வைணவ ஆச்சார்யர்களுள் மிக முக்கியமானவராகப் போற்றப்படக்கூடியவர் ஸ்ரீ ராமானுஜர். வைணவத்தை தமிழகத்தில் ஆழமாக பரப்பியவர்.
ஆண்டாளின் மீதும், அவளின் பாசுரங்களின் மீதும் பெரும் பக்தி கொண்டவர். "திருப்பாவை ஜீயர்" என்றே போற்றப்பட்டார். நூறு பெரிய அண்டாவில் வெண்ணெய்யும், அக்காரவடிசல் என்ற உணவையும் ஆண்டாளுக்கு படைத்தார்.
ஆண்டாள் தான் விரும்பியதை ராமானுஜர் தனக்கு படைத்ததை எண்ணி மகிழ்ந்தாள்.
ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்த ராமானுஜரை, ஆண்டாள் கருவறையில் இருந்து இறங்கி வந்து அன்புடன் அண்ணா என அழைத்தாள்.
அதைக்கண்டு திகைப்புற்ற ராமானுஜர், தாயே நான் உங்களை விட பல நூறு ஆண்டுகள் இளையவன் என்னை போய் அண்ணன் என்று தாங்கள் அழைப்பதா என்று வினவினார்.
அதற்கு பதிலளித்த ஆண்டாள் என் எண்ணத்தை நூறு பெரிய அண்டாக்கள் முழுக்க அக்காரவடிசல் நிவேதனம் செய்து நிறைவேற்றுபவர் யாராக இருக்க முடியும்? எனக்கு அண்ணன் என்று ஒருவர் இருந்திருந்தால் அவரை நிறைவேற்றச் சொல்லியிருப்பேன்.
அண்ணனோடு பிறக்கவில்லை. ஆனாலும், என் விருப்பத்தை அண்ணன் ஸ்தானத்தில் நின்று நிறைவேற்றியவர் தாங்கள் தான். ஆகையாலேயே அண்ணா என்று அழைக்கின்றேன் என்றாள். ராமானுஜர் இதை கேட்டு பூரித்து நின்றார்.
No comments:
Post a Comment