கம்ப்யூட்டர் முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்களுக்கு முதுகு வலி, கழுத்து வலி, இடுப்பு வலி என ஏகப்பட்ட வலிகள் வந்து கொண்டே இருக்கும்.
முதுகு வலியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் நமது இதழில் ஏற்கனவே பார்த்துவிட்டோம்.
கழுத்து வலி ஏற்படாமல் தவிர்க்கும் விதத்தை இப்போது பார்ப்போம்.
* கம்ப்யூட்டர் முன் உட்காரும் போதும் அல்லது மேஜை முன் உட்கரார்ந்து பணி செய்யும் போது நேரான கோணத்தில் உட்கார வேண்டும்.
* படிக்கும்போது புத்தகத்தை உங்களுக்கு நேர் எதிரில் வைத்துக் கொள்ளவும்.
* மேஜையில் அமர்ந்து பணி ஆற்றும்போது நெடுநேரம் தலை கவிழ்ந்த நிலையைத் தவிர்க்கவும்.
* ஒரே நிலையில் நெடுநேரம் கழுத்தை வைத்திருக்காமல் அடிக்கடி தலையை அசைக்கவும். இது தசைகள் இறுக்கம் அடைவதைத் தவிர்க்கும்.
* படுக்கும்போது தலைக்கு மிருதுவான ஒரே ஒரு தலையணையை வைக்கவும்.
* குப்புற படுக்க வேண்டாம். மல்லாந்து படுங்கள்.
* தலையை உயர்த்தியபடி அதிக நேரம் பார்க்க வேண்டாம். அதிக கனத்தை அதிக நேரம் தூக்க வேண்டாம். கொஞ்சம் இடைவெளி விடவும்.
* நெடுநேரம் வாகனத்தை ஓட்ட வேண்டாம். அடிக்கடி கொஞ்ச நேரம் ஓய்வெடுங்கள்.
**வலி ஏற்பட்டால் செய்ய வேண்டியது****
* கடுமையான வலி ஏற்பட்டால் பதட்டப்படாமல் ரிலாக்சாக இருங்கள்.
* வலி ஏற்படும் சமயத்தில் படுக்கையில் படுத்து ஓய்வு எடுக்கவும். வலிக்கும் இடத்தில் வெந்நீர் (அல்லது) ஐஸ் ஒத்தடம் கொடுங்கள்.
**உடற்பயிற்சிகள்***
கழுத்து தசைகள் உறுதியாக இல்லாததுதான் கழுத்து வலிக்கு முக்கிய காரணம். கழுத்து தசைகளை உறுதியாக்கும் வகையில் உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
கழுத்துப் பயிற்சியை அதிக அளவில் செய்யக் கூடாது. நிதானமாகவும், படிப்படியாகவும் செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment