ஜீரன சக்திக்கு உதவும் வாழ்கை முறைஉணவு முறை. நா சொல்வதை. கேட்க கூடாது. -www.v4all.org
ஜீரன சக்தியை அதிகரிக்க. என்ன, என்னவெல்லாம் சாப்பிடலாம் என்பதை பார்க்கும் முன். ஒரு மனிதன், மனுசி ஆரோக்யமாக வாழ. ஒரு நாளைக்கி எவ்வளவு சாப்பிடலாம். எந்த, எந்த வேளைகளில் எவ்வளவு அளவு சாப்பிட வேண்டும். என்பதை பற்றி பாப்போம்.
வெறுமன உட்கார்ந்த இடத்தில் வேலை பார்பவர்கள். அதாவது. physical work. உடற் பயிர்ச்சி கூட செய்யாதவர்கள், செய்ய முடியாதவர்கள். ஒரு நாளைக்கி 1800 கலோரி உணவை தான் அதிக பக்சம் எடுத்து கொள்ள வேண்டும். கடின உடற் பயிர்ச்சி செய்பவர்கள் ஒரு நாளைக்கி 2500 கலோரியில் இருந்து. 4000 அதுக்கும் மேல. அவுங்க எந்த அளவு exercise பண்றாங்களோ அதற்கு தகுந்த மாதிரி சாப்பாடு எடுத்து கொள்ள வேண்டும்.
இப்பொழுது நான் என்று எடுத்து கொண்டால். மணிக்கு ஏழு கிலோ மீட்டர் வேகத்தில். ஒரு நொடி கூட ஓய்வு எடுக்காமல் இரண்டு மணி நேரம் நடப்பேன். 14 கிலோ மீட்டர். என்னுடைய நடை வேகத்திற்கு. ஒரு மணி நேரத்தில் 750 கலோரிகளாவது எரியும். ஆக வெறும் நடையிலேயே. எனக்கு 1500 கலோரிகள் எரிக்கப்படும். அதை தவிர்த்து இரண்டரை மணி நேர கடுமையான உடற் பயிர்ச்சி. முதலில் Floor Exercise ஒண்டரை மணி நேரம். பின்னர். பவர் டியூப், மசில் மாஸ்டர், டம்பிள்ஸ், கர்லா கட்டை, க்ரிப் ட்ரைனர் போன்ற instrumental exercises ஒரு மணி நேரம்.
ஒரு நாளைக்கி. 5000 கலோரிகள் கிடைக்கும் உணவை எடுத்து கொண்டால் தான். என்னால். இவ்ளவும் பண்ண முடியும். 2500 கலோரிகள் உள்ள உணவை எடுத்து கொண்டால். பாதி நடக்கும் பொழுதே. நான் சுருண்டு தெருவில் விழுந்து விடுவேன். ஆக. நீங்கள் உண்ணும் உணவானது. நீங்கள் செய்யும் உடல் உழைப்பிற்கு தகுந்த அளவு இருக்க வேண்டும்.
நாம் சாப்பிடும் பொழுது. நாவின் பேச்சை கேட்க கூடாது. வயிற்றின் பேச்சை கேட்க வேண்டும். அது தான். உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.
தலை வாசல் விஜய்யை பலருக்கு. அவர் ஒரு சாதாரண குண சித்திர நடிகராக தான் தெரியும். உண்மையில் அவர் ஒரு மிக சிறந்த யோகா ஆசிரியர் மற்றும் நீச்சல் வீரரும் கூட. அவரின் மகள் ஜெய வீணா. வயது 12. சமீபத்தில். கேரளாவில் தேசிய அளவில் நடந்த நீச்சல் போட்டியில் தங்க பதக்கம் வென்றாள். தலை வாசல் விஜய். உணவின் அளவு முறை பற்றி பலமுறை சொல்வது.
காலையில் ராஜா மாதிரி சாப்பிடனும், மதியம் கொஞ்சும் கம்மியா. ராணி மாதிரி. இரவு பிச்சை காரன் மாதிரி.
நைட் எப்போதுமே புல் லோட் வயிற்றில் ஏற்ற கூடாது.
சாப் பிட்டு அரை மணி நேரம் கழித்து தான். நாம் தண்ணீர் குடிக்க வேண்டும். நடுவில் விக்கல் எடுத்தால் வேறு வழியில்லை. அது எப்பொழுதாவது தற்செயலாக நடக்கும் ஒன்று. இரவு நாம் துங்க போவதற்கு இரண்டு மணி நேரம் முன்பே உன்ன வேண்டும்.
மிக கடுமையான உடற் பயிற்சியெல்லாம் செய்ய வேண்டும் என்று கூட அவசியம் இல்லை. உங்களால் முடிந்தால் செய்யலாம். ஒரு நாளைக்கி 15 நிமிடங்கள் உடற் பயிற்ச்சி செய்தாலே ஆரோக்யமாக வாழலாம். மற்றும் தினமும் 30 நிமிட நடை.
ஜீரன சக்திக்கு நாம் எடுத்து கொள்ள வேண்டிய உணவுகள்.
சூடான நீரில் சிறிது எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து வெறும் வயிற்றில் குடிப்பது. உடல் இளைக்க, ஜீரன சக்தி இரண்டிற்கும் நல்லது. மற்றும் வேப்பிலை கட்டி.
