மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க 10 வழிகள்..
நம்முடைய உடலின் அனைத்து செயல்பாடுகளையும் நிர்ணயிப்பது மூளைதான். நமது மூளை ஆராய்க்கியமாக, சுறுசுறுப்பாக இருந்தால் நம்முடைய அனைத்து செயல்களும் தடையின்றி நடக்கும்.
நம்முடைய மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்களை பார்ப்போம்.
**காலையில் சாப்பிடாமல் இருக்க கூடாது**
காலையில் சாப்பிடாமல் இருந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். இதனால் மூளைக்குத் தேவையான சக்தியும், ஊட்டச் சத்துக்களும் கிரகிப்பது கஷ்டமாகிவிடும். இது மூளையின் அழிவுக்குக் காரணமாகிவிடும்.
**மிக அதிகமாகச் சாப்பிடக் கூடாது**
போதுமான அளவை விட அதிகமாக சாப்பிட்டால், மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகிவிடும்.
**புகை பிடிக்காமல் இருத்தல்**
புகைப் பிடித்தலின் மூலம் உடலில் கலக்கும் நிகோடின், மூளை சுருகவும், ‘அல்ஸைமர்ஸ்’ எனும் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.
**நிறைய சர்க்கரை சாப்பிடுதல்**
நிறைய சர்க்கரை சாப்பிடுவதால் நம் உடலில் புரோட்டின் சேர்வது தடுக்கப்படுகிறது. புரோட்டின் குறைவால் மூளை வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.
** மாசு நிறைந்த காற்று**
மாசு நிறைந்த காற்றை சுவாசிப்பதால் நமக்குத் தேவையான சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைப்பதில்லை. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.
**தூக்கமின்மை**
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். போதுமான, தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.
**முகத்தை மூடிக்கொண்டு தூங்க கூடாது**
முகத்தையும் சேர்த்து போர்வையை போர்த்திக் கொண்டு தூங்குவதால் அதிக அளவு கரிமல வாயுவை மீண்டும் மீண்டும் சுவாசிக்கிறோம். இதனால், நாம் சுவாசிக்கும் ஆக்ஸிஜனின் அளவு குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.
**நோயுற்ற நேரத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது**
உடல் நோயுற்ற காலத்தில் மூளைக்கு மிக அதிகமாக வேலை கொடுக்க கூடாது. தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆன பின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே நல்லது.
**சிந்தனை செய்யாமல் இருக்க கூடாது***
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் வகையில் சிந்தனை செய்தால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.
** பேசாமல் இருப்பது**
அறிவுப்பூர்வமான பேசுவது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.
Yours Happily
Dr.Star anand Ram
www.v4all.org
No comments:
Post a Comment