Friday, June 19, 2015

முகமது அலி - “பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ;தேனீயைப்போல கொட்டிவிடுங்கள் !”

முகமது அலி – சிறப்பு பகிர்வு
முகமது அலி!!!
சில மனிதர்களை பற்றி எழுதுகிற பொழுதே ஒரு சிலிர்ப்பு தோன்றும் . அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்தவர் முகமது அலி. காசியஸ் க்ளே என்கிற பெயரோடு பிறந்த இவர் பிறப்பால் அமெரிக்க ஆப்ரிக்கர்.
அப்பா பில் போர்டுகளுக்கு படம் வரைந்த கொண்டு இருந்த எளிய மனிதர்’க்ளேவாக குத்துச்சண்டை களத்துக்குள் புகுந்த இவர் அங்கே பெற்றதெல்லாம் வெற்றி வெற்றி தான்
தொடர்ந்து பல்வேறு வெற்றிகளை குவித்த இவர் ஒரே பஞ்ச்சில் எதிராளிகளை வீழ்த்திய வரலாறெல்லாம் உண்டு.
“பட்டாம்பூச்சியை போல மிதந்திடுங்கள் ;தேனீயைப்போல கொட்டிவிடுங்கள் !”       என்கிற அவரின் வாசகம் அமெரிக்கா முழுக்க எதிரொலித்தது.
“I’M THE GREATEST !” என்று அவர் சொன்ன பொழுது ரசிகர்களும் “ஆமாம் ! ஆமாம் “என்று கொண்டாடினார்கள்.
இரண்டுமுறை ஹெவி வெய்ட் சாம்பியனாக இருந்தவருக்கு ஒரு சோதனை வந்தது -சரியாக சொல்வதென்றால் பற்பல சோதனைகளின் உச்சகட்டம் எனலாம்.
இவர் ஒலிம்பிக்கில் தங்கபதக்கம் பெற்று வந்தவுடன் இனவெறி காரணமாக வரவேற்க கூட ஆளில்லை; நிறவெறி-வெய்ட்டர் கூட மதிக்கவில்லை. கடுப்போடு அந்த பதக்கத்தை
நதியில் வீசிவிட்டு நடந்தார்.
இஸ்லாமிய மதத்திற்கு மாறிய பின் கலந்துகொண்ட போட்டியில் அவரைமுகமது அலி
என அழைக்க எதிர் போட்டியாளர் மறுத்து விட்டார் ; கூட்டமும் ஏளனம் செய்தது. ஆனாலும்,உலக சாம்பியன் ஆனார்.
வியட்நாம் போரில் இளைஞர்களை ஈடுபட வைக்க அமெரிக்கா கட்டாய ராணுவ சேவையை கொண்டு வந்தது.
அதில் இவரையும் சேர சொன்னது,””எனக்கு வியட்நாமியர்களோடு எந்த சண்டையும் இல்லை. அவர்கள் யாரும் என்னை கருப்பன் என்று அழைத்தது இல்லை.
பத்தாயிரம் மைல்களை கடந்து வெள்ளையின முதலாளிகள் கருப்பு நிறம் கொண்ட மக்களை உலகம் முழுக்க ஆதிக்கம் செலுத்த கொலை,அப்பாவிகளை கொல்லுதல்,அவர்களை எரித்தல் ஆகியவற்றை என்னால் செய்ய முடியாது.
ஏன் நான் இவர்களை சொல்வதை கேட்டு சீருடை அணிந்து வியட்நாமின் அப்பாவி மக்கள் மீது குண்டுகள் மற்றும் தோட்டாக்களை ஏன் செலுத்த வேண்டும் ?
இங்கே என்னூரில் நீக்ரோ மக்கள் நாய்களை போல நடத்தப்பட்டு,மனித உரிமைகள் மறுக்கப்படுகிற பொழுது நான் ஏன் அங்கே போகவேண்டும் ?
இதுவே இந்த தீய அநியாயம் முடிவுக்கு வரவேண்டிய தருணம் மற்றும் காலம்” என இவர் சொன்னது பெரிய அலையை உண்டு பண்ணியது.
காத்திருந்த அமெரிக்க அரசு அவரை குத்துசண்டையில் கலந்து கொள்வதற்கான லைசன்சை நீக்கியது; மூன்று வருட வனவாசம்.
பின் பல்வேறு போராட்டத்துக்கு பின் மீண்டு வந்தால் தோல்வியே சந்திக்காத அவர் தோற்றுப்போனார். அவ்வளவு தான் என நாடே நகைத்தது.
அப்பொழுது தான் உலக சாம்பியன்ஷிப் வந்தது ,ஒரே ஒருவரை தவிர பதக்கம் இழந்து பலகாலம் கழித்து சாம்பியன்ஷிப்பை யாரும் வென்றது இல்லை.மூன்று வருட வனவாசம் வேறு.
ஆனாலும் வென்று காண்பித்தார் முகமது அலி ! அவர் தலையில் வாங்கிய அடிகள் அவரை முடக்கிபோட்டது -பர்கின்சன் சிண்ட்ரோம் அவரை
பாதித்து முடக்கிபோட்டது.ஆனாலும்,அவர் பல்வேறு நிதிதிரட்டல்கள் மூலம் எளியவர்களுக்கு உதவிவந்தார்.
அவருக்கு பண்ணிய அவமானங்களுக்கு பிரயசித்தமாக அவரை அட்லாண்டா ஒலிம்பிக் ஜோதியை ஏற்ற அனுமதித்தார்கள்.
“என் இடக்கை பார்கின்சன் சிண்ட்ரோமால் நடுங்குகிறது. வலது கை பயத்தால் நடுங்குகிறது இதற்கு நடுவே நான் ஜோதியை ஏற்றி விட்டேன் !”என்ற வரிகளுக்கு பின் தான் எவ்வளவு நம்பிக்கை.


No comments:

Post a Comment