ஆபத்தை ஏற்படுத்தும் உதட்டுச்சாயம்...
உதட்டு சாயம் எனப்படும் லிப்ஸ்டிக்கால் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன என்று ஏற்கனவே பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.
வயிற்றில் கட்டி ஏற்படவும் இந்த லிப்ஸ்டிக் காரணமாக அமைகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உதட்டுச்சாயத்தில் காட்மியம், க்ரோமியம் மற்றும் அலுமினியம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுகின்றனவாம்.
சராசரியாக நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று முறை இந்த உதட்டுச்சாயங்களைப் பயன்படுத்துபவர்கள் சுகாதாரமற்ற அளவிலான க்ரோமியத்தை தங்களுக்கு தெரியாமலே உட்கொள்ளுகிறார்கள்.
இந்த உலோகங்கள் வயிற்றில் கட்டிகள் ஏற்பட காரணமாக அமைகிறதாம்.
உதட்டு சாயங்களை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment