்த்து வரச்சொன்னார். இவர் ஓடிப்போய் பார்த்து விட்டு, ""பத்து வண்டி போகிறது,'' 
என்றார்.

"வண்டியில் என்ன இருக்கிறது?'என்றார். இதை புது மந்திரி கவனிக்கவில்லை. மீண்டும் ஓடிப்போய் பார்த்து வந்து "நெல் மூடை போகிறது'என்றார்.

"அது என்ன விலை?' என்று ராஜா கேட்க,புது மந்திரி திரும்பவும் ஓடிச் சென்று பதில் வாங்கி வந்தார். இப்படி பல கேள்விகளுக்கு ஒவ்வொரு முறையும் ஓடிச் சென்றார்.

அப்போது பழைய மந்திரி தற்செயலாக வந்தார்.
""ராஜா! பத்து வண்டிகள் நம் அரண்மனையைக் கடந்தன. அதில் 200மூடை நெல், பாண்டிய நாட்டுக்குப் போகிறது. நம் சோழ நாட்டில் மூடைக்கு ஐந்து ரூபாய். அங்கே ஏழு ரூபாய் என்பதால், லாபம் கருதி அங்கே விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கிறார்கள்,'' என தெளிவாகச் சொன்னார். தம்பி மந்திரி தலை குனிந்தார்.

நம்மை இந்த உலகத்துக்கு அனுப்பும்போதே ஆண்டவர், இவன் இன்ன விஷயத்துக்கு தகுதியானவர் என்று அனுப்புகிறார். இதை ஏற்று நாம் நாமாக இருந்தாலே போதும்.
"நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியே நாம் வெவ்வேறான வரங்களுள்ளவர்கள்'' என்ற பைபிள் வசனப்படி, அவரவர்க்கு என விதிக்கப்பட்ட பணிகளை மன திருப்தியுடன் செய்தாலே போதும்... வாழ்வில் வெற்றி  பெற்று விடலாம்.

 வாழ்வில் வெற்றி பெற ச..சு..வின் வாழ்த்துக்கள்... அனைவருக்கும் காலை வணக்கம்..

Tuesday, November 17, 2015

ஏழ்மை எழக் காரணம்

ஏழ்மை எழக் காரணம்
====================
மனிதனுக்கு ஏழ்மை என்பது மூன்று வழிகளில் உண்டாகலாம் :
1) அவன் வாழ்வில் உள்ள வசதிகளை வீணான வழிகளில் செலவு செய்து அழித்து விடுவது
2) அன்றுள்ள சமுதாய அமைப்புக்கும், தனிமனிதன் தேவைகளுக்கும் ஒத்தவாறு பொருள் உற்பத்தித் திறனைக் கற்றுக் கொண்டு, அதை முறையாகச் செய்யாத சோம்பேறித்தனம்
3) உழைப்பினாலும், அறிவின் திறமையாலும் ஒருவர் உற்பத்தி செய்யும் பொருட்களை உழைக்காமலே அநீதியான வழிகளில் பிறர் பறித்துண்ணல்
இம்மூன்று வழிகளையும் ஆராய்ந்து தெளிந்து கொண்டால் தனிமனிதன் முயற்சியையும், சமுதாயக் கூட்டு அமைப்பின் கருத்துக்களையும், இணைத்துச் சிந்தித்துத் திட்டமுட்டு, எந்தக் குறையுமின்றி, எல்லோரும் பொருள்வளம் பெற்று மகிழ்ச்சியாக வாழலாம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி - www.happy4all.org

Monday, November 16, 2015

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

கணவன் மனைவி உறவு என்றும் இனிக்க நாம் செய்ய என்ன வேண்டும்?

குடும்ப மகிழ்ச்சிக்கு எது தேவை?
1. வருமானம்
2. ஒத்துழைப்பு
3. மனித நேயம்
4. பொழுதுபோக்கு
5. ரசனை
6. ஆரோக்கியம்
7. மனப்பக்குவம்
8. சேமிப்பு
9. கூட்டு முயற்சி
10.குழந்தைகள்

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

1. அன்பாக , பிரியமாக இருக்க வேண்டும்.
2. மனது புண்படும்படி பேசக் கூடாது.
3. கோபப்படக்கூடாது.
4. சாப்பாட்டில் குறை சொல்லக் கூடாது
5. பலர் முன் திட்டக்கூடாது.
6. எந்த இடத்திலும் மனைவியை விட்டுக் கொடுக்க கூடாது.
7. முக்கிய விழாக்களுக்கு சேர்ந்து போக வேண்டும்.
8. மனைவியிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
9. சொல்வதைப் பொறுமையாகக் கேட்க வேண்டும்
10.மனைவியின் கருத்தை ஆதரிக்க வேண்டும், மதிக்க வேண்டும்.
11.வித்தியாசமாக ஏதாவது செய்தால் ரசிக்க வெண்டும். பாராட்ட வேண்டும்.
12.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல. குழந்தை, குடும்பம் இவற்றிற்கும் உரிய முக்கியத்துவம் தந்து நடந்து கொள்ள வேண்டும்.
13. வாரம் ஒரு முறையாவது. மனம் விட்டுப் பேச வேண்டும்.
14.மாதம் ஒரு முறையாவது வெளியில் அழைத்துச் செல்ல வேண்டும்.
15. ஆண்டுக்கு ஒரு முறையாவது சுற்றுலா செல்ல வேண்டும்.
16.பிள்ளைகளின் படிப்பைப் பற்றி அக்கறையுடன் கேட்க வேண்டும்.
17. ஒளிவு மறைவு கூடாது.
18. மனைவியை நம்ப வேண்டும்.
19. முக்கியமானவற்றை மனைவியிடம் கூற வேண்டும்.
20. மனைவியிடம் அடுத்த பெண்ணைப் பாராட்டக் கூடாது.
21.அடுத்தவர் மனைவி அழகாக இருக்கிறாள் என்று எண்ணாமல் தனக்குக் கிடைத்ததை வைத்து சந்தோசப்பட வேண்டும்.
22.தனக்கு இருக்கும் கஷ்டம் தன் மனைவிக்கும் இருக்கும் என்று எண்ண வேண்டும்.
23. உடல் நலமில்லாத போது உடனிருந்து கவனிக்க வேண்டும்.
24. சின்ன, சின்னத் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்.
25. சிறு சிறு உதவிகள் செய்ய வேண்டும்.
26. குழந்தைகள் அசிங்கம் செய்து விட்டால் ‘இது உன் குழந்தை ‘ என்று ஒதுங்கக் கூடாது.
27.அம்மாவிடம் காட்டும் பாசத்தை, மனைவியிடமும் காட்ட வேண்டும். ஏனென்றால் மனம் சலிக்காமல் அம்மாவை விட, அக்கா, தங்கையை விட அதிகமாக கவனிக்க கூடியவள் மனைவி.
28. நேரத்திற்குச் சாப்பிட வேண்டும்.
29.சாப்பாடு வேண்டுமென்றால் முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
30. எங்கு சென்றாலும் மனைவியிடம் சொல்லி விட்டுச் சொல்ல வேண்டும்.
31. சொன்ன நேரத்திற்கு வர வேண்டும்.
32. எப்போதும் வீட்டு நினைப்பு வேண்டும்.
33. மனைவியின் பிறந்த நாள் தெரிய வேண்டும்.
34.மனைவிக்குப் பிடித்தவற்றைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
35. பொய், சூது, மது, மாது போன்ற தீய பழக்கங்கள் கூடாது.
36. மனைவி வீட்டாரைக் குறை சொல்லக் கூடாது.
37. கைச் செலவுக்கு பணம் தர வேண்டும்.

மனைவியிடம் கணவன் எதிர்பார்ப்பது என்ன?

