Monday, June 15, 2015

முறைப்படி சுத்தமான திருநீறு தயாரிக்கும் முறை

முறைப்படி சுத்தமான திருநீறு தயாரிக்கும் முறை - www.happy4all.org
ஒரே பசுவின் சாணத்தை பசு சாணம் போடும் போது நிலத்தில் விழாமல் தாமரை இலையில் பிடித்து, அதனை உருண்டைகளாக்கி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும்.
நன்றாக ஈரமில்லாமல் காய்ந்த பின்னர் சாணி உருண்டைகளை உமியால் மூடி உமிக்கு தீயிடவேண்டும்.
4 அல்லது 5 நாடகள் கழித்து இதனை மெதுவாக கிளறி சாணத்தின் சாம்பலை மட்டும் சேகரிக்க வேண்டும்.
இதனை துணியில் சலித்து உரிய பாத்திரத்தில் சேகரித்து வைத்து உபயோகிக்க வேண்டும்.
அகத்திய மகரிசி தனது நூலில் பஞ்சாட்சர மந்திரத்தினை விபூதி தயாரிப்பதற்கு, அணிவதற்கு எவ்வாறு பிரயோகம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.
திருநீறு செய்வதற்கு பசுவின் சாணத்தை நாம் ஏன் பயன்படுத்துகிறோம் எனப் பார்ப்பது சிறப்பாக இருக்கும். பசுவிலிருந்து நீங்கிய மலம் சாணம். அது அக்னியால் தகிக்கப்படும் போது தூய்மையடைந்து திருநீறாகிறது.
மும் மலங்களினால் கூடப்பெற்ற பசுவாகிய ஆன்மா சிவ அக்னியில் தகிக்கப்படும் போது தூய்மையடைந்து பிறவிப் பயனையடைகிறது.
திருநீற்றின் பெருமையை திருஞானசம்பந்தர் தனது மந்திரமாவது நீறு எனத் தொடங்கும் திருநீற்றுப் பதிகத்தில் தெளிவாகக் கூறியுள்ளார். சிவாயநம, நமசிவாய, சிவ சிவா என்று ஏதாவதொரு பஞ்சாட்சர மந்திரத்தை செபித்தபடி திருநீற்றினை அணிதல் வேண்டும். இதற்கு ஆட்காட்டி விரல், நடு விரல், மோதிர விரல் ஆகிய விரல்களை உபயோகிக்க வேண்டும்.
கிழக்கு முகமாக அல்லது வடக்கு முகமாக நோக்கியபடியே அணிதல் வேண்டும். இதனால் நல்வாக்கு, நல்லோர் நட்பு, உயர்ந்த நற்குணங்கள், குறைவில்லா செல்வம், சகல விதமான ஐசுவரியங்கள் போன்ற எல்லா நலமும் பெற்று நம் வாழ்வில் சிறப்புடன் வாழலாம்.


No comments:

Post a Comment