Showing posts with label Branding. Show all posts
Showing posts with label Branding. Show all posts

Monday, September 19, 2016

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி? 
.
காலக்கெடு !
மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக்கும் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக் கொண்டால், முக்கியமில்லாத பணிகள் மறந்து போய், முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் பதிந்து அதனை முடிக்க வைத்துவிடும்.
.
தூக்கம் !
நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவதை பாதிக்கும் காரணிகளாகும்.
.
சீரான முன்னேற்றம் !
மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால், பணிகளில் சிறு சிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சிதறுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.
.
இதயமும் மனமும் !
இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமுறையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடியும். பணியினை அனுபவித்து, ஈடுபடுத்திக் கொண்டு, ரசித்து செய்யும் போது, மனம் உண்மையிலேயே அதில் முழுமையாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.

Saturday, June 18, 2016

முதுகு நலமாக இருக்க 10 யோசனைகள்:

முதுகு நலமாக இருக்க 10 யோசனைகள்:

1. தினம் இருபத்தோரு முறையாவது குனிந்து காலைத்தொட்டு நிமிருங்கள்.

2. அமரும்போது வளையாதீர்கள்.

3. நிற்கும்போது நிமிர்ந்து நில்லுங்கள்

4. சுருண்டு படுக்காதீர்கள்।

5. கனமான தலையணைகளைத் தூக்கி எறியுங்கள்.

6. தினம் இருபத்து மூன்று நிமிடங்கள் வேகமாக நடங்கள்.

7. எழுபது நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்து உட்காராதீர்கள்.

8. டூ வீலர் ஓட்டும்போது குனிந்து ஓட்டாதீர்கள்.

9. பளுவான பொருட்களை தூக்கும்போது குனிந்து தூக்காதீர்கள்.

10. காலை இருபது முறை, மாலை இருபது முறை கைகளை வான் நோக்கி நீட்டுங்கள்

Tuesday, March 8, 2016

ஒருமுறை சாக்ரட்டீஸ்

ஒருமுறை சாக்ரட்டீஸ் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து அவருடைய நண்பரைப் பற்றி ஏதோ கூற முயன்றார். உடனே சாக்ரட்டீஸ் அவரிடம் , " என் நண்பரைப் பற்றி என்னிடம் கூற விரும்பினால் அதற்கு முன் 3 கேள்விகளை கேட்பேன். மூன்று கேள்விக்கும் ஆம் என பதில் இருந்தால் மட்டுமே நீங்கள் அவரைப் பற்றி கூறலாம்"என்றார்.
சாக்ரட்டீஸ் முதல் கேள்வியை கேட்டார்
"அவர் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா ?" என்று கேட்டார்.
இல்லை என பதில் சொன்னார்.
 " அவரைப் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா? " என்று இரண்டாவது கேள்வியைக் கேட்டார். 
இல்லை என பதில் சொன்னார்.
 " அந்த நண்பரைப் பற்றி என்னிடம் கூறினால் யாராவது பயனடைவார்களா?" என்ற மூன்றாவது கேள்வியைக் கேட்டார். 
இதற்கும் இல்லை என்றே பதில் வந்தது.
 "யாருக்கும் பயனில்லாத , நல்ல விஷயமுமில்லாத, நேரடியாக நீங்கள் பார்க்காத என் நண்பரைப் பற்றிய சம்பவத்தை தயவு செய்து என்னிடம் கூறாதீர்கள்" என்றார்.
நல்ல நட்பு ஆரோக்கியமான விவாதங்களையே மேற்கொள்ளும்.
நண்பர்கள் ஹைட்ரஜன் வாயுவினால் நிரப்பப் பட்ட பலூன் போன்றவர்கள்.
நீங்கள் விட்டு விட்டால் எங்கோ பறந்து சென்று விடுவார்கள்.
பத்திரமாக பிடித்துக் கொள்ளுங்கள்.............................

Friday, March 4, 2016

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம்.

ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான்.

இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள்.

மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக்
கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள்.

ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது.

மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே 
பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது.

இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர்.

ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது.

இது அமைதியே அல்ல. சற்று உற்று பார்க்கும்போது, நீர்வீழ்ச்சியின் கீழே இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டியிருந்த பறவை ஒன்று கூட்டில் தனது குஞ்சுகளுடன் காணப்பட்டது.

“இந்த ஓவியத்தை வரைந்தது யார்?”

சம்பந்தப்பட்ட ஓவியர் எதிரே நிறுத்தப்படுகிறார்.

“இந்த ஓவியம் தத்ரூபமாக பார்க்க அழகாக இருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை. ஆக்ரோஷத்துடன் கொட்டும் அருவி, இடியுடன் கூடிய மழை… கீழே மரத்தில் தனது கூட்டில் ஒரு பறவை…. ஆனால் இதில் அமைதி எங்கே இருக்கிறது?”

“மன்னா சப்தமும், பிரச்னையும், போராட்டமும் இல்லாத இடத்தில் இருப்பது அமைதி அல்ல...

இவை எல்லாம் இருக்கும் இடத்தின் நடுவே இருந்து கொண்டு, எதற்கும் கலங்காமல் எதுவும் தன்னை பாதிக்கவிடாமல் பார்த்துக்கொண்டு உள்ளுக்குள் அமைதியாக இருப்பதே உண்மையான அமைதி!

அப்படி பார்க்கும்போது குஞ்சுகளுடன் இருக்கும் இந்த பறவையே பரிபூரணமான அமைதியில் இருக்கிறது!!”

“சபாஷ்… அமைதிக்கு ஒரு அற்புதமான விளக்கம்” கைதட்டிய மன்னன் அந்த ஓவியத்திற்கே முதல் பரிசு கொடுத்தான்..,

ஆம்.,நண்பர்களே.,
அனைத்து சௌகரியங்களும் அமையப்பெற்று எந்த வித 
பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் வாழ்வது அமைதியல்ல.

அது ஒரு வாழ்க்கையும் அல்ல.ஆயிரம் துன்பத்திற்கு நடுவே,

“நிச்சயம் ஒரு நாள் விடியும்” என்று விடாமுயற்சியுடன் தினசரி உழைத்துக்கொண்டு வருகிறார்களே அவர்களிடம் இருப்பது தான் அமைதி.

எத்தனையோ தொல்லைகள் யார் தந்தாலும்,“எனக்கு நேரும்   
மான அவமானங்களை விட நான் எட்ட வேண்டிய இலக்கே எனக்கு பெரிது” என்று எதையும் பொருட்படுத்தாது போய் கொண்டிருக்கிறார்களே…

அவர்கள் உள்ளத்தில் உள்ளது தான் உண்மையான அமைதி.

சாத்தியமில்லாத இடத்தில் சாத்தியப்படுவது தான் அமைதி.

அதாவது பாறைக்குள் வேரைப் போன்று!!!

Wednesday, November 11, 2015

வெந்நீர் மகத்துவம்

வெந்நீர் மகத்துவம் :-

அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!

