Thursday, June 25, 2015

சரியாக சாப்பிடவாவது தெரியுமா நமக்கு?

சரியாக சாப்பிடவாவது தெரியுமா நமக்கு? - www.v4all.org

ஒன்றுக்கும் உதவாதவனை 'அவன் சாப்பிடத்தான் லாயக்கு' என்று சொல்லுவோம் நாம், ஏதோ சாப்பிடுவது தான் உலகத்திலேயே எளிதான விஷயம் போல். ஆனால் சரியான முறையில் சாப்பிடிடுவது என்பது அப்படி ஒன்றும் எளிதான காரியமல்ல. எந்த உணவை, எந்த நேரத்தில், எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று நமக்கு முழுமையாகத் தெரியுமா?
சிலர் சாப்பிடுவதற்காகவே வாழ்வதாகத் தோன்றும். எப்பொழுதும் எதையாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள் இவர்கள். எதைக் கொடுத்தாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவதில் வல்லவர்கள் இவர்கள். அதிகம் சாப்பிடுவது தவறாகும். சரியாக சாப்பிடுவது எப்படி என்பதை ஒரு சிலரே உணர்ந்து உள்ளனர்.
தவறான உணவுப் பழக்கங்களால் தான் நோய்களே வருகின்றன. உணவே மருந்து என்பார்கள். சரியாக உணவு உண்ண தெரிந்து விட்டால் உங்களுக்கு நோயே வராது என்று உறுதியாக சொல்லலாம்.
சரியாக சாப்பிடும் முறைகள் யாவை? அவற்றைக் காண்போம்.
காலை உணவு மிகவும் முக்கியமான உணவு. அதை எதற்காகவும் விலக்கவேக் கூடாது.
இரவு அதிகம் சாப்பிடத் தேவை இல்லை.
தினமும் ஒரே நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பது ஒரு கட்டுக் கதை என்றே சொல்ல வேண்டும்.
உண்மையில் பசித்த நேரத்தில் மட்டுமே நாம் உணவு உட்கொள்ள வேண்டும்.
உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். அவசர அவசரமாக விழுங்கவேக் கூடாது.
சாப்பிடும் போது தண்ணீர் அருந்தக் கூடாது.
சாப்பிடுவதற்கு முன் அரை மணி நேரம் மற்றும் சாப்பிட்ட பின் அரை மணி நேரம் வரை தண்ணீர் குடிக்கக் கூடாது.
சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்து வெது வெதுப்பான தண்ணீர் அருந்துவது நல்லது.
காலையில் எழுந்ததும் முதல் உணவாக ஒரு தம்ளர் வெது வெதுப்பான தண்ணீர் குடிப்பது மிகவும் நல்லது. அல்லது வெது வெதுப்பான எலுமிச்சம்பழ ஜூஸ் குடிக்கலாம். காலையில் எழுந்ததும் 5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று சொல்லுவது தப்பான கருத்தாகும். தாகம் எடுக்கும் போது மட்டும் தண்ணீர் அருந்தினால் போதுமானது.
வயதாக, வயதாக உணவு அளவைக் குறைத்துக் கொள்ளுங்கள்.
சாப்பிடும் பொது தொலைக் காட்சியைப் பார்க்காதீர்கள்.
உணவை ரசித்து, ருசித்து சாப்பிடுங்கள்.
சாப்பிடும் பொது நல்ல மன நிலையில் இருக்க வேண்டும்.
இனி எந்த மாதிரியான உணவுகள் சாப்பிட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
இயற்கை உணவு (organic food) மிகவும் நல்லது.
காய்கறிகளும் பழங்களும் அதிகம் உணவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அசைவ உணவுகளைத் தவிருங்கள்.
துரித உணவைத் தொடாதீர்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவும் உடலுக்கு நல்லதல்ல.
மதுவை அளவுக்கதிகமாக குடிப்பது தீங்குகளை விளைவிக்கும். ஆனால் சிகப்பு ஒயின் அளவோடுக் குடித்தால் நல்லது. நமது வெப்ப நாட்டிற்கு அதுவும் கூடத் தேவை இல்லை என்றே சொல்ல வேண்டும்.
தேங்காய், வேர்க்கடலை, பசுவின் வெண்ணெய் மற்றும் நெய் இவற்றில் தீய கொழுப்பு இருப்பதாக கூறுவதும் பொய் தான்.
தேன், இஞ்சி, சாம்பர் வெங்காயம்,பூண்டு, மிளகு யாவற்றை தினமும் எடுத்துக் கொள்ளுங்கள். சிகப்பு மிளகாய் கெடுதல் அல்ல.
வெள்ளை சக்கரை (refined sugar) மிகவும் ஆபத்தானது.
கல் உப்பை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.
எல்லா சுவைகளும் உணவில் வருமாறு வாரம் முழுவதிலும் சாப்பிடுங்கள்.

இப்பொழுது சொல்லுங்கள். நமக்கு உண்மையில் சாப்பிடத் தெரியுமா?


வாசியை அறிந்தவன்'s photo.

No comments:

Post a Comment