Wednesday, April 29, 2015

வேத வியாசர் நல்ல எண்ணங்களை பெறுவோம்

வேத வியாசர்
நல்ல எண்ணங்களை பெறுவோம் - www.v4all.org
பக்தி ஒளி இருக்கும் மனதில் அறியாமை என்னும் இருள் இருப்பதில்லை. பதவி சாதிக்க முடியாததைக் கூட பக்தியால் சாதிக்க முடியும்.
பிறருடைய குற்றங்குறைகளை மன்னிப்பவன் மனிதன். அதே சமயத்தில் பிறர் குறைகளை மறந்துவிடுபவன் தன்னை தெய்வநிலைக்கு உயர்த்திக் கொள்கிறான்.
பிற உயிர்களுக்குத் தீங்கு செய்யாமல் இருப்பதே உண்மையான விரதம். பிறருக்குத் தீமை செய்யாத எந்தத் தொழிலும் உயர்வானதாகும்.
பேராசை குணம் மக்களின் வாழ்க்கையை திசை திருப்பத் தொடங்கினால், அதன் பிடியில் சிக்கி தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொள்வர்.
கடவுளுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்ப கட்டம். ஞானம் முதிரும் போது பயம் அன்பாக மாறுகிறது. பூரண அன்பு நம் மனதில் பரிணமிக்கும் போது, பயம் முற்றிலுமாக நம்மை விட்டு நீங்கிவிடுகிறது.
நல்ல எண்ணங்கள் நல்ல மனிதனை உருவாக்குகின்றன. கெட்ட எண்ணங்கள் மனிதனையே அழித்து
விடுகின்றன.


உங்களின் பிரசாத்'s photo.

"ஹலால்" என்றால் என்ன?

"ஹலால்" என்றால் என்ன?
-------------------------------
நீண்ட நாள் எனக்குள் கேள்வி... இந்த முறை ஏற்றுமதி ஆர்டர் எடுக்க செல்லும்போது சகோ நிசார் அவர்களிடம் கேட்டேன். "ஹலால்" என்றால் என்ன?
அவர் கூறினார் கோழி ஆடு போன்றவற்றை ரெத்தம் இறங்கும் வரை வைத்து இருந்து பின்னர் சமைப்பது ஹலால் என்றார்.
ரெத்ததில் பல கிருமிகள் இருப்பதால் அவை மாமிசத்தின் உடலை விட்டு வடிந்த பிறகு சமைத்து உண்பதால் உடலுக்கு நன்மையாம்.
மற்ற நண்பர்களுக்கும் இந்த தகவலை ஷேர் செய்யுங்கள்...

your Happily
www.v4all.org 

Tuesday, April 28, 2015

ஆளுமைத் திறன்-தன்னம்பிக்கை-எண்ணங்கள்

ஆளுமைத் திறன்-தன்னம்பிக்கை-எண்ணங்கள் - www.v4all.org 


தன்னம்பிக்கை:


ஒவ்வொருவரின் வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் தன்னம்பிக்கை மிக அவசியம். தன்னம்பிக்கை வலுப்பெற தன்னை பற்றிய சுய பரிசோதனை முதலில் அவசியம்.



“நம்பிக்கை உள்ளவன் 50 தவறுகள் செய்கிறான், நம்பிக்கை இல்லாதவன் 5000 தவறுகள் செய்கிறான்.”


ஒரு மனிதனின் தன்னம்பிக்கை அவனது செயல்பாடுகளில் அவனுடைய ஆழ்ந்த ஈடுபாட்டை அதிகரிக்கும். தன்னம்பிக்கையோடு கூடிய சரியான செயல்முறை (Strategy) நிச்சயம் வெற்றி தரும்.



 ஆளுமைத் திறன்:


ஆளுமைத் திறன் என்பது ஒருவனுடைய சிந்தனையால் அல்லது செயலால் பிறரிடம் ஏற்படும் பாதிப்பை குறிக்கிறது.ஆழ்ந்த, தெளிவான மற்றும் கூர்மையான மனநிலை உள்ளவனின் ஆளுமை பிறரிடம் அதிகமான பதிப்பை ஏற்படுத்துகிறது தனிமனிதனின் ஆளுமைதிறன் அவன் வாழ்க்கையையே மாற்றி அமைக்கிறது. ஒட்டுமொத்த மக்களின் ஆளுமைதிறன் சமுதாயத்தையே மாற்றியமைக்கிறது.

“அனைத்து சக்திகளும் உன்னில் உள்ளன; உன்னால் எதையும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும்"




ஒருவனுடைய ஈர்ப்பும், ஏர்ப்பும் அவனுடைய ஆளுமைதிறனை பொறுத்தே அமைகிறது. பொதுவாக பலமான மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று பலம் பொருந்தியதாகவும், பலவீன மனநிலை உள்ளவனின் ஆளுமைதிறன் சற்று குறைந்தும் காணப்படுகிறது.

"தொடர்ச்சியான பழக்கம், சீரான சிந்தனை, ஆழ்ந்த மனநிலை, ஒருவனுடைய ஆளுமைதிறனை அதிகரிக்கிறது. இவை மற்றவரிடமிருந்து சற்று உயர்வான இடத்தில் வைக்கிறது."

இதில் நம்பிக்கை கொள்ளுங்கள், பலவீனன் என்று ஒருபோதும் நம்பாதீர்கள். எழுந்திருங்கள், உங்களுள் இருக்கும் தெய்வீகத்தன்மையை வெளிப்படுத்துங்கள்.
  




எண்ணங்கள்:





எண்ணங்களே வாழ்க்கையை அமைக்கின்றன. ஒவ்வொரு மனிதனின் எண்ணங்களே அவனது வாழ்க்கைக்கு காரணமாய் அமைகிறது.


நல்ல எண்ணங்கள், நல்ல சிந்தனைகள், நல்ல சூழ்நிலையை உருவாக்குகின்றன. தீய எண்ணங்கள், தீய சிந்தனைகள், தீய சூழ்நிலையை உருவாக்குகின்றன.

இந்த பிரபஞ்சம் முழுவதுமே எண்ண அலைகளால் சூழப்பட்டிருக்கிறது. 

ஒவ்வொரு மனிதனின் வாழ்கையும், சுற்றுப்புறமும், செயல்பாடுகளும் இந்த எண்ண அலைகளாலேயே  வழிநடத்தப்படுகிறது.நல்ல சிந்தனையை விதைக்கும் மனிதன் நல்ல எண்ண அலைகளால் ஈர்க்கப்படுகின்றான். 

அதே எண்ண அலைகள் கொண்ட மற்றவர்களும் அவன்பால் ஈர்க்கப்படுகிறார்கள். அதேபோல் தீய சிந்தனையை விதைக்கும் மனிதன் தீய எண்ண அலைகளால் ஈர்க்கப்படுகிறான்.

நல்ல எண்ணங்களை விதைப்போம், நல்ல சமுதாயத்தை உருவாக்குவோம்.

கொன்றை வேந்தன் (அவ்வையார் நூல்கள்)

கொன்றை வேந்தன் (அவ்வையார் நூல்கள்)


கடவுள் வாழ்த்து - கொன்றை வேந்தன் செல்வன் அடியினை என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.  நூல் உயிர் வருக்கம்

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று
3. இல் அறம் அல்லது நல் அறம் அன்று
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்
8. ஏவா மக்கள் மூவா மருந்து
9. ஐயம் புகினும் செய்வன செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்து இரு
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு ககர வருக்கம்
14. கற்பு எனப் படுவது சொல் திறம்பாமை
15. காவல் தானே பாவையர்க்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற
17. கீழோர் ஆயினும் தாழ உரை
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை
22. கைப் பொருள் தன்னில் மெய்ப் பொருள் கல்வி
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை சகர வருக்கம்
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்
31. சூதும் வாதும் வேதனை செய்யும்
32. செய்தவம் மறந்தால் கைத்தவம் ஆளும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
38. தாயிற் சிறந்து ஒரு கோயிலும் இல்லை
39. திரை கடல் ஓடியும் திரவியம் தேடு
40. தீராக் கோபம் போராய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும்
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது
47. தோழனோடும் ஏழைமை பேசேல் நகர வருக்கம்
48. நல் இணக்கம் அல்லது அல்லல் படுத்தும்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாவை
51. நீர் அகம் பொருந்திய ஊர் அகத்திரு
52. நுண்ணிய கருமமும் எண்ணித்துணி
53. நூன் முறை தெரிந்து சீலத்து ஒழுகு
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை
55. நேரா நோன்பு சீர் ஆகாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும்
63. புலையும் கொலையும் களவும் தவிர்
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்
67. பையச் சென்றால் வையம் தாங்கும்
68. பொல்லாங்கு என்பது எல்லாம் தவிர்
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல் மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை
72. மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு
77. மேழிச் செல்வம் கோழை படாது
78. மை விழியார் தம் மனை அகன்று ஒழுகு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்
80. மோனம் என்பது ஞான வரம்பு வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண்
82. வானம் சுருங்கில் தானம் சுருங்கும்
83. விருந்து இல்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை
88. வேந்தன் சீரின் ஆம் துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு
90. ஒத்த இடத்து நித்திரை கொள்
91. ஓதாதவர்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம்
கொன்றை வேந்தன் முற்றிற்று.

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்!

நல்ல குழந்தைகள் உருவாக 12 வழிமுறைகள்! = www.v4all.org


உறவினரது இல்லம்.., உறவினரோடு அவர் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அங்குள்ள சாப்பாட்டு மேஜையில் இருக்கும் தட்டை எடுத்து குழந்தை விளையாட ஆரம்பிக்கின்றது. அப்பொழுது தந்தைக்கும் குழந்தைக்கும் இடையே நடைபெறும் சிறு போராட்டம்..,

ஹேய்.. அதைத் தொடாதே..! என்று கூறி விட்டு தந்தை உறவினரோடு பேசிக் கொண்டிருப்பதில் மும்முரமாகி விடுகின்றார்.

பின்னர் சற்று நேரம் கழித்துப் பார்க்கின்றார்.., குழந்தை மீண்டும் அந்த தட்டுகளை கையில் எடுத்துக் கொள்கின்றது.., மறுபடியும்.., ஹேய் அதைத் தொடாதே.., எடுக்காதேன்னு சொல்றேன்ல..,

மீண்டும் தந்தை உறவினரோடு பேச்சைத் தொடர்கின்றார்.., சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்க்கின்றார்.., மீண்டும் அந்தக் குழந்தை அதையே தான் செய்து கொண்டிருக்கின்றது.

தந்தை அதனைப் பார்த்து எதுவுமே சொல்லாமல் மீண்டும் பேச்சில் மும்முரமாகி விடுகின்றார்.

இதுவே பல சந்தர்ப்பங்களில் நடைபெறக் கூடிய நிகழ்வுகள்..! குழந்தைகளுக்கு உத்தரவிட முடியும், அவர்கள் அதனைக் கேட்காத பொழுது, மீண்டும் அதே உத்தரவை இட்டுக் கொண்டே இராமல், குழந்தையைக் கண்டு கொள்ளாமல் இருந்து விட வேண்டும்.

இது மாதிரியான சூழ்நிலைகள் பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்?

சிலர் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிலர் அடிக்க வேண்டும், சிலர் அது குழந்தை தானே என்று விட்டு விட வேண்டும், குழந்தையிடம் அதிகம் எதிர்பார்க்க முடியாது என்றும் கூறுவார்கள்.

உண்மையில் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முயற்சி செய்ய வேண்டும், இதுவே சமூகத்;தின் எதிர்பார்ப்புமாகும்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கும், குணாதிசயங்கள் இருக்கும். இருப்பினும், குழந்தைகளை இப்படித் தான் நடத்த வேண்டும் என்ற பொதுவானதொரு வழிமுறை இருக்கின்றது. அதனைப் பின்பற்றினால் ஒழுக்கமுள்ள குழந்தைகளை உருவாக்க முடியும். நாம் நினைத்தமாதியெல்லாம் குழந்தைகளை வளர்த்து விட முடியாது. திட்டமிட்ட அடிப்படையில் அவர்களை வழிநடத்தும் பொழுது, நல்லபல விளைவுகள் ஏற்படும்.

