Showing posts with label OM the Scientifically proven truth. Show all posts
Showing posts with label OM the Scientifically proven truth. Show all posts

Sunday, July 12, 2015

விவாதங்களை தவிருங்கள்

வீண் விவாதங்களில் நேரத்தை நம்மில் பலர் வீணடிக்கிறோம் என்பதை மறுக்க முடியாது. விவாதத்தால் நமக்கு கிடைப்பது தான் என்ன? ஒரு லாபமும் இருக்காது என்பதை சூடம் அடித்து சத்தியம் செய்யலாம். ஆனால் விவாதங்களினால் நிச்சயம் நிறைய தீமைகள் நமக்கு நடக்கும் என்று மட்டும் உறுதியாக சொல்லலாம். இருந்தாலும் நாம் விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டு தான் இருக்கிறோம் என்பது தான் கசப்பான உண்மை ஆகும்.
நாம் ஏன் விவாதங்களில் ஈடுபடுகிறோம்? நமது "ஈகோ" தான் நம்மை விவாதங்களில் ஈடுபடவைக்கிறது. நாம் நமது கருத்து தான் சரியானது என்று வலியுறுத்த விவாதங்களில் ஈடுபடுகிறோம். விவாதத்தின் போதே நாம் கூறியது தவறு என்பதை அறிய நேர்ந்தாலும் நாம் நம் தவற்றை ஒருபோதும் ஒப்புக்கொள்வதில்லை.
இறுதியில் நமது விவாதங்களினால் நமக்கு கிடைப்பது தான் என்ன? நாம் விவாதத்தில் வெற்றி பெற்றாலும் நாம், நம் நல்ல நண்பர்களையோ, நெருங்கிய உறவினர்களையோ இழப்போம் என்பது தான் நிஜம். உங்கள் வேலை கூட பறி போகலாம். உங்கள் காதல் துணை உங்களைப் பிரியவும் கூட நேரலாம்.
சுருங்க சொல்ல வேண்டுமானால் விவாதங்களினால் எந்த பயனும் கிட்டாது. ஆனால் இழப்புகள் அதிகம் இருக்கும்.
விவாதம் பண்ணுபவன் முட்டாள் என்பதில் இன்னும் சந்தேகம் இருக்கிறதா என்ன?
வீண் விவாதங்களை தவிருங்கள். ஆரோக்கியமான விவாதங்கள் நன்மை பயக்கும் என்பது உண்மை தான். ஆனால் ஆரோக்கியமான விவாதங்களை இன்று பார்ப்பது மிகவும் அரிது என்பது தான் உண்மை.
விவாதங்களை தவிருங்கள். உறவுகளை காப்பாற்றிக் கொள்ளுங்கள். அது தான் புத்திசாலித்தனம் என்று கூறி முடிக்கிறேன். வாழ்க வளமுடன்!


Tuesday, June 30, 2015

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?

காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?
காமம் என்பது எல்லா உயிரினங்களின் இயல்பான ஒரு உணர்வு ஆகும். இயற்கையான உணர்வு என்று கூட சொல்லலாம்.
பருவ வயது வந்தவுடன் நம் உடலில் உள்ள சில பல ஹார்மோன்கள் 'ஓவர்டைம்' போட்டு வேலை செய்யும்போது நாம் தடுமாறித்தான் போகின்றோம். மன்மதலீலையை வென்றார் உண்டோ?
சில பெரிய மனிதர்கள் குறிப்பாக ஆன்மிகத்தில் உள்ளவர்கள் காமத்தை அடக்க வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா? அது நிஜமாகவே முடியுமா? மேலே படியுங்கள்.....
சில ஆன்மிக குருமார்கள் காமத்தைக் கட்டுபடுத்த வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். விந்தை அடக்கி மேல் நோக்கி செலுத்தினால் நன்மைகள் கோடி உண்டு என்று சொல்லுகின்றார்கள். விஞ்ஞானத்தில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. காம உணர்ச்சி தவறானது என்றால் இயற்கை அந்த உணர்வை அத்தனை ஜீவராசிகளுக்கும் கொடுத்திருக்குமா என்கின்ற கேள்வி எழுகின்றது. இயற்கையான எதுவும் தவறாக இருக்க முடியாது என்பது விதி. அப்படி பார்க்கின்ற போது காமம் தவறில்லை என்றே தோன்றுகிறது.
ஆனால் அதற்காக 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே இருத்தலும் தவறு தான். காமத்தை அடக்கக் கூடாது என்பது பொது விதி. ஆனால் கல்யாணம் வரை நாம் காத்து இருக்கத் தான் வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் காமக் களியாட்டங்களில் முழுமையாக ஈடுபட்டு இன்பத்தை துய்க்கலாமே?
உடலின் எந்த தேவைகளையுமே நாம் அடக்கக் கூடாது என்பதே நிஜம். காமமும் அப்படியே. ஆனால் சில நேரங்களில் நமக்குக் கட்டுப்பாடு நிச்சயம் தேவைப் படுகின்றது என்பது உண்மை தான். அந்த கட்டுப் பாடு தான் ஒரு வேளை நம்மை மிருகங்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றதோ?
பொதுவாக காமத்தைக் கட்டுப் படுத்தக் கூடாது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதே சமயம் இடம் பொருள் ஏவல் பார்த்தது அளவுடன் வைத்துக் கொள்ளுவது சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.
வாழ்க வளமுடன்!


வாசியை அறிந்தவன்'s photo.

Saturday, March 7, 2015

செல்வந்தர் ஆக சிறப்பு பரிகாரங்கள்

செல்வந்தர் ஆக சிறப்பு பரிகாரங்கள்


ஒருவர் சிறந்த செல்வ நிலையை அடைய கீழ்க்கண்ட எளிய முறைகளை-பரிகாரங்களை செய்து வரலாம். நம் முறைகள் அனைத்தும் மிக எளிமையானவையாக இருப்பினும் மிகுந்த சக்தி வாய்ந்தவை என்பது கடைபிடிக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆகவே நம்பிக்கையுடன் செய்து வர மிக உயர்ந்த செல்வ நிலையை அடையயலாம். அசைவ உணவு பழக்கம் இருப்பின் தவிர்த்தல் நலம். அனேக சுபத்தை அளிக்கும் கிரகங்களின் நன்மைகளை அசைவ உணவு பழக்கம் பாதிக்கும்-தடுக்கும். மேலும் சனி, ராகு கிரகங்களின் கோட்சார நிலை அல்லது ஜாதகத்தில் சரியில்லாத நிலை இருப்பின், அசைவ உணவு பல மடங்கு பாதிப்பு தரும். ராகு திசை, சனி திசை, ஏழரை, ஜென்ம, கர்ம, கண்டக சனி நடப்பவர்கள் அவசியம் தவிர்த்தல் வேண்டும். இல்லையேல் எந்த பரிகாரமும் பலன் தராது. இதை பற்றிய எம் பிரத்யேக காணொளி காட்சி ஒன்று தயாராகி வருகிறது. விரைவில் வெளியிடப்படும்.
(1) வீட்டில் ஸ்படிக லிங்க வழிபாடு, ஸ்ரீ யந்திர வழிபாடு ஒருவரை விரைவில் செல்வ நிலையை அடைய உதவும். தினமும் ஸ்ரீ சூக்தம் படித்தோ அல்லது கேட்டோ வருவது அதிக பலன் தரும். மேலும் வெள்ளை உடைகள் நல்லவற்றை, பணத்தை ஈர்க்க உதவும். அதை அதிகம் உபயோகித்தால் நலம் தரும்.
(2) செம்பு மற்றும் வெள்ளி அதிகம் உடலில் படும் படி செய்து வரவும். இரண்டும் மிகுந்த சக்தி வாய்ந்தவை. செம்பு மோதிரம் அல்லது கை வளையம் மற்றும் இடது கை ஆட்காட்டி வியரலில் வெள்ளி மோதிரம் (கற்கள் எதுவும் இல்லாத சாதாரணமான ஒன்று) அணிவது தான அகர்ஷ்னா முறைகளில் ஒன்று. வலது கை சுண்டு விரலில் செம்பு மோதிரம் அணியவும்.
(3) சுத்தமான மலை தேன் மற்றும் குங்குமம் எப்போதும் சுவாமி அறையில் இருக்குமாறு பார்த்து கொள்ளவும். வியாபாரிகள் சுத்த தேன் நிறைந்த பாட்டில் தங்கள் மேஜையில் மற்றும் பணம் வைக்கும் இடத்தில் வைத்து வரலாம்.
(4) வட கிழக்கு மூளையில் துளசி செடி வைத்து தினமும் அதை சுத்தமாக பராமரித்து வரலாம். மேலும் வியாழன் அன்று மட்டும் அதற்கு சுத்தமான பாலை வார்த்து வரவும்.
(5) மேற்கு பார்த்த வீடு கடை உள்ளவர்கள் வாயிலில் மஞ்சள் துணி கட்டி வைக்கலாம். மற்ற திசை உள்ளோர்கள் சிகப்பு துணி அல்லது ரிப்‌பன் கட்டலாம்.
(6) குளிக்கையில் தினசரி வில்வ இலையை போட்டு குளித்து வரலாம். வில்வ இலையை கொதிக்க வைத்து குளிக்கும் நீரில் கலந்து குளிக்க நலம் மிகும்.
(7) ஏழை எளியோர், தானம் கேட்போர் (பிச்சை) ஆகியோருக்கு மஞ்சள் லட்டு மற்றும் மஞ்சள் வாழை வாங்கி கொடுக்கவும். தினசரி முடிந்தாலும் செய்யலாம். காளை மாட்டிற்க்கு வெல்லம் கொடுத்து வரலாம்.
(8) வெள்ளை எள் உருண்டையை ஓடும் ஆற்றில் 43 நாட்கள் விட்டு வரலாம்.
(9) குங்கும பூவை உணவில் முடிந்த போதெல்லாம் சேர்த்து வரவும். தினசரி பசுவிற்க்கு மஞ்சள் லட்டு ஒன்று கொடுத்து வரலாம். மேலும் பசு வதையை தடுப்பது மிக சிறந்த நன்மையும், செய்த பாவங்களை, பூர்வ ஜென்ம கர்மாக்களின் தாக்கங்களையும் களையச்செய்யும்.
மேற்கண்ட முறைகளில் முடிந்தவர்கள் முடிந்தவற்றை செய்யலாம். ஏதாவது ஒன்று செய்தாலும் பயன் உண்டு. அனைத்தையும் செய்தாலும் பயன் உண்டு.

