நிரம்பு தளர்ச்சி வர காரணம் மன தளர்ச்சியே. நிரம்பு தளர்ச்சி தீர ஓஷோ சொன்ன வைத்தியம்.- www.v4all.org
இன்று நிரம்பு தளர்ச்சிக்கான தீர்வை பார்க்க போகிறோம். முதலில் நிரம்பு தளர்ச்சி வருவதற்கான காரணங்கள்.
பல மணிநேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்ப்பவர்கள். சரியான உடற் பயிர்ச்சி செய்யாமல் இருந்தால் நிரம்பு தளர்ச்சி வரும். முக்கியமாக. . நாம் மனதில் சேர்த்து வெய்க்கும் கவலைகள். நம்முடைய நாடி, நிரம்பு, சதை, எலும்பு, ரத்தம், புத்தி அனைத்தையும் பாதிக்கும். எனது பள்ளி நண்பன் ஒருவன். நல்ல வசதியான குடும்பம். ஆனாலும். அவன் தன்னை விட உயர்ந்த இடத்தில இருப்பவர்களோடு. தன்னை ஒப்பிட்டு கொண்டே இருப்பான். அதனாலேயே. அவன் ஒருநாளும் நிம்மதியாக இருந்தது இல்லை. அவனை மாற்ற. இரண்டு, மூன்று முறை முயற்ச்சி செய்து. ம்ஹ்ம். இது தேறாது என்று தண்ணீ தெளித்து விட்டு விட்டேன். ஒருநாள் நானும் எனது நண்பர்களும் மாயாஜாலில் ஜாலியாக படம் பார்த்து விட்டு மகாபலிபுரம் வந்தோம். அங்கும் அவன் புலம்பலை ஆரம்பித்து விட்டான். என்னுடைய நண்பர்கள். ஏண்டாப்பா. இவனை நம்ப செட்ல சேர்த்து கொண்டோம் என்பதை போல். ஒருவருக்கொருவர் பார்வையாலேயே பேசி கொண்டனர்.
நான் உடனே. கார்த்திக்கை யாருன்னு நினைத்தீர்கள். [ [பெயர் மாற்றப்பட்டுள்ளது ] சராசரி மனிசனால இந்த அளவு கவலைப்படவே முடியாது. நாடி, நிரம்பு, சதை, எலும்பு, ரத்தம், புத்தி. எல்லாத்துலையும். பண வெறி ஊறி போன ஒருத்தனால தான் இப்டி கவலைப்பட முடியும். என்று சொன்னவுடன். என் உடன் இருந்த 12 நண்பர்களும் கோரசாக சிரித்தார்கள். என் நண்பர்களில் ஒருவன். கார்த்திக். எனக்கு இப்பவே தெரிஞ்சி ஆகணும். உண்மையை சொல்லு. நீ நாலு வருசத்துக்கு மின்னாடி பாம்பேல என்ன பண்ணிண்டு இருந்த. என்று கேட்டான். ம். பாணி பூரி வித்துண்டு இருந்தான் என்று இன்னொருவன் சொன்னான். டேய். இப்ப தான். எந்திரன் பார்த்துட்டு வரோம். இங்க என்னடா. நீங்க எல்லாரும் சேர்ந்து பாட்ஷா பார்ட் 2 எடுத்துண்டு இருக்கீங்க .
இந்த சம்பவதிர்ற்கு பின் அவன். பிறர் முன். புலம்புவதை நிறுத்தி விட்டான். கொஞ்சமா. அவனை நாங்க ஒட்டினோம்.
தனக்கு மேல் உள்ளவர்களை பார்த்து பொறாமை கொள்வது. தனக்கு கீழ் உள்ளவர்களை பார்த்து மகிழ்ச்சி கொள்வது. இரண்டுமே தவறு தான். இதை பற்றி ஓஷோ கூறுவதை கேளுங்கள்.
ஒப்பிடுதல்:
மக்கள் எப்போதும் தம்மைப் பிறருடன் ஒப்பிடுவது வழக்கம். இந்த ஒப்பீடுகளால்தான் அவர்கள் மகழ்ச்சியாகவோ, துக்கமாகவோ இருக்கிறார்கள். புகழ் பெற்ற மகான் ஒருவரை நான் சந்தித்தேன். எனக்கும் அவருக்கும் இடையில் என்ன வேறுபாடு என்பதை அவர் சொன்னார். "துக்கப்படுகிறவர்களைப் பார்ப்பதில்தான் மகிழ்ச்சியின் மர்மமே இருக்கிறது. ஊனமானவனைப் பார்க்கும்போது, நீ ஊனமில்லாமல் இருப்பதற்காக மகிழ்வு தோன்றும். கண்ணற்றவனைப் பார்க்கும்போது, நீ அப்படி இல்லை என்பதில் மகிழ்ச்சி பிறக்கும். ஏழையைப் பார்த்தால் நாம் ஏழை இல்லை என்பதில் ஆனந்தம் தோன்றும்", என்றார் அவர்.