தமிழில் ”வெந்நீர்” எனப்படுவது ஆங்கிலத்தில் ”ஹாட் வாட்டர்” என்றும், ஹிந்தியில் ”கரம் பானி” என்றும் ஜப்பானிய மொழியில் ”ஹை-யை-யோ” என்றும் அழைக்கப்படுகிறது.
எந்த மொழிக்காரர்களாக இருந்தாலும் அனைவருக்கும் வெந்நீர் சுடும் என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.யாருக்காவது சமையல் சுத்தமாக தெரியாவிட்டால், ”அவளுக்கு நல்லா வெந்நீர் போட வரும்…” என்று நம்மில் பலர் நக்கல் அடிப்பதுண்டு.உண்மையில் நாம் வெந்நீரின் மகிமை தெரியாமல்தான் அப்படி கிண்டல் செய்திருக்கிறோம். இதோ பாருங்கள்… வெந்நீரால் எத்தனை பலன்கள் என்று!
நெஞ்சு எரிச்சல் போகணுமா?
ஏதாவது எண்ணெய்ப் பலகாரம், சுவீட், அல்லது பூரி சாப்பிட்ட பிறகு நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே எடுங்கள் ஒரு டம்ளர் வெந்நீரை…. மெதுவாகக் குடியுங்கள். கொஞ்ச நேரத்தில் நெஞ்சு எரிச்சல் போயே போச்சு!
சதை குறையணுமா?
வெந்நீர் குடித்தால் உங்கள் உடலில் போடும் அதிகப்படி சதை குறையவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். காலையில் சரியாக மலம் கழிக்க முடியவில்லை என்று ஃபீல் பண்ணுகிறீர்களா? எடுங்கள் வெந்நீரை! குடியுங்கள் உடனே! இம்மீடியட் எஃபெக்ட் கிடைக்கும். (நிறையப் பேர், ”அட, காலையில் எங்க வீட்டில் காபி என்று பெயர் சொல்லி தினம் அதைத்தானே கொடுக்கிறார்கள்” என்று புலம்புவது கேட்கிறது!)உடம்பு வலிக்கிறதா?
உடம்பு வலிக்கிற மாதிரி இருக்கிறதா? உடனே வெந்நீரில் கொஞ்சம் சுக்குத்தூள், பனங்கற்கண்டு போட்டு குடியுங்கள். இதன் மூலம் பித்தத்தினால் வரும் வாய்க்கசப்பு மறைந்து விடும். மேலும், உடல் வலிக்கு, நன்றாக வெந்நீரில் குளித்துவிட்டு, இந்த சுக்கு வெந்நீரையும் குடித்துவிட்டுப் படுத்தால், நன்றாகத் தூக்கம் வருவதோடு, வலியும் பறந்துவிடும்.
கால் பாதங்கள் வலிக்கிறதா?
எங்காவது அலைந்துவிட்டு வந்து கால் பாதங்கள் வலிக்கிறது என்றால், அதற்கும் நமது வெந்நீர்தான் ஆபத்பாந்தவன். பெரிய பிளாஸ்டிக் டப்பில் கால் சூடு பொறுக்குமளவுக்கு வெந்நீர் ஊற்றி அதில் உப்புக்கல்லைப் போட்டு, அதில் கொஞ்ச நேரம் பாதத்தை வைத்து எடுங்கள். காலில் அழுக்கு இருப்பது போல் தோன்றினால், வெந்நீரில் கொஞ்சம் டெட்டால் ஊற்றி அதில் பாதத்தை வைத்தால், கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.
மூக்கு அடைப்பா?
மூக்கு அடைப்பா? நம்ம வெந்நீர்தான் டாக்டர்! வெந்நீரில் விக்ஸ் அல்லது அமிர்தாஞ்சனம் போட்டு அதில் முகத்தைக் காண்பித்தால், மூக்கடைப்பு போயிந்தி! வீட்டில் வேலைக்கு ஆட்கள் இல்லாமல் தாங்களே பாத்திரம் தேய்த்து, துணி துவைக்கும் பெண்கள், வாரத்திற்கு ஒரு முறையேனும் உங்கள் கைகளை வெந்நீரில் கொஞ்ச நேரம் வைத்திருங்கள். இதன் மூலம் நக இடுக்கில் இருக்கும் அழுக்குகள் போய், உங்கள் கைகள் ஆரோக்கியமாக இருக்கும்.
வெயிலில் அலைந்து தாகம் எடுக்கும் போதுவெயிலில் அலைந்து விட்டு வந்து உடனே சில்லென்று ஐஸ்வாட்டர் அருந்துவதைவிட, சற்றே வெதுவெதுப்பான வெந்நீர் அருந்துவது, தாகம் தீர்க்கும் நல்ல வழி. ஈஸினோபீலியா, ஆஸ்துமா போன்ற உபாதைகள் இருப்போர், உங்களுக்கு தாகம் எடுக்கும் போதெல்லாம் கண்டிப்பாக வெதுவெதுப்பான வெந்நீர் குடியுங்கள்.
திருமணம் மற்றும் பார்ட்டிகளில் நாம் நன்றாக சாப்பிட்டு விட்டு குளிர் பானங்கள் குடிக்காமல் ஒரு கிளாஸ் வெந்நீர் குடியுங்கள் அது உங்களுக்கு உடம்புக்கு நல்ல பலனை தரும்.
ஜலதோஷம் பிடித்தவர்களுக்கு
அதுபோலவே, ஜலதோஷம் பிடித்தவர்களும் வெந்நீர் குடித்தால், அது அந்த நேரத்துக்கு நல்ல இதமாக இருப்பதோடு சீக்கிரம் குணமாகும். இதையெல்லாம் தவிர, வீட்டில் நெய், எண்ணெய் பாட்டில் இருந்த பாத்திரங்களைக் கழுவும்போது கொஞ்சம் வெந்நீரை ஊற்றி ஊற வைத்து, அப்புறம் கழுவினால் பிசுக்கே இல்லாமல் பளிச்சென்று சுத்தமாகும்.
தரையை துடைக்கும் போது
அதுபோலவே தரை துடைக்கும் போது, குறிப்பாக குழந்தைகள், நோயாளிகள் இருக்கும் வீட்டின் தரைகளை வெந்நீர் உபயோகப்படுத்தி துடையுங்கள். கிருமி இல்லாத சுத்தமான தரை உங்களுடையதாகும்!
திடீரென்று கடுமையான தலை வலியா?
தலைவலியை உணர்ந்தவுடன் 200 மி.லி அளவு வெந்நீர் அருந்துங்கள். சில நேரங்களில் அஜீரணம் அல்லது குடலில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் கூட தலை வலி ஏற்பட வாய்ப்புண்டு. எனவே இளஞ்சூட்டில் வெந்நீர் குடித்தால், உடனடியாக ஜீரணத்தை தூண்டி தலைவலி நீங்கும். அல்லது சூடான காபியை குடியுங்கள். தலைவலிக்கு இதமான மருந்தாக காபி அமையும்.
சுறுசுறுப்புக்கு `சுக்கு வெந்நீர்’
தமிழகத்தைப் பொருத்தவரை நகர்ப்புறங்களிலும், கிராமங்களிலும் பெரும்பாலான வீடுகளில் வாரம் ஒருமுறை சுக்கு வெந்நீர் தயாரித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.சென்னை போன்ற பெருநகரங்களிலும், மைக்ரோ ஃபேமிலி (micro family) எனப்படும் 3 அல்லது 4 பேரைக் கொண்ட தனிக்குடித்தனங்களிலும் சுக்கு வெந்நீர் என்பது கானல் நீர் எனலாம். விருந்து, விழாக்கள், அலுவலகப் பார்ட்டி என்று பல இடங்களிலும், பல்வேறு விதமான உணவு வகைகளைச் சாப்பிட்டு அஜீரணத்திற்கு உள்ளாவோர் இந்த சுக்கு வெந்நீரை 200 மி.லி அளவுக்கு வாரம் ஒரு முறை அருந்தி வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்புகள் சேராமல் தவிர்ப்பதோடு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் தரும்.
சுக்கு வெந்நீரானது கிராமங்களில் சிறு ஹோட்டல் போன்ற கடைகளில் கிடைக்கும். அல்லது வீட்டிலும் நாமே தயாரித்து பருகலாம்.
சிறிதளவு சுக்கினை சிறுசிறு துண்டுகளாக்கியோ அல்லது பொடித்தோ தண்ணீரில் கொதிக்க வைத்து, வெல்லம், பனங்கற்கண்டு அல்லது கருப்பு கட்டி (பனைவெல்லம்) ஆகிய ஏதாவதொன்றை தேவையான அளவுக்கு சேர்த்து வடிகட்டி குடிக்கலாம்.
சுக்கு உடன் சேர்த்து சாரணவேர், மிளகு, திப்பிலி ஆகியவற்றையும் சேர்த்து கஷாயம் தயாரித்தும் அருந்தி வந்தால் சளி, இருமல் போன்றவே நம்மை அண்டாமல் போயே போய் விடும்.