1. பள்ளி அலுவலக நேரம் தெரிந்து அதற்குமுன் தயாரித்தல்.
2. காலையில் முன் எழுந்திருத்தல்.
3. எப்போதும் சிரித்த முகம்.
4. நேரம் பாராது உபசரித்தல்.
5. மாமியாரை தாயாக மதிக்க வேண்டும்.
6. கணவன் வீட்டாரிடையே அனுசரித்துப் போக வேண்டும்.
7. எதற்கெடுத்தாலும் ஆண்களைக் குறை சொல்லக் கூடாது.
8. அதிகாரம் பணணக் கூடாது.
9. குடும்ப ஒற்றுமைக்கு உழைக்க வேண்டும். அண்ணன், தம்பி பிரிப்பு கூடாது.
10. கணவன் குறைகளை வெளியே சொல்லக்கூடாது. அன்பால் திருத்த வேண்டும்.
11. கணவனை சந்தேகப்படக் கூடாது.
12. குடும்பச் சிக்கல்களை வெளியே சொல்லக் கூடாது.
13.பக்கத்து வீடுகளில் அரட்டை அடிப்பதைக் குறைக்க வேண்டும்.
14. வீட்டுக்கு வந்தவுடன், சாப்பிடும் போது சிக்கல்கள் குறித்துப் பேசக் கூடாது.
15. கணவர் வழி உறவினர்களையும் நன்கு உபசரிக்க வேண்டும்.
16. இருப்பதில் திருப்தி அடைய வேண்டும்.
17. அளவுக்கு மீறிய ஆசை கூடாது.
18. குழந்தை படிப்பில் கவனம் செலுத்த வேண்டும்.
19. கொடுக்கும் பணத்தில் சீராகக் குடும்பம் நடத்த வேண்டும்.
20.கணவரிடம் சொல்லாமல் கணவரின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை எடுத்துக் கொள்ளக் கூடாது.
21. தேவைகளை முன் கூட்டியே சொல்ல வேண்டும்.
22. எதிர்காலத் திட்டங்களைச் சிந்திக்கும் போது ஒத்துழைக்க வேண்டும்.
23. தினமும் நடந்ததை இரவில் சொல்ல வேண்டும்.
24.தாய் வீட்டில் கணவரை குற்றம் சொன்னால் மறுத்துப் பேச வேண்டும்.
25.அடக்கம், பணிவு தேவை. கணவர் விருப்பத்துக்கு ஏற்றாற் போல் ஆடை, அலங்காரம் செய்ய வேண்டும்.
26. குழந்தையைக் கண்டிக்கும் போது எதிர்வாதம் கூடாது.
27. சுவையாகச் சமைத்து, அன்புடன் பரிமாற வேண்டும்.
28. கணவர் வீட்டுக்கு வரும் போது நல்ல தோற்றம் இருக்கும்படி வீட்டை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும்.
29. பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
30.உரையாடலில் தெளிவாகப் பேசுவதுடன், பொருத்தமான முறையில் எடுத்துரைக்கும் விதமும் தெரிய வேண்டும்.
31. தேவையற்றதை வாங்கிப் பண முடக்கம் செய்யக் கூடாது.
32. உடம்பை சிலிம் ஆக வைத்துக் கொள்ள வேண்டும்.

மகிழ்ச்சி குறையக் காரணங்கள் எது?

பொதுவாகக் கீழ்க்கண்ட சில காரணங்களால்தான் ஒரு குடும்பத்தில் மகிழ்ச்சி குறைகிறது. உங்கள் குடும்பத்தில் எந்தெந்த காரணங்கள் என்பதை உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனித்தனியாக டிக் செய்து கண்டு பிடியுங்கள். பின்னர் அவற்றை நிவர்த்தி செய்ய முயற்சி மேற்கொள்ளுங்கள்.

1. அடிக்கடி வரும் சண்டைச் சச்சரவுகள்.
2. ஒருவறையொருவர் குறை கூறும் பழக்கம்.
3. அவரவர் வாக்கைக் காப்பாற்றத் தவறுதல்.
4. விரும்பியதைப் பெற இயலாமை.
5. ஒருவரையொருவர் நம்பாமை.
6. ஒருவர் மீது ஒருவர் அக்கறை காட்டுவதில்லை.
7. உலலாசப் பயணம் போக இயாலாமை.
8. ஒருவர் வேலையில் பிறர் உதவுவதில்லை.
9. விருந்தினர் குறைவு.
10. பொருள்களை ஆளுக்கு ஆள் இடம் மாற்றி வைத்தல்.
11. புதிய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு இலலை.
12. விட்டுக் கொடுக்கும் பண்பு குறைவு.
13. ஒருவர் மனம் புண்படும்படியாகப் பேசுதல்.
14. மகிழ்வான சூழ்நிலைகளை உருவாக்குதல் குறைவு.

பத்து கட்டளைகள்:

1. அன்பு செலுத்துங்கள். அக்கறை காட்டுங்கள்.

2. ஆர்வத்துடன் அதிகமாக செயல்பட விரும்புங்கள்.

3.இன்சொல் கூறுங்கள். 'நான்', 'எனது' போன்ற வார்த்தைகளைத் தவிர்த்திடுங்கள்.

4. உணர்வுகளை மதிக்கவும், மரியாதை கொடுக்கவும் புகழவும் கற்றுக் கொள்ளுங்கள்.

5. ஊக்கத்துடன் சுறுசுறுப்பாகச் செயல்படுங்கள்.

6. எப்போதும் பேசுவதைக் கேட்டு, பின்விளைவை யோசித்து சரியான சைகை, முகபாவத்துடன் தெளிவாகப் பேசுங்கள்.

7. ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்துடன் பிறர் குறைகளை அலட்சியப் படுத்துங்கள்.

8. ஐங்குணமாகிய நகைச்சுவை, நேர்மை, சமயோசிதம், இன்முகம், விட்டுக் கொடுத்தல் ஆகியவற்றைக் கடைப்பிடியுங்கள்.

9.ஒவ்வொருவரையும் வெவ்வேறு புதுப்புது வழிகளில் கையாளுங்கள்.

10.ஓஹோ, இவர் இப்படித்தான் என்று யாரையும் பார்த்த மாத்திரத்தில் மதிப்பிடாதீர்கள்.

வாழ்க்கையில் நல்வழிகளைக் கடைப்பிடிப்போம். வெற்றியை எட்டிப் பிடிப்போம்!

