Tuesday, June 16, 2015

பாபாஜி

பாபாஜி:-
~~~~~~~~
1946ஆம் ஆண்டு, இந்தியாவின் தலை சிறந்த
யோகிகளில் ஒருவரான பரமஹம்ஸ
யோகானந்தர், தனது “ஒரு யோகியின்
சுயசரிதம்” என்னும் நூலில், கிரிஸ்த்துவைப்
போல் திகழ்ந்த இறவா யோகியான மஹாவதார்
பாபாஜி குறித்து வெளிப்படுத்தினார். பல
ஆன்மீக குருக்களை அவர்களுக்கே தெரியாமல்
பாபாஜி எப்படி தொலைவில் இமய
மலையிலிருந்து கொண்டே வழி நடத்தினார்
என யோகானந்தர் விளக்கினார். பாபாஜி தனது
மனித எல்லையைக் கடந்த ஓர் மாபெறும்
சித்தராவார். இவர் மனிதகுலத்தின் ஆன்மீக
வளர்ச்சிக்காகப் பின்னணியில் அமைதியாக
தனது பணியினை செய்து வருகிறார். மேலும்,
லாஹிரி மஹாஸாயருக்கு 1861ஆம் ஆண்டு
மிகவும் சக்தி வாய்ந்த யோக யுக்திகளான
கிரியா யோகாவை கற்பித்தவரும் பாபாஜியே
ஆவார் என யோகானந்தர் குறிப்பிடுகிறார்.
பாபாஜி கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைய
ில் கி.பி.30.11.1203 அன்று கார்த்திகை மாதம்
கார்த்திகை தீபத் திருநாளன்று ரோகிணி
நட்சத்திரம் ரிஷபராசி கூடிய சுப வேளையில்
பிறந்தார். அவருடைய குழந்தை திருநாமம்
நாகராஜ். நாகராஜ் என்பதற்கு ‘பாம்புகளின்
அரசன்’ என்று பொருள்.
நம்பூதரி பிராமணர்களான இவரது
பெற்றோர்கள், தென்மேற்கு மலபார்
பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து
வந்திருந்தனர். இவரது தந்தை, அங்கிருந்த
சிவன் கோவிலில் அர்ச்சகராக இருந்தார்.
இப்பொழுது அக்கோவில் முருகனுக்கு
அர்ப்பணிக்கப் பட்டுள்ளது.
நாகராஜ், தனது ஐந்தாவது வயதில், சிவன்
கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த போது,
ஒரு வணிகனால் கடத்தப்பட்டு இன்றைய
கோல்கத்தாவிற்கு ஒரு அடிமையாக
அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு, ஒரு
பணக்கார வர்த்தகர் அவனை விலைக்கு வாங்கி
பிறகு, சிறிது நாட்களில் முழு சுதந்திரத்துடன்
விடுவித்தார். பிறகு, சுற்றித் திரிகிற
துறவிகளின் குழுவில் சேர்ந்து புனிதமான
சமய மற்றும் தத்துவ இலக்கிங்களில் தேர்ச்சி
பெற்றார். இதில் நிறைவு பெறாத நாகராஜ்,
தெற்கே வாழ்ந்து வந்த பூரணத்துவம் பெற்ற
மஹா சித்தர் அகஸ்த்தியரைப் பற்றி அறிந்து
கொண்டு, அவரைக் காண தெற்கு
சிலோனிலுள்ள புனிதமான கத்திர்காமக்
கோவிலுக்கு யாத்திரை மேற்கொண்டார்.அவ
ருக்கு 11 வயதானபோது கி.பி.1216ல்
இலங்கை சென்று கதிர்காமம் என்னும்
திருத்தலத்தில் மகா சித்தர் போக நாதரை
சந்தித்தார். பாபாஜி கி.பி.1203 ல் தம் பிறப்பு
கி.பி. 1216 கதிர்காமம் சென்று போகரை
சந்தித்தது பற்றியும் கி.பி.1952ல் ஒளி
உடலோடு சென்னை வந்து எழும்பூர்,
சூரம்மாள் தெரு, 9ம் எண் வீட்டிலுள்ள தம்
சீடர் V.T நீலகண்டன் பூஜையறையில் அவரை
சந்தித்து அவரிடம் பலமுறை கூறியுள்ளார்.
