Tuesday, June 30, 2015

அட, அதான்யா வாழ்க்கை

அட, அதான்யா வாழ்க்கை! - www.v4all.org
வாழ்க்கையின் தத்துவத்தை நாம் எளிதில் அறிந்து கொள்ளுவதில்லை.
வாழ் நாள் முழுவதும் பணத்தைத் துரத்துவதிலேயே செலவழிக்கிறோம். சரி, ஒருவர் நன்றாக சம்பாதித்து விட்டார் என்று வைத்து கொள்வோம். கடல் போல் பெரிய பங்களா கட்டி விட்டார். கப்பல் போல் பெரிய சொகுசுக் காரும் வாங்கி விட்டார். வங்கியில் கோடிக்கணக்கில் பணம் வைத்திருக்கின்றார். அன்பான மனைவியும், நல்ல குழந்தைகளும் இருக்கிறார்கள். அதிக புகழும் அடைந்து விட்டார் என்றே வைத்துக்கொள்வோம்.
அவர் நாளைக் காலையில் மருத்துவமனையில் இறந்து விட்டார் என்றால் 'அவர்' என்கின்ற மரியாதை உடனே போய் 'உடல் மருத்துவமனையிலிருந்து எப்பொழுது வரும்'? என்றே கேட்பார்கள்.
அவரது, பங்களாவோ, காரோ, பணமோ அவரோடு மயானத்திற்கு வராது. உயிருக்குயிராய் நேசித்த மனைவியும் வீட்டிலிருந்தபடியே டாட்டா காண்பித்து விடுவார். சில நாட்கள் கழித்து அவரது குடும்பத்தினர் தொலைக்காட்சியில் வரும் ஜோக்கிற்கு விழுந்து விழுந்து சிரிக்கத்தான் போகின்றனர்.
அட அதான்யா வாழ்க்கை!
இந்த உலகத்தையே வென்ற அலெக்ஸாண்டர் தான் இறப்பதற்கு முந்தைய நாள் தனது உதவியாளர்களைக் கூப்பிட்டு, 'நாளை நான் இறந்தபின் என்னை அடக்கம் செய்ய எடுத்து செல்லும் போது என் கை சவப்பெட்டியின் வெளியே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்' என்றாராம்.
ஏன் அப்படி செய்ய விரும்புகிறீர்கள் என்று கேட்ட போது என்ன சொன்னார் தெரியுமா? 'இந்த உலகத்தையே வென்ற மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்தபின் தன்னோடு ஒரு சல்லிக் காசு கூட எடுத்து செல்ல முடியவில்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ளட்டும்' என்றாராம்.
அட அதான்யா வாழ்க்கை!
நீர்க்குமிழிப் போன்ற இந்த குறுகிய வாழ்க்கையில்
மதக்கலவரங்கள் எதற்கு?
சண்டைகள் எதற்கு?
பழி வாங்கும் நினைப்பு எதற்கு?
புறம் பேசுவது எதற்கு?
குறை சொல்லுவது, விமர்சிப்பது எதற்கு?
வெறுப்பை சுமப்பது எதற்கு?
பேராசை எதற்கு?
பொறாமை எதற்கு?
எல்லா உயிர்களையும் நேசிப்போம். பெரிய கனவுகள் காண்போம். பிடித்த தொழிலைத் தேர்ந்தெடுப்போம். கடுமையாக உழைப்போம். இருப்பதில் திருப்திக் கொண்டு ஒவ்வொரு நொடியையும் சந்தோஷமாக வாழ்வோம்.


வாசியை அறிந்தவன்'s photo.

No comments:

Post a Comment