Thursday, August 20, 2015

வெற்றிகரமான நேர்காணலுக்கான உதவிக்குறிப்புகள்

வெற்றிகரமான நேர்காணலுக்கான உதவிக்குறிப்புகள் www.v4all.org

அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்® ஓப்பின் ஸ்மோல் பிஸ்னெஸ் நெற்வேர்க்கில் இருந்து தொகுக்கப்பட்ட உள்ளடக்கங்களில் இருந்து மாற்றி அமைக்கப்பட்டது.
உங்களின் சிறிய வியாபாரங்களுக்கு தொழிலாளர்களை நிங்கள் வேலைக்கமர்த்தும் பொது, உங்களுடைய கம்பனிக்கு மிகவும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை அடையாளம் காண்பதற்கான நேர்காணல் நடபடிக்கையை பயன்படுத்துவது மிக முக்கியமானதாகும். வெற்றிகரமான நேர்காணல் ஏனைய பலவற்றுடன் "தகவல் தொடர்பாடல்கள்" திறன்கள் என்பவற்றை ஒத்ததாகும். - அது சரியான கேள்விகளைக் கேட்கும் ஒரு விடயமாகும், விடைகளுக்கு செவிமடுத்து, விண்ணப்பதாரிகளை அவர்களின் திறன்கள் மற்றும் மனோபாவங்கள் பற்றி நேர்மையான முறையில் பேசுவதற்கு அவர்களை அனுமதியுங்கள். விண்ணப்பதாரிகள் அவர்கள் பற்றி தாராளமான விடயங்களை குறிப்பிட விருப்பமாக உள்ளார்கள் என்பது நல்ல செய்தியாகும், ஆகவே உங்களுடைய சவால் என்னவென்றால் ஒரு வேலைக்கமர்த்தல் தீர்மானத்தை எடுக்க உங்களுக்கு தேவையான தகவல்கள் பற்றி அவர்களுக்கு வழிகாட்டும் கேள்விகளைக் கேட்டறிவதாகும். உங்களது தொழில் நேர்காணல் திறன்களை வளர்த்துக் கொள்ள கீழே காணும் உதவிக் குறிப்புகளை பயன்படுத்துங்கள்.
உங்களது நேர்காணலை விரைவுபடுத்துங்கள்
விண்ணப்பதாரிகளின் பதற்றத்தைத் குறைக்க முதலில் ஒருசில கேள்விகளைப் பயன்படுத்துங்கள். நேர்காணலின் அடுத்த கட்டத்திற்கு நகர அவர்களை தயார்படுத்துங்கள் -- "ஒரு நபரின் வேலை அனுவத்தைக் கையாளும் சில. உங்களுடைய நடப்பு வேலையில் முக்கியமான ஒரு நாள் பற்றி கூறுங்கள். அது பற்றி நீங்கள் என்ன விரும்புகின்றீர்கள்? நீங்கள் எதை விரும்புவதில்லை?" அது ஒரு விண்ணப்பதாரரை பேசுவதற்கு தூண்டி விடலாம் அது எல்லாவற்றுக்கும் பின்புதான் ஒரு நேர்காணலின் விடயமாக இருக்கும்.
நீங்கள் பேசுவதை விட அவர்கள் கூறுவதற்கு செவிசாயுங்கள்
நேர்காணலின் 20 வீத நேரத்தை நீங்கள் பேசிக் கழிக்கின்றீர்கள் என்றால், நீங்கள் விண்ணப்பதாரர்கள் அவர்கள் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்பத்தை அளிக்கின்றீர்கள் இல்லை என்பது உண்மை. ஒரு நேர்காணலின் நோக்கம் உங்களுடைய கேள்விகளுக்கு ஒரு நபர் எப்படி பதிலளிக்கின்றார் என்ற அடிப்படையில் நீங்கள் ஒரு தீர்மானததை எடுக்க உதவுவதாகும். அந்த பதில்களை பற்றி செவிமடுப்பதற்கு உங்களுக்கு அதிக நேரம் தெவைப்படும்.
அட்டவணை உருவாக்குங்கள்
உங்களுடைய கலண்டரில் நேர்காணல்களை பற்றிக் கொண்டு, நீங்கள் ஏதாவது ஏனைய வியாபார சந்திப்பை விரும்புவது போன்று அவற்றையும் கவனியுங்கள். நீங்கள் உள்களுடைய தொடர்சியான கவனத்தை விண்ணப்பதாரர் மீது செலுத்துகின்றீர்களா – உங்களின் மேசை தெளிவாக இருக்கின்றதா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள், உங்களின் தொலைபேசியை ஒனில் வைத்துக் கொள்ளுங்கள்"தொந்தரவு செய்யாதீர்கள்;" உங்களுடைய கதவை மூடி, உங்களுடைய அலுவலகத்தில் உள்ளவர்களுக்கு உங்களுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
விரும்பிய பதிலை எதிர்பார்த்துக் கேட்கப்படும் கேள்விகளைக் கேளுங்கள்
ஆம் அல்லது இல்லை என்று இலகுவான ஒரு பதிலைக் கொண்டு பதிலளிக்கக்கூடிய ஏதாவது ஒரு கேள்வியை தவிர்த்துக் கொள்ளுங்கள். "அதுதான் விடயம் என்று நீங்கள் ஏன் நினைக்கின்றீர்கள்?" அல்லது "அதை நீங்கள் எப்படி செய்தீர்கள்?" போன்ற அதிகமான பின் தொடர் கேள்விகளைக் கேட்டு அதற்கு செவிமடுங்கள். விபரங்கள் தேவையாயின், அவற்றை விண்ணப்பதாரர்களிடம் இருந்து கேட்டறிந்து கொள்ளுங்கள்.
நீங்கள் வேலை பற்றி விபரிக்க முன்னர் கேள்விகளைக் கேளுங்கள்
நேர்காணலின் ஆரம்பத்தில் ஒரு விரிவான தொழில் விபரத்தை வழங்குவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஒரு நேர்த்தியான நபர் உங்களின் விபரத்தை பொறுக்கி எடுத்துக் கொள்வார், நீங்கள் கேட்க இருக்கும் அவர் அல்லது அவள் உணர்வதைப் பற்றிய எல்லா பதில்களையும் கூறத் தொடங்குங்கள். நீங்கள் வேலையை மீளாய்வு செய்ய முன்னர் முடியுமான வரை பல கேள்விகளைக் கேட்பதன் மூலம், நீங்கள் அதிகமான நேர்மையான பதில்களைக் கொண்டு ஊக்குவிக்கப்படுவீர்கள்.
தரமான கேள்விகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்
ஒவ்வொருவரும் சில மாதிரி நேர்காணல் கேள்விகளை தெரிந்திருக்கின்றார்கள். – ஐந்து வருடங்களில் இருந்து இன்று வரை நீங்கள் எங்கு இருக்க வேண்டும்? உங்களின் பலங்கள் மற்றும் பலவீனங்கள் என்ன? உங்களைப் பற்றி கூறுங்கள்? இந்த கேள்விகளுடனான பிரச்சினை என்னவென்றால், பல விண்ணப்பதாரிகள் அவர்களின் பதில்களைத் தயாரிப்பதில் காலத்தை செலவிட்டுள்ளார்கள் என்பதாகும். இந்த எழுத்தாக்கம் பண்ணப்பட்ட கருத்தரைகள் உங்களுக்கான குறைந்த பயன்பாடு உள்ளதாகும். மாறாக, நேர்காணப்படுபவர்கள் தமது சொந்தக் காலில் நின்று சிந்தித்து அவர்களின் பலங்கள் மற்றும் வரையறைகள் பற்றி ஒரு நேர்மையான மதிப்பீட்டை வழங்க தூண்டும் சவால் நிறைந்த கேள்விகளை முன்வையுங்கள். உதாரணமாக, வேலை நிலைமையில் ஒரு மாதிரியாக மீள்பிரதிபலித்துக் காட்டும் வகையில் விண்ணப்பதாரிகளை நீங்கள் கேட்கும் காட்சி அடிப்படையிலான கேள்விகள் மிகச் சரியான ஒரு விளக்கத்தை அளிக்கலாம்.
இரட்டை நேர்காணல் நடவடிக்கையை கருத்தில் கொள்ளுங்கள்
மிக உயர்ந்த இரண்டு அல்லது மூன்று விடயங்கள் பற்றி விண்ணப்பதாரர்களை தயார்படுத்தும் வகையில் ஒரு முதலாவது நேர்காணலை பயன்படுத்துங்கள். பின் அவர்களில் சிறந்த விண்ணப்பதாரிகளைத் தெரிர்ந்தெக்க ஒரு இரண்டாவது முறை நேர்காணல்களை பயன்படுத்துங்கள். இரண்டாவது நேர்காணல் விண்ணப்பதாரர்களுடன் மிக நெருங்கிய அன்நியோன்ய தொடர்பை உள்ள மக்களினால் நடாத்தப்படலாம். அவர்களின் உள்ளீடு முக்கியமானதாகும்.
உங்களால் என்ன கேட்க முடியாதோ அது பற்றி அறிந்து கொள்ளுங்கள்
கேள்விகள் குறித்த சட்டவிதிகள் மிக கண்டிப்பானது. ஒரு தொழில் நேர்காணலின் போது நீங்கள் அந்தக் கேள்விகளைக் கேட்கக் கூடாது. பொதுவாக, இந்தத் தடைசெய்யப்பட்ட கேள்விகள் ஒரு சாத்தியமான தொழிலாளருக்கு எதிராக வேறுபாடு காண்பதற்கு பயன்படுத்தக்கூடிய பதிலை உடைய கேள்விகளாகும். அவை வழக்கமாக வயது, இனம், விவாக நிலை, அல்லது வலது குறைவு போன்ற வேலை சம்பந்தப்படாத விபரங்கள் மீது ஒருமுகப்படும்.
பதிப்புரிமை © 1995-2008, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கம்பனி. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.