Wednesday, July 29, 2015

தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள்.

தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள்.

01. ஒரு நாளைக்கு ஐந்து தடவைகள் கைகளைக் கோர்த்தபடி கண்ணாடியை பார்த்துக் கொண்டே.. என்னால் முடியும்.. என்னால் முடியும்.. எதையும் செய்ய என்னால் முடியும்.. சாதிக்க முடியும்.. சாதிக்க முடியும் எதையும் என்னால் சாதிக்க முடியும் என்று கூறுங்கள். சூழல், காலம், இடம், சக மனிதர்கள் தரக்கூடிய எதிர்மறைகளை இப்பயிற்சி நீக்கும்.

02. இலட்சியங்களையும் கருத்தேற்றங்களையும் பெரிதாக எழுதி, அல்லது அச்சிடப்பட்ட வாக்கியங்களை உங்கள் அறையின் சுவரில் எழுதி ஒட்டி வைத்திருங்கள்.

03. நல்ல வாசகங்களை மறவாமை வேண்டும், அவை கண்களைவிட்டு அகலாமை வேண்டும் அதற்காக செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள்.

04. உங்கள் இலட்சியத்தை எழுதி இதயத்தோடு இருக்கும் சட்டைப் பையில் வைத்துக் கொள்ளுங்கள். இலட்சியத்தோடு சேர்ந்து உங்கள் இதயமும் துடிக்கிறது என்று எண்ணுங்கள். இப்படிச் செய்தால் ஆழ் மனது விழித்துக் கொள்ளும்.

05. காலை எழுந்ததும் கைகளைப் பார்த்து வணங்குங்கள். விரல் நுனிப்பகுதியில் லக்சுமியும், மையப்பகுதியில் சரஸ்வதியும், மணிக்கட்டில் கோவிந்தனும் இருப்பதாகக் கூறுவார்கள். ஆலய தரிசனத்திற்கு உங்கள் கைகள் உள்ளன.

06. உங்கள் உடலை தெய்வீக ஒளி சூழ்ந்துள்ளதாக எண்ணி, உள்ளங்கையில் அந்தக் காட்சியைக் காணுங்கள். உடல் நலத்துடன் நீங்கள் ஆடுவதாகவும், பாடுவதாகவும் காணுங்கள், மகிழ்ச்சியை உணருங்கள்.

07. பயிற்சிகளால் செய்ய முடியாதது எதுவுமே இல்லை.. பயிற்சிகளால் எட்ட முடியாதது எதுவுமே இல்லை… தீய ஒழுக்கங்களை நல்ல ஒழுக்கங்களாக மாற்ற வல்லவை பயிற்சிகள்.. தவறான கொள்கைகளை சரியானவையாக மாற்ற வல்லவை பயிற்சிகள். மனிதர்களை தேவர்களாக உயர்த்தக்கூடியவை இப்பயிற்சிகளே.

08. கரும்பு – மிளகாய் – மலர்ச்செடி இந்த மூன்றையும் அருகருகாக நட்டு நீரை ஊற்றி வளர்த்தான் ஒருவன். ஊற்றியது ஒரே கிணற்றின் நீர்தான் ஆனால் மிளகாய் உறைத்தது, கரும்பு இனித்தது, பூ வாசமாக இருந்தது.. காரணம் இவை மூன்றும் ஒரே நீரை உண்டு வளர்ந்தாலும் தத்தமது இயல்பை மாற்றவில்லை.

09. கரும்பு, மிளகாய், பூமரம் ஆகிய மூன்றும் மற்றவருக்காக தமது இயல்பை மாற்றவில்லை. மற்றவருக்கு பயந்து வாழ்ந்தால் மிளகாய் இனிக்னும் கரும்பு உறைக்கும். கடைசியில் இரண்டுமே சந்தையில் செல்லாக்காசாகப் போய்விடும். மற்றவர்களுக்கு பயந்து தமது இயல்பை மாற்றுவோர் செல்லாக்காசுகளாகவும், நடைப்பிணங்களாகவும் வாழ்வது இதனால்தான்.

 10. மற்றவர் உனக்கு எதைச் செய்யக்கூடாது என்று நினைக்கிறாயோ நீ அதை மற்றவர்களுக்கு செய்யாதே.. அதைப் புரிந்து கொண்டால் உன் இயல்பை மாற்ற வேண்டியதில்லை.

11. நாம் என்ன நினைத்தாலும் அது நடக்காது, எதெது வரவேண்டுமென்றிருக்கோ அதது வந்துதான் தீரும். நாமொன்று நினைக்க தெய்வம் ஒன்றை நினைக்குமில்லையா.. என்று கூறுவேருடைய குரலுக்கு செவி கொடுக்காதே… 12.

12. உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகுமா உனது தகுதிக்கு ஏற்றாற் போல பாரு..! என்போர் பேச்சைக் கேட்காதே.

 13. கேலியான பழமொழிகளை சொல்லும்போது இளையோர் உள்ளம் சுக்கு நூறாக உடைந்துவிடும் ஆகவே இப்படியான எதிர்மறைகளைப் பேசாதே.