மேலே உளறாமல் இருக்க, நான் அவரைக் குறுக்கிட்டுத் தடுக்க வேண்டி வந்தது.
"உங்களுக்கு ஒரு சிறிய விஷயம் புரியவில்லை. ஒப்பிட ஆரம்பித்தால் அதற்க்கு முடிவே இல்லை. பரிதாபத்திற்குரியவர்களோடு மட்டுமே ஒருவன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ள மாட்டான். தன்னை விட வலிமை படைத்தவனோடும், மதிப்பு மரியாதை கொண்டவனோடும் ஒப்பிட ஆரம்பிப்பான். அதனால், துக்கமே உண்டாகும். நீங்கள் ஆனந்த இரகசியத்தைச் சொல்லவில்லை. துக்கத்தின் இரகசியத்தையே சொல்கிறீர்கள்!" என்றேன்.
ஆனால், இப்படித்தான் காலம் காலமாக நமக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள், வெவ்வேறு வார்த்தைகளில். ஆனால், அடிப்படை என்னவோ ஒன்றுதான். பல மத நுல்களும் இதைத்தான் சொல்கின்றன. மக்கள் துக்கப்படுகிறவர்களைப் பார்த்து நிறைவடைகிறார்கள். தாம் அப்படித் துன்பப் படவில்லையே என்று கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள். இது ஒரு பக்கச் சார்புடையதாகத் தொடர்ந்து இருந்து வரக் கூடாது. பிறரோடு உங்களை ஒப்பிட ஆரம்பிக்கும்போது உங்களை விடத் தாழ்ந்தவர்களோடு மட்டுமல்லாமல்,உயர்ந்தவர்களோடும் ஒப்பிடவே தோன்றும். மிஞ்சுவது நீங்காத கவலைதான். ஒப்பிடுதலே சரியில்லை. நீங்கள் நீங்களேதான். வேறு யாரும் அல்ல. ஒப்பற்றவர் நீங்கள். மற்றவரும் அப்படியே. அதனால்தான், ஒப்பிடாதீர்கள்.ஒப்பிடுவது உலகத்தோடு உங்களை விலங்கு மாட்டி விடுவது. அது போட்டி பொறாமைகளை ஏற்படுத்திவிடுகிறது. அது தனியாக வருவதில்லை. துணையுடனே வருகிறது.ஒப்பிடுவதற்கு முடிவே இல்லை.ஆனால், நீங்கள் முடிந்துவிடுவீர்கள்!அதை ஏற்றுக் கொள்வது, வாழ்வின் தவறான பாதையைத் தேர்ந்தெடுப்பதாகும்.
ஓஷோ சொன்ன இந்த ஆனந்த ரகசியத்தை நாம் வாழ்வில் பின்பற்ற ஆரம்பித்தால். நமக்கு நிரம்பு தளர்ச்சியோ, Bp யோ வருமா.
நமது கவலைக்கு இன்னொரு காரணம். மத்தவங்க என்ன? நம்பளை பத்தி நினைபாங்களோ என்று. நமக்கு பிடித்த. சின்ன, சின்ன விசயங்களை கூட இன்பமயமாக அனுபவிக்காமல். அவற்றை. மனதிற்குள்ளேயே குழி தோண்டி புதைத்து விடுவது. இந்த உலகில் பலர். ஊர் என்ன சொல்லுமோ, உலகம் என்ன சொல்லுமோ என்று பயந்து, பயந்து தனக்கு பிடித்த மாதிரி வாழாமல். அடுத்தவர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டும் என்பதற்காக. போலி தனமாக வாழ்கிறார்கள்.
இந்த உலகம் ஒரு நாடக மேடை. நாம் அனைவரும் அதில் நடிகர்கள் என்றார் ஷேக்ஸ்பியர். அவர் ஏதோ ஒரு Flow ல சொல்லிட்டார். அதை அப்படியே நம்ப பாலோ பண்ணனுமா என்ன. கையை வீசி நெஞ்சை நிமிர்த்தி. எந்த அளவு நாம் வேகமாக நடக்கிறோமோ. அந்த அளவு. உடல் ஆரோக்யத்திற்கு நல்லது. ஒருமுறை. எனக்கு தெரிந்த ஒருவர். நீ இவ்வளவு வேகமாக நடந்து வருவதை பார்த்தால். யாரோ ஒரு பத்து பேரை அடிக்க வருவதை போல் இருக்கிறது. கொஞ்சும் Casual லா நடையேன். எதற்க்கு இந்த 8,9 கிலோ மீட்டர் வேக நடை. இவ்வாறு நீ நடப்பது நன்றாக இல்லை. நான் அவரிடம் பொறுமையாக. உங்களுக்கு பிடித்த மாதிரி நடந்தால். அதனால் எனக்கு ஏதேனும் பரிசு கிடைக்க போவதில்லை. எந்த மாதிரி நான் நடந்தால் எனக்கு பிடிக்குமோ, அந்த மாதிரி தான். தெருவிலும் சரி. என் வாழ்விலும் சரி. நடப்பேன். எனது வாழ்க்கை. எனக்கு பிடித்த மாதிரி நான் வாழ வேண்டும். ஊர் உலகம் என்ன சொல்கிறது என்பதை பற்றி எனக்கு கவலை இல்லை.