1. இளமையில் கல்வி

இந்த வயதில் அதற்கு என்ன தெரியும் என்று அங்கலாய்ப்பவர்களைக் காண முடியும், ஆனால் குழந்தைகளில் இளமைப் பருவம் தான் அவைகள் கற்றுக் கொள்ளக் கூடிய நல்லதொரு பருவமாகும், அவர்களை நல்லதொரு வழித்தடத்தின் கீழ் பயணிப்பது எப்படி என்பதை பெற்றோர்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய தருணம், குழந்தைகளின் ஆரம்ப நாட்களாகும். ஒருமுறை அவர்களிடையே நல்லதொரு பண்பாட்டை பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி விட்டால், அது அவர்களது வாழ்நாள் முழுவதும் தொடரும், அதிலிருந்து அவர்கள் மாற மாட்டார்கள்.

2. கோபமான நிலையில் குழந்தைகளுக்கு உத்தரவிடாதீர்கள்

நீங்கள் உங்களது குழந்தையிடனோ அல்லது சாதாரணமாக எதற்காகவோ நீங்கள் கோபமான நிலையில் இருந்து கொண்டிருக்கின்றீர்கள். அப்பொழுது உங்களது குழந்தைகளைத் திருத்த நினைக்காதீர்கள். உங்களது குழந்தைக்கு நல்லதைத் தான் நாடுகின்றீர்கள். ஆனால் அதுவல்ல இப்போது பிரச்னை.., நீங்கள் எந்த நிலையில் அதனைச் சொல்கின்றீர்கள் என்பது தான் பிரச்னை. எனவே, கோபம் இல்லாத நிலையில் அதனைத் தொடருங்கள்.

3. பெற்றோர்கள் இணைந்து முடிவெடுத்துச் செயல்படுங்கள்

குழந்தைகளை எவ்வாறு நெறிப்படுத்துவது என்பது குறித்த திட்டத்தை குடும்பத்தலைவியும், தலைவனும் இணைந்து தீர்மானிக்க வேண்டும். அதனை இருவரும் இணைந்து நிறைவேற்றுவதற்கு திட்டமிடல் வேண்டும். ஒருவர் கறாராகவும், இன்னொருவர் இலகுவாகவும் நடந்து கொண்டால், இருவருக்கு மத்தியில் குழந்தைகள் விளையாட ஆரம்பித்து விடும். பெற்றோர்களில் கறாரானவர் மறுக்கின்ற பொழுது, அடுத்தவரிடம் சென்று அனுமதி கேட்க ஆரம்பித்து விடுவார்கள். இருவரும் ஒரு விசயத்தில் ஒத்த கருத்தில் இருந்தால் தான் குழந்தைகளை நெறிப்படுத்த முடியும். பெற்றோர்களில் ஒருவர் சம்மதித்து இன்னொருவர் சம்மதிக்கா விட்டால், பெற்றோரில் ஒருவரின் மீது குழந்தைகளுக்கு வெறுப்புணர்வு ஏற்படும். எனவே, இது விசயமாக நாங்கள் கலந்தோலசித்து முடிவு சொல்கின்றோம் என்று குழந்தைக்குக் கூறுங்கள். பின்னர், குழந்தைகள் இல்லாத சூழ்நிலைகளில் அந்த விவகாரத்தை கலந்தாலோசித்து முடிவெடுங்கள். குழந்தைகளை வைத்துக் கொண்டு கலந்தாலோசனையில் ஈடுபடாதீர்கள். எடுத்த முடிவில் இருவரும் உறுதியாக இருங்கள்.

4. உறுதியாக இருத்தல்

பெற்றோர்கள் தங்களது கொள்கைகளில் உறுதியைக் கடைபிடிக்க வேண்டும். அடிக்கடி சட்ட திட்டங்களை மற்றும் எதிர்பார்ப்புகளை மாற்றிக் கொள்வது குழந்தைகளை குழப்பத்தில் ஆழ்த்தி விடும். உதாரணமாக, சுவரில் எழுதிக் கொண்டிருக்கின்ற குழந்தையை இன்றைக்கு தடுப்பது, நாளைக்கு தடுக்காது எழுதட்டும் என அனுமதிப்பது, இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இனிவரும் நாளில் நாம் சுவற்றில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பார்களா, கோபப்படுவார்களா என்ற புரிந்துணர்வின்மை குழந்தைகளிடத்தில் தோன்றி விடும். உங்களது மனநிலைக்குத் தக்கவாறு உங்களது சட்ட திட்டங்களையும் மாற்றிக் கொள்வது நல்லதல்ல. இவ்வாறான நிலையில், எந்தக் காரியத்தையேனும் குழந்தை செய்ய ஆரம்பிக்கும் பொழுது, நீங்கள் அதனை அனுமதிப்பீர்களா மாட்டீர்களா, அதனால் கோபமடைவீர்களா என்று உங்களைப் பரிசோதனை செய்ய ஆரம்பித்து விடும். எனவே தான் கூறுகின்றோம்.., குழந்தைகளை ஒரு விசயத்தின் மீது அதனைச் செய்யாதே என்று தடுத்தால், அந்தத் தடை எப்பொழுதும் நீடிக்க வேண்டும். அப்பொழுது தான் ஓ.., இதைச் செய்வது நல்லதல்ல என்று அந்தக் குழந்தை உடனே கற்றுக் கொள்ளும்.

அப்படியென்றால் சமய சந்தர்ப்பங்களுக்குத் தக்கவாறு நம்மை மாற்றிக் கொள்ளக் கூடாதா என்றால், மாற்றிக் கொள்ளலாம்.., நீங்கள் ஏன் முதலில் அனுமதி மறுத்தீர்கள்.., பின்னர் இப்பொழுது ஏன் நீங்கள் அனுமதிக்கின்றீர்கள் என்பது குறித்து அந்தக் குழந்தைக்கு விளக்கம் அளிக்க வேண்டியது அவசியமாகும். இன்னும் அதனை அதன் ஆரம்ப கட்டத்திலேயே விளக்கி விடுவது புரிந்துணர்வுக்கு நல்லதாகும். பெற்றோர்களிடம் உறுதி இல்லை என்றால், அதுவே குழந்தைகளின் கட்டுப்பாடின்மைக்கான ஆணி வேராகும்.

5. குழந்தைகளிடம் பொய் பேசாதீர்கள்

பிள்ளைகளிடம் தப்பிப்பதற்காக வாய்ப்பாக பொய்யைப் பேசாதீர்கள், அவர்களிடம் வழங்கக் கூடிய வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள். நீங்கள் அடிக்கடி பொய் பேசக் கூடிய பெற்றோராக இருந்தால்.., அவர்கள் உங்களது வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்க மாட்டார்கள், நீங்கள் உண்மையையே பேசினாலும் கூட அவர்கள் நம்ப மாட்டார்கள்.

உதாரணமாக, உயரமான அலமாரியில் உள்ள பொருள் ஒன்றை உங்களது குழந்தை எடுத்துக் கொண்டிருக்கின்றது. அதனை முறையாக எடுக்க அதனால் இயலாது.., எனும் பொழுது சற்று பொறு.. இதோ என்னுடைய வேலைகளை முடித்து விட்டு வந்து எடுத்துத் தருகின்றேன் என்று நீங்கள் கூறுகின்றீர்கள். அவ்வாறு கூறி விட்டால் நீங்கள் உங்களது வேலைகளை உடனே முடித்துக் கொண்டு உங்களது குழந்தைக்கு உதவுங்கள்.

மறக்க வேண்டாம்..! நீங்கள் கூறியதை நிறைவேற்ற வேண்டும். அவ்வாறில்லை என்றால் அந்தக் குழந்தை மீண்டும் அலமாரியில் உள்ள பொருளை எடுக்க முனையும். அதனால் இயலாத நிலையில், பொருட்கள் தவறிக் கீழே விழுந்த பின்பு அந்தக் குழந்தையை கோபித்துப் பயன் என்ன? ஒன்று, அதனை இப்பொழுது எடுக்க இயலாது. மற்ற வேலைகளைப் பாருங்கள், பின்பு எடுத்துக் கொள்ளலாம் என்று நீங்கள் கூறி இருந்தால், அந்தக் குழந்தை தன்னுடைய முயற்சியைக் கைவிட்டு விட்டு வேறு வேலையின் பக்கம் தனது கவனத்தைத் திருப்பி இருக்கும். ஆனால், சற்று பொறு.., என்று நீங்கள் கூறிய பின்பு.. சற்றுக் காத்திருந்து விட்டு நீங்கள் வரததால் அந்தக் குழந்தை முயற்சி செய்து பார்த்திருக்கின்றது.

தவறு உங்கள் மீது.., குழந்தையின் மீதல்ல. நீங்கள் அடிக்கடி இப்படி நடந்து கொள்பவர் என்றால் பின்பு நீங்கள் சீரியஸாக எதனைச் சொன்னாலும், அதனை ஒரு பொருட்டாகவே குழந்தை எடுத்துக் கொள்ளாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

பின்பு ஒரு காரியத்தைச் செய்ய ஆரம்பிக்கும் பொழுது உங்களது குணம் எவ்வாறு மாறும், கோபிப்பீர்களா, மாட்டீர்களா என்று உங்களையே பரிசோதிக்க ஆரம்பித்து விடும்.

6. அடம் பிடித்து அழுகின்றதா.., விட்டு விடுங்கள்

குழந்தை அடம் பிடித்து அழுகின்றதா.., அவை எதையோ உங்களிடம் எதிர்பார்க்கின்றன..! அவ்வாறு அழும் குழந்தையின் அழுகையை நிறுத்துவதற்கு எதையும் கொடுத்து சமாதானப்படுத்தாதீர்கள். பின்னர் ஒவ்வொரு முறையும் அது விரும்புவதைப் பெறுவதற்கு அழ ஆரம்பித்து விடும். அழகையின் மூலமாக எதனையும் பெற முடியாது என்பதனை அது அறிந்து கொள்ள வேண்டும். எவ்வளவு தான் அழுதாலும்.. சரியே.., விட்டு விடுங்கள்.

அழத் தொடங்கி விட்டால் அனர்த்தம் தான் என்கிறீர்களா.., பொறுமை மிகவும் அவசியம். எப்பொழுது அந்தக் குழந்தை அழுகையினால் எதையும் சாதிக்க முடியாது என்பதைக் கற்றுக் கொண்டு விட்டதோ, வாழ்வே சந்தோஷம் தான். சில நாள் பொறுமை.., வாழ்வே இனிமை. தேர்வு உங்களது கையில்..!

7. தவறிழைத்தால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுங்கள்

தவறிழைக்கக் கூடியது மனிதனின் சுபாவம். தவறிழைப்பவர்கள் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளையுமாகும், அது சக மனிதனுக்குச் செய்யக் கூடிய தவறாக இருப்பினும் சரி.., அல்லது இறைவனுக்கு மாறு செய்யக் கூடிய பாவங்களாக இருந்தாலும் சரியே..! மன்னிப்புக் கோர வேண்டும் என்பதை குழந்தைகள் கற்றுக் கொள்ளும் பொழுது, தவறிழைக்க நேரும் பொழுது மன்னிப்புக் கோர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடம் மிகுந்து காணப்படும்.

8. மன்னித்து விடுங்கள்

குழந்தை தவறு செய்து விட்டது, அதனை உணர்ந்து தனது தவறுக்காக வருத்தம் தெரிவிக்கின்றது, உடனே அதனை மன்னித்து மறந்து விடுங்கள், மன்னித்து விட்டேன் என்பதை நேரடியாகவே குழந்தையிடம் சொல்லுங்கள், நீங்கள் செய்யும் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதில்லையா.., அதனைப் போல தவறிழைத்த குழந்தை மன்னிப்புக் கேட்பதே அது சரியான பாதையில் பயணிக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் மன்னிப்போனாக இருக்கின்றான், மன்னிப்பை விரும்புகின்றான்.., எனவே நீங்களும் குழந்தை செய்யும் தவறுகளுக்காக உடனே பிரம்பைத் தூக்காதீர்கள். அவர்கள் மன்னிப்புக் கோரினால் மன்னித்து விடுங்கள், இன்னும் நான் உன்னை மிகவும் நேசிக்கின்றேன் என்பதை அடிக்கடி அவர்களிடம் கூறி வாருங்கள், அது உங்களது உள்ளத்தில் இருந்து வர வேண்டும். இதன் காரணமாக பெற்றோர் பிள்ளைகள் உறவு மேலும் வலுவடையும்.

