கொழுப்பைக் குறைக்க கத்தரிக்காய் சாப்பிடுங்க!
யாரையாவது திட்ட வேண்டும் என்றால், ‘அவனுக்கு கொழுப்பு ஜாஸ்தி’ என்பார்கள். அதேபோல், ‘கத்திரிக்காய் மாதிரி இருந்துகிட்டு என்ன வேலை பாக்கிறான் பாரு’ என்றும் சொல்வார்கள்.
கொழுப்புக்கும் கத்திரிகாய்க்கும் ஒரு சம்பந்தம் இருக்கிறது.
கொழுப்பை கரைக்கும் சக்தி கத்திரிக்காய்க்கு இருக்கிறது என்று கண்டறிந்துள்ளனர்கள் ஆராய்ச்சியாளர்கள்.
எல்லா சீசனிலும் குறைந்த விலையில் கிடைக்கும் கத்திரிகாயில் நிறைய மருத்துவ குணங்கள் இருக்கிறது.
100 கிராம் கத்தரிக்காயில் 24 சதவிதம் கலோரிகள், 9 சதவிதம் நார்ச்சத்து உள்ளது.
அடர் நீலம் அல்லது பழுப்பு நிற கத்தரிக்காயின் தோலில் ‘ஆந்தோசயானின்’ எனப்படும் திரவப் பொருள் உள்ளது. ஆந்தோசயான் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் நோய் எதிர்ப்புப் பொருளாகும்.
’பி’ காம்ப்ளக்ஸ் வகையான வைட்டமின்களான பான்டோதெனிக் ஆசிட், பைரிடமாக்சின், தயமின் மற்றும் நியாசின் ஆகிய உயிர்ச்சத்துகளும் கத்தரிக்காயில் அடங்கியுள்ளன.
மாங்கனீசு, தாமிரம், இரும்பு, பொட்டாசியம் போன்ற தாது உப்புக்கள் அதிக அளவில் உள்ளன.
கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் உடற்செயலின் மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றத்திற்கும் மிகவும் உகந்தவை.
கத்திரிக்காயில் இருக்கும் சத்துக்கள் கெட்ட கொழுப்பை கரைக்கிறது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
No comments:
Post a Comment