மன உளைச்சலை குறைக்க 5 வழிகள் :
**சிரிங்க பிளிஸ் **
சிரிச்சீங்கன்னா உங்க ரத்த நாளங்கள் ரிலாக்ஸ் ஆகி அதிக ரத்தத்தை பாய்ச்சும்! கடுகடுத்தீங்கன்னா, எதிர்மறை நடக்கும். ரத்தம் குறைஞ்சு ஏக டென்ஷன்.
**நல்லா மூச்சு எடுங்க! **
இது பிரணாயாமம் இல்லை. ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், எலுமிச்சை, மல்லிகை, துளசி போன்ற வாசனைகள் நல்லா முகர்ந்து பாருங்க! லினாலூல்ய் என்ற ஒரு கலவை இதில் உள்ளது. அது படபடப்பை குறைக்கும் சக்தி கொண்டது.
**சூயிங்கம்**
பசக் பசக் என்று சத்தம் போட்டு மற்றவர்களை எரிச்சல்படுத்தாமல், அமைதியாக மெல்லுங்கள். ‘சூயிங்கம், படபடப்பை குறைக்கும்’ என ஒரு சூயிங்கம் நிறுவனத்தார் ஆய்வு செய்து கூறியுள்ளனர்.
**பிளாக் டீ **
பால் இல்லாமல் சக்கரை இல்லாமல் வெறும் தேநீரை குடித்து வர, நோய் டென்ஷன். உடலில் உள்ள சர்க்கரை அளவும் குறையும்!
**‘சீ க்யுகாங்’ என்ற சீன பயிற்சி**
சுவரை பார்த்தபடி நில்லுங்கள். தலையை இடது புறமாக திருப்பும் போது மூச்சை இழுங்கள். தலையை மீண்டும் நடுநிலைக்கு கொண்டு வரும் போது மூச்சை விடுங்கள்.
இப்படியே லெஃப்ட், ரைட் செய்து வர, சில நிமிடங்களில் நோ டென்ஷன்.
மன உனைச்சலை தவிர்த்து வாழ்ந்தால் உங்கள் உடல் இளமையாக இருக்கும்! அதனால் மீண்டும் படியுங்க.... படிச்சபடி செய்யுங்க!
urs
Dr.Star anand ram
www.v4all.org
No comments:
Post a Comment