( போகநாதர் கதிர்காமம் தேவாலயம் முருகன்
கோவிலாக எழுவதற்கு முன் அந்த கோவிலில்
இரண்டு முக்கோணங்களாலான மிகவும் சக்தி
வாய்ந்த ஒரு யந்திரத்தை பிரதிஷ்டை செய்தார்.
கதிர்காமம் திருக்கோவிலின் மூலஸ்தானத்தில்
இப்போதும் உருவச்சிலை கிடையாது. அந்த
யத்திரத்திற்குத்தான் வழிபாடு நடக்கின்றன.)
கதிர்காமம் சென்ற பாபாஜி அங்கு மகா சித்தர்
போக நாதரை குருவாக அடைந்தார்.
மிகப்பெரிய ஆலமரத்தடியில் போக நாதர்
அவருக்கு தொடர்ந்து 6 மாத காலம் கிரியா
யோகப் பயிற்சி அளித்தார். இப்பயிற்சி
இடைவிடாமல் தொடர்ந்து நடந்தது.
இப்பயிற்சியில் 18 வகையான ஆசனங்கள்,
பல்வேறு பிராணயாமப் பயிற்சிகள்
தியானமுறைகள் ஆகியவை அடங்கும். இந்த
தவயோக பயிற்சி ஒவ்வொரு முறையும் 24
மணி நேர பயிற்சியாக தொடர்ந்தது. பிறகு
விட்டு விட்டு இரண்டு அல்லது மூன்று
நாடகளுக்கு ஒரு முறை என்று வளர்ந்தது.
இது வார கணக்காக பெருகி இடைவிடாமல் 48
நாட்களுக்கு செய்யும் அளவிற்கு உயர்ந்தது.
ஆறு மாத முடிவில் பாபாஜியின் மனதில்
ஐம்புலன்களின் வழியே உலகியலோடு
தொடர்பு கொள்ளும் நிலை அகன்றது. வேறு
வகையில் கூறினால் மனிதனின் 36
தத்துவங்களில் 20 தத்துவங்களால் ஆன
மனோதேகமே அவருக்கு இல்லாமல்
போய்விட்டது. அல்லது அவரது மனித மனம்
அவரது ஆன்மாவின் கட்டுப்பாட்டிற்குள்
வந்தது.
பாபாஜி ஒளி உடலோடும் பூத உடலோடும்
வாழும் மனிதராகவே விட்டார். எல்லா
தத்துவங்களையும் ஏகத்துவமான ஆன்மாவே
தான் என்பதை உணர்ந்தார். அதன்மூலம் தாம்
வேறு பரம்பொருள் வேறு அல்ல என்பதை
தெளிவாக உணர்ந்து விட்டார்.
தன்னை உணர்ந்த பாபாஜி கி.பி.1214லிலேய
ே தம் குருநாதர் போகநாதர் ஆணைக்கிணங்க
இலங்கையில் இருந்து தமிழகம் வந்தார்.
பொதிகை மலையில் ஒளி உடலுடன்
வாழ்ந்துவரும் போகரின் குருவான
அகத்தியரிடம் கிரியா யோகத்தின் கடைசி
தீட்சையைப் பெற திருகுற்றால மலையை
அடைந்தார். (அகத்தியரே ஆதிகுருவும், கிரியா
யோகத்தின் மூலகுருவும் ஆவார்.)
குற்றால மலையில் பாபாஜி அகத்தியரை
நினைத்து 48 நாள் கடுந்தவம் புரிந்தார். 48ம்
நாள் முடிவில் அகத்தியர் ஒளி உடலோடு
அவர் முன் தோன்றி அவரை உள்ளம் குளிர
வாழ்த்தி அருளினார். அதோடு "மகனே நீ இமய
மலைக்கு சென்று பத்ரிநாத்தில் தங்கி தவ
வாழ்க்கை வாழ்ந்து வருவாயாக" "நீ இது வரை
உலகம் காணாத அளவிற்கு மிகப்பெரிய சித்த
புருஷனாக உயர்ந்து உலகம் உள்ளளவும்
வாழ்ந்து வருவாய்" என்று வாழ்த்தி மறைந்தார்.