9. உங்களது தவறுக்கும் மன்னிப்புக் கோருங்கள்

நீங்கள் தவறிழைத்து விட்டீர்கள், நான் பெற்றவன், பிள்ளைகளிடம் எப்படி மன்னிப்புக் கேட்பது என்று இறுமாப்புக் கொள்ளாதீர்கள். தவறிழைக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் சரியே.., நம்முடைய குழந்தையாக இருந்தாலும் சரியே.., மன்னிப்புக் கோருங்கள், அதுவே நீதிக்குச் சாட்சியம் பகர்வதாகும். அவ்வாறு நீங்கள் மன்னிப்புக்கோரவில்லை என்றால், அதுவே அடக்குமுறையின் ஆரம்பமாகும்.

10. இளமையிலேயே இறைநம்பிக்கை அறிமுகப்படுத்துங்கள்

சிறுபிராயத்திலிருந்து அவர்களுக்கு இறைநம்பிக்கைமற்றும் மார்க்க அறிஞர்கள், மாபெரும் தலைவர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லி வாருங்கள். அது போன்றதொரு உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்துங்கள்.

11. நல்லொழுக்கங்களைக் கற்றுக் கொடுங்கள்

உங்களது குழந்தைகளுக்கு நல்லொழுக்க போதனைகள் அவசியம். ஒழுக்கம் சார்ந்த இஸ்லாமிய நூல்கள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றினை அவர்களுக்கு பரிசளியுங்கள்.

இப்பொழுது பள்ளி ஆண்டு விழாக்கள் என்று கூறிக் கொண்டு சினிமாப் பாடல்களுக்கு ஆடும் கலாச்சாரத்தைப் பள்ளிக் கூடங்களில் கற்றுக் கொடுக்கின்றார்கள். சினிமாக்களில் கதாநாயகனும், கதாநாயகியும் கட்டிப்பிடித்து ஆடிப்பாடும் அசிங்கமான அங்க அசைவுகளை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்து, இவ்வாறான விழாக்களில் ஆட வைத்து பெற்றவர்களும், மற்றவர்களும் ரசிக்கின்றார்கள்.

இதனை முஸ்லிம் பெற்றோர்கள் ஊக்கப்படுத்தக் கூடாது. அவ்வாறான போட்டிகள் தவிர்த்து ஏனைய கட்டுரைப் போட்டிகள், பேச்சுப் போட்டிகள் போன்றவற்றில் கலந்து கொள்ள ஊக்கப்படுத்துங்கள்.

12. கீழ்ப்படிதல்

பெற்றோர்களுக்குக் கீழ்படிதல் என்பது இறைவன் குழந்தைகள் மீது கடமையாக்கியதொன்று. தாயும், தந்தையும் இணைந்து இதற்கான பயிற்சியை வழங்க வேண்டும். ஆனால் குடும்பங்களில் நடப்பது வேறு..!

தந்தையை கரடி போல பிள்ளைகளிடம் அறிமுகப்படுத்துவது.., அதாவது.., அப்பா வரட்டும்.., உன்னை என்ன செய்கிறேன் பார்.. என்று பிள்ளைகளை மிரட்டுவது தாய்மார்களது வாடிக்கை. இது தவறான வழிமுறை..!

முதலாவது, எப்பொழுது குழந்தை கீழ்ப்படியாமையைக் காட்டுகின்றதோ அப்பொழுதே கீழ்ப்படிவது எப்படி என்பதைக் கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தாமதப்படுத்தக் கூடாது. தாமதப்படுத்தும் பொழுது ஒன்று அந்த சம்பவத்தையே குழந்தை மறந்திருக்கும் நிலையில், அவர்களைத் தண்டிக்கும் பொழுது தான் எதற்காக தண்டிக்கப்படுகின்றோம் என்பது அதற்கு விளங்காது.

இரண்டாவது, அந்தத் தவறை நிவர்த்தி செய்வதற்கான சந்தர்ப்பம் அதற்குக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், குழந்தையும் தவறை உணர்ந்து திருந்தியிருக்கும், குழந்தையைத் திருத்துவதற்கு தந்தை தான் வர வேண்டும் என்று தாய் காத்திருக்க வேண்டியதில்லை. இதன் மூலம் தாயோ அல்லது தந்தையோ குழந்தையின் தவறைத் திருத்த முனையும் பொழுது, இருவரது சொல்லுக்கும் அது கட்டுப்பட்டு நடக்கும் பழக்கம் அதனிடம் ஏற்படும்.

மூன்றாவதாக, பெற்றோர்களில் யாராவது ஒருவர் தான் குழந்தையின் தவறைக் கண்டிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பவர் என்ற நிலை வளர்ந்தால், தவறைக் கண்டிக்கும் பெற்றோரை குழந்தைகள் நேசிப்பதில்லை, மாறாக கண்டிக்கும் தாயையோ அல்லது தந்தையையோ அவர்கள் வில்லனாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இதுவும் கூட குழந்தைகளிடம் கீழ்படியாமை வளர்வதற்குக் காரணமாகி விடும். பெற்றோர்களில் இருவரது சொல்லுக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற நிலை அவர்களிடம் உருவாகாது. பெரும்பாலான குடும்பங்களில் இது போன்ற தவறுகள் தான் நிகழ்கின்றன. இது தவிர்க்கப்பட வேண்டும்.

நோய் தீர்க்கும் நெய்.

நோய் தீர்க்கும் நெய்.

Add caption

சென்ற புத்தக கண் காட்சியில் எனது நண்பர் யுக பாரதியை சந்தித்தேன். அப்பொழுது நண்பர் யுக பாரதி அவர்கள் கூறினார். நெய் இல்லா உண்டி பாழ். நீர் இல்லா நெற்றி பாழ் என்று ஔவ்வையார் சொல்லியிருக்காங்க. நீர் இல்லா நெற்றி பாழ் என்பதை வேண்டுமானால் ஏற்று கொள்ளலாம். என் போன்ற பருமனான ஆசாமிகள் நெய் எடுத்து கொண்டால் ஆரோக்கியம் பாழ் என்றார். நான் அவரிடம் கூறினேன். அய்யா. நீர் இல்லா நெற்றி பாழ் என்பது வேண்டுமானால் அனைவருக்கும் பொருந்தாத ஒன்றாக இருக்கலாம். ஹிந்துக்களிலேயே வைஷ்ணவர்களில் பெரும்பாலானோர் திருநீர் இட்டு கொள்ளாதவர்கள் இருக்கிறார்கள். ஆனால் நெய் என்பது மத சின்னம் அல்ல. அது ஒரு அரு மருந்து என்று சொல்லி அங்கே நெய் புராணம் கூற ஆரம்பித்தேன். அடியேனது நெய் புராணத்திற்கு இயற்க்கை விஞ்ஞானி நம்மாழ்வார், டாக்ட்டர் அப்துல் ரஹீம், ஹீலர் பாஸ்கர் போன்றோர்களின் நூல்கள் உதவி புரிந்தன. 
1] உடலில் உள்ள கெட்டச் சத்துக்களை வெளியேற்றுகிறது,
2] கண் நிரம்புகளை பலப்படுத்துகிறது.
3] தசைகளை வலுப்படுத்துகிறது
4] நெய்யில் உள்ள விட்டமின் A, D, E,, K ஆகியவை உடலில் ரத்தத்ததை சுத்தப்படுத்தி ரத்த சுழற்சியை மேம்படுத்தும் மேன்மையான பணியை செய்கிறது.
5] வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
6] நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
7] சர்ம பளபளப்பை தருகிறது.
8] அல்சர் நோய்க்கு நெய் மிக சிறந்த மருந்து.
9] நெய்யில் Saturated fat – 65%
Mono – Un Saturated fat – 32%
Linoleic – Un Saturated fat -3% உள்ளது.
10] சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் இரண்டிலுமே நெய் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறது.
11] அரபு தேசங்களை இஸ்லாமின் கீழ் ஒரே ஆட்சிக்கு அடிகோலிய ஹசரத் முகம்மது அவர்கள், பசுவின் பால் ஒரு மருந்து; அதன் நெய் அமிர்தம்; அதன் மாமிசம் ஒரு நோய்”
நெய் என்பது பாலின் தரத்தைப் பொறுத்து இருக்கிறது. கலப்படம் இல்லாத பால் ஒரு சாத்வீகமான, உடலுக்கும் மனதுக்கும் அமைதியைக் கொடுக்கும் உணவு.
ஆனால் தற்சமயம், நமக்குக் கிடைக்கும் பால் பரிசுத்தமானதா என்பது ஒரு கேள்விக் குறிதான். பால் அதிகம் கறக்க வேண்டும் என்று பசு மாடுகளுக்கு ஹார்மோன் ஊசிகள் போடுகிறார்கள். கால்நடை தீவனங்கள் ரசாயனக் கலவைகளால் ஆரோக்கியமானவையாக இருப்பதில்லை. இதனால் கறவை மாடுகளும் அவற்றின் பாலும் மிகவும் பாதிக்கபடுகின்றன.
நல்ல சுத்தமான பாலிலிருந்து தயாரிக்கப்பட்ட தயிர், மோர், நெய் முதலியவை நம் உடலுக்கு போஷாக்கைக் கொடுப்பதுடன் வியாதிகளைப் போக்கும் உணவுப் பொருட்களாகவும் இருக்கின்றன.
சுத்தமான நெய் எனப்படுவது வீட்டிலேயே காய்ச்சப்படும் நெய்.
வெண்ணெயைக் காய்ச்சும் போது, அதிலிருந்து நம் உடலுக்குத் தேவையான நல்ல பாக்டீரியாக்களை ஊக்குவிக்கும் என்சைம்கள் வெளிப்படுகின்றன.
அனைத்தையும் பொறுமையாக கேட்ட எனது நண்பர். அவருடைய குடும்ப டாக்ட்டர். நீங்கள் குண்டாக இருப்பதால் நெய்யை தவிர்க்க வேண்டும் என்று சொல்லியும் அவர் அப்பப்ப நெய் சேர்த்தார். அதனால் அவருக்கு ஒன்றும் ஆகவில்லை. அவருக்கு மிகவும் பிடித்த அவரின் ரோல் மாடலாக இருக்கும் ஒரு எழுத்தாளர். அவர் ஆரோக்கியம் பற்றி எழுதிய தனது புத்தகத்தில் நெய் சாப்பிட்டால் ரத்த குழாய்களில் கொழுப்பு படியும் என்று தனது நூலில் பயமுறுத்தி இருக்கிறார். அதை படித்ததில் இருந்து நண்பர் யுக பாரதிக்கு நெய் என்றால் பயம், வெண்ணை என்றால் பயம், தயிர் என்றால் பயம், பால் என்றாலும் பயம். நான் எனது நண்பருக்கு அது சம்பந்தமாக விளக்கம் கொடுத்தேன்.
நெய்யில் உள்ள வைட்டமின் K2 ரத்தக்குழாய்களில் கொழுப்பு படிவதை தடுக்கிறது. எனவே இதையத்திற்க்கு சிறந்தது என்றேன். மேலும் உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் இந்த நெய்யை வெய்த்து பூச்சாண்டி, பயாஸ்கோப் காட்டும் ஆங்கில மருத்துவர்களிடம் மூன்று கேள்விகளை கேளுங்கள்.
question Number 1. வைட்டமின் K2 வின் பணி என்ன. அதற்க்கு அந்த டாக்டர் விளக்கம் கொடுத்த பின்.
question Number 2. நெய்யில் வைட்டமின் K2 இருக்கிறதா, இல்லையா. இல்லை என்று பொய் சொல்ல டாக்டர்ரால் முடியாது. வேறு வழியில்லை. இருக்குனு தான் சொல்வார்.
question Number 3. நெய்யை தினமும் அரை ஸ்பூந், ஒரு ஸ்பூந் சாப்பாட்டுல சேர்த்து கொண்டால் அது உடலுக்கு நல்லதா. கெட்டதா.
ஆங்கில டாக்ட்டர்????...
நீங்க 3ர்ட் question ன first question னா கேட்டால் அந்த டாக்ட்டரிடம் இருந்து வரும் பதில் நோ. அவ்வாறு கேட்காமல் நான் கேட்பதை போல் கேட்டால். அந்த ஆங்கில டாக்ட்டர். அது வந்து. லிமிட்டா நெய் சாப்பிட்டா அது ஒன்னும் பெரிசா பண்ணாது தான். அப்டினு பதில் சொல்லுவாரு.
மேலும் எனது நண்பர் யுக பாரதியிடம் அதே டாக்ட்டர் ஹார்ட் அட்டாக் வராமல் இருக்க அசைவ உணவுகளை தவிர்க்குமாறும் நிச்சயம் கூறியிருப்பார். அசைவ பிரியரான நீங்கள் அதை கேட்டீர்களா.
யுக பாரதி- இல்லை.
ஒரு ஸ்பூந் நெய்யில் 14 கிராம் கொழுப்பு தான் உள்ளது. நீங்கள் சாப்பிடும் ஆடு, நண்டு, இறால், வஞ்சரம், கோழி இவற்றில் இருப்பதை விட அதிகமாகவா நெய்யில் கொழுப்பு இருக்கிறது. உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க. என்றேன். அவர் வாயிலிருந்து, இதையத்தில் இருந்து இல்லை என்று பதில் வந்தது. மேலும் அவர் இனி தினமும் மத்திய உணவில் ஒரு ஸ்பூந் நெய் சேர்த்து கொள்கிறேன் என்றும் அசைவ உணவை சற்று குறைத்து கொள்கிறேன் என்றும் சொன்னார்.
நான் அவரிடம் நிறைவாக. நீங்கள் அசைவம் சாப்பிடுவதும், சாப்பிடாததும் உங்கள் விருப்பம். ஆனால் நீங்கள் எந்த உணவை சாப்பிடுவதாக இருந்தாலும் அதை விருப்பத்தோடு, மகிழ்வோடு உன்ன வேண்டும். அப்பொழுது தான் அந்த உணவு செரிக்கும். நீங்கள் உண்ணும் உணவிற்க்கு தகுந்த வேலையை உடம்பிற்கு கொடுக்க வேண்டும். நீங்கள் எந்த எழுத்தாளரின் நூலை படித்தீர்களோ அதே எழுத்தாளரின் நூலை நானும் படித்தேன். அதன் பிறகு எனக்கு உடற் பயிற்சியின் மீது இருந்த காதல் அதிகரித்து விட்டது. நீங்களோ அவர் அதில் கூறிய நல்ல விசயங்கள் அனைத்தையும் விட்டு விட்டீர்கள். நெய் சமாச்சாரத்தை மட்டும் மிக கெட்டியாக பிடித்து கொண்டு விட்டீர்கள். நாளையிலிருந்து உடற் பயிற்ச்சி செய்ய ஆரம்பியுங்கள். இந்த புத்தக கண் காட்சியில் அனைத்து ஸ்டால்களிலும் நீங்கள் நடப்பதிலிருந்தே உங்கள் உடற் பயிற்ச்சி ஆரம்பம் ஆவதாக நினைத்து கொள்ளுங்கள் என்று கூறி விடை பெற்றேன்.