Monday, August 3, 2015

ஆடி பதினெட்டும் ,தானம் கொடுக்க வேண்டிய 18பொருள்களும்;


ஆடி பதினெட்டும் ,தானம் கொடுக்க வேண்டிய 18பொருள்களும்;

1 )மஞ்சள் கிழங்கு
2 )குங்குமப்பூ
3 )மரச்சீப்பு 
4 )ஏலக்காய்
5 )ரவிக்கைத்துணி
6 )கஸ்துரி மஞ்சள்
7 )கருகமணி
8)அரக்கு வளையல்
9 )சந்தனம்
1 ௦ )பாக்கு
1 1 )பச்சை கற்பூரம்
1 2 )லவங்கப்பட்டை
1 3 )குங்குமம்
1 4 )கார்போகரிசி
1 5 )ஜாதிக்காய்
1 6 )வெண்கடுகு
1 7 )காதோலை
1 8 )செந்தாமரை பூ


இவை வீட்டில் இருந்தால் மகாலட்சுமி நம் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.ஆனால் இவை இருககும் வீடு சுத்தமாக இருக்க வேண்டும் .வெள்ளி,செவ்வாய் கிழமைகளில் வீடுமுழுமையாகவும்,மற்ற நாட்களில் குறைந்த பட்சம் பூஜை அறையையும் சுத்தம் செய்ய வேண்டும்.இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் தம்பதிகளுக்குள் சண்டை சச்சரவு வராது.சந்தான பாக்கியம் இல்லாத பெண்களுக்கு சந்தான லட்சுமி அருள் புரிவாள்.வற்றாத செல்வத்திற்கு அதிபதியாக இருக்கலாம்.மனம் நிம்மதியாக இருககும்.நன்றாக படிக்காத குழந்தைகள் படிப்பில் ஓரளவேனும் தேர்ச்சி பெறுவர் ஆறு மாதத்திற்கு ஒரு முறை இப்பொருளை மாற்றி விடவேண்டும். ஆடி பதினெட்டில் ஒரு சுமங்கலிக்கு மேற்கண்ட பொருட்களை தானமாக கொடுத்து விட்டு புதிதாக இதே பொருட்களை வாங்கி வைக்க வேண்டும். - www.happy4all.org 


Thursday, July 16, 2015

மனம் என்றால் என்ன?

மனம் என்றால் என்ன? மனம் என்பது இதயமோ அல்லது மூளையோ அல்ல. எண்ணங்களின் ஓட்டத்தை தான் நாம் மனம் என்று சொல்லுகிறோம். மனம் தான் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதாவது நல்ல, நேர்மறையான எண்ணங்கள் நல்ல, வெற்றியான வாழ்க்கையையும், தீய, எதிர்மறையான எண்ணங்கள் தோல்விகளையும், துன்பங்களையும் தருகிறது. மனம் மிகவும் வலிமையானது. மனம் அபாரமான சக்தி வாய்ந்தது. மனம் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
மனத்தைக் கட்டுபடுத்துவது மிகவும் கடினம் என்றே சொல்ல வேண்டும். ஆதலால் தான் மனம் ஒரு குரங்கு என்பார்கள். மனம் கட்டுப்பாடின்றி ஓடும் அராபியக் குதிரை போன்றது. உங்கள் வாழ்க்கையின் வெற்றிக்கும் அல்லது தோல்விற்கும் உங்கள் மனதிற்கும் நிறையவே சம்பந்தம் உள்ளது.
சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மனம் என்னும் குதிரையை கடிவாளமிட்டு உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால் வெற்றி நிச்சயம். மாறாக, மனம் உங்களைக் கட்டுப்படுத்தி விட்டால், அதாவது மனக்குதிரை கட்டுப்பாடின்றி தாறுமாறாய் ஓடினால் தோல்விகளும், துன்பங்களும் நிச்சயம்.
மனதை நீங்கள் வென்றால் வெற்றியும் சந்தோஷமும் உங்களுக்குக் கிடைக்கும். மனம் உங்களை வென்று விட்டால், மனம் இழுத்த இழுப்பிற்கெல்லாம் நீங்கள் செல்லுவீர்கள். புகை பிடிப்பது, மது அருந்துவது, மற்றும் பிற தீய பழக்கங்கள் உடையவர்கள் மனக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் தான்.
மனத்தைக் கட்டுப்படுத்துவது தான் வாழ்க்கையின் வெற்றி இரகசியம். எளிதான விஷயம் தான். ஆனால் கடைபிடிப்பது தான் கடினமான விஷயம்.
அடங்கா மனமே அடங்கு.
வாழ்க வளமுடன்!


நாம் ஏன் பணக்காரராக இருக்க வேண்டும்?



நாம் ஏன் பணக்காரராக இருக்க வேண்டும்?