14. குழந்தையிடம் ஒரு டம்ளர் நிறைய நீரைக் கொடுத்து, சிந்தாமல் எடுத்துப் போ என்று உறுக்கிக் கூறுங்கள்.. அதன் கைகள் நடுங்கி நீர் நிலத்தில் கொட்டுப்பட்டுவிடும். நீரை எடுத்துச் செல் என்று சர்வசாதாரணமாக சொல்லுங்கள் நீர் சிந்தவே வழியில்லை.

 15. எந்தச் சொல்லும் நம்மில் உயிர்ப்பை, வளர்ச்சியை தோற்றுவிக்க வேண்டும். உறங்கிக் கிடக்கும் தன்னம்பிக்கையை தூசு தட்டி எழுப்ப வேண்டும்.

16. சாவின் கரையில் இருப்பவனுக்குக் கூட, வாழ வேண்டும் என்ற நம்பிக்கையை நமது வார்த்தைகள் தர வேண்டும்.

 17. தளர்ந்து விழுந்தவனைக்கூட துடிப்புடன் எழச் செய்ய வேண்டும். கரைந்த நிழலைக்கூட நிறைந்த உருவமாக மாற்ற வேண்டும்.

18. முயற்சியுடையவர்களை தப்பான பழமொழிகளைக் கூறி கேலி செய்யக் கூடாது.

19. பழமொழிகள் எதுகை மோனையுடன் இருப்பவை, அவை சட்டென ஆழ்மனதிற்குள் நுழைந்துவிடும். அகவே எதிர்மறையான பழமொழிகளை பேச வேண்டாம்.

20. மனிதர்கள் வார்த்தைகளால் உயிர் வாழ்வது உண்மை, அதுபோல வார்த்தைகளாலேயே உயிரிழப்பதும் உண்டு. ஆகவே வார்த்தைகளை சரியாக பாவிக்க வேண்டும்.

 21. எது இலட்சியமோ அது நமது மனதில் கனன்றுகொண்டே இருக்க வேண்டும், அந்தத் தணலில் மனம் சதா விழித்துக் கொண்டே இருக்கவும் வேண்டும்.

22. நம்பிக்கையின் பாதுகாப்பில் எதிர்பார்ப்பு என்ற வெளிச்சத்தில் உழைப்பு என்ற பயணத்தை நடாத்த வேண்டும்.

23. ஒவ்வொரு நாளும் குன்றாத உற்சாகத்துடனும், தணியாத ஆவலுடனும், திறமையான உழைப்புடனும் முன்னேற வேண்டும்.

24. என்னுடைய உழைப்பில் தீவிரமாக இருக்கிறேன். ஊக்கத்துடன் எனது காரியங்களை செய்கிறேன் என்று எண்ண வேண்டும்.

25. சராசரி மனிதருக்குரிய மூட நம்பிக்கைகளையும் பயங்களையும் தவிர்த்து விடுங்கள். வாழ்வின் அழிவற்ற மாறுதலுக்குட்படாத முன்னேற்றக் கருத்துக்களை நம்புங்கள்.

Monday, July 27, 2015

சகலத்திர்கும் கட்டு மந்திரம்

சகலத்திர்கும் கட்டு மந்திரம் ...


"ஓம் பஹவதி ப்ய்ரவி 
என்னை எதிர்த்து வந்த எதயும் கட்டு
கடுகென பட்சியை கட்டு மிருகத்தைகட்டு
ஓம் காளி ஓம் ருத்ரி ஓங்காரி ஆங்காரி
அடங்கலும் கட்டினேன் சபையை கட்டு
சத்ருவை கட்டு எதிரியை கட்டு
எங்கேயும் கட்டு 
சிங்க் வங்க் லங்க் லங்க்
ஸ்ரீம் ஓம் சிவாய நம சிவாய நம"

Tuesday, June 30, 2015

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?
காமம் என்பது எல்லா உயிரினங்களின் இயல்பான ஒரு உணர்வு ஆகும். இயற்கையான உணர்வு என்று கூட சொல்லலாம்.
பருவ வயது வந்தவுடன் நம் உடலில் உள்ள சில பல ஹார்மோன்கள் 'ஓவர்டைம்' போட்டு வேலை செய்யும்போது நாம் தடுமாறித்தான் போகின்றோம். மன்மதலீலையை வென்றார் உண்டோ?
சில பெரிய மனிதர்கள் குறிப்பாக ஆன்மிகத்தில் உள்ளவர்கள் காமத்தை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா? அது நிஜமாகவே முடியுமா? மேலே படியுங்கள்.....
சில ஆன்மிக குருமார்கள் காமத்தைக் கட்டுபடுத்த வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். விந்தை அடக்கி மேல் நோக்கி செலுத்தினால் நன்மைகள் கோடி உண்டு என்று சொல்லுகின்றார்கள். விஞ்ஞானத்தில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. காம உணர்ச்சி தவறானது என்றால் இயற்கை அந்த உணர்வை அத்தனை ஜீவராசிகளுக்கும் கொடுத்திருக்குமா என்கின்ற கேள்வி எழுகின்றது. இயற்கையான எதுவும் தவறாக இருக்க முடியாது என்பது விதி. அப்படி பார்க்கின்ற போது காமம் தவறில்லை என்றே தோன்றுகிறது.
ஆனால் அதற்காக 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே இருத்தலும் தவறு தான். காமத்தை அடக்கக் கூடாது என்பது பொது விதி. ஆனால் கல்யாணம் வரை நாம் காத்து இருக்கத் தான் வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் காமக் களியாட்டங்களில் முழுமையாக ஈடுபட்டு இன்பத்தை துய்க்கலாமே?
உடலின் எந்த தேவைகளையுமே நாம் அடக்கக் கூடாது என்பதே நிஜம். காமமும் அப்படியே. ஆனால் சில நேரங்களில் நமக்குக் கட்டுப்பாடு நிச்சயம் தேவைப் படுகின்றது என்பது உண்மை தான். அந்த கட்டுப் பாடு தான் ஒரு வேளை நம்மை மிருகங்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றதோ?
பொதுவாக காமத்தைக் கட்டுப் படுத்தக் கூடாது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதே சமயம் இடம் பொருள் ஏவல் பார்த்தது அளவுடன் வைத்துக் கொள்ளுவது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Wednesday, March 4, 2015

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்

நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு சூத்திரம்


உங்கள் வாழ்க்கையில் , நீங்கள் உயர்ந்த நிலைக்கு வர வேண்டுமா..? ஜோதிட ரீதியாக ஒரு எளிதான சூத்திரம் இருக்கிறது...

ஒவ்வொருவருக்கும் பிறந்த லக்கினம் ,  ராசி ஒன்று இருக்கிறது... அந்த வீட்டிற்கு  நவ கிரகங்களில் ஒருவர் அதிபதி யாக இருப்பார்.  அது போக நடப்பு தசா , புத்தி என்று ஒன்று இருக்கிறது... 

