நம் நாட்டில் இப்போது பெரும்பாலானவர்களை பயமுறுத்துவது, இதய நோய்தான். இதய நோய் வராமல் தடுக்கவும், வந்த பின் மீண்டும் வராமல் இருக்கவும் ஆபரேஷன், மருந்து, மாத்திரை போன்றவைதான் நிவாரணமாக இருந்து வருகிறது.
ஆனால், மருந்து, மாத்திரை இல்லாமல் ‘முத்திரை’ மூலமே இதயத்தை காக்கும் வழிமுறைகள் இருக்கிறது.
இதயத்தின் முக்கியமான வேலை எது? காதல் இல்லை. உடலில் சீராக ரத்த ஓட்டத்தை வைத்து கொள்வது தான் இதயத்தின் கடமை. ஆக்ஸிஜன் இல்லாத ரத்தத்தை சுத்திகரம் செய்து நுரையீரலுக்கு அனுப்பி, ஆக்ஸிஜன் உள்ள ரத்தத்தை உடலுக்கு சீராக அனுப்புவது தான் இதயத்தின் பணி.
*இதய நோய்கள்**
இதயத்தில் ரத்த கட்டிகள் வந்தால் இதயநோய் வரலாம். ரத்தத்தை கொண்டு செல்லும், ரத்த குழாய்கள் தடிமனாகி விட்டால், ரத்த ஓட்டம் குறைந்து விடும். சில நேரம் இதயத்தை இயக்கும் தசைகள் வலுவிழந்து போகும். இதனாலும் இதய நோய் வரலாம்.
*சஞ்சீவினி முத்திரை**
இப்படி பல வகையில் நமக்கு ஏற்பட கூடிய இதய நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள ஒரு எளிய மருத்துவம் தான் சஞ்சீவினி முத்திரை.
சுட்டுவிரல், கட்டை விரலின் கடைசி கனுவை தொடவேண்டும். நடு விரலும், மோதிர விரலும், கட்டை விரலின் நுனியை தொடவேண்டும். சுண்டு விரல் நீண்டிருக்க வேண்டும்.
இப்படி செய்தால் இதய நோய் வராது. இதய நோய் உள்ளவர்கள் தினமும் 3 முறை 15 நிமிடங்கள் இதை செய்துவர இதய நோய் கட்டுபடும்.
No comments:
Post a Comment