வயிறு வலி நிரந்தரமாக தீர அற்ப்புதமான வழிகள்.

வயிறு வலி நிரந்தரமாக தீர அற்ப்புதமான வழிகள்.


குழந்தைகளுக்கு மட்டும் தான்  வயிற்றில் அடிக்கடி  பூச்சி  சேரும் என்று இல்லை. இது பல பெரியவர்களுக்கும் இருக்கும் பிரச்சனை. எத்தனை  பெரியவர்கள். நமது கண் முன்னே தினம், தினம் வயிற்று  வலியால்  அவதிப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.  பொதுவாக. நாம் அனைவருக்குமே. என்றாவது ஒருநாள். தலை வலி, வயிற்று  வலி இரண்டுமே வந்து இருக்கும். சிலருக்கு. தலை வலி, வயிற்று  வலி. நிரந்தரமாக இருக்கும். தலை வலிக்கான தீர்வை. சென்ற 11 அன்று செய்த பதிவில் பார்த்தோம். இன்று வயிற்று  வலிக்கான தீர்வை பாப்போம்.

 வயிற்று  வலி வர.  18இற்கும் மேற்பட்ட காரணங்கள்.  அதில் ஒன்றான  Food Alergy.  இது அடிக்கடி  நாம் அனைவர்க்கும் நடக்கும் ஒன்று.  நிரந்தரமாக சிலருக்கு  வயிற்று   வலி வர நான்கு   வைரஸ் கிருமிகள்  மிக முக்கியமான காரணம். அவை.


1]  RotaVirus
3] NoroVirus
4] AdenoVirus
5] AstroVirus.

ஆகிய நான்கு  வைரஸ் கிருமிகள்.நிரந்தர வயிற்று வலிக்கு  நிரந்தரமான காரணங்கள். மற்றும் வாயு தொல்லை, சிறு நீரகத்தில் ஏற்ப்படும் பிரச்சனை. இதை  தவிர்த்து.  Endometriosis  எனப்படும் நோயால் ஏற்ப்படும் வயிறு  வலி. பெண்களுக்கு மட்டுமே வரும். அது ஏன்? எதனால்? நாளை பாப்போம். இன்று. நிரந்தர வயிற்று  வலிக்கான நிரந்தர தீர்வை பாப்போம்.

அறுசுவைகளில் கசப்பும் ஒன்று. நாம் வாரத்தில் ஒரு நாளாவது  வேப்பம்பூ ரசம், பாகற்காய் சேர்த்து கொள்ள வேண்டும். நிறைய வெல்லம்  சேர்த்து பக்குவமாக வறுத்தால். பாகற்காய் கசக்காது. வேப்பம்பூ ரசம். அது சாப்பிடும் படி சுவையாக தான்  இருக்கும். ஒருமுறை சாப்பிட்டு தான்  பாருங்களேன். வயிற்று  வலியை  ஏற்படுத்தும்  ஐந்து கிருமிகளுக்கும்  வேப்பிலை எமன். சென்ற 17 அன்று. புற்று நோய்க்கான தீர்வாக. தொடர்ந்து 48 நாட்கள் செம்பு பாத்திரத்தில் துளசியை எட்டு மணி நேரம் ஊர போட்டு. வெறும் வயிற்றில் குடித்து வந்தால் புற்று நோய் பூரணமாக குணம் ஆகும். மேலும். 448 வித நோய்கள்  குணம் ஆகும் என்பதை  பார்த்தோம் அல்லவா. அந்த 448இல் வயிறு சம்பந்தபட்ட அணைத்து கோளாறுகளும் அடங்கும்.

 எலுமிச்சை சாறு. துளசி சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து. தினமும்  குடிப்பது. வயிற்றில் உள்ள அசுத்தங்களை சுத்தபடுத்தும். அது மட்டும் இல்லாமல். உடலில் ஜீரன சக்தியை அதிகரிக்கும். வாயு தொல்லை, அதனால் வரும் வயிறு வலி தொல்லை. இதனால் நீங்கும்,. மேலும். இது உடலில்  உள்ள நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்கும்.  நமது உடலை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும். அகத்திகீரை, மனத்தக்காளி  கீரை. இரண்டும்.  வயிறு வலிக்கு  சிறந்த உணவு. இவை  சற்று கசப்பாக தான்  இருக்கும். இதோடு. தேங்காய், வெல்லம்  இரண்டையும் சேர்த்து சமைப்பது. இதன் மருத்துவ குணம், சுவை இரண்டையும் கூட்டும். வெந்தயம், ஜீரகம், பெருங்காயம் மூன்றையும்  மோரில் கலந்து குடித்து வருதல். infection  னால்  வயிறுக்கு ஏற்ப்படும் பாதிப்புகளுக்கு சிறந்தது.

  மிக முக்கியமாக. வேப்பிலை, பாகற்காய்.இரண்டும்.  வயிறு வலி, வயிற்று  புழுக்கள், வயிறு அசுத்தம் அடைவதால் வரும் நோய்கள், வயிறு வலிக்கு காரணமாக இருக்கும் நான்கு  வைரஸ்கள். முதலியவற்றிற்கு எமன்கள்.  தாமிர பாத்திர துளசி நீரோ. அணைத்து வியாதிகளுக்குமே எமன்.

