Showing posts with label business motivation. Show all posts
Showing posts with label business motivation. Show all posts

Monday, September 19, 2016

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி?

மனதை ஒருமைப்படுத்துவது எப்படி? 
.
காலக்கெடு !
மனதை ஒருமுகப்படுத்த முயற்சிக்கிறோம் என்றால் எந்த ஒரு வேலைக்கும் காலக்கெடு நிர்ணயித்துக் கொள்வது நல்லது. காலக்கெடு விதித்துக் கொண்டால், முக்கியமில்லாத பணிகள் மறந்து போய், முக்கியமான பணிகள் மட்டுமே நினைவில் பதிந்து அதனை முடிக்க வைத்துவிடும்.
.
தூக்கம் !
நேரத்திற்குப் படுக்கைக்குச் சென்று தூங்கி எழுந்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். அசதி, களைப்பு, போதுமான தூக்கமின்மை ஆகியவை மனதை ஒருமுகப்படுத்துவதை பாதிக்கும் காரணிகளாகும்.
.
சீரான முன்னேற்றம் !
மனம் ஒருமுகப்படவில்லை என்று கருதினால், பணிகளில் சிறு சிறு முன்னேற்றத்தினை காட்ட வேண்டும். கவனம் சிதறுவது போல் கருதினால் மன சிதறலின் அளவினை சிறிது சிறிதாகக் குறைக்க முயல வேண்டும்.
.
இதயமும் மனமும் !
இடைப்பட்ட பணியினை சிறப்பாக செய்து முடிக்க மனம் தான் அவசியம். எனினும் ஒரு நேர்மறையான அணுகுமுறையும், அதனுடன் இருந்தால் அப்பணி மிக எளிதாக முடியும். பணியினை அனுபவித்து, ஈடுபடுத்திக் கொண்டு, ரசித்து செய்யும் போது, மனம் உண்மையிலேயே அதில் முழுமையாக ஈடுபடும். மேலும் முழு ஒருமைப்பாடு கிடைக்கும். அப்பணியும் வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்படும்.

Sunday, July 31, 2016

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை எல்லாம் இன்பமயம்

மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும்  இல்லை எல்லாம் இன்பமயம்

மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்று மகான் ரமணர் கூறுவார்.
எங்கே எண்ணங்கள் தோன்றுகின்றனவோ, எங்கே அவை தொடங்குகின்றனவோ,
அங்கே உள்ள ஒன்றையே நாம் மனம் என்கிறோம்.
மனம் என்பது தனியே ஒன்று இருப்பதில்லை அது எண்ணங்களையே சார்ந்துதிருக்கிறது. நான் என்ற எண்ணத்தையே முதன்மையாய்க் கொண்டது. அகத்தில் ஆன்மாவையும் , புறத்தில் உலகத்தையும் அது கொண்டிருக்கிறது. அது தனித்திருப்பத்தில்லை அதற்கெண தனியாக ஒரு இடம் கிடையாது.
எண்ணங்கள் ஆற்றல் மிக்கவை தற்போது பயனற்றதாய் உள்ள எண்ணம் அதுவே பிறகு பயனுள்ளதாயிருக்கும்.
நான்,எனது,என்னுடைய,எனக்கு என்ற ஒவ்வொரு எண்ணத்திலும் ஒரு அகந்தை இருக்கிறது.மணதுக்கென வலிமையுண்டு அது எண்ணங்கள்ற்ற நிலையில் அளவற்ற வலிமையுடன் இருக்கும். நாம் மனதை பயன்படுத்தி நம்மையறிவதில்லை நம்மை சுற்றியுள்ள புறப்பொருள்களையே அறிகிறோம். ஞானம் வந்துவிட்டால் இந்த மனம் தனக்குள் இந்த பிரபஞ்சத்தை காணும். பிரபஞ்சத்தில் தன்னைக் கண்டுக்கொள்ளும்.
மனதை வசப்படுத்திவிட்டால் துன்பமும் இல்லை துயரமும் இல்லை. ஆசையை விடவேண்டும். சொல்லற்று செயல்லற்று சும்மாயிருக்கும் நிலையை அடையவேண்டும். தியானத்தின் மூலமே மனதை வசப்படுத்த முடியும். அதனால் தான் சும்மாயிரு என்கிறது பல மகான்களின் நூல்கள். சும்மா இருப்பது என்பதே தவம் அதை வள்ளல் பெருமான்கெஞ்சுவதை பாருங்கள்
இன்று வருமோ? நாளை வருமோ?
அல்லது மற்று என்றுதான் வருமோ?
துன்று மல வெம்மாயை அற்று
வெளிக்கு உள் வெளி கடந்து
சும்மா இருக்கும் சுகம்.
அதையே பத்தரகிரியார் சும்மா இருப்பதை நினைத்து இப்படி ஏங்குகிறார்.
ஆங்காரம் உள்ளடக்கி ஐம்புலனை சுட்டறுத்து
தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம்.
ஒரு பக்கதனுடைய மனம் அறிகிறது தனக்குள் மனமாகவும் ,பிராணனாகவும் , ஆன்மாவாகாவும் இருப்பது இறைவனே. அவனுக்குள் மிகப்பெரிய நம்பிக்கை இருக்கிறது அவனுடைய துடிப்பும், ஏக்கமும், அருள்தாகமும் அதைச் சாத்தியப்படுத்துகிறது என்று ராமகிருஷ்ணர் கூறுகிறார்.அகந்தை ஒரு திரை அந்தத் திரையை விலகினால், அதுவரை அறிந்திராதவைகளை அறிய முடியும், கணமுடியாத காட்சிகளை காணமுடியும், இறைக்காட்சி உட்பட.