அந்த அந்த கிரகங்களையும், அவற்றின் தேவதைகளையும் கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும்.  அவ்வளவுதான். அதன் பிறகு பாருங்கள்.. உங்கள் வாழ்க்கை எவ்வளவு அருமையாக இருக்கிறது என்று..

உதாரணத்திற்கு, உங்களுக்கு விருச்சிக லக்கினம் , மகம் நட்சத்திரம் , என்று வைத்துக் கொள்வோம்.. சுமார் 40 வயது வரும்போது  ராகு தசை  உங்களுக்கு நடக்கும். 

 விருச்சிக லக்கினத்திற்கு அதிபதி செவ்வாய் - அவருக்கு உரிய தேவதை முருக கடவுள்..... 
மகம் நட்சத்திரம் - அதிபதி - கேது  - தேவதை  : விநாயக பெருமான். ராசி : சிம்மம். ராசி நாதன் - சூரிய பகவான். 

நடக்கும் தசை - ராகு - அதி தேவதை - துர்க்கை அம்மன். 


 ( அதி தேவதைகள் பற்றிய - நமது முந்தைய கட்டுரைகளை refer செய்ய இங்கே கிளிக்கவும் ) 

நட்சத்திர திருத்தலங்கள் - கட்டுரையை வாசிக்க கிளிக் செய்யவும் 

உங்களுக்கு எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் .... உடனடி தீர்வு கிடைக்க , வாழ் நாள் முழுவதும் , செவ்வாய் கிழமைகளில்  நீங்கள் முருக கடவுளுக்கு பாலாபிசேகம் , பாத யாத்திரை சென்று வர மலை போல் வரும் பிரச்னை கூட தூள் தூளாகும்.....

தினமும் காலை - சூரிய உதயத்திற்கு முன் எழுங்கள். சூரிய பகவானை நீங்கள் வரவேற்க வேண்டும். அவர் உங்களை வரவேற்க கூடாது..  
அன்றாடம் நீங்கள் விநாயகரை வணங்கி வேலையை தொடங்குவது நல்லது.. 
உங்களால் விநாயகர் கருணையை மனதார உணர முடியும்... 

(அஸ்வினி, மகம். மூலம் நட்சத்திரம் இவற்றில் பிறந்தவர்கள் உங்களை அறியாமல் நீங்கள் , விநாயகரை வணங்கினாலும் உங்களுக்கு விரைவில் பலன்கள் கிடைப்பதை உணர்ந்து இருப்பீர்கள்..  )

இப்போது நடக்கும் தசை ராகு தசை. .. ராகு என்ன செய்யும்? ராகுவைப் போல் கொடுப்பாரும் இல்லை . கெடுப்பாரும் இல்லை என்பார்கள்.

ராகு அப்படி என்னதான் செய்யும்..? புலன் ஆய்வுக்கு , கம்ப்யூட்டர் , ஆராய்ச்சி, வெகு ஜன தொடர்பு ( ஹோட்டல் reception , LIC Agent )  என்று அனைத்துக்கும் அதிபதி. ... உங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் பணவரவு இருக்கும்.. நோகாமே நோன்பு எடுக்கலாம். . நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.. பணம் கொழிக்கும்..( நல்லது தானே..!)

அதே நேரத்தில் பெண்களால் சர்வ சாதாரணமாக பிரச்சினைகள் வரும்... நீங்களே ஒதுங்கி இருந்தாலும் .. உங்களையே தேடி வருவார்கள்... உங்களால் 'பலான' விசயங்களில் இருந்து ஒதுங்க முடியாது.. பெண்களிடம் செல்ல வேண்டி வரும்.. அல்லது குறைந்த பட்சம் .. வீடியோ , கம்ப்யூட்டர்  என்று படம் பார்ப்பதிலேயே பொழுதைக் கழிக்க வேண்டி வரும்...  இப்படி நீங்கள் இருக்கும் போது ... வரும் பெண்களும் உங்களுக்கு பேரழகியாக தெரிய வரும்.. விட முடியுமா...??  வரை முறை தெரியாத அளவுக்கு விளையாட்டு தொடரும்.. பிறகு என்ன... வீட்டில் தெரிய வர.. அதனால் தொல்லைகள் வர... கொஞ்சம் கொஞ்சமாக பிரச்னை பூதாகரமாகி வழக்கு, கோர்ட், விவாக ரத்து.. ... ஈஸ்வரா...!! 

கேட்ட நேரம் இருக்கும் வரை ... அந்த ஒண்ட வந்த பிடாரி  தான் உங்களுக்கு அவ்வளவு உசத்தியாக தெரியும்... அவளுக்காக நீங்கள் சகலத்தையும் துறக்க தயார் ஆகி விடுவீர்கள்..  உங்களுக்கு அது  ஒரு சொகுசான வாழ்வு என்று தோன்றும்.. ஆனால் மகா கேவலமான வாழ்வு என்று தோன்றாது.. 

இதில் கோட்சார ரீதியாக ராகு ஜென்மத்தில் வந்தாலோ ... இன்னும் நிலைமை அசிங்கமாகும்.. நீங்கள் இருக்கும் ஊரில், அல்லது தெருவில் அல்லது , உங்கள் குடும்ப வட்டாரத்தில் ... நீங்கள் ஏதாவது ஒரு பெண் விஷயத்தில் அசிங்கப்பட்டு , தலை குனிய வேண்டி வரும்... 

இல்லையா... கோடிகளில் புரள வைத்து விட்டு , திடீர் என்று அதல பாதாளத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்.. 


இது பொதுவான பலன். ஆனால் 10 க்கு  9 பேருக்கு இது பொருந்தும். 

இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது..  அவர்கள் அமர்ந்த வீடு, (நட்பு , பகை) நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும்  கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் ,  என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

எந்த ஒரு மனிதனுக்கும், ராகு, கேது தசை நடக்கும் போது , அவரவர் பூர்வ ஜென்ம புண்ணிய பலன்கள் ... அட்சர சுத்தமாக கிடைக்கும்..  
 சில குழந்தைகளுக்கு ராகு தசை நடந்தால், அதன் பலன் மொத்தமும் பெற்றோர்களுக்கு நடக்கும்... 
  

 நல்லதும் உண்டு.. கெட்டதும் உண்டு...   ஐயா.. போன ஜென்மத்திலே எப்படி இருந்தேன் னு தெரியலை.. இந்த ஜென்மத்திலே என்ன பண்றது...? நான் தப்பு பண்ணக் கூடாது.. என்ன வழி..? 


இந்த கேள்வி உங்களுக்கு தோணுவதற்கே   நீங்க பண்ணின ஒரு புண்ணியம் தான் காரணமாக இருக்கும்.. 