உங்களில் சிலருக்கு இதை பற்றி தெரிந்து இருக்கும். தெரியாதவர்கள். இது ஏதோ. வேப்பிலையில் இருந்து செய்யபடுவது என்று நினைப்பார்கள். உண்மையில் இதற்கும், வேப்பிலைக்கும் சம்பந்தமே இல்லை. இதற்கு எதனால் அந்த பெயர் வந்தது என்று தெரியவில்லை. பெயர் ஆராய்ச்சி எதற்கு. இது உடல் ஆரோக்யதிற்கும், ஜீரனத்திற்கும் நல்லது.
இதை எப்படி செய்வது.
நாரத்தை, எலுமிச்சை இலைகள். ஒரு கைப்பிடி.
கறிவேப்பிலை அரை கைப்பிடி.
மிளகாய் வற்றல்—-3
ஓமம், அல்லதுசீரகம் 2 டீஸ்பூன்
பெருங்காயப்பொடி— அரை டீஸ்பூன்
ருசிக்கு—-உப்பு
கடுகு, வெந்தயம் வகைக்கு கால் டீஸ்பூன்
நல்லெண்ணெய்—–சிறிது.
நாரத்தை இலை மற்றும் எலுமிச்சை இலைகளில் நார் பகுதியை நீக்கி விட்டு சிறு இலைகளாக கிழித்து கொள்ளவும். கறிவேப்பிலை அப்படியே
சேர்க்கலாம்.
வெறும் வாணலியில் கடுகு,வெந்தயத்தை சிவக்கவும்,ஓமத்தை
வாஸனை வரும்படியும் வறுத்து ஆறவிடவும்.
மிளகாயைத் துளி எண்ணெயில் வறுத்து , உப்பு,பெருங்காயம்
சேர்த்து மிக்ஸியில் அரைத்து. ஒரு முறை கிளறிவிட்டு ஒன்று சேர
பொடிக்கவும். தண்ணீர் இதில் கொஞ்சும் கூட சேர்க்க வேண்டாம்.
சற்று கெட்டியாக மசிந்ததை எடுத்து சிறிய வில்லைகளாகவோ
உருண்டையாகவோ செய்து சிறிது சிறிதாக
உபயோகிக்கலாம்.
சிறிய பாட்டில்களில் போட்டு மூடிவைத்து உபயோகிக்கவும்.
நாரத்தை, எலுமிச்சை,இலைகள் பித்தத்தை நீக்கி நாவிற்கு
ருசியைக் கொடுக்கும். இது சற்று விறுவிறுவென்று இருக்கும். அனைவரின் நாவிற்கும் இது பிடிக்குமா என்று தெரியவில்லை. ஏற்கனவே நான் மேலே சொன்னதை போல். நாவின் பேச்சை கேட்க கூடாது. வயிற்றின் பேச்சை கேட்க வேண்டும். இந்த வேப்பிலை கட்டி. காதி, அம்பிகா அப்பளம் டிப்போ, மற்றும் பல நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தயிர், மோர் அண்ணம் உண்ணும் பொழுது. உருகாய்க்கு பதில் இதை தொட்டு கொண்டால். நல்ல விறு, விறுப்பா இருக்கும். உடல் ஆரோக்யத்திற்கும் நல்லது.
இஞ்சி ஜீரணத்திற்கு நல்லது என்பது அனைவருக்குமே தெரியும். தெரிந்து பயன் இல்லை. அதை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் தான் பயனே. நான் தினமும். மூன்று வேளையும். சாப்பிட்டு அரை மணி நேரம் இடைவேளை விட்டு. இஞ்சி மரப்பா ஒரு சிறிய துண்டு வாயில் மென்னுவேன். நெல்லிகாய் சாப்பிட்டு தண்ணீர் குடித்தால். எவ்வாறு தண்ணீர் தித்திக்குமோ. அதே போல். இஞ்சி மறப்பா சாப்பிட்டு தண்ணீர் குடித்தால். அது ஒரு தனி சுவை.
பப்பாளி பழம் ஜீரன சக்திக்கு நல்லது. வெளி நாடுகளில் மாமிச உணவு செய்யும் பொழுது. சிறிது பப்பாளி துண்டை சேர்த்து கொள்வார்கள்.
கொத்தமல்லியை சாறாக்கி. அதனுடன் ஒரு கரண்டி ஜீரகம் கலந்து. அது இரண்டையும் தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
மோரில் ஓமம் கலந்து குடிக்கலாம்.
பெருங்காயத்தை மட்டுமே. சாப்பாட்டில் போட்டு. அதோடு சிறிது நெய்யும் கலந்து உண்பது. ஜீரணத்திற்கு மிக நல்லது. ஒரு 2,3 உருண்டை அவ்வாறு சாபிட்டாலே போதும்.
அஷ்ட்ட சூர்ணம். எட்டு விதமான ஆயுர்வேத முலிகைகளால் இதை தயார் செய்வார்கள். இதன் சிறப்பு என்னவென்றால். பசியே எடுக்கவில்லை என்றாலும். வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்கி பசியை துண்டும். ஔட் கோயிங் ரொம்ப ஓவரா இருந்தாலும். அதை கட்டுபடுத்தும். கோட்டக்கல் போன்ற ஆயுர்வேத மருந்து கடைகளில் கிடைக்கும். வாரம் ஒரு முறை அல்லது இரு முறை. அஷ்ட்ட சூரணத்தை அன்னத்தில் ரெண்டு ஸ்பூன் போட்டு. அதில் நெய் ஒரு ஸ்பூன் கலந்து உண்ணலாம்.
No comments:
Post a Comment