Yours Happily
Jc.Dr.Star Anand ram
www.moneyattraction.in
9790044225

Saturday, June 18, 2016

வேதம் என்றால் என்ன?

வேதம் என்றால் என்ன?



எதற்கு?


இந்தியப் பண்பாட்டுக்குப் பழமையான ஆதாரமான முதல்நூல் வேதம்.

உலகிலேயே மிகவும் பழமையான நூல் வேதம் என்பதைச் சரித்திர வல்லுனர்கள் அனைவரும் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

வேதம் என்றால் ஞானம். பரம்ப்ருளை அறிவிக்கும் வழி, பேரறிவைப் பார்த்தல் என்ற பல பொருள்கள் உண்டு.

இவ்வுலக நன்னெறியையும் தெய்வீக நெறியையும் அறிவிக்கும் நூல் வேதம்.

அந்த அந்த ஸ்வரங்களைத் தவறாமல் உச்சரித்தால் பயன் தரக்கூடிய வல்லமை பெற்ற மந்திரங்களைக் கொண்ட பழநூலே வேதமாகும்.

மாந்தர் நல்வழியில் வாழ்ந்து விரும்பியவற்றை பெறவும் தீமைகளை விலக்கவும் தெய்விகமான உபாயங்களை அறிவிக்கும் கிரந்தமே வேதம்.

இஷ்டப்ராப்தி – அநிஷ்டபரிஹாரயோ:, அலௌகிகம் உபாயம் யோ க்ரந்தோ வேதயதி ஸ வேத: என்று வேத பாஷ்யகாரரான ஸாயணர் என்ற மஹரிஷி வேத்த்துக்கு லக்ஷணம் கூறியிருக்கிறார்.

மாந்தரைத் தெய்வீக நெறியில் வாழ வழி கூறுவது வேதம். இன்னும் வைணவர்கள் ஒருவரை ஒருவர் “ தேவரீர் “ என்று சொல்லி வழங்குவதைப் பார்க்கிறோம். மாந்தரை மனிதராக வாழ வழி காட்டுபவை. வேத ரிஷிகள் அல்லாத பிறர் இயற்றிய நூலகள் மாந்தரை விலங்கு வழியில் செலுத்தும் நூல்களையும் இன்று சிலர் எழுதுவதைக் காண்கிறோம்.

“ பகவத் ஸங்கல்பம் – இறைவனது திருவுள்ளம் என்பதை மையமாகப் பற்றிக் கொண்டு நன்னெறியில் வாழ்ந்துள்ள பலரை நாம் நேரில் கண்டிருக்கிறோம். நல்ல வாழ்வுக்கு வழி காட்டும் வேதத்தையே அவர்கள் ந்டைமுறையில் கடைப்பிடித்திருந்தார்கள்.

யுகம் யுகமாக என்றும் நிலைத்துள்ள வேத மந்திரங்களை ரிஷிகள் நெடும் தவத்தினாலும் மன ஆற்றலினாலும் கண்டார்கள்.

மிகவும் நுட்பமான அறிவு வடிவில் இருக்கும் வாக்கே “பரா” என்பது: இதுதான் வேதம், ரிஷிகள் இதைக் கண்டதும் இந்த வாக்கு “பஸ்யந்தி” என்ற பெயர் பெற்றது. சொல் வடிவாகத் தோன்றும் வேதம் இது. இதற்கு இடம் நாபி {தொப்புல்} இது ஸ்தூல வடிவம் கொள்ளும் போது “ மத்யமா வாக்கு “ ஆகிறது.

இதற்கு இடம் இருதயம். இதுவே நெஞ்சு வழியாக வெளிவரும்போது ஒலி வடிவம் பெற்று “ வைகரீ வாக்கு “ ஆகிறது.

வேதம் அநாதி, என்றும் உள்ளது; இறைவனின் மூச்சுக் காற்று இது. வானத்தில் எப்போதும் ஒலிவடிவமாக இது மறைந்துள்ளது.

“மலைக் குகைகளிலும், ஆறுகள் சங்கமிக்கும் இடங்களிலும் பேரறிவு வாய்ந்த ரிஷிகள், வேத மந்திரங்களை வெளியிடப் பிறந்தார்கள்.” – உபஹ்வரே கிரீணாம், ஸங்கதே ச நதீநாம், தியாவிப்ரோ அஜாயத – என்று ரிக்வேதம் கூறுகிறது. நம் சமயப் பெரியோர்கள் யாவரும் இத்தகைய புனித இடங்களிலேயே அவதாரம் செய்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

“ வேதம் முழுவதுமே மாந்தரின் நற்கடமையைப் போதிக்கிறது “ என்பது ஜைமினியின் கொள்கை. {மீமாம்ஸா ஸூத்ரம், 1-2-1}

“ ரிஷிகள் வேத மந்திரங்களைக் கண்டவர்கள். இயற்றியவர்களல்லர் “ என்று நிருத்தம் கூறுகிறது. அந்த அந்தக் காலத்தில் முன்பு இருந்தபடியே வேத மந்திரங்கள் முனிவர் வாயிலாக வெளி வருகின்றன.

அளவற்று ஒன்றாக இருந்த வேதத்தை வியாச மஹரிஷி உலக நன்மைக்காக மந்திரங்களைத் தொகுத்து நால்வகையாக வகுத்தார்.

“ ரிக், யஜுர், சாம, அதர்வண “ என்று வேதம் நான்காக வகுக்கப் பெற்றதைப் புருஷ ஸூக்தம் தெரிவிக்கிறது.