தேங்காய் பூலோகத்தின் கற்பக விருட்சம்

தேங்காய் பூலோகத்தின் கற்பக விருட்சம்




தேங்காய் சமையலில் சேர்த்து கொள்ளவே கூடாது என்னும் தேங்காய் மடையர்களின் சொல்லை பொருட்படுத்தாமல் தினமும் சமையலில் தேங்காய் சேர்த்து அதன் மூலம் பள, பள தோலுடன் தள, தளவென்று இளமையாக இருக்கும் மலையாள மக்களுக்கு நான் இந்த பதிவை சமர்பிக்கிறேன். நேற்று நெய் புராணம் பார்த்தோம். இன்று தேங்காய் புராணம் பார்ப்போம்.
சக்கரை வியாதி உள்ளவர்கள் தேங்காய் சேர்த்து கொள்ள கூடாது என்பது சரி தான். ஆனால் சிறு குழந்தைகளுக்கு கூட தேங்காய்யை கண்ணில் காட்ட கூடாது என்று சொல்பவர்களை தான் நான் தேங்காய் மடையர்கள் என்று குறிப்பிட்டேன். பீட்ரூட், கேரட்டில் கூட சக்கரை உள்ளது. ஆங்கில மருத்துவ உலகினருக்கு தேங்காய் மீது மட்டும் why this கொலவெறி.
மனித உடலில் 13 Vitamins. Minerals and Trace Elements 14 இருக்கும். இவற்றில் ஏதேனும் ஒன்று கூடினாலும் குறைந்தாலும் பிரச்சனை தானே.
மிகவும் பலவீனமாக உள்ள ஒரு கல்லூரி மாணவன் நல்ல டாக்ட்டர் ஒருவரிடம் சென்றான். அவர் அவனுக்கு உடம்பு நன்றாக தேருவதற்க்கு ஒரு டானிக் எழுதி கொடுத்தார். அதை காலையில் ஒரு ஸ்பூந் நைட் ஒரு ஸ்பூந் சாப்பிட வேண்டும் என்று சொன்னார். அவன் உடலை விட மனம் பலவீனம். ஓவர் நைட்ல அர்னால்ட் ஆணும்னு எலி குஞ்சு மாதிரி இருக்கற அந்த பையன் ஒரு பாட்டில் டானிக்யும் ஜூஸ் குடிக்கற மாதிரி ஒரே மடக்கில் குடிச்சான். அதன் பிறகு என்ன நடந்து இருக்கும் என்பது உங்களுக்கே தெரியும்.
உணவும் அதே மாதிரி தாங்க. இப்போ நெய்னு எடுத்துண்டா அது என்ன. ஒரு டானிக். ஒரு நாளைக்கி ஒரு ஸ்பூந் சேர்த்துக்கலாம். கடினமான உழைப்பாளிகள். உடற் பயிற்ச்சி செய்பவர்கள் ரெண்டு ஸ்பூந் சேர்த்துக்கலாம். அதையே சோறு திங்கும் அளவு தின்று. தினமும் நெய்யில் பொறித்த பலகாரங்களை தின்று அதனால் நோய் வந்தால் அதற்க்கு காரணம் நெய் அல்ல. அசட்டு தனம், கிறுக்கு தனம்.
இன்று பல படித்த மேல் தட்டு குடும்பங்களில் குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உணவு. No Cocunut, No Oil, No Curd, No Ghee. சில வீடுகளில் No Milk also. அவ்வாறு உணவு கொடுத்தால் அந்த குழந்தைக்கு No Energy, No Power, No Stamina. ஆனால் குழந்தைகளுக்கு Noodles போன்ற குப்பை உணவுகளையும் கக்கூஸ் கழுவ நன்கு உபயோகப்படும் பெப்சி, கோக் போன்ற பானங்களையும் கொடுப்பார்கள். ஒரு குழந்தைக்கு பிடித்த உணவு, பிடிக்காத உணவு என்பது அந்த குழந்தையின் தாய் பழக்கப்படுத்துவதில் தான் இருக்கிறது. Noodles எப்பையாது உண்பதில் தவறில்லை. அதிலும் சக்த்துக்கள் இருக்கிறது. ஆனால் அது போன்ற அதிக சுவை மிகுந்த உணவுகளை விவரம் தெரிவதற்கு முன்பே ஊட்டி பழகினால் பின்னர் அதிக சக்த்து மிகுந்த கீரை போன்ற உணவுகள் குழந்தைகளுக்கு பிடிக்காமல் ஆகி விடும். அதனால் நீங்கள் சுவை மிகுந்த உணவுகளை முதலில் குழந்தைக்கு கொடுப்பதை விட சக்த்து மிகுந்த உணவுகளை கொடுத்து பழகுங்கள்.
எனக்கு இன்று வரை கீரை, பாகற்காய் போன்ற உணவுகள் பிடித்த உணவு. காரணம். எனது தாய் சிறு வயதிலேயே அதை கொடுத்து பழக்கினார். பீஸா, பர்கர் போன்ற உணவுகளின் சுவைகளை 12 வயதிற்கு மேல் தான் என் நாக்கு அறிந்தது. ஒழுங்காக சமைக்க தெரிந்தவர்கள் சமைத்தால் பாகற்காய் கசக்காது. கொழுப்பு என்பது என்ன. உடலில் இருக்க வேண்டிய சக்த்துகளில் அதுவும் ஒன்று. அந்த கொழுப்பு அதிகரித்தால் தான் வியாதி. கொழுப்பு சக்த்தே ஒருவரது உடலில் இல்லையென்றால் என்ன ஆகும் யோசித்து பாருங்கள். கொழுப்பு சக்த்துள்ள உணவுகளையே குழந்தைகளின் கண்ணில் காட்டாமல் வளர்ப்பது சரியா.
தேங்காய் உண்ணுவதன் மூலம் கிடைக்கும் நற்பலன்களை பார்ப்போம்.
1] வாழைப்பழம், ஆப்பிள்ளில் உள்ளதை விட அதிக ப்ரோடீந் தேங்காய்யில் உள்ளது.
2] தேங்காயில் உள்ள Fatty Acid. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்கிறது
3] இதையம், சிறுநீரகம், கல்லீரல் குறைபாட்டிற்கு தேங்காய் மிக சிறந்த மருந்து.
4] புரதச் சத்து, மாவுச் சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உள்ளிட்ட தாதுப் பொருள்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள், நார்ச்சத்து என உடல் இயக்கத்துக்குத் தேவைப்படும் அனைத்துச் சத்துகளும் தேங்காயில் உள்ளன.
5] தேங்காய் பால் அல்சர்க்கு ஒரு மிக சிறந்த மருந்து. அதிக உடல் வலிமையை தர கூடியது
6] இளநீரை விட சிறந்த க்லூகோஸ் வாட்டர் உண்டா. அது வெறும் சக்தியை கொடுப்பது மட்டும் அல்லாமல் சக்தியை செரிக்கவும் உதவி புரிகிறது.
 7]வாதம், பித்தம், கபம் முதலான பல வியாதிகளுக்கு இளநீர் அரு மருந்து.
8]குடல் புழுக்களை இளநீர் அழிக்கிறது, காலரா நோய்க்கு நல்ல நிவாரணமும் அளிக்கிறது
9]ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவிற்க்கு சிறந்த மாற்று பொருளாக இளநீர் பயன் படுத்தப்படுகிறது.
10ரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களை அழிக்க இளநீர் பயன்படுகிறது
11] தாய்ப்பாலில் எந்த அளவு புரத சக்த்து உள்ளதோ. அதற்க்கு இணையாக இளநீரிலும் உள்ளது.

தேங்காய் எண்னை
தேங்காய் எண்ணெய்யைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களைக் குணப்படுத்துகின்றன. நாள்பட்ட தீராத புண்களுக்கு மருந்தாகத் தரப்படும் மத்தம் தைலம், தோல் நோய்களுக்கான கரப்பான் தைலம், வாத வலிகளைக் குணப்படுத்தும் கற்பூராதி தைலம், தலைக்குப் பயன்படுத்தப்படும் நீலபிரிங்காதித் தைலம், சோரியாசிஸ் நோய்க்குப் பயன்படும் வெப்பாலைத் தைலம், தலையில் உள்ள பொடுகுக்கு மருந்தாகும் பொடுதலைத் தைலம் ஆகிய தைலங்களில் தேங்காய் எண்ணெய்யின் பங்கு முக்கியமானது.

ஒளிமயமான எதிர்காலம் - சொல்வேந்தர் சுகிசிவம்

ஒளிமயமான எதிர்காலம் - சொல்வேந்தர் சுகிசிவம்

யார் நீங்கள்? முடியாததை முடிப்பவரா? முடிந்ததை முடிப்பவரா?

ஜாலியாக இருக்க வேண்டும். சுலபமான வேலை பார்க்க வேண்டும். தளுக்கான வேலை பார்த்து சுமாரான சம்பளம் வாங்கி, சினிமா, ஹோட்டல், செக்ஸ், சாராய சமாசாரங்களை அப்படி இப்படி எப்படியோ அனுபவித்தபடியே இருக்க வேண்டும். அலட்டிக் கொள்ளக் கூடாது. சட்டையோ, மூளையோ எதுவுமே கசங்கவே கூடாது. தான் மட்டும் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும். வாழ்க்கை என்பதே இதுதான், என்கிற சராசரியிஸத்தின் சம்ரட்சகர்கள் பலர் நிரம்பி வழியும் பூமி இது.

இவர்களால் மக்கள் தொகை புள்ளி விவரத்தில் இடம்பெற முடியும். தேசத்தின் தனிநபர் வருமான விகிதத்தைத் தாழ்த்த முடியும். வாக்காளர் பட்டியல், ஜனன மரணப் பட்டியல், போன்ற பட்டியலில் இடம் பிடிக்க முடியும். மற்றபடி இவர்கள் ஜடங்கள். சுற்றிக் கொண்டிருக்கும் சோம்பேறிகள். கண்விழித்து உறங்கும் கபோதிகள். கட்டி வைக்கப்படாத விலங்குகள்.

ஏன்? ஏன் இவர்களால் மக்கள் தொகை புள்ளிவிவரம் மாறுகிறதே ஒழிய வேறு எந்த மாற்றமும் நிகழ்வதில்லை. குடும்பமோ தேசமோ உலகமோ அரை அங்குல வளர்ச்சி கூட இவர்களால் அடைவதில்லை. இவர்கள் எதையுமே கண்டுபிடிக்க மாட்டார்கள். ஆனால், எல்லாக் கண்டுபிடிப்புகளையும் அனுபவிக்க ஆசைப் படுவார்கள். உழைக்க மாட்டார்கள். எல்லார் உழைப்பையும் உறிஞ்சிக் கொள்வார்கள். அதிகம் சம்பாதிக்க மாட்டார்கள். ஆனால், அடுத்தவர் சம்பாத்தியத்தில் அதிகம் உறிஞ்சுவார்கள். மரப் பொந்தில் வளர்ந்து மரத்தை உறிஞ்சும் காளான்கள் போல.

இவர்களுக்குத் தன்மானம், சுயகௌரவம், தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று, தியாக உணர்வு, தொலை நோக்குச் சிந்தனை, தலைமைப் பண்பு இப்படி எதுவுமே இருக்காது. ஆண், பெண் என்கிற பால் வேறுபாட்டு அடையாளங்கள்தான் இவர்களது பிரதான பயன்பாடுகள். இவர்கள் அதிகம் வேலை செய்யாவிட்டாலும் இவர்கள் ஜீரண மண்டலம் மட்டுமே அதிகம் வேலை செய்திருக்கும். இந்த மானு… சாபங்களாய் மானாவரி மனிதர்களாய் சாகப்பிறந்த சராசரிகளாக நீங்கள் செத்தொழிவதோ!

கல்லை வைர மணியாக்கல், செம்பைக் கட்டித் தங்கம் எனச் செய்தல் வெறும் புல்லை நெல்லெனப் புரிதல் பன்றிப் போத்தைச் சிங்க ஏறு ஆக்கல், மண்ணை வெல்லத்து இனிப்பு வரச் செய்தல் என்று முடியாதவற்றை முடியவைக்கும் பாரதித்தனம் உங்களுக்கு வேண்டாவோ.

டக்கர் பிகர்டா மச்சி என்று ஜொள்ளு வடிய பின்புலப் பாதுகாப்புச் செய்து ஊர்வலம் வந்து பல்வேறு டெக்னிக்குகளால் மெல்ல மெல்ல சரிய வைத்து படிய வைத்து, சமயம் பார்த்து தள்ளிக் கொண்டு போய் குப்பை கொட்டுகிற அசிங்கமான வேலையை, அயோக்கிய லீலையை மிகப் பெரிய வீரதீரப்பிரதாபமாக நீட்டி முடிக்கும் வெட்டிப் பெருமைக்கு நீங்கள் அடிமையாவதோ!

பலரைப் படிய வைத்து, படுக்கைக்கு அழைப்பதும் பலரோடு உடலுறவு கொள்வதும் ஒன்றும் பெரிய சாதனை அல்ல. மிருகங்கள் எப்போதும் அதைத்தான் செய்கின்றன. ஒரே ஒரு வித்தியாசம். அவைகளுக்காக யாரும் லாட்ஜ்களைக் கட்டி வைக்கவில்லை. மற்றபடி இதில் மார்தட்டிக் கொள்ள ஏதுமில்லை என்பது இளையதலை முறைக்கு நன்கு உறைக்க வேண்டாவோ!

வாழவேண்டும் என்கிற வெறியில் திருச்சியில் இருந்து சென்னைக்குச் சைக்கிளில் வர உங்களுக்குத் துணிச்சல் உண்டா? வந்தவர் ந.ந.வாசன். ஜெமினி ஸ்டுடியோ, ஆனந்த விகடன் என்று பிரம்மாண்டமான ஒரு சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்த ந.ந. வாசன் அவர்கள் ஒரு சாதாரண சமையல்கார விதவைத் தாயின் எளிய மகன். ஆனால், முடியாதவற்றை முடிக்கும் அவரது சாம்ராஜ்ய சரித்திரத்தின் முன்னுரை திருச்சி முதல் சென்னை வரையான சைக்கிள் பயணம். டிக்கட்டில்லாமல் ரயிலில் போகும் திருட்டுத் தனத்தை விட சைக்கிளை மிதிக்கும் சங்கடம் மேல் என்று கஷ்டத்தை நேசித்த மனோபாவம்தான் அவரைச் சக்கரவர்த்தியாக்கியது.முடியாததை முடிப்பவர்களே முடிசூடிக் கொள்கிறார்கள். முடியக் கூடியதை முடிப்பவர்கள் பாவம் முடிவெட்டிக் கொள்கிறார்கள். உங்கள் சிரம் முடிவெட்டத் தோன்றியதா? முடிசூடத் தோன்றியதா? முடிவெடுக்க வேண்டாவோ?ஐம்பத்தாறு சமஸ்தானங்கள் ஆளுக்கொரு திசையில் பிய்த்துக் கொள்ள ஆசைப்பட்டபோது அத்தனை பேரையும் அடக்குவது நடக்கிறகாரியமா? முடியாது முடியாது என்று பலரும் நினைத்தபோது ஏன் முடியாது அடக்கிக் காட்டுகிறேன்” என்று அடக்கிய இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். முடியாததை முடித்த முடி மன்னர். நீங்கள் அவரை விட மட்டமா?

எமர்ஜன்ஸி என்கிற இரும்புக் கைகளால் இந்திராகாந்தி இந்தியாவைப் பிசைந்தபோது திராவிட இயக்கமும் சரி, இந்து இயக்கமும் சரி காப்பாற்ற முடியாதபடி கரைந்துபோகும் என்றே எல்லோரும் கணக்குப் போட்டார்கள். ஆனால், இரண்டுமே கட்டுக் கோப்பாகக் காப்பாற்றப்பட்டு மாநிலத்திலும் மத்தியிலும் பதவியேற்று வரலாறு படைத்தார்களே எப்படி? எப்படி? சமைந்தது எப்படி என்று பாட்டுப் பாடினால் போதாது. சாவிலிருந்து எழுந்தது எப்படி என்ற சரித்திரம் படிக்க வேண்டும்.

இந்து இயக்கம் திராவிட இயக்கம் ஆகிய இரண்டு இயக்கங்களுமே எதிர் எதிரானவை என்றாலும் சாக மறுக்கும் உயிர் ஆவேசம், முடியாததை முடிக்கும் மனோபாவம் இருவருக்கம் பொதுவானவை. அதனால்தான் சாம்பலிலிருந்து புறப்படும் ஃபினிக்ஸ் பறவைபோல (கற்பனைதான்) சாவிலிருந்து புறப்பட்டவை அந்த இரண்டு இயக்கங்களும்! ஒரு கோவிலின் மேல் கூரையில் ஓவியம் வரையவேண்டும். உட்கார்ந்தபடியோ நின்றபடியோ அல்ல. படுத்தபடி மேல் கூரையில் வரைவதால் சாரம் கட்டி அதில் படுத்தபடி பலமணி நேரம் வரைய வேண்டும். ஒருநாள் இரு நாள் அல்ல நான்கரை ஆண்டுகள் வரைந்தார் ஒருவர். உங்களால் அப்படி உழைக்கமுடியுமா? உணவு நேரத்திற்கு உணவு கிடையாது. கொடுமையான பெயிண்ட் வாசனையால் நுரையீரல் கோளாறு ஏற்பட உடல்நலம் கெட எதையுமே பொருட்படுத்தாமல் ஐயாயிரத்து எண்ணூறு சதுர அடி பரப்பளவில் முந்நூற்று நாற்பத்திமூன்று அமர ஓவியங்களை வரைந்து பைபிளை உயிர்ப்பித்த மைக்கல் ஏஞ்சலோதான் அந்த உலகப் புகழ்பெற்ற ஓவியர்.

அவர் வெறும் ஓவியர் மட்டுமல்ல சிற்பி, கட்டடக் கலை வல்லுநர். இடைஇடையே இந்தப் பணிகள் வேறு. முடியாததை முடித்ததால் ஓவியத்தில் முடிசூடிய மன்னர் அவர். கல்லே இல்லாத ஊரில் கற்கோவில். கிரேனே இல்லாத போது பல டன் எடையுள்ள கல்லை சாரம் கட்டி உச்சிக்குக் கொண்டுபோன சாதனையாளன். முடியாததை முடித்தவன் ராஜ ராஜ சோழன். அதனால் தான் சோழ அரசர்களின் மணி மகுடம் அவன். அடிமையாக இருப்பவர்கள். அடிபடவே பிறந்தவர்கள் என்று நசுக்கப்பட்ட தொழிலாளர் கள் தோளை நிமிர்த்தி பொதுவுடமை என்கிற வாளை நிமிர்த்தி அடிமைச் சங்கிலியை அறுத்தெறிந்து ஆட்சிச் செங்கோலைத் தொழிலாளர் கையில் தந்து உலகம் அதுவரை கண்டிராத ஆட்சிமுறைக்கு வித்திட்டாரே கார்ல மார்க்ஸ். அவரென்ன முடியக் கூடியதை முடித்தவரா? முடியாததை முடித்தவரா? யோசியுங்கள். யோசியுங்கள். கடல் வழிப் பயணம் ஒரு கனவாக இருந்த காலத்தில் நனவாக்கும் வெறியில் புறப்பட்டார் கொலம்பஸ். பக்கத் துணையாகப் பயணிகள் வரவில்லை. கொள்ளையர்களும் குற்றாவளிகளும் அனுப்பப்பட்டனர்.

பாதி வழியில் பிரச்சனை பிறந்தது. உணவுப் பொருட்களைப் பாதுகாத்து வந்த ரொனால்ட் என்பவன் அதிர்ச்சியை அறிவித்தான். கைவசம் உள்ள உணவு ஊர் திரும்ப மட்டுமே போதுமானது. மேற்கொண்டு பயணம் தொடர்ந்தால் ஒவ்வொரு நாளும் திரும்புவதற்கான உணவு தீர்ந்து போவதால் கப்பலைத் திருப்புவோம். புறப்பட்ட இடமே போய்ச் சேருவோம் என்றான். உடனிருந்த மாலுமிகள் ஆம் ஆம் என்றனர். கொலம்பஸின் கப்பல் கவிழவில்லை. கப்பல் பயண லட்சியம் கவிழ ஆரம்பித்தது. கொலம்பஸின் கூற்று அவர்கள் பய மண்டையில் ஏறவே இல்லை. கொலம்பஸ் கைதானார். ரொனால்ட் தலைமை ஏற்றான். கொலம்பஸ் அசரவில்லை. ஒரு புதுக் கணக்கு சொன்னார். திரும்பும் நாட்களில் தமக்கென்று உள்ள மொத்த உணவை மற்றவர் எல்லோரும் பங்கிட்டுக் கொள்ளலாம். பட்டினி கிடக்க தான் தயார். அந்த உணவு துணைகொண்டு ஒரு நாளோ இரு நாளோ திட்டமிட்டபடி மேலே பயணம் தொடர்வோம். திரும்ப வேண்டாம் என்று கெஞ்சினார். அது நியாயமாகப்பட்டது. பயணம் தொடர்ந்தது. அடுத்த இருபத்தி நாலு மணி நேரத்துக்குள் அமெரிக்கக் கடற்கரை அவர்களுக்குத் தட்டுப்பட்டது. உணவைக் கருதி திரும்பி இருந்தால், கொலம்பஸ் உலகப் புகழ் வெறும் புஸ். முடியாததை முடித்தார். முடிசூடிக் கொண்டார்.

முடியாததை முடிக்கவே நாம் பிறந்திருக்கிறோம். முடிவதை முடிப்பதற்கு அல்ல!

எது? எது? எப்ப? எப்ப?

பதினாறாம் லூயி மன்னர் மட்டும் ஒரு சின்ன ஆபரேஷன் செய்து கொண்டிருந்தால் பிரெஞ்சுப் புரட்சியே நடந்திருக்காது என்று யாராவது சொன்னால் நம்புவீர்களா? நம்பத்தான் வேண்டும். ஓரளவு உண்மைதான் இந்தச் செய்தி.

பதினாறாம் லூயி மன்னரின் பிறப்புறுப்பில் ஒரு சின்ன குறைபாடு. இறுக்கமாகத் தோல்மூடியிருந்தது. அதைச் சரிசெய்ய சின்ன அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். அந்த அறுவை சிகிச்சை உலக முழுவதும் இன்று ஒரு மதச் சடங்காகக் கூட ஆகிவிட்டது. ஆனால், அவ்வளவு சாதாரணமான அறுவை சிசிச்சைக்கு மன்னர் உடன்படவில்லை. தயங்கினார், குழம்பினார், ஒத்திப் போட்டார். முடிவில் அவரது தலையே கில்லட்டின் மூலம் துண்டிக்கப்பட்டது.

ஆம். அவரது இந்தப் பிறவிக் குறைபாடு காரணமாக மன்னர் பதினாறாம் லூயி தம் மனைவியுடன் தாம்பத்ய உறவு மேற்கொள்ள முடியவில்லை. உடல் உறவுக்குத் தகுதியில்லை என்று அவள் தன்னை விவகரத்துச் செய்து அவமானப்படுத்திவிடக் கூடாதே என்பதற்காகவே அரசியின் எல்லா அநியாயங்களையும் மன்னர் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று. அவளது ஒழுக்கப் கேடுகள், முறையற்ற தொடர்புகள், அகங்காரமான நடவடிக்கைகள், நியாயமற்ற அரசியல் தலையீடுகள் குறித்து மன்னருக்கு அதிருப்தி இருந்தாலும் இந்த ஒரே காரணத்துக்காகவே அவளிடம் மன்னர் பணிந்து போனார். விளைவு… அரசியின் அராஜக நடவடிக்கைகள் மீது ஏற்பட்ட கோபமே பின்னர் பிரெஞ்சப் புரட்சியாகப் வெடித்தது. மன்னர் மீது மக்களுக்கு அவ்வளவு வெறுப்பில்லை… மாறாகப் பாசம் இருந்தது என்பது ஓர் ஆச்சர்யமான உண்மை.

நாடே கொந்தளித்த நிலையில் மன்னருக்கான மரண தண்டனையை நிறைவேற்றுவதா, மன்னிப்பதா என்ற விவாதம் பிரெஞ்சு கன்வென்ஷனில் நடைபெற்றபோது மன்னருக்கு மரணதண்டனை என்று வாக்களித்தவர் எண்ணிக்கை 361. மன்னிப்புக் கொடுப்போம் என வாக்களித்தவர் எண்ணிக்கை 334. இதிலிருந்து புரிவது என்ன? மரணத் தறுவாயிலும் செல்வாக்காகவே இருந்தார் பதினாறாம் லூயி என்பது புரிகிறதா?

ஏழாண்டுக்காலம் சிறிய ஓர் அறுவை சிகிச்சைக்குத் தயங்கி அல்லது கூச்சப்பட்டு மனைவியைத் திருப்தி செய்ய முடியாமல், அவளது தவறான அரசியல் முடிவுகளை ஏற்று நடந்ததால் ஒரு நல்ல மனிதர் அரசையும் உயிரையும் இழந்தார். ஏழாண்டுக்குப் பிறகு தமது மைத்துனரின் உறுதியான ஆலோசனைப்படி அந்தச் சிகிச்சையை மேற்கொண்டார். இல்வாழ்வுத் தகுதி பெற்றார். ஆனால், அதற்குள் நாட்டு அரசியல் நிலை செப்பனிட முடியாத அளவு சிக்கலாகி இருந்தது. சின்னப் பிரச்சனைகளை உரிய காலத்தில் தீர்க்க விரும்பாதவர்கள் பெரிய இழப்பைச் சந்திக்க நேரிடும். புரிகிறதா?
ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. வீட்டில் மேல் தளத்தின் உட்பூச்சு நடந்தபோது நிறைய சிமெண்ட் கலவை சிந்தியிருந்தது. உடனுக்குடன் அதனை எடுப்பது நடக்கிற காரியம் இல்லை. காரணம் மேற்கூரை பூசும் போது நிறைய சிமெண்ட் கலவை கீழே விழும். கொஞ்சம் பொறுத்துத்தான் அனைத்தையும் கூட்டிப் பெருக்கி அள்ள முடியும். ஆனால், வீட்டு சொந்தக்காரர் சிமெண்ட் வீணாகிறது என்று தொழிலாளர்களைத் திட்டிக் கொண்டே இருந்தார். தொழிலாளர்கள் கடுப்பாக வேலை செய்தார்கள். கொஞ்சம் பொறுமை வேண்டாமா! ஆனால் ஒன்று கொஞ்சம் பொறுத்து சிமெண்ட்டை அள்ளவில்லை என்றால் அவ்வளவுதான்.! சிமெண்ட் கலவை தரையில் உறுதியாகக் கெட்டியாகிவிடும். அதன் பின் கொத்திதான் எடுக்க வேண்டும். இதனால் பொருளும் நஷ்டம். உழைப்பும் சம்பளமும் வேறு கூடுதலாகும்.

அந்தக் “கொஞ்சம் பொறுத்து” என்கிற கால எல்லையில் விழிப்பு மிக மிக அவசியம். மிக முன்னதாகச் செய்ய வேண்டியது எது, கொஞ்சம் காலம் தாழ்த்திச் செய்ய வேண்டியது எது என்கிற தெளிவும் விவேகமும் நமக்கு மிகவும் அவசியம்.