Friday, July 11, 2014

ஞாபகசக்தி,அதிகரிக்க விஸ்வநாதன் ஆனந்த் தரும் டிப்ஸ்:

ஞாபகசக்தி,அதிகரிக்க விஸ்வநாதன் ஆனந்த் தரும் டிப்ஸ்:
மனதில் எந்த விஷயம் தோன்றுகிறதோ, அதை உடனே ஒரு பேப்பரில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.
போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பும், பரிட்சை எழுதப் போவதற்கு முன்பும் எழுதி வைத்த விஷயங்களை திரும்பத் திரும்பப் படித்து பாருங்கள்.
ஒரு பேப்பரைப் படிக்கிறோம். அதில் உள்ள செய்திகள் நம் மனதில் பதிந்துவிடுகிறது. திரும்ப அதை நினைத்துப் பார்க்கும்போது பேப்பரின் இடப்பக்கம் வலப்பக்கம், பக்க எண் உட்பட நம்மால் சொல்ல முடிகிறது. அதுபோல்தான் ஆர்வத்துடன் படித்து, உடனே குறித்து வைத்துக் கொள்வதுகூட ஆழமாய் மனதில் பதிந்துவிடும்.
கம்ப்யூட்டர் போன் மெமரியில் பதிந்து, பத்து நிமிஷத்துக்கு ஒருதரம் அலர்ட் சவுண்ட் வைத்துக் கொள்ளலாம்.
செஸ் விளையாடுவது குழந்தைகளுக்குப் பொழுது போக்கு மட்டுமல்ல. அவர்களது மூளையில் யோசிக்கும் திறனையும், கிரகிக்கும் திறனையும் நிச்சயம் அதிகரிக்கும்.

urs - www.v4all.org 

Friday, June 27, 2014

ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். (OM the Scientifically proven truth)

 ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாகப் பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்தும் இதைச் செய்யலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும்.