இந்த நான்கு வேதங்களும் ஒன்றுடன் மற்றொன்று தொடர்பு கொண்டவை.

ரிக் வேதம் தேவர்களைப் பற்றிய துதிகளின் தொகுப்பு;

யஜுர் வேதம் வேள்வி முறைகளை வர்ணித்து உரைப்பது;

ஸாம வேதம் வேத மந்திரங்களை இசைத்துப் பாடுவது;

அதர்வண வேதம் மாந்தர் இந்த உலகில் நோயின்றி நீண்ட வாழ்வு வாழ உதவும் மூலிகைகளைப் பற்றியும், மருத்துவம் பற்றியும், ஆயுளை நீட்க்கும் மந்திரங்கள் பற்றியும் விரிவாக கூறுவது. ஜோதிடம், மாந்திரீகம், தாந்திரீகம் எல்லாம் இதில் அடக்கம்.

இந்த வேதங்களுக்கும் அவற்றின் அங்கங்களுக்கும் உரை இயற்றிய வேத பாஷ்யகாரர்கள் எழுபது பேர் விளங்குகிறார்கள்.

வேதப் பகுதிகளில் ஐயத்துக்கு இடமான பொருள்களை நன்கு விளக்குவது – பிராம்மணம் என்ற நூல்.

மூல நூலான ஒவ்வொரு வேத சமிதைக்கும் அதைச் சார்ந்த பிராம்மணம் உண்டு.

வேதவ்யாக்யா நரூபத்வாத் ப்ராஹ்மணஸ்ய – வேதத்துக்கு உரையாக விங்குவது ப்ராஹ்மணம் என்று ஸாயனர் கூருகிறார்.

 பிராம்மணத்துடன் இணைந்தது ஆரண்யகம் என்ற பகுதி.

ஆற்றங்கரையில் தவ வனங்களில் ரிஷிகள் ஆராய்ந்து மிக்க அமைதியுடன் கண்ட உண்மைகளை ஆரண்யகம் அறிவிக்கிறது.

ஆரண்யகத்தின் கடைசியில் வருவது உபநிஷத் – முடிந்த முடிவான ஆராய்ச்சி உண்மைகளைக் கூறுவது இதனால்தான் உபநிஷத்துக்கு “ வேதாந்தம் “ என்று பெயர். இந்த விதிக்கு விலக்காக, சுக்ல யஜுர் வேதத்து வாஜஸ்னேய ஸமிதையின் விளங்குவது – ஈசாவாஸ்ய உபநிஷதம்.

சதபதப் பிராம்மணத்தின் கடைசியில் ஆரண்யகமும் உபநிஷதமுமாக விளங்குவது பிருகதாரண்யகோபநிஷத்.

வேத மந்திரங்களுக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் அது மந்திரங்களின் குற்றமல்ல. குருடனுக்கு எதிரே இருக்கும் கம்பம் தெரியா விட்டால் அது கம்பத்தின் குற்றமல்ல குருடன் இயற்றிய குற்றமாகும். என்று யாஸ்கர் உரைக்கிறார்.

வேத மந்திரங்களுக்கு முதன் முதலாக உரை வகுத்தவர் யாஸ்கர்; அவர் பழமையான ஸம்ஸ்கிருத மொழி இலக்கணத்தில் மிகவும் வல்லவர்.

ரிக் வேத ஸூக்தங்கள் ஒரே பரம்பொருள் தெய்வீக நெறியில் கடமைகளை ஆற்றுவதற்காக அக்கினி, இந்திரன், சோமன், வருணன், விஷ்ணு முதலிய பல வடிவங்களில் தோன்றுவதை வர்ணிக்கின்றன.

அக்கினி வானத்தில் சூரியனாகவும், இடைவெளியில் வாயுவாகவும் பூவுலகில் நெருப்பாகவும் விளங்குகிறான். அவனே வீட்டைக் காக்கும் தெய்வம்.

வருணன் கடல்வாழ் தெய்வம்; மாந்தரின் பாவ புண்ணியங்களை அவன் காண்கிறான்; வருணபாசம் பாவிகளைக் கட்டுப்படுத்துகிறது.

மூவடியினால் மூவுலகங்களிலும் வியாபித்த விஷ்ணு கடுமையான இடங்களிலும் மலைக் குகைகளிலும் திரிகிறான்; இவனுடைய ஈரடிகளை மாந்தர் இவ்வுலகில் காண இயலும்; மூன்றாவது திருவடி, மிகவும் உயர்ந்த விண்ணுலகில் விளங்குகிறது; வெள்ளத்தைப் பருகிப் பேரானந்தம் எய்துகின்றனர்.

வாயுதேவன் காதைச் செவிபடுத்தும் இடியோசையை உண்டாக்கி மின்னலுடன் மழையைப் பொழியத் தூண்டுகிறான். புயற்காற்றினால் பெரிய பெரிய மரங்கள் ஆடி வேரற்று விழும் போது இவனுடைய கடும் வடிவத்தை நாம் காண்கிறோம்.

இந்திரன் தெய்வ உலகுக்கு அரசனாக விளங்கி மாந்தரின் நலனுக்காக மழையைப் பொழிகிறான். தனக்கு இடையூறு இழைக்கும் பாவ வடிவினனான விருத்திரனை அழித்து அவன் வெற்றிவாகை சூடுகிறான்.

நோய்வாய்ப்பட்ட மக்களுக்கு மருத்துவமும் ஆயுதச் சிகிச்சையும் செய்து உதவுகிற தெய்வீக மருத்துவ இரட்டையர் – அஸ்வினி தேவர் ஆவர்.