இன்னொன்று சொல்கிறேன். பிறருக்குக் கெடுதல் செய்ய வேண்டும் என்கிற அளவு நமக்குச் சிலசமயம் கோபம் வரும். அப்போது கெடுதலை உடனே செய்துவிடக் கூடாது. அந்தச் செயலை எவ்வளவு காலம் தாழ்த்தலாமோ அவ்வளவு தாழ்த்தலாம். தவறில்லை. ஆனால் நம்மவர்கள் பிறருக்குக் கெடுதலை மட்டும் அவசர அவசரமாகச் செய்து விட்டு பிறகு அவஸ்தைப் படுகிறார்கள்.

ஒருமுறை சேரன் எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து கோவை வரும்போது நடந்த சம்பவம். இரவு பதினோரு மணிக்கு ரயில் புறப்படும் சமயம் ஒருதாயும் மகளும் அவசர அவசரமாக வந்து பெட்டியில் ஏறினர். அவர்களுக்கு வழி விடாது ஒரு ராணுவ வீரர் தமது பெரிய இரும்புப் பெட்டி கைப்பைகள் என்று பல மூட்டை முடிச்சுகளை வாயில் கதவருகே வைத்துக் கொண்டு இடையூறாக நின்றிருந்தார்.

சிரமப்பட்டு தாயும் மகளும் ஏறிவிட்டனர். உண்மையில் ப.ப.உ (டிக்கட் பரிசோதகர்) பின்னால் இருந்து தள்ளி ஏற்றிவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.

ரயில் புறப்பட்டும் விட்டது. எரிச்சலுடன் ராணுவ வீரரிடம் உங்கள் பெர்த் எது? ஏன் வழியில் பொறுப்பின்றி இப்படி அடைத்துக் கொண்டு நிற்கிறீர்கள்? என்று கேட்டார். பெர்த் ரிசர்வ் ஆகவில்லை. என்னுடன் வந்த இன்னொரு ராணுவ வீரர் பிளாட் பாரத்திலிருந்து எங்கள் லக்கேஜீகளை (இன்னும் வேறு) எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். அவற்றை வாங்கத் தான் வழியில் நின்றேன் என்று வெகு அலட்சியமாகச் சொன்னார்.
அவ்வளவுதான் ரிசர்வேஷன் இல்லாம ஏன்யா ஏறினே என்று ப.ப.உ. கத்த நான் மிலிடிரியாக்கும் என்று ராணுவ வீரர் எகிற ஏக ரகளை. அளவு கடந்த கோபத்தில் இறங்குய்யா கீழே என்று கத்தியடியே ப.ப.உ. ராணுவ வீரர் கைப்பையைத் தூக்கி ஓடும் ரயிலிலிருந்து பிளாட்பாரத்தில் எறிய… அடிதடி ஆரம்பமாகி விட்டது.

சாமாதனம் செய்து வைத்து நாங்கள் விசாரித்தால் பெரிய சிக்கல் புலப்பட்டது. ராணுவ வீரர் மறுநாள் போய் குன்னூரில் பொறுப்பில் (ஈன்ற்ஹ்) சேரவேண்டிய ராணுவ உத்தரவு கைப்பைக்குள் இருக்கிறது. ரயிலோ ஓடிக்கொண்டிருக்கிறது. இப்போது என்ன செய்வது? எவ்வளவு கோபத்திலும் ப.ப.உ. அப்படிச் செய்யலாமா? கெடுதலை உடனே செய்வதா? தயவு செய்து தோன்றுகிற கெடுதலை மட்டும் உடனே செய்யாதீர்கள். கொஞ்சம் காலம் தாழ்த்தி செய்ய வேண்டியதைச் சரியாகக் காலம் தாழ்த்தி செய்யுங்கள். உடனே செய்ய வேண்டியவற்றை உடனே செய்யுங்கள். பதினாறாம் லூயி ஞாபகம் இருக்கட்டும்.

சிக்ஸ் பாக்கின் ரகசியம். உபாயத்தால் வந்த அபாயம்.

சிக்ஸ் பாக்கின் ரகசியம். உபாயத்தால் வந்த அபாயம்.




சிக்ஸ் பாக். இன்றைய பல இளைங்கர்களின் கனவுகளில் ஒன்றாக இருக்கிறது. உடல் இளைக்க. உடற் பயிற்ச்சி  செய்பவர்கள் ஒருபுறம் என்றால். நல்ல ஆரோக்யமான உடல் இருந்தாலும். சிக்ஸ் பாக் வர வேண்டும் என்பதற்காக. உடற் பயிற்ச்சி  செய்பவர்கள் இன்னொரு புறம். பிரியாணி. மற்றும் கொழுப்பு சக்த்து உள்ள உணவுகளை எடுத்து கொண்டால். சிக்ஸ் பாக்கிற்கு என்று exercise  பண்ணாலும் Six  Pack வராது. சிக்ஸ் பாக் வந்த பிறகு. பிரியாணி தின்னால். வந்த சிக்ஸ் பாக் பெய்டும்.  ஆனால். கட்டட வேலை, ரோடு போடும் வேலை, விவசாயிகள் இவர்கள் எல்லாம். நிறைய கொழுப்பு சக்த்து உள்ள உணவுகளை எடுத்து கொள்கிறார்கள். அவர்கள் சிக்ஸ் பாக்கிற்கு என்று தனியாக உணவுகளை எடுத்து கொள்வதில்லை. ஜிம்மிற்க்கு  போவதில்லை. ஆனாலும். ஜிம்மிற்கு போய்  சிக்ஸ் பாக் வர வெய்க்கும்  நம்மை விட. அவர்களுக்கு. சிக்ஸ் பாக் ஜம்  என்று நன்றாக இருக்கிறது. அதற்க்கு  காரணம். நமக்கு உடற் பயிற்ச்சி  என்பது. நாம் வேலை செய்யும் நேரம் போக. நமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் ஒரு பகுதி. ஆனால்? அவர்களுக்கு.  அவர்கள் ஒரு நாளைக்கி. 8 மணி நேரம், 10 மணி நேரம் செய்யும் வேலையே உடற் பயிற்ச்சி  தான்.



  நாம். நுரையீரல் பிரச்சனைக்கான தீர்வை பார்க்கும் முன். உங்களிடம் ஒரு சுவாரஸ்யமான கதையை முதலில் பகிர்ந்து கொள்கிறேன்.  இந்த கதை.   சென்ற பிப்ரவரி மாதம். தினமணியில் நான் படித்தது. இது  எந்த? அளவு உண்மை.






  கன்பூஷியஸ். ஏறக்குறைய 2600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அப்பொழுது அத்தகைய தொழில் நுட்பங்கள் இருந்து இருக்குமா என்பது தெரியவில்லை. ஆனால்?. ஒவ்வொருவரும் அவசியம் படிக்க வேண்டிய கதை.

சீன தேசத்து ஞானிகளில் முதன்மையானவர் கன்பூஷியஸ். இவருக்கு பல சீடர்கள். அதில் ஒருவர் தான் சாங்- ஹோ - சாங்க். தமது குருவிடமிருந்து பல கலைகளை கற்றவர். இயற்பியல், எந்திரவியல் வல்லுநர்.


ஒருமுறை அறிங்கர் சாங் கிராம புறத்தில் உலாவ சென்றார். வழியில் ஒரு அழகான பழத்தோட்டம் கண்டு உள்ளே நுழைந்தார். Six Pack உடம்புடன் ஒரு இளைங்கர் கிணற்றில் இருந்து தண்ணீர்  இறைத்து கொண்டிருந்தார். வாளி [ பக்கெட் ] ரொம்பியதும் தன்னீரை நிமிர்ந்து எடுக்காமல் குனிந்து, முதுகை வளைத்து எடுக்கும் அமைப்பில் அந்த விவசாயி வீட்டு கிணறு இருந்த்து. பாவம் இப்படி மாடாய் உழைத்தால் இவனது ஆரோக்யம் சீக்கிரமே கெட்டு விடுமே. இளமையிலேயே கூன் விழுந்து இவன் கிழவன் போல் ஆகி விடுவானே என்று சாங் வருந்தினார்.


பின்னர் அந்த இளைங்கனை சந்தித்து, இந்த கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் போல் அமைத்து நடுவில் ஒரு கம்பியை பொருத்தி, அதில் ஒரு கொக்கியை பொருத்தி அதில் இதே பக்கெட்டை தொங்க விட்டு நீ நீரை இறைத்தால் உனக்கு சிரமம் தெரியாது என்று விளக்கினார். அதோடு மறுநாள் அவரே அதை செய்தும் கொடுத்தார்.

அந்த விவசாயிக்கு இது புதுசு. எவ்வாறு இதில் தண்ணீர்  இறைப்பது என்று தெரியாமல் குழம்பினார். சுமார் 2500  ஆண்டுகளுக்கு முன் இது கூட ஒரு அறிவியல் விந்தை அல்லவா. சாங் அதில் எவ்வாறு தண்ணீர்  இறைப்பது என்று செய்து காட்டினார். பின்னர் அந்த விவசாயி மிகுந்த மகிழ்வுடன் தண்ணீர்  இறைக்கலானார். இது உண்மையில் நல்ல விசயம் தான். இதோடு சாங் நிறுத்தி இருக்கலாம். இதன் பின்னர் அவர் செய்த சில அறிவியல் விந்தைகள், அந்த விவசாயிக்கு ஆபத்தாக முடிந்தது.

மறுநாள் மாலை சாங் அந்த தோட்டத்திற்கு வந்தார். விவசாயி அவரை வணங்கி வரவேற்று அமர செய்தார். விவசாயி தண்ணீர் இறைக்கும் சிரமமும், நேரமும் முன்பை விட குறைந்தது. ஆனாலும் சில குறைகள் இருப்பது சாங்கின் அறிவியல் கண்ணிற்க்கு தெரிந்தது. ஒவ்வொரு முறையும் அவர் பக்கெட்டை கிணறுக்குள் இறக்கி, தண்ணீர் எடுத்ததும் கயிற்றிலிருந்து பக்கெட்டை கழட்டி எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டு மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, மறுபடியும் கழட்டி, மறுபடியும் மாட்டி, கழட்டி, மாட்டி, கழட்டி, மாட்டி. இவ்வாறு கழட்டி, மாட்டும் வேலை மற்றும் நீர் விடுவதற்கு என்று கிணற்ரிற்க்கும், தோட்டத்திற்கும் இடையில் நடக்கும் வேலைக்கு முற்றுப்புள்ளி வெய்க்க வேண்டும் என்று சாங் நினைத்தார். அந்த விவசாயியை மண்வெட்டியை கொண்டு வர சொன்னார்.

கிணற்றின் அடியில் இருந்து தோட்டம் வரை செல்லும் ஒரு கால்வாய் அவர் அமைத்தார். அதன் பின் அந்த விவசாயி நின்ற இடத்தில் இருந்தே நீரை இறைத்து, அந்த கால்வாயில் ஊற்றினார். அவருக்கு நடக்கும் வேலையும் இல்லாமல் போனது, கழட்டி மாட்டும் வேலையும் இல்லாமல் போனது. ஒரு வருடம் கழித்து.

இதற்க்கு முன் இல்லாத அளவு அமோக விளைச்சல், லாபம். அதற்க்கு நன்றி செலுத்தும் விதமாக பெரும் தொகையுடன் சாங் ஆசிரமத்திற்கு விவசாயி அவரது மனைவி இருவரும் வந்தனர். துறவியை வணங்கினர். பக்தனுடைய இந்த காணிக்கையை நீங்கள் ஏற்று கொள்ள வேண்டும் என்று சாங் முன் பணத்தை நீட்ட. அவர் அதை வாங்கி கொள்ள வில்லை. பணமும், துரும்பும் உண்மை துறவிக்கு ஒன்று தான். அந்த பணத்தில் ஒரு சிறு பகுதியை செலவழித்தால் தோட்டத்தில் ஒரு குழாய் வெய்த்து அதன் மூலம் நீர் இறைக்கும் வேலையும் செய்யாமல் அந்த உழைப்பு, அதற்கான நேரத்தையும் மிச்சப்படுத்தலாம் என்று சொல்ல உடனே ஒரு பைப் connection கொடுக்கப்பட்டது.

