Monday, June 22, 2015

குற்றம் சொல்லுவது சிலரது பிறப்பிலேயே அமைந்த இயல்பு...!

நாம் செய்யாத குற்றம் குறைகளை ,
பிறர் நம் மீது சுமத்தும்போது ,
குமுறி கொந்தளிப்பது மனித இயல்பு...!
ஆனால் எவரையுமே எப்போதுமே குற்றம் சொல்லுவது சிலரது பிறப்பிலேயே அமைந்த இயல்பு...!
“நரம்பிலாத நாவால் எதையும் வரம்பில்லாமல் கூறிடுவார்
இருந்தால் வருவார் இழந்தால் பிரிவார்--நாளுக்கு நாள்தான் மாறிடுவார்
காய்த்த மரம்தான் கல்லடிபடுமென கண்கூடாய் நாம் பார்த்ததுண்டு
புத்தன் இயேசு காந்தியைக்கூட குற்றம் சொல்லி கேட்டதுண்டு..”
- இது எப்போதோ [ 1967 ]வாலி எழுதிய பாடல்...!
# புத்தன் இயேசு காந்தியை ...1967 – ல் மட்டும் அல்ல...இப்போதும் ...எப்போதும் குற்றம் சொல்வோர் இருக்கத்தான் செய்கிறார்கள்....!
# ‘தி டாவின்சி கோட்’ ... இது நாவலாகவும் , படமாகவும் பலத்த எதிர்ப்புகளுக்கிடையில் வந்தது...
‘தி டாவின்சி கோட்’ கதைப்படி , ஏசு கிறிஸ்து திருமணமானவர். அவருக்குக் குழந்தைகள் உண்டு.
ஏசுவுக்குப் பணிவிடை செய்த பாலியல் தொழிலாளியான மேரி மக்தலீன்தான் ஏசுவின் மனைவி என்றும் சொல்கிறது “தி டாவின்சி கோட்”..!
சரி..ஏசுவின் கதை இப்படி ..!
புத்தன் என்ன குற்றம் செய்தான்..?
- இதோ..மனதில் பதிந்த ஒரு பதிவு....
“குடும்பம் துறந்த
சித்தார்த்தன்
புத்தன் ஆனான்
நம்பி வந்த
யசோதரா
என்ன ஆனாள்?”
# ஆம்..தன்னை நம்பி வந்த மனைவியையும் , தனக்குப் பிறந்த மகனையும் ...நம்பிக் காத்திருந்த நாட்டை அரசாளும் கடமையையும் விட்டு விட்டு போதிமரம் தேடிப் போனது , புத்தன் செய்த குற்றம் எனப் பலர் கூறக் கேட்டிருக்கிறேன்..!
# சரி..காந்தி கதைக்கு வருவோம்...
சமீபத்தில்...உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, மகாத்மா காந்தி ஒரு பிரிட்டீஷ் ஏஜண்டாக இருந்தார் என்றும் , மதத்தை அரசியலில் புகுத்தி இந்தியாவிற்கு மிகபெரிய தீங்கை செய்து விட்டார் என்றும் குற்றம் சாட்டி இருக்கிறார்...!
# புத்தன் ,ஏசு, காந்திக்கே இந்தக் கதி என்றால்....?
சரி..எவருமே நம்மைக் குற்றம் , குறை சொல்லாமல் , எல்லோருக்கும் நல்லவனாக எப்படித்தான் வாழ்வது..?
இதற்கும் தனது பாடலில் பதில் சொல்கிறார் வாலி...
“ஐந்து விரல்களும் ஒன்றாயிருக்கும் மனிதன் உலகில் கிடைப்பானா?
அத்தனை பேர்க்கும் நல்லவனாக ஆண்டவன் கூட இருப்பானா ?
உலையின் வாயை மூடும் கைகள் ஊரின் வாயை மூடிடுமா?
அலைகள் ஓய்ந்து நீராடுவது ஆகக்கூடிய காரியமா?”
# காரணமில்லாமல் மற்றவர் உங்களை காயப்படுத்தும்போது ...
நீங்க காய்த்த மரம்னு நினைச்சுக்கிட்டு , கண்டினியூ பண்ணி போய்க்கிட்டே இருங்க ..!
“பைத்தியக்காரன் பத்தும் சொல்வான் போகட்டும் விட்டுவிடு
படைத்தவனிருப்பான் பார்த்துக்கொள்வான்
பயணத்தை தொடர்ந்து விடு--
நீ பயணத்தை தொடர்ந்துவிடு..”


John Durai Asir Chelliah's photo.

No comments:

Post a Comment