இவ்வாறு தேவர்கள் பல வடிவங்களில் உலகுக்குக் காப்பாக இருந்து துணைபுரிகின்றனர்.

கிடைக்கும் பொருளைக் கொண்டு போதுமென்று மனதுடன் அமைதியாக வாழ்வாயாக – வித்தே ரமஸ்வ பஹுமந்யமாந: என்று வேதம் கூறுகிறது.

சூதாட்டம் வேண்டாம்; வேளான்மை செய்து தொழில் செய்து பிழைப்பாயாக – அக்ஷைர் பா திவ்ய:, க்ருஷிமித் க்ருஷஸ்வ என்கிறது வேதம்.

“ தன்னிடம் மிகுதியாக உள்ளதை மாந்தர் பிறருக்குக் கொடுத்து உதவ வேண்டும். பட்டினி இருந்து சாவதற்காகத் தேவர்கள் பசியை படைக்கவில்லை. ஈயாப் பித்தனும் ஒரு நாள் இறந்தே போவான். பிறருக்குக் கொடுப்பவனது செல்வம் என்றும் குறைவதில்லை. பிறருக்குச் சோறு இடாதவனுக்கு ஆபத்தில் உதவ ஈ காக்கையும் வராது எனவே கொடை என்பது சிறந்த பண்பு; அனைவருக்கும் இந்த பண்பு இராது. இரண்டு கைகள் ஒரே ஆற்றலுடன் வேலை செய்வதில்லை; இரட்டையராக இருப்பினும் ஒருவருக்கு உள்ள ஆற்றல் மற்றொருவருக்கு இருப்பது இல்லை; அண்ணன் தம்பியராயினும் ஒருவரைப் போல் மற்றவர் கொடுப்பதில்லை” என்று ரிக் வேதம் { 10-1-17} கூறுகிறது.


வேதம் நமது என்றும் அழியாத பெருஞ்செல்வம். அதைக் காத்துப் போற்றி மகிழ்வது நமது இன்றிமையாத கடமை; பேரின்பம் நல்கும் கடமையும் கூட.

Friday, June 17, 2016

பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு

பிரபஞ்ச சக்தியுடன் தொடர்பு
நம் நோய்களை எதிர்க்கும் சக்தியைப் பெறுவது போலவே மற்றவர் நோய்களையும் ஆழ்மன சக்தியால் குறைக்கவோ, அகற்றவோ முடியும். நம்மிடம் ஆரம்பித்து நம் விஷயத்தில் வெற்றி கொண்ட பின்னர் தாராளமாக அடுத்தவர்களுக்காகவும் முயற்சிக்கலாம். அதற்கு நாம் மேலும் கூடுதலாகப் பயிற்சிகள் செய்து தேர்ந்திருக்க வேண்டும். குறிப்பாக visualization என்று சொல்லப்படும் மனக்கண்ணில் காட்சிகளைத் தெளிவாக உருவகப்படுத்திப் பார்க்கும் திறனையும், சக்தி வாய்ந்த ஆழ்மனத்தையும் பெற்றிருக்க வேண்டும்.

கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் ஆகிய முக்காலமும் ஆகாய ஆவணங்களில் (Akashic Records) பதிவாகி இருக்கும் என்றும், பிரபஞ்ச அறிவுடன் தொடர்பு கொள்ள முடிந்தால் ஒருவன் அறிய முடியாதது இல்லை என்றும் எட்கார் கேஸ் சொல்கிறார். கடந்த காலம், நிகழ் காலம் பதிவாகி இருப்பது கூடப் பரவாயில்லை, எதிர்காலம் எப்படி பதிவாகி இருக்கும் என்ற கேள்வி பகுத்தறிவுள்ளவர்கள் மனதில் எழுவது இயற்கையே. ஆனால் ”அறிவியலில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை” என்பதை ஐன்ஸ்டீனே ஒத்துக் கொண்டதைப் போல இதற்கும் நம்மிடம் பதில் இல்லை. ஆனால் எதிர்காலத்தை அறிய முடிந்தவர்கள், நடப்பதை முன் கூட்டியே சொல்ல முடிந்தவர்கள் இருக்கிறார்கள் என்றால் அது முன் கூட்டியே எங்கோ பதிவாகி இருக்க வேண்டும் என்ற அனுமானத்திற்கே நாம் வர வேண்டி இருக்கிறது.
சென்ற நூற்றாண்டில் சில விபத்துகள் நடப்பதற்கு முன்பே அவற்றைப் பற்றி பொதுவாக இல்லாமல் துல்லியமாகவே சொன்ன ஜோசப் டிலூயிஸ் பற்றி இத்தொடரின் ஆரம்பத்தில் சொல்லியிருந்தோம். இன்னொரு சுவாரசியமான உதாரணத்தையும் சொல்லலாம்.
1898 ஆம் ஆண்டு மோர்கன் ராபர்ட்சன் (Morgan Robertson) என்ற எழுத்தாளர் Futility என்ற பிரபல நாவலை எழுதினார். அந்தக் கதை Titan என்ற ஒரு ராட்சஸக் கப்பல் பற்றியும், அது கடலில் மூழ்கியதைப் பற்றியும் சுற்றி பின்னபட்டது. அந்தக் கதை எழுதி சுமார் 14 ஆண்டுகள் கழித்து 1912 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நிஜமாகவே Titanic என்ற ராட்சஸக் கப்பல் கடலில் மூழ்கியது. ஏதோ பெயர் மட்டுமே தான் கதைக்கும், நிஜ சம்பவத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமை என்று நினைத்து விடாதீர்கள். கதையிலும் நிஜத்திலும் 3000 பயணிகள் இருந்தனர். கதையிலும் நிஜத்திலும் கப்பல் பனிப்பாறையில் மோதியே மூழ்கியது. அது போல கதையிலும் நிஜத்திலும் கப்பல் சென்ற வேகம் ஒன்றாகவே இருந்தது. மற்ற திகைப்பூட்டும் (ஏறத்தாழ இருக்கும்) ஒற்றுமைகளையும் பார்க்கலாம்.
கதைப்படி கப்பலின் எடை 70000 டன்கள், நிஜ டைட்டானிக் கப்பலின் எடை 66000 டன்கள். கதைப்படி கப்பலின் எடை 800 அடி. நிஜ டைட்டானிக் கப்பல் எடை 828 அடி. கதையில் அந்தக் கப்பலில் பயணிகளைக் காப்பாற்ற காப்புப் படகுகள் 24 இருந்தன. நிஜ டைட்டானிக்கில் 20 காப்புப் படகுகள் இருந்தன.
ஒரு நிஜ சம்பவம் அது நிகழ்வதற்கு பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே கிட்டத்தட்ட அதே போல ஒரு எழுத்தாளரின் கற்பனையை எட்டியது எப்படி?
இராமாயணத்திலேயே புஷ்பக விமானத்தையும் அதன் செயல்பாட்டையும் பற்றி விவரித்திருக்கும் எத்தனையோ விஷயங்கள் இன்றைய விமானத்தின் தோற்றம், செயல்பாட்டுடன் ஒத்துப் போகின்றது என்று சொல்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே கவியின் கற்பனைக்கு இன்றைய நிஜ விமானம் எட்டியது எப்படி?
அவர்கள் அறியாமலேயே அவர்களுடைய கற்பனைகள் பிரபஞ்ச சக்தியை, பிரபஞ்ச அறிவைத் தொட்டறிந்த சமாச்சாரங்கள் என்று கூட அவற்றை எடுத்துக் கொள்ளலாமல்லவா?
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள முடிந்தவர்களுக்கு அறிய முடியாதது இல்லை. செய்ய முடியாதது இல்லை. அவர்களுக்கு வானம் கூட எல்லை இல்லை.
பிரபஞ்ச சக்தியின் ஒரு நுண்ணிய அங்கமே ஒருவரது ஆழ்மன சக்தி. ஒரு மனிதன் மேல் மன அலைக்கழித்தலால் விடுபட்டு அமைதி அடைந்து தியானம் போன்ற பயிற்சிகளால் ஆழ்மன உலகிற்குப் பயணிக்கும் போது எதையும் தெளிவாகக் காண்கிறான். உயர் உணர்வு நிலைக்குச் செல்லும் போதோ பிரபஞ்ச சக்தியின் அங்கமே தான் என்றும் உணர்கிறான்.