முதலில் அந்த விவசாயிக்கு குனியும் வேலை போனது, பின்னர் நடக்கும் வேலை போனது. இப்போ பைப் connection மூலம் நீரை இறைக்கும் வேலையும், அதை கால்வாயில் ஊற்றும் வேலையும் போனது. தோட்டத்தை பெருக்குவது விவசாயி மனைவியின் வேலை. [நல்ல வேளை. சாங் வேக்கம் க்லீநர் கண்டுபிடிக்கவில்லை]  சில வருடங்கள் கழித்து.

பல ஊர்களுக்கு சுற்று பயணம் செய்த சாங் தனது மடத்திற்க்கு திரும்பினார். இரண்டு நாட்கள் கழித்து அந்த விவசாயியின் தோட்டத்திற்க்கு சென்றார். அங்கு அவர் கண்ட காட்சிகள் அவரை திகைப்படைய செய்தது. நாம் வேறு இடத்திற்க்கு மாறி வந்து விட்டோமா என்று குழம்பினார். நடக்கும் பாதைகளில் கூட செடிகள் தாறு மாறாக வளர்ந்து இருந்தது. புதர்கள், முட் செடிகள், அழுகிய நிலையில் கிளைகளில் தொங்கும் பழங்கள். அப்பொழுது யாரோ இரும்பும் சத்தம் கேட்டது. பார்த்தால் சும்மா six pack உடலுடன் சிறுத்தை மாதிரி இருந்த விவசாயி உடல் பலம் சிறுத்து, உடம்பு மிக பெருத்து, தொந்தியும், தொப்பையுமாக கயிற்று கட்டிலில் படுத்து இருந்தார். அருகில் விவசாயியின் மனைவி. விவசாயியின் அந்த நிலமையை கண்ட சாங் மனம் அதனால் மேலும் வருத்தம் அடைந்தது.

சாங்கை பார்த்ததும் விவசாயி எழுந்து கை கூப்பினார். விவசாயியின் மனைவி சாங்கை முறைத்து ஒரு பார்வை பார்த்தாள். அவள் பார்வையிலேயே நம் மீது இவளுக்கு ஏதோ கோபம் என்பது அவருக்கு புரிந்தது. ஆனால்? கோபத்திற்கான காரணம் புரியாதவராய் சாங்கை பார்த்து. உனக்கு எதனால் இந்த நிலமை. நீ வேறு ஏதேனும் கடின வேலை செய்ததால் உனக்கு இந்த மாதிரி ஆய்டுத்தா. சொல். அந்த உழைப்பையும் குறைக்க நான் எதாவது உபாயம் செய்கிறேன் என்று சொல்ல, அருகில் இருந்த விவசாயியின் மனைவி அய்யா, உபாயம்ங்கர பேர்ல நீங்க இதுவரை செய்த அபாயங்கள் எல்லாம் போதும். இவர் கடினமாக உழைத்ததால் இப்படி ஆகவில்லை. உழைப்பதை நிறுத்தியதால் தான் இவ்வாறு ஆனார் என்று சொல்ல, அப்பொழுது தான் சாங்கிற்க்கு அவள் கோபத்திற்கான காரணம் புரிந்தது. அவள் மேலும் பேசலானாள்.

இதற்க்கு முன் இவர் உடம்பிலிருந்து வெள்ளமாக வேர்வை வரும் அளவு உழைத்தார். அதில் இவர் உள் உடம்பு நல்லா சுத்தம் ஆச்சு, பாத்தி கட்டி நல்லா ஃபுல் மீல்ஸ் சாப்ட்ட மனுசன். படுத்த உடனேயே தூங்கிய என் புருசன். இப்போ இவர் உடம்பு வேர்ப்பதில்லை, சரியாக சாப்பிடுவதில்லை, போன வருடம் சாப்பிட்ட சாப்பாட்டில் கால் பங்கு கூட இந்த வருடம் இவர் சாப்பிடவில்லை. அப்டி கம்மியா சாப்ட்டே அஜீரண கோளாறு, தூக்கம் வராமல் தவிப்பு, இது எல்லாம் சேர்ந்து தான் இன்று இவரை இந்த நிலைக்கு ஆக்கியது என்று அவள் சொல்லி முடித்ததும். சாங் அப்டியே அமைதி ஆனார். சாங் தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கேட்டது மட்டுமில்லாமல் தனக்கு ஞானம் புகட்டிய அந்த ஞான பெண்ணை தனது குருவாக ஏற்று கொண்டார்.

மூன்று மாதம் கழித்து. விவசாயி பழைய தெம்புடன் உழைக்கலானார். கிணறு இருந்தது, கிணற்றின் இரண்டு பக்கமும் தூண் இருந்தது, இரண்டு தூண்களுக்கு நடுவில் கம்பி, கம்பியில் கொக்கி, கொக்கியில் வாளி, கீழே கால்வாய் எல்லாம் இருந்தது. ஆனால் குழாய்யை காணோம்.

மனிதனுடைய உடல் உழைப்பு, நேரம் முதலியவற்றை குறைக்க எந்திரங்கள் தேவை தான். ஆனால் உயிர் அற்ற எந்திரங்களையே ஒரு மனிதன் முழுமையாக சார்ந்து இருந்தால், உயிர் உள்ள மனித எந்திரம் ரிப்பேர் ஆய்டும். சும்மாவா சொன்னார் திருமூலர். மனமே மந்திரம், உடலே எந்திரம். அன்று உணவே மருந்து. இன்று மருந்தே உணவாக இருக்கு. அன்று நம்முடைய அன்றாட வேலைகளே உடற் பயிற்சியாக இருந்தது. இன்று உடலுக்கு என்று தனியாக பயிற்ச்சி தேவைப்படுகிறது. கடின வேலைகள் செய்வதை விட, தலை முதல் தோள், மார்பு, கை, வயிறு, இடுப்பு, கால் என்று உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பிற்க்கு என்று பிரத்யேகமாக பயிற்சிகள் செய்வது சிறந்தது தான். தினமும் ஒரு அரை மணி நேரமாது உடற் பயிற்ச்சி செய்யுங்கள். நோயின்றி வாழுங்கள். நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம்.
நாளை. நுரையீரல் நோய்க்கு உரிய தீர்வை பார்ப்போம்.

உடற் பயிற்சியால் மூளைக்கு நல்லது. கிராண்ட் மாஸ்டரின் வெற்றி சூத்திரம்.

உடற் பயிற்சியால் மூளைக்கு நல்லது. கிராண்ட் மாஸ்டரின் வெற்றி சூத்திரம்.

www.v4all.org 

இரும்பினில் செய்த தசைகளும், நிரம்புகளும் கொண்ட உடல் வேண்டும் என்றார். சுவாமி விவேகானந்தர். 15 வயதில் ஒரு முரட்டு  குதிரையை தனி ஒருவனாக அடக்கி.  அந்த குதிரை வண்டியில் வந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியவர் விவேகனந்தர். அவர். கடைசி வரை. உடற் பயிற்ச்சியை  விட  வில்லை. பல ஊர்கள், நாடுகள் அவர் சென்ற பொழுதும். டம்பிள்ஸ். அவர் கூடவே பயணம் செய்தது.

 இதற்கு  முன். அதாவது.  நமது தாத்தா, பாட்டி  காலத்தில். உடற் பயிற்ச்சி  என்பது. ஏதோ. விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை போல் ஒரு எண்ணம் இருந்தது. அதை  அன்றைய காலத்தில் தவறு என்று சொல்ல  முடியாது. காரணம்.

அன்று  3,4 கிலோ மீட்டர்  துரம் என்றாலும். மக்கள் நடந்தே தான்  சென்றனர். பைக்கில் செல்லவில்லை. அன்று, ஆன், பெண் அனைவருக்குமே கடினமான வேலைகள் இருந்தது.   இன்று. இயந்திர தனமான இந்த உலகில்  எல்லாமே தலை கீழாக ஆகி விட்டது. அன்று மனிதர்கள் செய்த வேலைகளை. இன்று machines  தான். செய்கிறது.  அதனால். இன்று ஆரோக்யமாக வாழ. உடற் பயிர்ச்சி  மிக, மிக அவசியமான ஒன்று. நாம். எந்த வேலை செய்வதாக இருந்தாலும். அதை. இந்த உடலை கொண்டே செய்கிறோம்.  ஆரோக்கியம் இல்லாத மனித உடலின் மனமும் ஆரோக்கியம் இன்றியே இருக்கும்.   மன நலனிற்கு உடல் நலன் மிக, மிக அவசியம்.




 கிரான்ட்  மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் சொல்வதை  சற்று கேளுங்கள்.

நான் தினமும் ஜிம்மிற்க்கு  சென்று உடற் பயிற்ச்சி  செய்து எனது உடலை கட்டுபாடுடன் வெய்த்து உள்ளேன். எனது உடல் கட்டுப்பாட்டுடன்  இருந்தால்  தான். மனமும் கட்டுபாடுடன் இருக்கும். உடல் ஆரோக்யமாக  இல்லாமல் செஸ் போட்டியில் சவால்களை எதிர் கொள்வது என்பது. கடினமான செயலாகி விடும்.

 நீங்கள். வீடுகளில், அலுவலகங்களில்   கடின வேலை செய்பவர்களாக இருந்தாலும். ஒவ்வொரு குறிப்பிட்ட உடல் பாகத்திற்கு என்று பிரத்யேகமாக செய்யும் உடற் பயிற்ச்சி.  அதிக பலனை தரும்.

 சரி. இப்பொழுது. உடற் பயிற்ச்சி  செய்வதன் மூலம். உடலில், மனதில், மூளையில், ஏன்? மரபணுவில் கூட சில நல்ல மாற்றங்கள் நடக்கிறது. அது சம்பந்தமாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை பற்றி, ஆரோக்யத்திற்கு என்றே வரும். பிரபல .Cell  Metabolism  என்னும் ஆங்கில  இதழில் வந்த. கட்டுரை ஒன்றை பாப்போம்.

உடற்பயிற்ச்சி செய்தால் உடலுக்கு நல்லது. ஆனால்? மூளைக்கு நல்லதா. ஆம். இது சம்பந்தமாக நடந்த பல ஆராய்ச்சிகள் இதை நிரூபித்து உள்ளன.
உடற்பயிற்சி எப்படி மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது, எப்படியெல்லாம் நன்மை செய்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் ‘ஐரிசின்’ (irisin) என்ற மூலக்கூறு உற்பத்தியாகிறது என்று அடையாளம் காட்டியிருக்கிறது அந்த ஆய்வு. அதோடு, அந்த மூலக்கூறு, நரம்புகளைப் பாதுகாக்கிறது என்றும் உறுதியாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.
இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் டாக்டர் புரூஸ் ஸ்பீஜெல்மேன் (Dr.Bruce Spiegelman). அமெரிக்காவில் இருக்கும் டானா ஃபார்பர் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியர். அவர் தலைமையிலான குழு, ஒரு எலியை வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.



உடற்பயிற்சி செய்வதால், செயற்கை முறையில் ரத்தத்தில் இருக்கும் ‘ஐரிசின்’ அளவை அதிகரிக்க முடியும். அது, கற்றல் மற்றும் ஞாபகம் தொடர்பான மரபணுவை செயல்பட வைக்கும் என்றெல்லாம் பட்டியல் போடுகிறது இந்த ஆய்வு. சுருக்கமாக, ‘உடற்பயிற்சி, மூளையில் அறிவாற்றல் தரும் செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்புத் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதாவது, மன அழுத்தம், பக்கவாதம், அல்ஜீமெர்ஸ் நோய் (Alzheimer’s disease) போன்ற நரம்பியல் நோய்கள் நெருங்குவதற்கான வாய்ப்பை உடற்பயிற்சி தடுத்துவிடும் என்கிறார்கள்.