Sunday, June 28, 2015

கடன் கொடுத்து திரும்ப வராமல் அவதிப்படுபவர்கள் அய்யனாரிடம் முறையிட்டால் போதும்; கடன் வாங்கியவரே வீடு தேடி நேரில் வந்து கொடுக்கும்படிச் செய்யும் ஆற்றல் மிக்கவர்


        புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து பேராவூரணி செல்லும் சாலையில்- ரெத்தினக்கோட்டை பஸ் நிறுத்தம் அருகில்- தூத்தாகுடி கிராமத்தில் எழுந்தருளியிருக்கிறார் வடவக்கூத்த அய்யனார். கடன் கொடுத்து திரும்ப வராமல் அவதிப்படுபவர்கள் அய்யனாரிடம் முறையிட்டால் போதும்; கடன் வாங்கியவரே வீடு தேடி நேரில் வந்து கொடுக்கும்படிச் செய்யும் ஆற்றல் மிக்கவர் இந்த அய்யனார்.

தமிழ்நாட்டில் கிராமங்கள்தோறும் எழுந்தருளியிருக்கும் அய்யனார், சபரிமலை சாஸ்தாவாகிய ஐயப்பன்தான். ஐயப்பனே அய்யனராக எழுந்தருளியுள்ளதாக நம்பப்படுகிறது. அதிலும் வடவக்கூத்த அய்யனார் பூரணா, புஷ்கலா என இரு தேவியருடன் எழுந்தருளியுள்ளது மேலும் சிறப்பு.

இவ்வாலயப் பிராகாரத்தில் விநாயகர், முருகன், நாகராஜன், பகளப்பன், லிங்கப்பன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களும் எழுந்தருளியுள்ளனர்.

இந்த அய்யனார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்றும்; ராமேஸ்வரத் திற்கு இந்த வழியாக தீர்த்த யாத்திரை சென்ற அகத்திய மாமுனிவர் தனது யாத்திரை தடையின்றி நிறைவேற இவரை வேண்டிக் கொண்டதாகவும் கூறப் படுகிறது. எட்டியத்தளி அகத்தீஸ்வரர் ஆலயத் திருப்பணியில் ஈடுபட்டிருந்த காளிங்கராய மன்னனிடம், வடவக்கூத்த அய்யனாரை வணங்கி திருப்பணியைத் தொடங்கும்படி ஆலோசனை கூறினாராம் அகத்தியர். அதன்படியே அய்யனா ரின் அருளால் அகத்தீஸ்வரர் ஆலயத் திருப் பணியை மன்னன் செய்து முடித்தான் என்பது வரலாறு.

ஆரம்பத்தில் காட்டுப் பகுதியாக இருந்த இந்த இடத்தில் கீற்றுக்கொட்டகையில் மக்கள் இவரை வழிபட்டு வந்தனர். பின்னர் கோவில் ஓட்டுக் கொட்டகையாகவும், ஒருநிலைக் கோபுரமாகவும் உயர்ந்து, தற்போது பரிவார தெய்வங்களுடன் சிறப்பாகக் காட்சியளிக்கிறார் அய்யனார். இவ்வழியாகச் செல்லும் மக்கள் தங்கள் குறைகளை இவரிடம் சொல்ல, குறைகள் உடனுக்குடன் நிவர்த்தியானதால் அய்யனாரை தங்கள் குலதெய்வமாகக் கொண்டு  வழிபட்டு வருகின்றனர்.

சுற்றுவட்டாரத்திலுள்ள மக்கள் தங்களது குடும்பத்தில் சுபகாரியங்கள் நடத்த முடிவு செய்தால், இங்கு வந்து திருவுளச் சீட்டு போட்டு அய்யனாரின் அனுமதி பெற்றே செயல்படுகின்றனர். திருமணம் நிச்சயித்த மணமகன்- மணமகளை  அழைத்து வந்து,அய்யனாரைப் பூஜித்து அவருக்கு மாலை அணிவித்த பின்னரே திருமணப் பணிகளைத் தொடங்குவர். அய்யனாரின் அருளால் இப் பகுதியில் பருவமழை தவறுவதோ, விளைச்சல் குறைவதோ இல்லை என்கிறார்கள் பக்தர்கள்.

அய்யனாரிடம் நிமித்தம் கேட்பதும் இக் கோவிலில் நடைமுறையில் இருக்கிறது. தாங்கள் மனதில் நினைத்து வந்த காரியம் நிறைவேறுமா என்று அறிய, மூலவர்முன் எழுந்தருளியுள்ள குதிரைகளின் எதிரில் நின்று அய்யனாரை வணங்கி உத்தரவு கேட்பர். பல்லிச் சத்தம் மூலம் அய்யனார் நிமித்தம் தெரிவிப்பார். பல்லிச் சத்தம் எந்த இடத்தில் நிமித்தம் காட்டுகிறது  என்பதைப் பொறுத்து அவர்கள் அந்தச் செயலைச் செய்யவோ செய் யாமலிருக்கவோ முடிவு செய்வர். அய்யனாரி டம் உத்தரவு கிடைத்துச் செய்த காரியங்கள் எதுவும் தோல்வியடைந்ததே இல்லை என்பது பக்தர்களின் அனுபவம்.

திருமணம், வீடு கட்டுதல், தொழில் தொடங்குதல், வெளிநாடு செல்லுதல் என எந்தவொரு செயலுக்கும் இப்பகுதி மக்கள் அய்யனாரின் உத்தரவையே நம்பி இருக்கின்ற னர். அதேபோல கடன் தொல்லை தீர, தீராத நோய் குணமாக, தடைப்படும் திருமணம் நடைபெற, மழலைச் செல்வம் பெற அய்யனாரின் அருளை நாடுகின்றனர். இத்தகைய வேண்டுதல்களுக்கு  அவர்கள் சில நியமங்களைக் கடைப்பிடிக்கின்றனர்.

முதலில் கோவிலுக்கு வந்துஅய்யனாரிடம் முறையிட்டு வழிபட வேண்டும். பின் பதினொரு நாட்கள் அய்யனாருக்கு விரத மிருக்க வேண்டும். பதினொரு நாட்கள் முடிந்ததும் மீண்டும் வந்து அவருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். இவ்வாறு செய்பவர் களுக்கு அவர்களது வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். காரியம் நிறைவேறியதும் அய்யனாருக்கு அபிஷேகம் செய்து குதிரைகளுக்கு மாலை அணிவிக்க வேண்டும்.

பெரும்பாலான அய்யனார் கோவில்களில், அங்குள்ள பரிவார தெய்வங்களுக்கு ஆடு வெட்டிப் படையலிடும் வழக்கம் உண்டு. ஆனால் வடவக்கூத்த அய்யனார் கோவிலில் இந்த வழக்கமில்லை. சைவப் பொருட்களே இங்கு படைக் கப்படுகின்றன. ஆண்டு தோறும் சித்ரா பௌர்ணமியன்று இங்குசிறப்பாக திருவிழா நடைபெறும். பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அய்யனாருக்கு காவடி, பால்குடம், கரும்புத் தொட்டி எடுத்து வழிபடு வார்கள். அன்று அய்யனாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

எண்ணியவை ஈடேற 
அய்யனாரை வழிபடுங்கள்! - www.happy4all.org 

No comments:

Post a Comment