நான்கு வகை மின்னலைகளில் ஆல்ஃபா, தீட்டா, டெல்டா அலைகளில் நாம் இருக்கையில் பல அதீத சக்திகள் நமக்கு சாத்தியமாகின்றன என்று சொல்லி இருந்தோம். காரணம் அந்த அலைவரிசைகளில் நாம் பிரபஞ்ச சக்தியுடன் நம் ஆழ்மனம் அந்த தொடர்பு கொள்ள முடிவது தான். மனிதன் டெல்டா அலைகளில் இருக்கையில் கிட்டத்தட்ட எண்ணங்களே அற்ற நிலையை அடைந்து விடுகிறான். (யோகாவில் அதை நிர்விகல்ப சமாதி என்கிறார்கள்). அப்போது ஆழ்மன சக்திகள் அடையும் எண்ணங்கள் உட்பட எல்லா எண்ணங்களும் அற்றுப் போன நிலைக்குப் போய் விடுகிறான். எனவே பொதுவாக ஆல்ஃபா அலைகள், மற்றும் தீட்டா அலைகளில் இருக்கும் போது தான் மனிதன் ஆழ்மன சக்திகளைப் பயன்படுத்தும் நோக்கம் வெற்றி பெறுகிறது என்று கூட சொல்லலாம்.
நாம் இந்த மின்னலைகளின் பெயர்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து எந்த மின்னலைகளில் இருக்கிறோம் என்று அறிய சிரமம் மேற்கொள்ள வேண்டியதில்லை. பொது அறிவுக்காக விளக்கி இருக்கிறோமே தவிர அந்தப் பெயர்களை அறிந்திருத்தல் அவசியமில்லை. மேல் மன எண்ணங்கள், கவலைகள், பயங்கள், பரபரப்புகள், படபடப்புகள் எல்லாம் இல்லாமல் அமைதியாக, அதே நேரம் தூங்கியும் விடாமல், கால ஒட்டத்தை மறந்து இருக்கிற போது நம் ஆழ்மனம் பிரபஞ்ச சக்தியுடன் ‘ட்யூன்’ ஆகும் பக்குவத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டால் போதுமானது.
அப்படி இருக்கிற கால அளவு அதிகமாக அதிகமாக நாம் பெறுகின்ற பயன்கள் அதிகமாகின்றன. நமக்கு அறிய வேண்டியவை அனைத்தையும் நாம் அந்த நேரத்தில் அறிய முடியும். நாம் விரும்பியதை அடையத் தேவையான சூழ்நிலைகளையும், அதற்கு உதவக் கூடிய மனிதர்களையும் நாம் நம் வாழ்வில் வரவழைத்துக் கொள்ள முடியும். அந்தக் கால அளவு ஒரு கண நேரமே ஆனாலும் அதன் பயன் அளவில்லாதது. அந்த அனுபவம் ஒரு சுகானுபவமே. கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்று சொல்வார்கள். அந்த அனுபவத்தை வார்த்தைகளால் வடிக்க எத்தனை தான் முயற்சித்தாலும் பரிபூரணமாய் அதைப் புரிய வைத்தல் எப்படிப்பட்டவருக்கும் சாத்தியமில்லை.
தற்போதைய வாழ்க்கை முறையின் அவசர ஓட்டத்தில் இது போன்ற பயிற்சிகளுக்கு நேரம் ஒதுக்குவது இயலாத காரியம் என்று பலரும் நினைக்கலாம். ஆனால் பிரபஞ்ச சக்தியுடன் ஒருசில நிமிடங்கள் தொடர்பு கொள்ள முடிந்தால் கூட அது எத்தனையோ மணி நேரங்களை உங்களுக்கு சேமித்துத் தரும் என்பது அனுபவ உண்மை.
பரபரப்பாகவும், அவசரமாகவும் மணிக்கணக்கில் கஷ்டப்பட்டு செய்யும் வேலையை, பிரபஞ்ச சக்தியுடன் ஆழ்மனம் மூலம் தொடர்பு கொள்ள முடிந்த நபர் அப்படிப் பெறும் ஞானத்தின் காரணமாக நிமிடக்கணக்கில் கச்சிதமாகவும், சிறப்பாகவும் செய்து காட்ட முடியும். காரணம் தேவையில்லாமல் அலைக்கழியாமல், கவனத்தை பல தேவையில்லாத பகுதிகளில் சிதறி வீணாக்காமல், அந்த வேலையை கச்சிதமாகச் செய்ய என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டுமே நேர்த்தியாகச் செய்ய முடிகிறது என்பது தான்.
ஏதாவது முக்கிய முடிவு எடுக்க வேண்டுமானால் நாள் கணக்கில் யோசித்து, பல பேரைக் கலந்தாலோசித்து, குழம்பி, கடைசியில் எடுக்கிற முடிவும் சரியாக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதே நேரத்தில் ஓரிரு நிமிடங்களே ஆனாலும் பிரபஞ்ச அறிவின் தொடர்பு கொண்டவன் மிகச் சிறந்த முடிவைச் சுலபமாக எடுக்க முடியும். சுருக்கமாகச் சொல்வதானால் அம்பு இலக்கை அடைவதைப் போல நேராக, வேகமாக அடைய முடியும். ஊர் சுற்றி, உலகமெல்லாம் சுற்றி, வழி மாறி ஒருவன் தொலைந்து போக வேண்டியதில்லை.
சில கலைஞர்கள் தங்கள் கலையின் மீது உள்ள எல்லை இல்லாத ஆர்வத்தால் அதில் ஈடுபடும் போது கூட தங்களை மறந்து அதில் ஆழ்ந்து விடுவதுண்டு. தங்களைச் சுற்றி உள்ள உலகை மறந்து விடுவதுண்டு. அதுவும் கிட்டத்தட்ட தியானம் போலவே தான். ஆல்ஃபா தீட்டா அலைகளில் சஞ்சரிப்பது தான். ஆழ்மனம் மூலமாக பிரபஞ்ச அறிவைத் தொடுவது தான். அந்த நிலையில் அவர்கள் உருவாக்கும் கலை-எழுத்தாகட்டும், ஓவியமாகட்டும், இசை ஆகட்டும்-எதுவானாலும் அது காலம் கடந்து நின்று ஜொலிக்கும் என்பது உறுதி. பல்லாண்டுகள் கழித்து இன்றும் நிலைத்து நின்று வியக்க வைக்கும் கலைப் பொக்கிஷங்கள் கூட கண்டிப்பாக இது போல் உருவாக்கப்பட்டவையாகவே இருக்கும்