ஆதிகுரு அகத்தியர் ஆணைப்படி பாபாஜி இமய
மலையின் ஒரு முகட்டில் தவக்குடில்
அமைத்துக்கொண்டு இன்றும் வாழ்ந்து
வருகிறார். பாபாஜியின் தவக்குடில்
இமயமலையில் 10000 அடி உயர்த்திற்கு மேல்
உள்ள பத்ரி நாத் கோவிலிலிருந்து 30 கி.மீ
தொலைவில் உள்ளது. அந்த தவக்குடிலுக்கு
கொரிசங்கர் பீடம் என்று பெயர்.
பாபாஜி தம் இமாலய வாழ்க்கையில் 12
ஆண்டுகளுக்கு பாரத நாட்டிற்கு வந்து
செல்கிறார். கிரியா யோகத்தின் விளைவாக
அவரது உடலில் உள்ள எல்லா
உயிரணுக்களும் தெய்வீக அணுக்களாய் மாறி
விட்டது. பத்ரிநாத்தில் சொரூப சமாதியடைந்த
இவரைப் பற்றி வெளி உலகுக்கு அறியக்
கிடைத்த தகவல்கள் வெகு சிலவே. ஸ்ரீ
கிருஷ்ணரால் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்ட
க்ரியா யோகத்தை முன்னெடுத்துச் செல்லும்
மாபெரும் ஆசிரியர் பாபாஜி. இரண்டாயிரம்
ஆண்டுகளாக இமயமலையில் வாழ்ந்து
கொண்டிருக்கும் மகாயோகி. இவர் க்ரியா
பாபாஜி, பாபாஜி நாகராஜ், மகாவதார பாபாஜி,
சிவாபாபா என்று பல பெயர்களில்
அழைக்கப்படுபவர். சாவை வென்று, என்றும்
பதினாறு வயதினராக வாழும் பாபாஜி ஒரு
மாபெரும் சித்தர். மகா அவதாரம் என்று
போற்றப்படுபவர்.
உலகம் முழுவதும் தெய்வீகப் பேரருள்
பொழியச் செய்வதே பாபாஜியின் முக்கிய பணி.
இது தூய அன்புடன் தன்னலமற்ற தொண்டு
செய்பவர்கள் மூலமாக உலகுக்கு
வெளிப்படுகிறது. தனது சகோதரி மாதாஜி
நாகலட்சுமி தேவியாருடன் பத்ரிநாத்தில் உள்ள
தனது ஆச்சிரமத்தில் வாழ்ந்து வருகிறார்
பாபாஜி.
பாபாஜி தான் விரும்பும் பொழுது மட்டுமே
மற்றவர்கள் அவரைக் காண்பதோ அல்லது
அடை யாளம் கண்டுகொள்வதோ சாத்தியம்.
“பாபாஜியின் வாழ்க்கையில் நடந்த இரு அற்புத
மான சம்பவங்களை இனி பாா்க்கலாம்.
“ஒரு புனித வேதச் சடங்கிற்காக ஓர் இரவு
அவருடைய சீடர்கள் சுட்டெரியும் பெருந்தீ
உள்ள அக்னி குண்டத்தைச் சுற்றி
உட்கார்ந்திருந்தனர். குருவானவர் திடீரென்று
ஒரு பெரிய கொள்ளிக் கட்டையை எடுத்து
அக்னிக்கருகில் அமர்ந்திருந்த ஒரு சீடனின்
வெறும் தோளில் லேசாகத் தட்டினார்.
“ஐயா, எவ்வளவு கொடூரம்!” அங்கிருந்த
லாஹிரி மகாசயர் இந்த ஆட்சேபணையை
வெளியிட்டார்.
“அவனுடைய முந்தைய கர்ம வினைப்படி உன்
கண் எதிரிலேயே அவன் எரிந்து சாம்பலாகிப்
போவதை நீ பார்க்க வேண்டும்?”