என் இனிய நண்பர்களே! ஒருவர் ஏழையாய் பிறப்பது குற்றமில்லை, ஆனால் ஏழையாய் வாழ நினைப்பதுதான் குற்றம். ஏழையாய் வாழ நினைப்பது அவரின் தனிப்பட்ட முடிவானாலும், அது அவரின் வாழ்க்கைத் துணை மற்றும் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை முடிவு செய்கிறது, ஆதலால் இது தனிப்பட்டவர் சுதந்திரம் அல்ல. சுதந்திரம் என்பது நினைத்த மாதிரியெல்லாம் வாழ்வதில் இல்லை. எதிலும் சிக்காமல் வாழ்வதுதான் சுதந்திரம். சிக்கியபின் விடுவிக்கப்படுவது விடுதலை ஆகும். சிக்கி இருக்கும் போதுதான் சுதந்திரம் பறிபோனது புரியும். சரி, அன்பர்களே! ஏழ்மை என்ற சிறைக்குள் சிக்கியவர்களுக்கு கிடைக்கும் தண்டனைகளையும், ஏழ்மையில் சிக்காமல் இருக்கும் பணக்காரர்களுக்கு கிடைக்கும் பரிசுகளையும் கூர்ந்து கவனித்தீர்களேயாயின் ஒரு உண்மை புரிய வரும். அந்த உண்மை என்ன வென்றால் ஏழ்மையில் உழன்று காலம் முழுமைக்கும் படும் பாட்டை விட ஏழ்மையில் இருந்து செல்வச் செழிப்பு நிலைக்கு மாறச் சில காலம் படும் பாடு மிக மிகக் குறைவானதே என்பதுதான். இதை நான் உங்கள் மன ஆறுதலுக்காகச் சொல்லவில்லை, மன மாற்றத்திற்காக சொல்கிறேன். உண்மை புரிந்தால் அந்தப் பக்கம் இருக்க விரும்பமாட்டீர்கள், இந்தப் பக்கம் வர முதல் அடியை எடுத்து வைக்க முனைவீர்கள். அந்த உண்மைகளை இனி பார்ப்போம்.
வறுமைக்குச் சாபம்செல்வச் செழிப்புக்குப் பரிசு
1. என்பதுக்கு இருபதுதான்: ஏழை மற்றும் நடுத்தர மக்கள் 80 விழுக்காடு இருக்கின்றனர். இவர்களுக்கு கிடைக்கும் வசதிகள் வெறும் 20 விழுக்காடுதான். ஒரு குடும்பத்திற்கு கிடைப்பது நாலில் ஒரு பங்குதான், ஆகையால் வாழ்க்கையே ஒரு போராட்டம்தான்.1. இருபதுக்கே என்பது: பணக்காரர்கள் 20 விழுக்காடு இருக்கின்றனர். அவர்களுக்கு 80 விழுக்காடு வசதிகள் கிடைக்கின்றன. ஒரு குடும்பத்திற்கு நான்கு மடங்கு கிடைக்கிறது. ஆகவே, வாழ்கை எப்போதும் சுபீட்சம்தான்.
2. விபத்து நிகழ்ந்தால் பாதிப்பு அதிகம்: வாழ்க்கைக்கு தேவையானது நான்கில் ஒரு பங்கு மட்டுமே கிடைக்கும் நிலையில், அந்தக் குடும்பத் தலைவன் தவறினால், குடும்பம் தலை நிமிர இன்னொரு தலைமுறை வேண்டும்.2. விபத்து நிகழ்ந்தால் பாதிப்பு குறைவு: வாழ்க்கைக்கு தேவையானது நான்கு மடங்கு இருப்பதால், தலைமுறைத் தாண்டி நிலைக்கும் ஆகையால், குடும்பத் தலைவன் தவறினாலும், பாதிப்பு அதிகம் இருக்காது.
3. கடன் வீடு: வீடு கட்ட 10 இலட்சம் வங்கிக் கடன் வாங்கினால், அதை 15 வருடங்களில் திருப்பிக் கட்ட 20 இலட்சம் ஆகிறது. ஆக, வீடு கட்ட நாம் 20 இலட்சம் செலவழிக்கிறோம். அதுவே, அந்த 20 இலட்சம் நம் கையில் இருந்தால், வீடுமேலே மாடி கட்டி வாடகை வருமானம் பார்க்கலாம் அல்லவா? நமக்கு வீடு என்பது சுமையாகும் (Liability)3. சொந்த வீடு: சொந்தப் பணத்தில் தனது கனவு இல்லத்தை கட்டிய பின் வாடகை வருமானத்திற்கும் வீடுகள் கட்டுகிறார்கள். ஆக, வீட்டையும் முதலீடாகப் பார்க்கிறார்கள். இவகளுக்கு வீடு என்பது ஒரு சொத்து (Asset) ஆகும்.
4. கடன் வாகனம்: கடனில் வாங்கிய இரு சக்கர வாகனம் கடன் அடைக்குமுன் பழசாகிவிடுகிறது. அடுத்த வண்டி வாங்க யோசிக்கிறோம். இதில் வண்டிக்கு விலை அதிகம் உள்ள பெட்ரோல் (ஆதார விலை குறைவு) போட வேண்டியுள்ளது.4. சொகுசுக் கார்: புதிய புதிய மாடல்களை மாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். சொகுசுக்காரில் பயணம் பாதுகாப்பானதுகூட. இந்தக்காருக்கு விலை குறைவாக உள்ள டீசல் (ஆதார விலை அதிகம்) போடப்படுகிறது.
5. வருமான வரிச் சலுகை மிகக் குறைவு: வருமான வரி கழித்துக் கொண்டுதான் நமக்குச் சம்பளம். நம் சொற்ப வருமானத்திற்கு வரி மிக மிக அதிகம். வருமான வரி விதிப்புக்கு குறைவாக வருமானம் வாழ்வதற்கே போதாது.5. வருமான வரிச் சலுகை மிக அதிகம்: இவர்கள் சம்பாதித்த பின் வரி கட்டலாம். இவர்கள் மரம் நட்டால் பசுமை வரிச்சலுகையும், புதிய இடத்தில் தொழில் தொடங்கினால் வரி விடுமுறை (Tax Holiday) உள்ளிட்ட சலுகைகள் பல உண்டு.
6. விற்பனை வரிச்சுமை நம் தலையில்: ஒரு பொருள் வாங்கினால் அதன் விற்பனை வரியை பொருளின் விலையில் சேர்த்து நம்மிடம்தான் வசூலிக்கிறார்கள்.6. விற்பனை வரியை ஏழைகள் தலையில்: சம்பாதிப்பது இவர்கள், விற்பனை வரி கட்டுவது வாங்குபவர்கள். இதற்குப் பெயர்தான் தலையில் மிளகாய் அரைத்தலோ.
7. படிக்கத் தரம் குறைந்த பள்ளிகள்: படிக்கிற பிள்ளை எங்கு வேண்டுமானாலும் படிக்கும் என்று நம் இயலாமைக்கு சமாதானம் சொல்லிக் கொள்கிறோம். உண்மையைச் சொல்லுங்கள்! தரமான பள்ளி நம் திறமையான குழந்தைக்கு நல்ல களமாக அமையாதா?7. படிக்கச் சர்வதேச தரத்தில் பள்ளிகள்: தரம் வாய்ந்த பள்ளி குழந்தையின் ஆளுமைத்திறனை உயர்த்தி, புத்தி கொண்டு மென்மையாக உழைக்க பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். இவர்கள்தான் அடுத்த தலைமுறையை ஆள்வார்கள்.
8. நகைகள் நகைக் கடனுக்காக: இருக்கும் கொஞ்ச நகையும் அவசரத் தேவைக்கு அடமானம் வைக்க உதவும்.8. நகைகள் முதலீட்டுக்காக: புதிது புதிதாக நகைகள் வாங்குவது அழகுக்காக மட்டும் அல்லாமல் தங்க முதலீடாகவும்தான்.
9. விடுமுறை பாட்டி வீட்டில்: இலவசமாக தங்க இடமும், உண்ண உணவும் கிடைப்பதால்தான் குழந்தைகளை பாட்டி வீட்டிற்கு அனுப்புகிறோம். அன்பர்களே! பாசத்திற்காக என்று நீங்கள் சொல்வீர்களேயாயின், பாட்டியையும் சேர்த்துக் கொண்டுச் சுற்றுலா செல்ல வேண்டியதுதானே?.9. விடுமுறையில் வெளி நாட்டில்: பரந்த உலகில் விசால அறிவைப் பெற இவர்களின் குழந்தைகளை உலகச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்கள்.
10. கொடுத்த கை ஏந்தும் நிலையில்: முப்பது வருடங்கள் உழைத்து நம் செல்வங்களை வளர்த்து ஆளாக்கிவிட்டு, அசந்து உட்கார்ந்து, நம் பிள்ளைகள் நமக்கு சோறு போடுவார்களா?, வைத்தியத்திற்கு செலவு செய்வார்களா? என்று எதிர் பார்த்து கை ஏந்தும் நிலைதான் நமக்கு.10. கொடுத்த கைத் தாழாத நிலையில்: “மகனே! என் பேச்சை கேட்டால் சொத்து உனக்கு, இல்லையேல் கோவிலுக்கு” என்று கம்பீரமாக சொல்க்கூடிய கொடுத்த கை தாழாத நிலை இவர்களுக்கு உண்டு.
வறுமையில் வாழ நினைப்பதை விடுவோம்!
வறுமையை ஜெயிக்க வழி காண்போம்!

Wednesday, July 1, 2015

வெற்றிக்கு!!! வெற்றி

1.தினமும் அரை நாள் (12 மணி நேரம்) கடுமையாய் உழையுங்கள்..,
2.வாய்ப்புகளை திறக்கும் சாவி உழைப்புதான்…
3.வெற்றி ஒன்றையே மனம் நினைக்க வேண்டும்…,
4. வெற்றி ஏணியில் ஒவ்வொரு படியாகத்தான் ஏற்வேண்டும்…,
5.ஒரு மரத்தின் உச்சியை அடைய இரண்டு வழிகள் உண்டு. ஒன்று யாராவது ஏற்றி விடுவார்கள் என்று காத்திருப்பது, மற்றொன்று நாமே ஏறுவது…,
6.வியாபார அபாயங்களை கண்டு அஞ்சக்கூடாது…,
7.பிடித்த காரியத்தை செய்ய வேண்டும் என்பதைவிட செய்யும் காரியத்தை நமக்கு பிடித்ததாய் மாற்றி கொள்ள வேண்டும்.
8. முடியாது, நடக்காது போன்ற வார்த்தைகளை சொல்லவே கூடாது..,,
9. பாதுகாப்பாய் ஒரே இடத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவாது…,
10. வெற்றிக்கு தேவை பாதி அதிர்ஷ்டம், பாதி அறிவு…,
11. துணிச்சலாய் முடிவுகள் எடுக்க வேண்டும்…,
12. நீங்கள் சம்பாதிப்பதை விட அதிகம் உழைக்க வேண்டும்..,
13. மற்றவர்களை உங்களுக்கு உழைக்க வைப்பதில்தான் உங்கள் புத்திசாலித்தனம் இருக்கிறது…,
14. வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள தயாராக இருக்க வேண்டும்….,
15. எதையும் நாளை என்று தள்ளி போடக்கூடாது..,
16. கைக்கடிகாரத்தை கொடுத்துவிட்டு அலாரம் கடிகாரம் வாங்குங்கள்…,
17. மற்றவர்களை வழிநடத்த வேண்டுமென்று நினைக்கக் கூடாது…,
18. கவலைப்படாதீர்கள். கவலையில் எந்த நன்மையும் கிடைக்காது…,
19. சந்தோஷத்தை கொடுப்பது பணம் மட்டுமல்ல….,
20. கடவுளை நம்புங்கள்.