எப்படி அக்னி ஹோத்ரம் (ஹீலிங் தீ) செய்ய - how to do Agnihotra - அக்னி ஹோத்ரம் செய்தால் ஓசோனில் உண்டான ஓட்டையை அடைக்கலாம்!

அக்னி ஹோத்திரம் 

(எந்தஒளி நம் அறியாமை என்னும் இருளைப்போக்கி நம் அறிவுச்சுடரை தூண்டுகிறதோ அந்த மேலான ஒளியை தியானிப்போமாக!)
அக்னிஹோத்ரம் (ஔபாசனம்) என்பது வெறும் விராட்டியை வைத்து மட்டும் செய்வது அல்ல.நெய், அவிஸ்(அரிசி) சிறிய அளவிலும், சமித்துக்கள் (அரசு அல்லது புரசு குச்சிகள்), தர்ப்பை ( காய்ந்த புள்),இதனை அக்னியில் சமர்பிப்போம். விராட்டி சிறிது ஈரமாக இருந்தால் மட்டுமே அதிக புகை வரும். 
மண் சட்டியில் (பானை) தவிட்டை(உமி) நிரப்பி, அதன் நடுவே விராட்டியினை சொறுகுவர். அந்த உமியானது(தவிட்டு) முதல் நாள் செய்த ஹோமத்தின் நெருப்பினை அனைந்து விடாமல் இருக்கச் செய்யும். முதல்நாள்செய்த நெருப்பிலிருந்து தான் மறுநாளும் மட்டை நார் உதவியுடன் அதே அக்னியை மூட்டச்செய்து,ஹோமத்தை தொடரவேண்டும்... வெளியூர் செல்ல நேர்ந்தால், அந்த அக்னியை பாதுகாத்து எடுத்து செல்வர்.அக்னி சில காரணத்தால் அனைந்தால், அதற்கு பிராயச்சித்தம் செய்து, மீண்டும் அக்னியை ஏற்றுவர்.முடிந்தவரை, அக்னியை மேலே கூறியது போல் தொடர்வாகத்தான் வளர்ப்பர்..
இதன் தாத்பர்யம் மற்றவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது? சுவாமி அறையில் மட்டுமே செய்யவேண்டும் என்றில்லை. சுத்தமான இடமாக தேர்வு செய்து, வேறு இடங்களிலும் செய்யலாம். முயன்றுபாருங்கள்.
இந்த அக்னிஹோத்ரம் பற்றி ‘இன்ஸ்டிடியூட் பார் ஸ்டெடீஸ் இன் வேதிக் சையின்ஸ்’ என்ற நிறுவனம்வெளியிட்ட ஒரு கையேட்டில் காணப்பட்ட தகவல்கள் உங்கள் பார்வைக்கு….
காற்றில் ஒரு ஊசி மருந்து
“நம் உடலில் நோயை உண்டாக்கும் நச்சுக்கிருமிகளை அறவே ஒழிக்க முடியாது. ஆனால் அவற்றிலிருந்துநம்மை தற்காத்து கொள்ள வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொள்கிறோம். அதுபோல் நம்மை சுற்றி காற்றில்உலாவும் அசுததங்களை நம்மால் களைய முடியாத நிலையில் அவற்றின் தீய வினைகளிலிருந்து நம்மைகாத்துக்கொளள முடியும்.
உடலில் ஊசி போடுவது போல சுற்றுப்புறக்காற்றில் செலுத்தப்படும் ஒரு ஊசி தான் அக்னி ஹோத்ரம். இந்தஅக்னி ஹோத்ரத்தால் நமது சுற்றுப்புறம் மட்டுமல்ல. யாகத்தீயில் இருந்து வரும் மணம் நமது மனதையும்அமைதிப்படுத்துகிறது.
அக்னி ஹோத்ரம் என்பது….
இயற்கை சமன்பாட்டிற்கும் மனித வாழ்வின் முன்னேற்றத்திற்கும் அவசியமாக இருந்து ஜீவராசிகளின் சீர்பிரமாணத்திற்காக சூரியோதத்திலும் சூரிய அஸ்தமனத்திலும் செய்யப்படும் யாகத்தின்அடிப்படையிலான செயல்முறை.
சுற்றுப்புறக் காற்று தான் நமது நாசி வழியாக இழுக்கப்பட்டு உடலை உயிரோட்டமுடன் வைக்கிறது. இந்தசுற்றுப்புறக் காற்றுக்கு உயர்ந்த குணமளிக்கும் சக்தியை கொடுக்கும் ஒரு செயல்.
அக்னி ஹோத்ரம் செய்ய அடிப்படை தேவைகள்
1. நிச்சயமான நேரங்கள்
2. தீ (அக்னி) பசுஞ்சாண விரட்டியால் உண்டாக்கப்படுவது.
3. குறிப்பிட்ட அளவுடைய பிரமிட் தோற்றம் கொண்ட செப்பு பாத்திரம்.
4. சுத்தமான பசுநெய் தடவப்பட்ட முனை முறியாத பச்சரிசி
5. மந்திரங்கள்.
இதில் நிச்சயமான நேரங்கள் என்பது, இயற்கையின் தாளகதியான சூரிய உதயம் மற்றும் சூரியஅஸ்தமனம்.
(சூரியோதத்தின் பல நெருப்புகள், ஒளி அலைகள், மின்சாரங்கள், ஈதர்கள் மற்றும் நுட்பமான சக்திகள்எல்லா வழிகளிலும் பரவி பாய்கின்றன. தீவிரமான இந்த ஒளி வெள்ளம் பரவசத்தை ஏற்படுத்தி சுறுசுறுப்பைஉண்டாக்குகின்றது. மேலும் அது பாயும் வழியில் உள்ள எல்லாவற்றையும் சுத்தப்படுத்தி உயிர்ப்பிக்கின்றது.சூரிய அத்தமனத்தில் ஒளிவெள்ள அதிர்வுகள் மறைகின்றன. அப்பொழுது நோய்க்கிருமிகள் பெருகிஅழிக்கும் சக்தியாக செயல்படும். எனவே அக்னிஹோத்ரம் செய்தால் சுற்றுப்புறக்காற்றில் கிருமிகளின்பெருக்கத்தை தடுக்கும்)