ராகுவுக்கு  அதி தேவதை துர்க்கை.  ராகுவுக்கு தனியாக கிழமை கிடையாது..  தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் இருக்கிறது.. ராகு காலம் என்று காலண்டரில் போட்டு இருப்பார்கள்...  இந்த ஒன்றரை மணி நேரத்தில் , நீங்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் துர்க்கை அம்மன் ஆலயம் சென்று விடுங்கள்.  காளியம்மன், மாரியம்மன் என்றும் இருக்கலாம். தினமும் நாள் தவறாமல் செல்ல வேண்டும். அதனால் தான் அருகில் இருக்கும் ஆலயம் என்று சொன்னேன். ஒரு நூறு வருடமாவது பழைய ஆலயமாக இருந்தால் நல்லது. குறைந்த பட்சம் ராகுகாலம் முடியும் கடைசி அரை மணி நேரத்தில் இருங்கள். 

மனதார வழிபடுங்கள்.

நீங்கள் அன்றாடம் வேலைக்கு போக வேண்டி இருந்தால், செல்ல முடியாதே.. என்ன செய்வது? 

திருமணம் ஆகி இருந்தால் உங்கள் மனைவியோ,  மணம் ஆகா விட்டால் உங்கள் சார்பாக உங்கள் தாயோ செல்லலாம். நீங்கள் வேலைக்கு செல்லாத நாட்களில் கண்டிப்பாக நீங்களே சென்று வர வேண்டும். ஞாயிற்று கிழமை சாயங்காலம் 4 .30 இலிருந்து 6 மணி வரை வரும். Miss பண்ணாதீங்க !!  


உங்களால் முடிந்த வரை அபிசேகத்திற்கோ, தினமும் தீபத்திற்கோ , மாலையோ,... இல்லை ...  ஒன்றும் முடியவில்லை என்றாலும் .. வெறுமனே சென்றாவது வாருங்கள்.. அம்மன் பார்வை உங்கள் மேல் தெளிவாகப் படும்படி அமருங்கள்..  அதன் பிறகு உங்களுக்கு அந்த அம்மனே எப்படி வழி காட்டுகிறாள்  என்று பாருங்கள்... சமயத்தில் ராகு தசை நடப்பவர்களிடம் அம்மன் பேசுவதைக் கூட அவர்களால் உணர முடியும்.. இது எப்பேர்ப்பட்ட  அனுபவம்!!.. உங்கள் அத்தனை கோரிக்கைகளும் அற்புதமாக ஈடேறும். 


இதெல்லாம் பண்ணினா என்ன ஆகும்?  இப்போ, நம்ம சத்யம் க்ரூப் சேர்மன் - ராமலிங்க ராஜு இருந்தாரே... அவர் இந்த fraud லெ மாட்டாமே இருந்தா எப்படி இருந்து இருப்பார்?  எத்தனையோ பேருக்கு வழிகாட்டி... ஆதர்ஷ நாயகன்... லட்சக் கணக்கான ஷேர் ஹோல்டர் க்கு கடவுள்.. இப்படி ஆகிடலாம்.. நீங்களும்.. ஆனா நல்லா விதமா... 
    
வித்தை தெரிஞ்சவருக்கு ராகு தசை ... சந்தனம் ... தெரியாதவங்களுக்கு  சாக்கடை தான். 

என்னுடைய  அனுபவத்தில் - அம்மனின் அருள் அலைகள் அபரிமிதமாக வெளிப்படும் ஆலயங்களை, இடங்களைப் பற்றி இன்னொரு சமயம் (விரைவில்) எழுதுகிறேன். 

 http://www.trichy.com/travel/samayapuram.gif

இதைப் போல் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு காரகத் துவம் இருக்கிறது..  அவர்கள் அமர்ந்த வீடு, நட்சத்திர சாரம், இணைந்து இருக்கும்  கிரகங்கள், பார்வை பெறும் கிரகங்கள் ,  என பல வகைகளில் பலன்கள் கிடைக்கும்......

இன்னைக்கு நம்ம நாட்டுலே இருக்கிற அத்தனை அரசியல் வாதிக்கும்,  இந்த வித்தை தெரிஞ்ச ஆஸ்தான ஜோதிடர்கள் உண்டு..  அவங்க சொல்ற படி தெளிவா , எல்லா வேலையும் செஞ்சு கிட்டு .. வெளிலே வேஷம் போட்டுக்கிட்டு போய் கிட்டே இருப்பாங்க .... நம்மள மாதிரி ஆளுங்க ... நாத்திகம் பேசிக்கிட்டு , நமக்கு தோணுற மாதிரி ஒரு வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டு...  நமக்கு முன்னே வாழ்ந்த அத்தனை பேரும், முனிவர்களும் , முட்டாள்னு நெனைச்சுக் கிட்டே ... இருந்திட வேண்டியது தான்.. 



நம்ம நண்பர் ஒருவர் அனுப்பி வைச்சு இருக்கிற மந்திரங்கள் இது. வேலை இன்றி கஷ்டப்படும் அனைவருக்கும் இது ரொம்ப உபயோகமாக இருக்கும்.  
 இன்னொரு மந்திரம், உங்கள் பண வரவுக்கு ...


வேலை  கிடைக்க  உதவும்  மந்திரம்  :  
ஸ்ரீஇலட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் வளரவும்,வேலை கிடைக்கவும் கீழ்க்கண்ட சுலோகத்தை தினமும் காலை 10 முறை ஜபிக்கவும்.
வெள்ளிக்கிழமை மாலைவேளைகளில் வீட்டில் நெய்தீபம் ஏற்றி ஸ்ரீஇலட்சுமி பூஜை செய்து 108 முறை ஜபித்துவர விரைவில் வேலைகிடைக்கும்.

ஸ்ரீதேவீஹி அம்ருதோத் பூதாகமலா சந்த்ர சோபனா/
விஷ்ணுபத்நீ வைஷ்ணவீச வராரோஹாச்ச சார்ங்கிணீ/
ஹரிப்ரியா தேவதேவீ மஹாலக்ஷ்மீச சுந்தரீ//


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjOBjbGMX1dUFbHoGWNg9D5ngT15XgCa_JtU0LX3bHeW3RLCYGQRfChsJ00oWQsXPRGB1X2T4_TByegWHmCdsmHa1ChSzmMirxjL7ewOkdDQUOy7wG73Ak9NqLaruJtvB8hzU8VimOYedc/s320/Tirupathi+balaji+venkatachalapathy+cx.jpg 
லட்சுமி கணபதி மந்திரம்

ஓம் ஸ்ரீம் கம் ஸெளம்யாய கணபதியே வரவரத ஸர்வ
ஜனம்மே வசமானய் ஸ்வாஹா!
ஹிருதயாதி ந்யாஸ! நிக்விமோக!
 

 இந்த மந்திரத்தை சிரத்தையுடன் ஜெபித்து வந்தால் , நல்ல தன விருத்தி உண்டாகும்... கடன் தொல்லைகளில் இருந்து முழு விடுதலை கிடைக்கும். 
====================================
நமக்கு வரும் ஜோதிட ஆலோசனை கேள்விகளில், நிறைய அன்பர்களுக்கு ராகு தசை நடப்பதால் ,  அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்பதால் ராகு தசையை உதாரணமாகக் கொண்டு இந்த கட்டுரையை எழுதி இருக்கிறேன்... 