வெற்றிக்கு உதவும் ஆறு குணங்கள்:
பணிவு
ஒரு துறையில் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர் நாலு விசயங்களைப் பழகியவுடன் கர்வம் அவர்களுடைய தலைக்கு மேல் ஏறிக் கொள்கிறது. என்னைப் போல் யார்? என்றுநினைக்கிறார்கள். இதுதான் அவர்களின் சரிவுக்கான முதல் படி. முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை. இதற்குப் பதிலாகத் துணிவை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வெற்றிக்கு அது துணை நிற்கும்.
கருணை
உங்களைச் சுற்றியுள்ளவர்கள் துயரத்தை அனுபவிக்கும் போது, அவர்களுக்கு ஆறுதலாக இருங்கள். உங்களுக்குப் பிரச்சனை என்று வரும் போது அவர்கள் உதவுவதற்கு ஓடோடி வருவார்கள்.
பழகும் தன்மை
வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, உங்களுக்கு மேலே உள்ளவர்களிடமும், கீழேஉள்ளவர்களிடமும் வெளிப்படையாக நடந்து கொள்ளுங்கள். திறந்த புத்தகமாக வாழத் தொடங்குங்கள். பல புதிய வெற்றி வாசல்கள் திறப்பதை அறிவீர்கள்.
அரவணைக்கும் குணம்
உலகில் எல்லாவிதமான மனிதர்களும் இருப்பார்கள் என்பதை ஒப்புக் கொண்டு,அவர்களிடம் உள்ள நல்ல விசயங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டு பழகத்தொடங்கினால் நட்பு வட்டம் பெருகும். வாழ்க்கை சிறகடிக்கும்.
இணைந்து பணியாற்றும் தன்மை
நாம் ஒவ்வொருவரும் பல தனிப்பட்ட திறமை கொண்டவர்களாக இருப்போம். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றினால் அந்த வெற்றி பல மடங்காக உயரும்.
முடிவெடுக்கும் திறன்
நாம் தினந்தோறும் எல்லாப் பிரச்சனைகளுக்கும் ஏதாவது ஒரு முடிவைஎடுக்கிறோம். நமது திறமை மற்றும் அனுபவத்தைச் சரியான விகிதத்தில் யோசித்துஎடுக்கும் முடிவுகள் நமது வாழ்வின் முக்கியத் திருப்புமுனையாக அமையும்.
இவையே நமது வெற்றியின் வளர்ச்சியைத் தூக்கிவிடும்.


Thursday, June 25, 2015

இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம்

“மனசு ரொம்ப கனமா இருக்கு, என்ன செய்யுறதுன்னு தெரியலே” என்ற வார்த்தைகளையே நாம் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், இந்த உணர்வு நாம் எல்லோரும் எதோ ஒரு கட்டத்தில் அனுபவித்திருக்க கூடியது தான். வாழ்க்கையில் இறுக்கமான கட்டங்கள் (மன வேதனையான) ஏற்படும்.
சிலருக்கு எவ்வளவு சிரமமான சிக்கலும் இறுக்கம் தராது. ஒருவரது வாழ்வில் இறுக்கமான பாதிப்புகளையும் மனநோயையும் அடைய அதிகம் வாய்ப்புள்ளது. அந்த பட்டியலில் திருமணம், தொழில், காதல், உறவுகள், நிகழ்வுகள், இழப்பு போன்ற சோகமான கட்டங்களும் உண்டு. பலர் சோகமான மோசமான நிகழ்வுகளே வாழ்வில்இறுக்கம் என்று கருதுகிறார்கள். மகிழ்ச்சிகரமான விஷயங்கள் கூட இறுக்கத்தைஏற்படுத்தும்.
இறுக்கம் வாழ்வில் இன்றியமையாத அங்கமாகி விட்டது. “வெளியே சொல்லவும் மொழியில்லை. வேதனை திறவும் வழியில்லை” என்ற அழுவதே ஆறுதல் தரும்.
“அழுதுவிடு” என்று சொல்வது அவமானம் படுத்துவதாக ஆகாது. குமறி குமறி உணர்ச்சிகளை அடக்கி உள்ளே வெடிப்பதை விட, பாதி சோகத்தையாவது கண் வழியே இறக்கி வைப்பது நல்லது.
அழுது முடிந்ததும் ஏற்படும் அமைதியை நாம் எல்லோரும் அனுபவித்திருப்போம். இந்த அமைதி மனதின் பாரம் குறைதத்தினால் வரும் பாதி நிம்மதி. “இவ்வளவு வயசாச்சு இன்னும் அழுரிய” என்ற கேலிக்கு பயப்படுபவர்கள், தனியாகவும் அழலாம். இதை தவிர,சிரிக்க தெரிந்தவனுக்கு பாதி விஷயங்கள் சிக்கலாக தெரியாது.
இறுக்கம் என்பது வாழ்க்கையின் அங்கம். நாம் இப்படித்தான் இயங்குகிறோம் என்பதைஉணர்ந்து கொண்டால் எப்படி இயங்கினாலும் சிறப்பை இருக்கும். சிந்தித்துசெயல்பட்டால் வாழ்க்கை அழகா அமையும்.

www.v4all.org

Tuesday, June 23, 2015

புத்தன் ,ஏசு, காந்திக்கே இந்தக் கதி என்றால்....?

நாம் செய்யாத குற்றம் குறைகளை ,
பிறர் நம் மீது சுமத்தும்போது ,
குமுறி கொந்தளிப்பது மனித இயல்பு...!
ஆனால் எவரையுமே எப்போதுமே குற்றம் சொல்லுவது சிலரது பிறப்பிலேயே அமைந்த இயல்பு...!
“நரம்பிலாத நாவால் எதையும் வரம்பில்லாமல் கூறிடுவார்
இருந்தால் வருவார் இழந்தால் பிரிவார்--நாளுக்கு நாள்தான் மாறிடுவார்
காய்த்த மரம்தான் கல்லடிபடுமென கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு
புத்தன் இயேசு காந்தியைக்கூட குற்றம் சொல்லி கேட்டதுண்டு..”
- இது எப்போதோ [ 1967 ]வாலி எழுதிய பாடல்...!
# புத்தன் இயேசு காந்தியை ...1967 – ல் மட்டும் அல்ல...இப்போதும் ...எப்போதும் குற்றம் சொல்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள்....!
# ‘தி டாவின்சி கோட்’ ... இது நாவலாகவும் , படமாகவும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் வந்தது...
‘தி டாவின்சி கோட்’ கதைப்படி , ஏசு கிறிஸ்து திருமணமானவர். அவருக்குக் குழந்தைகள் உண்டு.
ஏசுவுக்குப் பணிவிடை செய்த பாலியல் தொழிலாளியான மேரி மக்தலீன்தான் ஏசுவின் மனைவி என்றும் சொல்கிறது “தி டாவின்சி கோட்”..!
சரி..ஏசுவின் கதை இப்படி ..!
புத்தன் என்ன குற்றம் செய்தான்..?
- இதோ..மனதில் பதிந்த ஒரு பதிவு....
“குடும்பம் துறந்த
சித்தார்த்தன்
புத்தன் ஆனான்
நம்பி வந்த
யசோதரா
என்ன ஆனாள்?”
# ஆம்..தன்னை நம்பி வந்த மனைவியையும் , தனக்குப் பிறந்த மகனையும் ...நம்பிக் காத்திருந்த நாட்டை அரசாளும் கடமையையும் விட்டு விட்டு போதிமரம் தேடிப் போனது , புத்தன் செய்த குற்றம் எனப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்..!
# சரி..காந்தி கதைக்கு வருவோம்...
சமீபத்தில்...உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, மகாத்மா காந்தி ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டாக இருந்தார் என்றும் , மதத்தை அரசியலில் புகுத்தி இந்தியாவிற்கு மிகபெரிய தீங்கை செய்து விட்டார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்...!
# புத்தன் ,ஏசு, காந்திக்கே இந்தக் கதி என்றால்....?
சரி..எவருமே நம்மைக் குற்றம் , குறை சொல்லாமல் , எல்லோருக்கும் நல்லவனாக எப்படித்தான் வாழ்வது..?
இதற்கும் தனது பாடலில் பதில் சொல்கிறார் வாலி...
“ஐந்து விரல்களும் ஒன்றாயிருக்கும் மனிதன் உலகில் கிடைப்பானா?
அத்தனை பேர்க்கும் நல்லவனாக ஆண்டவன் கூட இருப்பானா ?
உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா?
அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக்கூடிய காரியமா?”
# காரணமில்லாமல் மற்றவர் உங்களை காயப்படுத்தும்போது ...
நீங்க காய்த்த மரம்னு நினைச்சுக்கிட்டு , கண்டினியூ பண்ணி போய்க்கிட்டே இருங்க ..!
“பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு
படைத்தவனிருப்பான் பார்த்துக்கொள்வான்
பயணத்தை தொடர்ந்து விடு--
நீ பயணத்தை தொடர்ந்துவிடு..”


