Thursday, April 16, 2015

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமைய 5 வழிகள்

திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாய் அமைய 5 வழிகள்..



‘5 விஷயங்களை பின்பற்றினால் கணவனும் மனைவியும் மகிழ்ச்சியாக இருக்கலாம்’ என்று  ஆய்வு தெரிவிக்கிறது.






1. தாம்பத்ய உறவு.

2. குடும்பத்தை நடத்தும் முறை.

3. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அனுசரித்து நடத்தல்.

4. விட்டுக் கொடுத்து வாழுதல்.

5. தவறுகளை பெரிதுபடுத்தாமை.

ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம்பதிகளிடம் எடுக்கப்பட்ட ஆய்வில் இந்த விவரங்கள் தெரியவந்ததாம்.

‘நீ பெரியவளா, நான் பெரியவனா என்ற போட்டியெல்லாம் குடும்பம் சிதையவே வழி வகுக்கும்’ என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளதாம்.


‘கணவன், மனைவி ஆகிய இருவரும் விட்டுக் கொடுத்து பழகினால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்’  என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


அடுத்தது குடும்பத்தை எப்படி நடத்த வேண்டும் என்பது. மூன்றாவது அதே சமயம் முக்கியமானது விட்டுக்கொடுப்பது. இதற்குப் பரந்த மனது வேண்டும். வேலைப் பளு காரணமாகவோ வேறு நெருக்குதல் காரணமாகவோ வாழ்க்கைத்துணை எதையாவது கூறிவிட்டாலும் அதை பெரிதுபடுத்தாமல், அதே சமயம் அந்த விமர்சனம் அல்லது குற்றச்சாட்டு உண்மை என்று மனசாட்சி தெரிவித்தால் அந்தத் தவறை நீக்குவது அன்பு வளர மட்டும் அல்ல, குடும்பம் செழிக்கவும் நிச்சயம் உதவும்.

குழந்தைகளை நல்ல பண்புள்ளவர்களாகவும் உடல் நலம் உள்ளவர்களாகவும் கல்வி, கேள்விகளில் சிறந்தவர்களாகவும் வளர்க்க கணவன் மனைவி இருவருமே பாடுபட வேண்டும்.
மனைவியர் தங்களுடைய வாழ்க்கையில் வெற்றிபெற அவருடைய குடும்ப உறவினர்கள், நண்பர்கள் ஆகியோரும் பக்கபலமாக இருக்க வேண்டும்.

கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் அன்பு பாராட்டி, தவறுகளை சொல்லி திருத்தி, குழந்தைகளை நல்லபடியாக வளர்த்து படிக்க வைத்து பண்புள்ளவர்களாக ஆக்கினால் அவர்களால் அவர்களுடைய உறவினர்களுக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் பெருமை ஏற்படும்.
For Stress Managements Counselling & Marriage Counselling - call - 9790044225 - www.v4all.org

No comments:

Post a Comment