‘ஓம்’ என்னும் பிரணவ மந்திரம் அனைத்து ஒலிகளின் மூலாதாரம். இது சமஷ்கிருத மொழியின் எழுத்துக்களான அ. உ. ம் என்ற மூன்று எழுத்துக்களை உள்ளடக்கியது. இம்மூன்று எழுத்துக்களும் இந்த அகிலத்தைக் குறிப்பவை.



மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகியவர்களைக் குறிப்பவை. மூன்று வேதங்களைக் குறிப்பவை என்று வேதங்கள் மூலம் அறியப்படுகிறது. ‘அ’ மற்றும் ‘உ’ எழுத்துக்கள் சேர்ந்து ‘ஓ’ என்று ஒலிக்கப்படுகிறது. முருகப்பெருமான் பிரணவத்தின் பொருளை பிரம்மாவிடம் கேட்ட போது, அறியாமல் விழித்தவரைச் சிறைக்கு அனுப்பி, ‘என்ன பொருள் என்று உனக்குத் தெரியுமா’ என்று கேட்ட சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து உபதேசித்தார் என்பது நமக்கெல்லாம் தெரியும்.

இந்த மந்திரமானது ஆன்மாவுக்கு உபதேசிக்கப்படும் மந்திரம். ஆகையால், புற உடலுக்கும் உலகிற்கும் கேட்காதவாறு செவிவழிக் காற்று வழியாக ஆன்மாவிற்கு ஒரு குருவால் உபதேசிக்கப்பட வேண்டும். ஒலிகளுக்கு அதிர்வு உண்டு என்று ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த ஓம்காரம் உச்சரிக்கப்படும் பொழுதும் ஒரு அதிர்வலை உண்டாகிறது. இது மூலமந்திரம்.
ஆகையால் இந்த அதிர்வலையின் ஆற்றலானது அளப்பரிய ஒரு சக்தியை உச்சரிப்பவர்களுக்கு உண்டாகிறது. இருவர் எதிரெதிரே அமர்ந்திருந்த ஓம் காரத்தை மனது ஒருமித்து பலமுறை ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது, இருவரின் அதிர்வலைகளும் ஒரு நடுப்புள்ளியில் ஒரு அதிர்வுப் புலத்தை உண்டாக்குகிறது.

நடுப்புள்ளியில் சந்தித்த அந்த அதிர்வலைகள் திரும்ப உச்சரிப்பவரிடமே வந்து சேரும் பொழுது அவரிடம் ஒரு வித ஆற்றல் வந்து சேருகிறது. அந்த ஆற்றலானது நம்முள்ளிருக்கும் உடலுக்கு மூலாதாரமாக இருக்கக்கூடிய இந்த இயங்கு சக்தியைத் தூண்டிவிடுகிறது. இதுவரை உடலின்சக்தியாக மட்டுமே இயங்கி வந்த அந்த சூக்கும சக்தியானது இந்த அதிர்வால் ஆத்மாவுக்கும் உடலுக்கும் ஒரு அளப்பரிய சக்தியை அளிப்பதாக மாறுகிறது.

உலகத்தில் உள்ள எல்லா உயிர்களையும் ஒரே நிலையில் பார்க்கக் கூடிய ஒரு பக்குவத்தையும் அவற்றின்பால் எல்லையற்ற அன்பு செலுத்தும் ஒரு மனதையும் இந்த மந்திரமானது நமக்கு அளிக்கும். இந்த உலகமே யாராலும் உணர்ந்து கொள்ளவும் முடியாத, காணவும் இயலாத ஒரு சூக்குமமான அலை வரிசையில் தான் இயங்கி வருகிறது. இந்த ஓம்காரத்தின் மூலம் பிறக்கும் அதிர்வானது உலகத்தின் அதிர்வோடு ஒரு சூக்குமமான பிணைப்பினை உருவாக்குகிறது.

அதாவது நம்முள் உள்ள ஆத்மாவை உலகம் இயங்குவதற்கு ஆதாரமாக உள்ள சூக்குமமான இயங்கு சக்தியோடு இணைப்பதற்கு இந்த ஓம்காரம் உதவுகிறது. இது ஒருமுறை இணைக்கப்பட்டு விட்டால் அந்தப் பிணைப்பானது பல ஜென்மங்களுக்கும் அந்த ஆத்மாவோடு இணைந்து வரும்.