அதைப் போல  - ஜோதிட பாடங்களை , அரிச்சுவடியில் இருந்து ... அனைவருக்கும் பயன்படும் வகையில் தொடர் கட்டுரைகள் எழுதலாமா என்று எண்ணமும் இருக்கிறது. சில கலைகளை , குருவின் உபதேசம் இருந்தால் தான் கற்றுக் கொள்ள முடியும். ஜோதிடமும் அந்த வகையில் ஒன்று தான். நீங்கள் என்ன தான் புத்தகங்களைப் படித்தாலும், பெரிய ஆராச்சி செய்தாலும், பலன் சொல்ல வராது. தவறுதலாய் சொல்வதற்குப் பதில் சொல்லாமலே இருந்து விடுதல் நல்லது.. 


நான் ஒன்றும் மேதை இல்லை. ஆனால், அருணாசலமும், என் குருவின் அருளும்  எனக்கு நலல வகையில் வழி காட்டும் என்று நம்புகிறேன்...  கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் கையைப்  பிடித்து பயணிக்க இயலும்.. நமக்கு இருக்கும் வேலைப் பளுவினால் , பாடங்கள் கொஞ்சம் தாமதம் ஆகலாம்.... ஆனால் நிறைய அன்பர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன்...

நடைமுறையில் நமக்கு வரும் ஆலோசனை கேள்விகளுக்கு , பதில் அளிக்க தாமதமாகி வருவதால் , உங்களுக்கே கற்று தருவதில் சௌகரியம்  என்று தோன்றுகிறது. அதே நேரம், தனிப்பட்ட முறையில் E -மெயில்  மூலமும் , சேவை தொடரும். மிக அதிக அளவில் கேள்விகள் வருவதால், சற்று தாமதமாகி வருகிறது. அவ்வளவே. வாசகர்கள் சற்று பொறுத்துக் கொள்ளவும்.  
==========================
மேலும் நமது நண்பர் ஒருவர் நமது இந்த இணைய தளத்தில் வரும் கட்டுரைகளைப் படித்து விட்டு, " இணைய தளம் மூலம் - பணம் சம்பாதிப்பது எப்படி ? ஓய்வு நேரங்களில் வருமானம் பார்க்க என்ன வழிகள் ? என்று எழுத சம்மதித்திருக்கிறார். " இது நமது இணைய தளத்தைப் பார்வையிடும் வாசக / வாசகிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறோம். 
=====================
இன்னொரு நண்பர் - இங்கிலீஷ் ஈஸியா எப்படி பேசுறது?  ஆங்கில இலக்கணம்   எல்லாம் கத்துக் கொடுக்க ரெடி னு சொல்லி இருக்கிறார். அவருக்கும் மனமார வாழ்த்துக்கள்.... மக்களுக்கு பயனுள்ள வகையில் நமது தளம் இன்னும் பீடு நடை போடும் என்பதில் மகிழ்ச்சி... 
 ======================
இது போக நமது வழக்கமான பல்சுவை தொடர்களும் அடிக்கடி இடம் பெறும்.  
இதெல்லாம் பண்றதுனாலே எங்களுக்கு என்ன பிரயோஜனம் னு கேட்குறீங்களா..?  

நமக்கு தெரிஞ்சதை நாலு பேருக்கு ஷேர் பண்ணிக்கலாம் தான்.... வேற ஒன்னும் உள்நோக்கம் இல்லை. எனக்கு ஜோதிடம் கத்துக் கொடுத்த குரு என்கிட்டே சொல்றப்போ, "பரிகாரம் னு எதிலேயும் காசு வாங்கிடாதே , அது உனக்கு மகா பாவம்" னு சொல்லி இருக்கிறார்.... இன்னும் கொஞ்சம் மேலே போய், ஜோதிடம் கத்துக் கொடுக்கிறதுக்கே வாங்க வேண்டாம் னு நெனைக்கிறேன்...... 


காசே இல்லாமே ஏன் இப்படி பண்றோம்..? (உங்க கிட்டே காசு வாங்கி நாங்க என்ன பண்றது.. கடவுள் புண்ணியத்துலே ஏதோ, காசு ... சாப்பாட்டுக்கு  குறை இல்லை..) கொஞ்சம் புகழ் கிடைக்கும்.... ஒரு நாலு பேருக்கு புதுசா அறிமுகம் ஆகிக் கிடலாம்... எல்லா ஊர் லேயும் யாரவது ஒருத்தராவது நம்ம வாசகர் இருப்பாங்க.. 

ஹா ஹா.. அப்படி எல்லாம் இல்லை. கொஞ்சம் பெரிய அளவிலே பின்னாலே உபயோகமா இருக்கும் னு நினைக்கிறோம்,  SITE நல்லா பிரபலம் ஆயிட்டா. எல்லா வழிகளும் பின்னாலே சொல்றோம்....  (ofcourse , ஆரம்பிச்ச குறுகிய காலத்தில் , இப்போவே நல்லா பிரபலம் ஆயிடுச்சு.. உலகம் முழுவதிலும் இருந்து மின்னஞ்சலில் வாழ்த்தி வரும் அத்துணை அன்பு உள்ளங்களுக்கும் ... நன்றி.. நன்றி... ) 

Tuesday, March 3, 2015

நான் என்பது யார்..? நான் என்பதை அறிய முயலும் அந்த நான் யார்...?

நான் என்பது யார்..? நான் என்பதை அறிய முயலும் அந்த நான் யார்...?


வாசக அன்பர்களுக்கு என் பணிவான வணக்கம். இன்று நாம் பார்க்க விருக்கும் பதிவு, நமது வாசகர்களில் ஒரு அன்பர் எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தது. நம் அனைவரும் தெரிந்துகொள்ள இங்கே பகிரப்படுகிறது. 

அண்ணாமலையில் இன்றும் அற்புதமான ஆன்மீக அதிர்வுகளை ஏற்படுத்தும், மகத்தான இடம் ரமணர் ஆஷ்ரமம். மயில்களின் அகவலும், அண்ணாமலையின் கம்பீர அழகும், உங்கள் மனதில் என்றும் அகலாத ஓவிய கல்வெட்டாய் நிற்கும். இங்கு உள்ள தியான மண்டபத்தில், மனம் ஒருமுகப்படும் பரவசத்தை, நான் பலமுறை வியந்து அனுபவித்து இருக்கிறேன். அந்த மகானின் வாழ்வில் நடந்த , ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை , உங்கள் அனைவரிடம் பகிர்ந்துகொள்வதில், நான் பெருமைப் படுகிறேன்...

அவரது உபதேசங்களில் ஒரு நான்கு மட்டும் கீழே கொடுத்து இருக்கிறேன். இதை, நீங்கள் மனதில் அசை போட்டாலே , ஒரு பரவச நிசப்தத்தில் அமிழ்வது உறுதி. 

நான் என்பது யார்..? நான் என்பதை அறிய முயலும் அந்த நான் யார்...? தேட ஆரம்பிங்க தங்கங்களே...! 