John Durai Asir Chelliah's photo.

Monday, June 22, 2015

தோல்வியின் முடிவு உயர்வின் ஆரம்பமாக இருக்கும்

வாழ்க்கையில் உயர்வும், தாழ்வும் மாறி மாறி வருவது சகஜம். வாழ்வில் எல்லோரும் முன்னேற வேண்டும் என்று ஆசைப்படுவது இயல்பு. உயர்வு வரும் இடத்தில் தோல்விகளும் கூடவே வரும். உயர்வும் தாழ்வும் நாணயத்தின் இரு பக்கங்களாக கருத வேண்டும்.
தோல்வியை கண்டு துவளக் கூடாது. வாழ்வில் ஒரு முறையேனும் தோல்வி ஏற்பட்டால் தான் வெற்றியின் அருமை புரியும். சாதாரணமாக ஒருவன் வெற்றியடைந்தால் அவனுக்கு அது பெரிய விஷயமாக தெரியாது. பல முறை தோல்வி கண்டு, வெற்றியை தழுவும் ஒருவனால் தான் அந்த வெற்றியை முழுமையாக உணர முடியும்.
தோல்வி தான் வெற்றிக்கு முதற்படி!!!
அவன் வெற்றியை கொண்டாடுவான். நமக்கு ஏற்பட்ட பல தோல்விகளும் நம் வெற்றிக்கு காரணமாக அமையும். அப்போது புது சிந்தனைகள் உருவாகி வெற்றி அடைய துணை புரியும். ஒருவர் பெற்ற வெற்றியை தாங்க முடியாதவர்கள், அவரை ஏதேனும் வகையில் தோற்கடிக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.
நாம் வெற்றி அடையும் போது மற்றவர்களை பற்றி முழுமையாக அறிய முடியாது. ஆனால், தோல்வி ஏற்படும் போது தான், யார் நல்லவர் கெட்டவர் என்ற சுயரூபம் நமக்கு தெரியும். பொதுவாக வெற்றி பெறும் போது நமது நண்பர்கள் கூட எதிரிகளாக மாறுவார்கள்.
ஆனால், தோல்வி அடையும் போது சில நண்பர்களும் நமக்குக் கிடைப்பார்கள். இது எல்லாம் நமக்கும் கிடைக்கும் அனுபவ பாடம் என்பதை உணர வேண்டும். இதெல்லாம் வாழ்க்கையில் சகஜமாக எடுத்துக் கொண்டு எல்லோரிடமும் நட்புடன் பழக வேண்டும்.
சில தோல்விகள் தான் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். தோல்வி வரும் போது அதற்காக துவண்டு போய் விடாமல் இதுவும் வெற்றிக்கான பாடமாக எடுத்துக் கொண்டு நேர்மறையாக நமது எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். தோல்வியின் முடிவு உயர்வின் ஆரம்பமாக இருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

Saturday, June 20, 2015

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை- 260 கோடி வயது

உலகிலேயே மிகப்பழமையான திருவண்ணாமலை! - www.v4all.org
260 கோடி வயது: திருவண்ணாமலையை ஆர்க்கேயன் காலத்தியது என்கிறார்கள். அதாவது, இந்த காலம் 200 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்டது. இந்த காலத்திலேயே திருவண்ணாமலை தோன்றி விட்டது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். திருவண்ணாமலையின் வயதை இவர்கள் 260 கோடி ஆண்டுகள் என்று மதிப்பிட்டுள்ளார்கள். இது உலகிலேயே மிகப்பழமையான மலை என்று, டாக்டர் பீர்பால் சகானி என்ற விஞ்ஞானி தெரிவித்துள்ளார். முதல் கணக்கெடுப்பின் படி மலையின் உயரம் 2665 அடி.
ரொம்ப ரொம்ப சிறந்த மாதங்கள்: திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாதம் பவுர்ணமியன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். ஆனால், ஐப்பசி, கார்த்திகை, மார்கழியில் எல்லா நாட்களும் வலம் வரலாம். இவை மிகச்சிறந்த மாதங்கள் என்கிறார்கள் பெரியவர்கள். இப்போ இருக்கிற கூட்டத்துக்கு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா! எந்த மாசம் வந்தால் என்ன! மனசு அண்ணாமலையார் கிட்டே இருக் கணும், என்கிறார்கள் மூத்த பக்தர்கள்.
தீபதரிசன மண்டபம்: அண்ணாமலையார் கோயிலிலுள்ள கிளிக்கோபுரம் அருகில் தீபதரிசன மண்டபம் உள்ளது. மங்கையர்க்கரசி அம்மையார் என்பவர் இந்த மண்டபத்தை 1202ல் எழுப்பினார். இதை மங்கையர்க்கரசி மண்டபம் என்றும் சொல்வர். இங்கு தான் தீபம் ஏற்றும் முன்பு,பஞ்சமூர்த்திகள் எழுந்தருளுவர்.
கரும்புத்தொட்டில்: அண்ணாமலையின் முக்கிய நேர்த்திக்கடன்களில் ஒன்று கரும்புத் தொட்டில். குழந்தை பாக்கியமில்லாதவர்கள் இங்கு கிரிவலம் வருவர். தங்களுக்கு மகப்பேறு வாய்த்தால், அந்தக் குழந்தையை கரும்புத்தொட் டிலில் இட்டு, கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசிக்க வருவதாக வேண்டிக்கொள்வார்கள். இவ்வாறு செய்தால், இன்னும் பல இனிய குழந்தைகளை அந்த தம்பதிகள் பெறுவார்கள் என்பது ஐதீகம்.
ஆறுவிரல் ஆறுமுகம்: திருவண்ணாமலை திருப்புகழ் புலவர் அருணகிரியாருக்கு கைகளில் ஆறுவிரல் இருந்தது. அவர் ஆறுமுக பக்தர் என்பதால், அந்த முருகனே அவருக்கு அப்படி கொடுத்தான் போலும்! அவர் கால்களை சற்று உயர்த்தி எக்கி நடப்பார். அந்த நடை மயில்போல இருக்குமாம்! முருகனின் வாகனத்தை இது நினைவுபடுத்தியது.
கண்ணொளி கீரையும் உண்ணாமுலையாளும்: பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பார்கள் சித்த வைத்தியத்தில்! இதை அழுத்தம் திருத்தமாக இந்தப் பகுதி மக்கள் இளசுகளுக்கு எடுத்துச் சொல்வதற்காக, பொன்னாங்கண்ணியை புளிபோட்டு கடைஞ்சா உண்ணாமுலை தாயே ஓடி வந்து சாப்பிடுவா! என்கிறார்கள். இப்படி சொன்னால் தான், இளசுகள் அம்பாளே விரும்பும் கீரையாயிற்றே என்று விரும்பிச் சாப்பிடுவார்களாம்.
மீனின் பெயர் செல்லாக்காசு: திருவண்ணாமலையிலுள்ள ரமணர் ஆஸ்ரமம் அருகேயுள்ள தீர்த்தத்தை அகத்தியர் தீர்த்தம் என்பர். இது இருக்கும் இடத்தின் பெயர் பலாக்கொத்து. இதில் வசிக்கும் மீனின் பெயர் செல்லாக்காசு. அடேங்கப்பா! இப்படி ஒரு பெயர் வைக்க என்ன காரணம் என்று கேட்டால், இது அந்தக்காலத்து மீன் சாமி! அபூர்வ இனம் சாமி, என்ற பதில் மட்டும் தான் கிடைக்கிறது.
தங்கமலை ரகசியம்: அண்ணாமலை தங்கமலையாக இருந்த ரகசியம் உங்களுக்கு தெரியுமா? கைலாயத்தில் லிங்கம் இருப்பதால் கயிலாயம் சிறப்பு. ஆனால், லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலைக்கு சிறப்பு. இந்த மலை மிகப்பெரும் புனிதமாக கருதப்படுகிறது. இதை சிவலிங்கமாக கருதி சித்தர்கள், முனிவர்கள், ஞானி களெல்லாம் வழிபட்டுள்ளனர். உலகம் தோன்றிய காலத்தில் இருந்தே இம்மலை உள்ளதாக தல வரலாறு கூறுகிறது. கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவும், திரேதாயுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபரயுகத்தில் தங்க மலையாகவும், இன்றைய கலியுகத்தில் கல்மலையாகவும் விளங்குகிறது.
கிரிவலம் செய்யும் முறை: திருவண்ணாமலைக்கு காந்த சக்தி இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். கிரிவலம் செல்லும்போது எங்காவது துவங்கி, எங்காவது முடிக்கக்கூடாது. மலையைச் சுற்றி 14 கி.மீ. பக்தர்கள் நடந்தே செல்ல வேண்டும். வாகனங்களில் செல்லக் கூடாது. கிரிவலப்பாதையில் எட்டு திசையிலும் ஒவ்வொரு லிங்கம் உள்ளது. இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயுலிங்கம், குபேர லிங்கம், ஈசான லிங்கம் ஆகிய இவற்றை வணங்கி செல்ல வேண்டும். மலையை ஒட்டிய பக்கம் செல்லாது இடது பக்கமாகவே செல்ல வேண்டும். இறைவனை தியானித்தபடியே அண்ணாமலைக்கு அரோகரா என்று மனதில் சொல்லியபடி நடக்க வேண்டும். மலையைப் பார்த்து கைகூப்பி வணங்க வேண்டும். தினமும் கிரிவலம் வரலாம் என்றாலும் பவுர்ணமியன்று கிரிவலம் வந்தால் மனோசக்தி அதிகரிக்கும்.
நந்திக்கு பெருமை: மாட்டுப்பொங்கலன்று திருவண்ணாமலை கோயிலில் உள்ள நந்திக்கு விசேஷ பூஜை நடக்கும். அனைத்து காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகள், பலகாரங்கள் நைவேத்யம் செய்து, கதம்பமாலை அணிவித்து பூஜை செய்வர்.அவ்வேளையில் அண்ணாமலையார், நந்தியின் முன் எழுந்தருளி அவருக்கு காட்சி தருவார். தனது வாகனமான நந்தியைப் பெருமைப்படுத்தும் விதத்தில் சிவன் இவர் முன் எழுந்தருள்கிறார்.
அண்ணாமலை பொருள்: அண்ணுதல் என்றால் நெருங்குதல் என்று பொருள். அண்ணா என்றால் நெருங்கவே முடியாதது என்பதாகும். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்க முடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என பெயர் வந்தது.
செந்தூர விநாயகர்: ஆஞ்சநேயருக்கு செந்தூரம் பூசி அலங்கரிப்பது வழக்கம். ஆனால், திருவண்ணாமலையில் விநாயகருக்கு செந்தூரம்பூசுகின்றனர். சம்பந்தாசுரன் என்னும் அசுரனை, விநாயகர் வதம் செய்த போது, அவனது ரத்தத்தில் இருந்து அசுரர்கள் உருவாகினர். எனவே, விநாயகர் அவனது ரத்தத்தை உடலில் பூசிக்கொண்டார். இதன் அடிப்படையில் சித்திரைப் பிறப்பு, விநாயகர் சதுர்த்தி, திருக்கார்த்திகை மற்றும் தை மாதத்தில்ஓர் நாள் என ஆண்டில் நான்கு நாட்கள் மட்டும் இவருக்கு செந்தூரம் சாத்துகின்றனர்...,