உங்களது உடல் ஆரோக்யத்தை, பிறரது உடலை, மனத்தை காயபடுத்தாத எந்த ஒரு விசயமும் தவறே இல்லை.
என்னுடைய நண்பன் ஒருவன். ஒருநாள். நான் அவன் வீட்டிற்க்கு எனது நண்பர்களோடு சென்று இருந்தேன். அன்று ஞாயிற்று கிழமை. நாங்கள் அவனது ரூமிற்க்கு செல்லும் வரை. அவன் டிவியில் சோட்டா பீம். டோரீமான் என்று இரண்டு கார்ட்டூன்கள் மாறி, மாறி பார்த்து விடுமுறையை மகிழ்வாக கழித்து கொண்டிருந்தான். நாங்கள் அவனோடு பேசி கொண்டிருக்கும் பொழுது. அவனோட அம்மா. அவன் அறைக்குள் வந்தார். ஏழு கழுதை வயது ஆய்டுத்து. இன்னும் இவன் உட்கார்ந்து. ஒன்னாம் கிளாஸ்ல பார்த்துண்டு இருந்த. கார்ட்டூன்களை பார்த்துண்டு இருக்கான். நீங்க யாராவது. இன்னுமும் பொம்மை படம் பார்த்துண்டு இருக்கீங்களா என்று கேட்டார். நானும் நேரம் கிடைக்கும் பொழுது கார்ட்டூன் பாக்கற டம்மி பீசு தான் என்று மைண்ட் வாய்ஸ்ல நினைச்சேன். ஆனால் வாயை திறந்து சொல்லலை. எனது நண்பனோ. பொறுமையாக. நீ தினமும் மெகா சீரியல் பார்த்து அழுவதற்க்கு. நான் . கார்ட்டூன் பார்த்து சிரிப்பது ஒன்றும் தவறு இல்லை என்று. தன்னுடைய அம்மாவிற்க்கு. மென்மையான குரலில், மேன்மையாக பதில் சொல்ல. அவனது தாயார். மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
கார்டூனில் ஆரம்பித்து. பார்க்கில் ஊஞ்சல் ஆட வெக்கபடுவது வரை. பல பெரியவர்கள். ஊர், உலகத்திற்காக. தனக்குள் உள்ள அணைத்து ஆசைகளையும் குழி தோண்டி புதைக்கிறார்கள். குழந்தை தனத்தை கொல்கிறார்கள். நாம் வேலை செய்யும் அலுவலகத்தில். மாணவர்கள் என்றால். பள்ளி, கல்லூரியில். அங்கே உள்ள சட்ட, திட்டங்களுக்கு கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும். அது தவறில்லை. ஆனால். உங்களுக்கு கிடைக்கும் ப்ரீ டைம்மில். உங்களுக்கு பிடித்த மாதிரி நீங்கள் வாழ்வதில் என்ன? தயக்கம். சில நடிகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்றால். காதல் காட்சிகள் உட்பட. அணைத்து காட்சிகளிலும் விறைப்பாகவே இருப்பார்கள்.அதே போல் தான் சிலர். மனதை எப்போதும் விறைப்பாக, விழிகளை முறைப்பாக வெய்த்து உள்ளனர்.
நீ யாருக்காகவும் உன்னை மாற்றி கொள்ள நினைக்காதே. அவ்வாறு மாற்றி கொள்ள நினைத்தால். ஒவ்வொருவருக்காகவும். உன்னை நீ மாற்றி கொள்ள வேண்டியதாக இருக்கும்.
கண்ணதாசன்.
எதையும் டேக் இட் ஈசியாக எடுத்து கொள்ள பழகுங்கள். நாம் கவலைபடுவதால் நமது பிரச்சனைகள் தீரும் என்றால் கவலைபடலாம். கவலைபடுவதால் நமது பிரச்சனைகள் தீர போவதில்லை. பின்னர் ஏன்? கவலைப்பட வேண்டும். குழப்பம், கவலை, கோபம் இந்த மூன்றும் இல்லாத நேரங்களில் தான். நமது மனம் தெளிவாக இருக்கும். தெளிவாக இருக்கும் மனம் தான் சரியான முடிவை எடுக்கும். அதனால். முதலில் கவலையை தூர எறியுங்கள்.
No comments:
Post a Comment