Thursday, June 18, 2015

திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது

நம் ஒவ்வொருவருடைய ஆசையுமே நாம் தற்பொழுது இருக்கும் நிலையை விட மிகச் சிறப்பாகவும், நல்ல ஆரோக்கியம், செல்வ
நலத்துடன் வாழ வேண்டும் என்பதே. அதற்கு திருப்பட்டூர் தலத்து ஸ்ரீ பிரம்மாவை நேராக வந்து பார்த்தாலே போதும். நலம் பல வழங்கி
நல்வாழ்வு நல்குவர்.
ஸ்ரீ பிரம்மாவை வழிபாடு செய்ய உகந்த நாட்கள்
திங்கள், வியாழன், திருவாதிரை, புனர்பூசம், சதயம் மற்றும் நம்முடைய பிறந்த நட்சத்திரத்தன்று இவ்வாலயத்திற்கு வந்து வழிபாடு
செய்தல் சிறப்பு. தலையெழுத்தையே மாற்றுவார் என்பதால் சகலவிதமான சர்வ தோஷ பரிகாரத்தலமாகும்.
பரிகார முறை :
முதலில் இத்தலத்திற்கு வருகை தருதல் வேண்டும். பின்னர் ஈசன், பிரம்மன், அம்மன் ஆகியோரை தரிசித்து விட்டு, முப்பத்தி ஆறு
தீபமிட்டு ஒன்பது முறை வலம் வந்து வேண்டுதல் வேண்டும். ஒருவருடைய ஜாதகத்தை பிரம்மன் பாதத்தில் வைத்து வேண்டுதல்
செய்தல் அது அவ்வாறே நடக்கும் என்பது ஐதீகம். இவ்வாறு வேண்டி பலன்பெற்றோர் பல பேர் உள்ளனர்.
பொதுவான பரிகாரம் :
கணவன் மனைவி பிரிந்தவர் கூடுதல், துர்மரணம் ஏற்படாமல் இருக்க, வியாபாரத்தில் நஷ்டம் விலக, திருமணத்தடை, பிள்ளைகள்
இழப்பு, கல்வியில் பாதிப்பு, வறுமை, குழந்தை இன்மை, மனவியாதிகள், பூரண ஆயுள், என்ற நிலையில் உள்ளவர்கள் இத்தலத்து ஸ்ரீ
பிரம்மாவை நேருக்கு நேராக நின்று தரிசித்தாலே போதும் சகல தோஷங்களும் நீங்கி “திருபட்டூர் வந்தோம் திருப்பம் நிகழ்ந்தது “ என்ற
நல்ல மங்களகரமான நிலை அடையலாம்.


No comments:

Post a Comment