இதனால் நமக்கு எதன் மூலமாகவும் துன்பம் என்பது நேராது அல்லது துன்பமானது துன்பமாக நமக்குத் தெரியாது. மிகப் பெரும் துன்பமான மரணம் என்பதையும் நம்மால் வேறு விதமாக எடுத்துக் கொள்ள முடியும். அதாவது மரணம் என்பது உடலுக்கே தவிர ஆத்மாவுக்கு அல்ல என்பது நமக்குத்தெரிய வரும்.

இந்த ஓம்கார மந்திரத்தை ஒரு குழுவாகப் பல பேர் ஓரிடத்தில் எதிரெதிரே அமர்ந்து  உச்சரிக்கலாம். அங்கு ஏற்படும் அதிர்வலைகளானது அவ்விடத்தில் அமர்ந்து உச்சரிக்கும் அனைவருக்கும் திரும்பக் கிடைக்கும். இது ஒரே நாளில் கிடைத்து விடாது. தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு செய்துவர, அந்த அதிர்வலைகள் அந்த இடம் முழுவதும் நிரம்பியிருப்பதை நம்மால் உணர முடியும்.

இங்ஙனம் அதிர்வலைகள் கிடைக்கப் பெற்ற ஒருவர் அந்தக் குழுவிலிருந்து தனியே வேறு இடத்திற்குச் சென்று விட்டாலும் (உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும்) குழுவிலுள்ள மற்றவர்கள் அதை உச்சரிக்கும் பொழுது அந்த அதிர்வலையை அவரால் அங்கு உணர முடியும்.

நம்முள் உருவான அலைவரிசையானது வேறு ஒரு நபரிடத்திலும் இருந்தால் (அவர் எந்த நாட்டவரானாலும், எந்த மதத்தவரானாலும்) அவரிடம் ஒருவிதமான ஈடுபாடு உருவாகி விடுகிறது. அதனால் நாம் வெளியில் செல்லும் போது முன்பின் அறியாத யாரோ ஒருவரைக் (ஒரே அலை வரிசை உடையவராக இருந்தால்) காணும் போது அவரை எங்கோ பார்த்தது போலவும் நெடுநாள் நட்பு உள்ளது போலவும் தோன்றும்.

இதை ஒரு குழுவாக அமர்ந்து மனம் ஒருமித்துச் செய்யும் பொழுதும் அதுவே பிரார்த்தனை ஆகிறது. இந்தக் கூட்டுப் பிரார்த்தனை சொல்பவர்களுக்கு மட்டுமல்லாமல் அங்கிருக்கும் மற்றவர்களுக்கும், சொல்லப்பட்ட இடத்தின் அருகாமையில் இருப்பவர்களுக்கும் பலன் பல தரும் ஆற்றல் உடையது.

வள்ளலார் கூறிய ஆன்ம நேய ஒருமைப்பாடு வழிக்கும் இது தான் மூலம். கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் இத்தனையும் எதற்காக கட்டப்பட்டிருக்கின்றன? பல பேர் கூடி மனம் ஒருமித்து ஒரு ஒலியை சத்தமாக ஒரே மாதிரி உச்சரிக்கும் பொழுது அந்த இடத்தில் ஒரு அதிர்வு உண்டாகிறது. இவ்வாறு பல காலமாக உச்சரித்து உச்சரித்து அந்த இடம் முழுவதும் நல்ல அதிர்வு நிறைந்திருக்கும். பாரத்தோடு அந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு அது ஒரு இனம் புரியாத ஆறுதலை அளிக்கக்கூடிய இடமாக மாறி விடுகிறது.

கடவுள் பஞ்ச பூதங்களிலும் இருக்கிறார். பஞ்ச பூதங்களால் உருவாக்கப்பட்ட நம்மிலும் இருக்கிறார். கோயிலுக்குச் சென்றால் சுவாமி சந்நிதியில் முட்டி மோதாமல் கோவிலின் உள்ளேயே ஓரிடத்தில் தனியே அமர்ந்து இந்த ஓம்காரத்தை ஒலித்து வர உல்லோருக்கும் கிட்டாத ஒரு பேரின்பம் நமக்குக் கிடைக்கும் என்பது உறுதி.

urs - www.v4all.org