Tuesday, June 30, 2015

திருமணத்தில் மொய் வைக்கும் வழக்கம் , மணமக்களுக்கு சொல்லும் வாழ்க்கைப் பாடம் .

“திருமணத்தில் மொய் வைக்கும் வழக்கம் , மணமக்களுக்கு சொல்லும் வாழ்க்கைப் பாடம் ...
அன்போ , வெறுப்போ - நீங்கள் எதை கொடுக்கிறீர்களோ .. அதைத் திரும்பப் பெறுவீர்கள்..”
# ஆம்...இதுதானே உலக வழக்கம்...!
பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்கிறார்களோ.....அதன் பிரதிபலிப்பாகத்தானே நாமும் நடந்து கொள்கிறோம்..!
எம்.ஜி.ஆரை மட்டுமே வைத்து 16 படங்களுக்கு மேல் எடுத்த சின்னப்ப தேவர் , சிவாஜியை வைத்து ஒரு படம் கூட எடுத்ததில்லை...
ஆனால் தேவருக்கான மணிவிழாவில் சிவாஜி ஆர்வத்துடன் கலந்து கொண்டு , மலர்மாலை சூட்டி , மலர்க்கிரீடம் வைத்து ...தன் மனப்பூர்வமான அன்பை வெளிப்படுத்துகிறார்...
என்ன ஒரு அபூர்வமான காட்சி...!
# இது போலவே சிவாஜியை மட்டுமே வைத்து படங்கள் எடுத்த தயாரிப்பாளர் – நடிகர் ஒருவர் இருந்தார்...
அவர்தான் கே.பாலாஜி...!
எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் கூட எடுக்காத கே.பாலாஜியை , ஒவ்வொரு வருடப் பிறப்பன்றும் தன் வீட்டுக்கு அழைத்து நூறு ரூபாய் அன்பளிப்பு வழங்குவது எம்.ஜி.ஆரின் வழக்கமாம்...!
# அன்போ , வெறுப்போ - பிறர் எதைக் கொடுத்தாலும் அன்பை மட்டுமே பிரதிபலிக்கும் குணம்...
அது ஆண்டவன் வாழும் - மனம்..!
# இன்னொரு நண்பரின் ஒரு வரி பதிவு , இப்போது என் உள்ளத்தில் உதிக்கிறது.....
“மொய் தேடும் உலகில் மெய் தேடும் சிலர்...!”

www.v4all.org
John Durai Asir Chelliah's photo.

No comments:

Post a Comment