படிச்சு முடிச்ச பிறகு, உங்களோட ஒரே ஒரு கெட்ட விஷயத்தை , உங்களால நிறுத்த முடிஞ்சா, அதுவே இந்த கட்டுரையின் மிகப் பெரிய வெற்றி...! அண்ணாமலையார் ஆசீர்வாதம்!  வாங்க உள்ளே போவோம்..!

மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.

கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.

தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.

குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.

ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ள அதுவே மிகவும் முக்கியம்.

‘ஒருவன் தன்னைத் தான் அறிந்து கொள்ளுதலே, இறைவனை அறிந்து கொள்வதற்கு முதற்படியாகும்’ என்ற ஞான உபதேசத்தை அருளியவர் பகவான் ரமணர். பாலப் பருவத்திலேயே திருவண்ணாமலையைத் தேடி வந்து தஞ்சம் புகுந்தவர். தனது இறுதிக் காலம் வரை அண்ணாமலையை விட்டு நீங்காதவர்.

ரமணர் விருபாஷிக் குகையில் தங்கி இருந்த காலம். ஒரு நாள் மாலை வேலையில் திரளாக பக்தர்கள் கூட்டம் வந்திருந்தது. வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக ஸ்ரீ பகவானை தரிசித்துக் கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் திடீரென மழை பொழியத் துவங்கியது. மெதுவாக ஆரம்பித்த மழை பேய் மழையாகக் கொட்டித் தீர்த்தது. தரிசிக்க வந்தவர்கள் யாரும் கீழே இறங்கிச் செல்ல முடியாத நிலை. 

மாலை கடந்து இரவும் வந்து விட்டிருந்தது. இரவு எட்டு மணியைக் கடந்து விட்டதால் ஒவ்வொருவருக்கும் நல்ல பசி ஏற்பட்டது. ஆனால் அத்தனை பேருக்கும் போதுமான உணவு கையிருப்பில் இல்லை. பகவானின் அடியவரான பழனிசாமிக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. பகவானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்.

பகவானும், ‘சரி, சரி மழை விடுவதாகத் தெரியவில்லை. இவர்களோ பாவம் பசிக்களைப்பில் இருக்கிறார்கள். அதனால் இருக்கும் உணவை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விடு’ என்றார்.

உடனே பழனிசாமி உணவை  சிறு சிறு உருண்டையாக உருட்டி வந்திருந்த பக்தர்கள் ஒவ்வொருவருக்கும் அளிக்கத் தொடங்கினார். அவர்களும் அந்தச் சிறு கவளங்களை ரமணப் பிரசாதமாக நினைத்து வாங்கி உண்டனர். மூன்று பேருக்கு மட்டுமே வைத்திருந்த அந்த உணவு கிட்டத்தட்ட முப்பது பேர்களுக்கு சிறு சிறு உருண்டைகளாக்கிப் பகிர்ந்தளிக்கப்பட்டது. சற்று நேரத்தில் அனைவருக்கும் வயிறு நிறைந்து விட்டதுடன் அறுசுவை உணவு உண்ட திருப்தியும்  ஏற்பட்டது. தண்ணீர் கூட உட்கொள்ள முடியாத அளவிற்கு வயிறு நிறைந்திருப்பதைக் கண்டு ‘எல்லாம் ரமணரருள்’ என்று எண்ணித் தொழுதனர் பக்தர்கள்.

எல்லாவற்றிற்கும் காரண சூத்ரதாரியான ரமணரோ ஒன்றும் பேசாமல் எங்கோ மௌனமாய் நோக்கிக் கொண்டிருந்தார். எதிலும் பற்றற்று இருப்பது தானே ஞானிகளின் இயல்பு.

 சதா ஞான நிலையிலேயே பகவான் இருந்து வந்த போதிலும் ஆசிரம வாழ்வில் அவருடைய நகைச்சுவை உணர்விற்கு என்றுமே பஞ்சம் இருந்ததில்லை.

ஒருநாள்…  விடியற்காலை மூன்றுமணி இருக்கும். மகரிஷியை பார்க்கச் சிலர் ஆசிரமத்திற்கு வந்தனர்.  ஆசிரமத்தில் யாரையும் காணாததால், அவர்கள் நேரே சமையல் நடக்கும் இடத்திற்குச் சென்றனர். அங்கே ஆசிரம சமையல் பாத்திரங்களை ஒருவர் மெதுவாகக் கழுவிக்கொண்டிருந்தார். அவரிடம்,  ‘ஐயா இங்கே பகவான் ரமணர் எங்கே இருக்கிறார்?’ என்று கேட்டனர்.

அதற்கு அந்த மனிதரும், ’ஓ, ரமணரா, இதோ இருக்கிறாரே, இதுதான் ரமணர்’ என்று சொல்லி, தான் கழுவிக் கொண்டிருந்த அண்டாவை அவர்களிடம் காண்பித்தார். வந்தவர்களோ அவருக்குக் காது கேட்காதோ என நினைத்துக் கொண்டு, மீண்டும் அதையே கேட்டனர்.

அதற்கு அந்த மனிதர் மீண்டும் தன் கையில் இருந்த அண்டாவைக் காட்டி,  ‘பாருங்கள்,  இதுதான் ரமணர். ரமண மகரிஷி என்று பேர் கூடப் பொறித்திருக்கிறார்களே, உங்களுக்குத் தெரியவில்லையா?’ என்றார்.
வந்தவர்கள்,  இவர் யாரோ சித்த சுவாதீனமில்லாத மனிதர் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டு தரிசன ஹாலுக்குச் சென்று அமர்ந்து கொண்டனர்.
பொழுது விடிந்தது. சற்று நேரத்தில் ‘பகவான் வருகிறார், பகவான் வருகிறார்’ என்ற குரல் கேட்டது.

அனைவரும்  மரியாதையுடன் எழுந்து நின்று பார்த்தனர், அங்கே பாத்திரம் தேய்த்த அந்த மனிதர் வந்துகொண்டிருந்தார்.
அவர் தான் பகவான் ரமணர் என்று அறிந்து கொண்டதும் அவர்களுக்கு வியப்பு தாளவில்லை. அதே சமயம், பகவான் ஏன் தங்களிடம் அப்படி நடந்து கொண்டார் என்று அறிய விரும்பினர்.  அவரை அணுகிக் காரணம் கேட்டனர்.
அதற்கு பகவான்,  ‘நான்தான் ரமணன்னு நெற்றியில எழுதி ஒட்டிக் கொண்டா இருக்க முடியும்.?’ என்று கேட்டார், புன் சிரிப்புடன். பின், ‘நான் என்பது இந்த உடலல்ல; இதைத் தான் நான் இத்தனை வருடங்களாகச் சொல்லிக் கொண்டு வருகிறேன். அப்படிச் சொல்லியும் என்ன பயன், எல்லோரும் அதை  உணராமல் இருக்கிறீர்களே!’ என்றார் வருத்தத்துடன்.

தங்களுக்காக வாழாமல் பிறர்க்காகவே வாழ்ந்ததால்தான் அவர்கள் மகான்கள் என்று போற்றப்படுகின்றனர்.

மகான்களின் பெருமை பேசவும் இனிதே!
urs
www.v4all.org