இந்த வார்த்தைகளுடன் பாபாஜி தன் குணப்
படுத்தும் கரத்தை உருக்குலைந்திருந்த தன்
சீடனின் தோளின் மேல் வைத்தார். “வேதனை
நிறைந்த மரணத் திலிருந்து உன்னை நான்
இன்றிரவு விடுவித்து விட்டேன்.
இந்நெருப்பினால் உனக்கு நேர்ந்த சிறு
துன்பத்தின் மூலமாக கர்மவினையின்
விதியானது திருப்திப் படுத்தப்பட்டுவிட்டது"
என்றார்.
இன்னொரு சமயத்தில் பாபாஜியின் புனிதமான
குழுவில் அன்னியன் ஒருவனின் வரவினால்
இடையூறு விளைந்தது. குருவின்
கூடாரத்திற்கருகே ஏறுவதற்குரிய ஒரு
பாறையின் விளிம்பின் மீது வியக்கத்தக்க
திறனுடன் அவன் ஏறி வந்துவிட்டான்.
“ஐயா, தாங்கள்தான் மகா பாபாஜியாக இருக்க
வேண்டும்” அம்மனிதனின் முகம் விண்டுரைக்க
இயலாத ஒரு பயபக்தியுடன் ஒளிர்ந்தது.
“செல்வதற்கரிய இச்செங்குத்து
மலைப்பாறைகளில் மாதக் கணக்கில் இடை
விடாமல் தங்களைத் தேடிக் கொண்டி
ருக்கிறேன். தயை செய்து என்னைத் தங்கள்
சீடனாக்கிக் கொள்ள மன்றாடுகிறேன்.”
மகா குரு பதிலொன்றும் கூறாமலிருக்கவே
அம்மனிதன் விளிம்பின் கீழே பாறைகளால் ஓரம்
கட்டப்பட்ட பெரிய பிளவைச் சுட்டிக்
காட்டினான். ‘நீங்கள் என்னை ஏற்றுக் கொள்ளா
விடில் நான் இந்த மலையிலிருந்து குதித்து
விடுவேன். கடவுளை அடைய உங்கள்
வழிகாட்டு தலை நான் பெறாவிடில் இனி
வாழ்ந்து பயனில்லை.’
“அப்படியானால் குதி, உன் தற்போதைய
வளர்ச்சி நிலையில் நான் உன்னை ஏற்க
முடியாது,” பாபாஜி எவ்வித உணர்ச்சியும்
இல்லாமல் கூறினார்.
அம்மனிதன் உடனேயே அந்தச் செங்குத் தான
பாறையைத் தாண்டிக் குதித்து விட்டான்.
அதிர்ச்சியுற்ற தன் சீடர்களிடம் அந்த
அன்னியனின் உடலைக் கொண்டு வரும்படி
பாபாஜி கட்டளையிட்டார்.
அவர்கள் உருக்குலைந்திருந்த அவ்வுடலுடன்
திரும்பியவுடன் குருதேவர் தன் கையை
இறந்து விட்ட அம்மனிதனின் மீது வைத்தார்.
அவன் தன் கண்களைத் திறந்து சர்வ வல்லமை
பெற்ற குருவின் முன்னர் தாழ்மையுடன்
நெடுஞ் சாண்கிடையாக விழுந்து
வணங்கினான்.
“நீ இப்பொழுது என் சீடனாகத் தயாராக
உள்ளாய்” உயிர்ப்பிக்கப்பட்ட அந்த சீடனை
நோக்கி பாபாஜி அன்பாக முகம் மலர்ந்தார். ‘நீ
மிக்க தீரத்துடன் கடுமையான பரீட்சையில்
தேறிவிட்டாய். மரணம் உன்னை மறுபடி
தீண்டாது; அழிவற்ற எங்கள் குழுவில்
இப்பொழுது நீயும் ஒருவன்’என்றார்.


காவலிபாளையம் கெந்த வங்குருவா்'s photo.

No comments:

Post a Comment