நாம் மருந்துகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறோமா?
நாம் வாழும் இந்த நவீன உலகத்தில் எல்லாமே அவசரம் தான். எல்லாவற்றிலும் வேகம் தான். உணவில் கூட, துரித உணவு உண்ண ஆரம்பித்து விட்டோம். நோய் வந்தாலும் உடனடி நிவாரணம் நமக்கு தேவையாகிவிடுகிறது. நம் உடலுக்கு நோயை குணப்படுத்தும் சக்தி இயற்கையாகவே உள்ளது. ஆனால் நம் இரசாயன மருந்துகள் எடுக்கும் போது உடலின் 'தானாகவே குணமாகும்' சக்தி குறைகிறது.அல்லது முற்றிலும் போய் விடுகிறது. நாம் மருந்துகளை தேவைக்கு அதிகமாக பயன்படுத்துகிறோமா? மேலே படியுங்கள்.................
நாம் இன்று எதற்கெடுத்தாலும் மருத்துவ சிகிச்சை எடுக்கும் பழக்கத்தை மேற்கொண்டு விட்டோம். சிறு குழந்தைகளுக்கு லேசான சளி இருந்தாலும் உடனே டாக்டரிடம் அழைத்து செல்கிறோம். அவர்களது உடலின் நோய் குணமாக்கும் சக்தியை இழக்க வைத்து விடுகிறோம். பெரும்பாலான வியாதிகள் தானாகவே குணமாகும் தன்மை உடையவை தான். நாம் நம் உடலுக்கு அந்த வாய்ப்பையே இப்பொழுதெல்லாம் கொடுப்பதேயில்லை என்பது தான் கொடுமையான உண்மை.
தேவை இல்லாமல் 'மாஸ்டர் செக்கப்' என்கின்ற பெயரில் வருடாவருடம் உடலை XRay, ஸ்கேன் என்று பல சோதனைகள் செய்து உடலை ஆபத்தான கதிர் வீச்சுக்கு ஆளாக்குகிறோம் என்பதுவேதனையான உண்மை.
மருத்துவ சிகிச்சைகளையும், மருந்துகளையும் தேவைக்கு அதிகமாக பயன்படுத்துவதை தவறு என்று நாம் உணர வேண்டும். நம் உடலும் மனமும் அபரிதமான சக்தி உடையவை. உடல் தானாகவே நோய்களை குணமாக்க அனுமதிக்க வேண்டும் நாம். உடல் தானாக குணமாக சற்று அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். அது ஒன்றே இதில் உள்ள குறை எனலாம். அவசரம் என்றால் சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். மிகவும் அவசரம் அல்லது அறுவை சிகிச்சை தேவைப் பட்டால் ஆங்கில மருத்துவத்தை நாடலாம்.
யோகா மற்றும் தியானம் தினசரிசெய்து வந்தால் நோய் இல்லா சுக வாழ்வு கடைசி வரை வாழலாம். மருந்துகளை உணவு போல் உட்கொள்ளும் அவலமும் நமக்கு ஏற்படாது.
வாழ்க வளமுடன்!
No comments:
Post a Comment