தாமிர பாத்திரத்தில் உலர்ந்த பசுஞ்சாண விராட்டியில் நோய் பரவுதலை தடுக்கும் மூலங்கள் உள்ளதைஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன. பசுஞ்சாணத்தில் மென்தால், அம்மோனியா, பீனால், இன்டால், பார்மலின்முதலிய ரசாயனங்களும் முக்கிய நோய்க்கிருமிகளை அழிக்கும் சக்தியும் உள்ளது. யாக மரங்கள் என்றுகூறப்படும் ஆல் (Ficul Bengalnesis), அத்தி (Ficus Glometra), புரசு (Butea Prondosa), அரசு (Ficus Religiosa), வில்வம்(Aegle Marmelos) ஆகிய மரங்களில் உலர்ந்த குச்சிகள் மருத்துவ சக்தி கொண்டது. இவற்றைபசுஞ்சாணத்துடன் பயன்படுத்தும் போது நன்மைகள் அதிகரிக்கும்.
செய்முறை
பசுஞ்சாண விராட்டியையும் உலர் மரக்குச்சிகளையும் பிரமிட் உருவ தாமிர பாத்திரத்தில் உள்ளேகாற்றோட்டத்துடன் சரியாக எரிய வைக்க வேண்டும். அதிகாலையில் மற்றும் மாலையில் அக்னி ஹோத்ரநேரத்தில் (சூரிய உதயம் மற்றும் அஸ்தமனம்) தீ கொளுந்து விட்டு எரியவேண்டும். புகைஉண்டாக்கக்கூடாது. ஜுவாலை நெருப்பாக இருக்க வேண்டும். உடையாத முழுமையான பச்சரிசி –கைக்குத்தல் அரிசியை ஒவ்வொரு நேரத்திற்கு இரண்டு சிட்டிகைகளாக இந்த நெருப்பில் போட வேண்டும்.சுத்தமான பசுநெய்யை இந்த நெருப்பில் சொட்டு சொட்டாக விட வேண்டும். இந்த நெய், உப்பு சேர்க்காதபதப்படுத்தும் பொருள் அல்லது ரசாயனங்கள் சேர்க்காத சுத்தமான பசு நெய்யாக இருப்பது முக்கியம்.இப்படி வேள்வி தீயை வீட்டில், சரியாக சூரியோதத்திலும், சூரிய அஸ்தமனத்திலும் முறையே இரு தடவைசெய்ய வேண்டும்.
இப்படி உருவாக்கும் வேள்வித் தீயிலிருந்து 4 வகையான வாயுக்கள் உற்பத்தியாகின்றன.
1 எத்திலின் ஆக்சைடு
2, புரேப்பலின் ஆக்சைடு
3. பார்மால்டிஹைடு
4. ப்யூட்டோ பயோலேக்டோன்.
இந்த வேள்வி தீயால் என்ன நடக்கிறது என்பதற்கு ஒரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். நெய்யை தீயில்சொட்டு சொட்டாக விடும் போது நெய்யானது உஷ்ணத்தைக் கொண்ட அசிட்டிலின் வாயுவை உற்பத்திசெய்கிறது. இது நம்மை சுற்றி இருக்கும் அசுத்தம் அடைந்த காற்றை உறிஞ்சி சுற்றுப்புறத்தை சுத்தம்செய்கிறது.
மந்திரங்கள்
அதிகாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்
சூர்யாய ஸ்வாஹா சூர்யாய இதம் நம: |பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நம: ||
மாலையில் உச்சரிக்கப்பட வேண்டிய அக்னிஹோத்ர மந்திரம்
அக்நயே ஸ்வாஹா அக்நயே இதம் நம: |பிரஜாபதயே ஸ்வாஹா பிரஜாபதயே இதம் நம: ||
இந்த வேள்வி தீ எரியும் போது நாம் அதன் அருகில் அமர்ந்து மந்திரங்களை சொல்லலாம். இந்தஅக்னியானது தாமிரப்பாத்திரத்தில் எரியும் போது முடிந்த வரை குடும்ப உறுப்பினர்களுடன் இந்தமந்திரங்களை உச்சரித்து தியானம் செய்யுங்கள். மன இறுக்கத்திலிருந்து மீண்டு ஓய்வாக இருப்பதைஉணர்வீர்கள்.
என்ன நடக்கிறது?
இந்த ஜுவாலையின் அனல் நம்மை சுற்றி இருக்கும் நச்சுக்கிருமிகளை எல்லாம் கிரகித்து அழித்து விடும்.ஒரு வீட்டில் தொடர்ந்து செய்யப்படும் போது அந்த வீட்டிலும் சுற்றுப்புறத்திலும் நோய்க்கிருமிகள்உலாவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே உங்கள் உடல் நலனை காக்க அக்னிஹோத்ரத்தை செய்துவரலாம்.அக்னி ஹோத்ரத்தின் நன்மைகள்
ஒருவரிடம் இருக்கும் போதைப் பொருள் பழக்கத்தின் தீவிரத்தன்மையை குறைக்கும்.
அதிசயிக்கத்தக்க அளவில் குழந்தைகளிடமும் பெரியவர்களிடமும் ஒரு அமைதியான மனதை ஏற்படுத்தும்.
முன்தலைவலி, சைனஸ், தோல் படை, மைக்ரேன் தலைவலி உள்பட சில நோய்களை குறைப்பதாககண்டறியப்பட்டுள்ளது. விவசாயத்தில் விதைகள் சீக்கிரமே முளை கிளம்பி தளிர் விடும். விளைச்சலைஅதிகப்படுத்துவதாக கண்டறியப்பட்டுள்ளது.
பசுஞ்சாணத்தால் மெழுகப்பட்ட வீட்டின் சுவர் அணுக்கதிர் வீச்சுக்களை கூட தடுக்கும் சக்தி வாய்ந்ததாகஒரு ரஷிய விஞ்ஞானி சொல்லியிருக்கிறார்.
நாசா விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பிரமிட் என்ற உருவத்தின் சக்தி சூரிய சக்தியைவிட புரட்சிகரமானதாகஇருக்கும்.
பிரமிட் உருவ கட்டிடங்களில் இருக்கும் போது மனவியாதி நோயாளிகள் அபூர்வமான மன அமைதியைஅடைகிறார்கள்.
பிரமிட்டில் மின்காந்த கதிர்களும், காஸ்மிக் கதிர்களும் குவிகின்றன.
இப்படி இதனை பற்றி பல தகவல்கள் தரப்பட்டுள்ளன. இங்கு சுருக்கப்பட்டிருக்கிறது.

மனதளவில் அமைதியும், உடலளவில் சக்தியினையும் ஒரு வாரத்திலேயே உணரலாம்.
details video - https://www.youtube.com/watch?v=5pe8TEeATWM