Wednesday, June 17, 2015

கடவுளுடன் ஒரு பேட்டி!!!




கடவுளுடன் ஒரு பேட்டி!!!

ஒரு நாள் கடவுளை பேட்டியெடுப்பதாய் கனவு வந்தது அவனுக்கு.
“உள்ளே வா” – அழைத்த கடவுள், “என்னைப் பேட்டியெடுக்கணுமா?”
“ஆமாம்… உங்களுக்கு நேரமிருந்தால் கொடுங்கள்” -இது அவன்.
கடவுள் சிரித்தார்.
“என் நேரம் முடிவற்றது… எதையும் செய்யப் போதுமானது. சரி… என்ன கேட்கப் போகிறாய்?”
“மனித இனத்தில் உங்களை ஆச்சர்யப்படுத்துவது எது?”
கடவுள் சொன்னார்…
“மனிதன் ரொம்ப நாள் குழந்தையா இருக்கப் பிடிக்காமல், சீக்கிரம் வளர்ந்து பெரியவனாகிறான்… ஆனால் வளர்ந்த பிறகு குழந்தையாகவே நீண்ட காலம் இருக்கிறான்.
பணத்துக்காக உடல்நலனை இழக்கிறான்… பின்னர் இழந்த நலத்தைத் திரும்பப் பெற எல்லாப் பணத்தையும் இழக்கிறான்…
எதிர்காலத்தைப் பற்றியே எப்போதும் கவலையுடன் யோசிப்பதில், இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்காலத்தை மறந்துவிடுகிறான்… நிகழ்காலமும் எதிர்காலமும் அவனுக்கு இல்லாமலே போகிறது!
சாகாமல் இருக்க வாழ்கிறான்… ஆனால் வாழாமலே சாகிறான்…”
கடவுளின் கைகள் லேசாக அசைந்தன.. சில நொடிகள் மவுனம்.
“ஒரு தந்தையாக, இந்த பூமியில் உள்ள உங்களின் பிள்ளைகளுக்கு சொல்ல விரும்பும் வாழ்க்கைப் பாடம் என்ன?”
-மீண்டும் கேட்டான்.
கடவுளிடமிருந்து ஒரு புன்னகை…
“கண்ணா… யாரும் தன்னை நேசிக்க வேண்டும் என்று வலுவில் முயற்சிக்காதே… நேசிக்கப்படும் அளவு நடந்து கொள்.
வாழ்க்கையில் ஒருத்தன் சம்பாதிச்சது மதிப்புள்ளதல்ல… அதை எப்படிச் சம்பாதிச்சான் என்பதில்தான் அந்த மதிப்பிருக்கு…
ஒண்ணைவிட ஒண்ணு சிறந்ததுன்னு ஒப்பிடுவதே கூடாது.
எல்லாம் இருக்கிறவன் பணக்காரன்னு நினைக்காதே… உண்மையில் யாருக்கு தேவை குறைவோ அவன்தான் பணக்காரன்!
நாம் நேசிக்கும் ஒருத்தரை புண்படுத்த சில நொடிகள் போதும்…  ஆனால் அதை ஆற்ற பல ஆண்டுகள் ஆகும்…
நம்மை நேசிக்கும் பலருக்கு அதை சரியாக வெளிப்படுத்த தெரியாமல் இருப்பதுதான் நிஜம்…
பணம் இருந்தா எல்லாத்தையும் வாங்க முடியும்னு நினைக்கிறது தப்பு. சந்தோஷத்தை ஒருபோதும் வாங்க முடியாது.
இரண்டு பேர் ஒரே விஷயத்தைப் பார்த்தாலும், அவர்கள் பார்க்கும் விதம் வேறு வேறாக இருக்கும் என்பதைப் புரிந்து கொள்.
ஒரு நல்ல நண்பனுக்கு அடையாளம், சக நண்பனைப் பற்றி எல்லாம் தெரிந்து வைத்திருப்பதும்.. எந்த சூழலிலும் அவனை விரும்புவதுமே!
அடுத்தவனை மன்னிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ளும் தன்மை வேண்டும்…
நீ சொன்னதை மற்றவர் மறக்கலாம்… நீ செய்தததையும் மறந்து போகலாம்.. ஆனால், உன்னால் அவர்கள் பெற்ற உணர்வை ஒருபோதும் மறக்க மாட்டார்கள்!”
-பேட்டி முடிந்தது என்று சொல்லும் விதமாக கண்களால் சிரித்தார் கடவுள். அவரது கதவுகள் மூடின…
தேவையானது கிடைத்த சந்தோஷத்துடன்… விழித்தெழுந்தான் அவன்!