Friday, June 19, 2015

தீர்மானமான முடிவெடுக்க மாத்தியோசியுங்கள்

மனப் பயிற்சி என்னும்போது, வேலையில் திறமை என்பதைப் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும்.  நீங்கள் எவ்வளவு கடுமையாக வேலை செய்தபோதும் சிலசமயங்களில் எல்லா வேலைகளையும் முடிக்க முடியாது என்று நினைப்பதுண்டு. இவ்வாறு சிந்திப்பவர்கள் ஒரு பழக்கத்திற்கு அடிமையாகி, அதன் காரணமாகஅவர்களின் வேலையில் திறமை என்பது மிகவும் குறைந்து விடுகிறது.
இத்தகைய மனிதரால் கவலையின்றி உட்கார்ந்து வாழ்க்கையை அனுபவிப்பது எப்படிஎன்று தெரியாது.  ஒரு கோடைக்கால விடுமுறைக்கும் போக மாட்டார்.  உலகின் பலபகுதிகளில் இது ஏற்றுக் கொள்ளப்படலாம்.  விடுமுறைகளில் கூட வேலைபார்ப்பவர்கள் இருக்கிறார்கள்.  ஒரு நாள் விடுமுறை எடுத்தால், வேறு யாராவது அந்த வேலையைச் செய்ய நேரிடும்.  அது சரி அல்ல என்று நினைக்கிறார்கள்.  இத்தகைய மனப்பான்மை உடையவர்கள் விடுமுறையே எடுக்காமல் இருப்பது வியப்பைத் தராது. மற்றவர்களைப் பார்த்து விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் என்பார்கள்.  ஆனால் அவர்களால் மட்டும் முடியவே முடியாது என்று நினைப்பார்கள்.  மெல்ல மெல்ல இத்தகைய உணர்வு அவர்கள் மனதைக் குடைந்து ஒருவிதமான சுய தண்டனையாகமாறிவிடும்.  மற்றவர் வேலைகளை செய்யத் தயாராக இருக்கும் இத்தகையமனிதர்கள் தங்களுடைய வேலையில் திறமை குறைந்தவர்களாக ஆகிவிடுவார்கள்.
இந்தச் சூழ்நிலையில் நீங்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு போனால், என்ன ஆகும்என்பதை நினைத்துப் பாருங்கள்.  மூன்று நாட்கள் விடுமுறை என்பதே அதிகபட்சம்என்று நினைக்கும் நிறுவனங்களில் இதைவிட அதிகமாக விடுமுறைஎடுத்துக்கொண்டால், அது ஒரு பெரிய பிரச்சினை ஆகிவிடும் என்று தெரிந்தும், ஒரு முழு வாரம் போய்வர நினைக்கிறார்கள்.  உண்மையிலேயே ஒரு வாரம்போய்விட்டால் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய வேலை மலைபோல் குவியும். அதன் விளைவாக உங்களுடைய சக ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் எவ்வளவு சங்கடமாக இருக்கும் என்ற எண்ணம் தான் முதலில் உங்கள் மனதில் உதிக்கும்.
அடுத்து மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைப்பார்கள்? நீங்கள் விடுமுறையில் போகாமல் இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.

No comments:

Post a Comment