இரு தவளைகள் சென்றுகொண்டிருந்த வழியில் இருந்த ஆழ்குழியில் விழுந்து விட்டது.
வெளியே வர முடியவில்லை. மேலேயிருந்த தவளைகள் கேவலமாக இருவரையும் பார்த்து ‘இதிலிருந்து வெளியே வர முடியாது, முயற்சியை கைவிடுங்கள், செத்துவிடுங்கள்.’ எனக் கத்தின.
முதல் தவளை இவர்கள் சொல்வதைக் கேட்டு கீழே விழுந்து நண்பர்களின் கொடூர குணத்ை எண்ணி முயற்சியை கைவிட்டுவிட்டது. குழிக்குள்ளேயே இருந்து விட்டது.
இரண்டாம் தவளை மேலும் முயற்சி செய்து ஒருவழியாக மேலே வந்தது.
அது மேலே வந்து எல்லாரையும் பார்த்து சொல்லிச்சாம்.
மேலிருந்து வெளியே வர என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி’
அப்படின்னு..
மேலிருந்து வெளியே வர என்னை ஊக்கப்படுத்தியதற்கு மிக்க நன்றி’
அப்படின்னு..
நிஜம் என்னவென்றால் அந்த தவளைக்கு காது கேட்காது.
இதே போல சமூகத்தில் நம் முயற்சியை தடுக்கும் விதமாக பேசுபவர்களிடம் காது கேட்காதது போல இருந்து விட வேண்டும்.
இல்லையென்றால் அதோ கதி தான்.. கொண்டேபோடுவாங்க..
இல்லையென்றால் அதோ கதி தான்.. கொண்டேபோடுவாங்க..
No comments:
Post a Comment