குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வரையறை (Definitions Of Micro, Small And Medium Enterprises ) - www.v4all.org
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வரையறை (Definitions Of Micro, Small And Medium Enterprises )
2006ம் ஆண்டு குறுந்தொழில், சிறுதொழில், மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு சட்டத்தின்படி (Micro,Small & Medium Enterprises Development Act 2006) குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்களை இருவகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
1.உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் (Manufacturing Enterprises)
2.சேவை சார்ந்த நிறுவனங்கள் (Service Enterprises)
இயந்திரங்கள் (Machinery) மற்றும் உபகரணங்களில் (Equipment) செய்யப்படும் முதலீடு செய்யப்படும் மூலதனத்தைப் பொறுத்தே குறு (Micro), சிறு (Small), மற்றும் நடுத்தர (Medium) நிறுவனங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. நிலம் மற்றும் கட்டிடத்தின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.
1.உற்பத்தி நிறுவனங்கள் (MANUFACTURING ENTERPRISES) :
பொருட்களை தயாரிப்பு மற்றும் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உற்பத்தி சார்ந்த நிறுவனங்களாகும்.
குறு உற்பத்தி நிறுவனங்கள் (Micro Manufacturing Enterprises) : இயந்திரம் மற்றும் உற்பத்தி ஆலையின் மதிப்பு ரூ.25 இலட்சத்திற்குள் இருந்தால் அந்த நிறுவனம் குறு உற்பத்தி நிறுவனமாகும் (The investment in plan and machinery does not exceed Rs.25 lakhs).
சிறு உற்பத்தி நிறுவனங்கள் (Small Manufacturing Enterprises) : இயந்திரம் மற்றும் உற்பத்தி ஆலையின் மதிப்பு ரூ.25 இலட்சத்துக்கு மேற்பட்டும் ரூ.5 கோடிக்குள்ளும் இருந்தால் அந்த நிறுவனம் சிறு உற்பத்தி நிறுவனமாகும் (The investment in plan and machinery is more than Rs.25 lakhs but does not exceed Rs.5 Crores)
நடுத்தர உற்பத்தி நிறுவனங்கள் (Medium Manufacturing Enterprises) : இயந்திரம் மற்றும் உற்பத்தி ஆலையின் மதிப்பு ரூ.5 கோடிக்கு மேற்பட்டும் ரூ.10 கோடிக்குள்ளும் இருந்தால் அந்த நிறுவனம் நடுத்தர உற்பத்தி நிறுவனமாகும் (The investment in plan and machinery is more than Rs.5 Crore but does not exceed Rs.10 Crores)
2. சேவை நிறுவனங்கள் (SERVICES ENTERPRISES):
சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் சேவை சார்ந்த நிறுவனங்களாகும் (Providing or rendering of services).
குறு சேவை நிறுவனங்கள் (Micro Service Enterprises):
சேவை நிறுவனங்களின் உபகரணங்களின் மதிப்பு ரூ.10 இலட்சத்திற்குள் இருந்தால் அந்த நிறுவனம் குறு சேவை நிறுவனமாகும் (The investment in equipment does not exceed Rs.10 lakhs).
சிறு சேவை நிறுவனங்கள் (Small Service Enterprises):
சேவை நிறுவனங்களின் உபகரணங்களின் மதிப்பு ரூ.10 இலட்சத்துக்கு மேற்பட்டும் ரூ.2 கோடிக்குள்ளும் இருந்தால் அந்த நிறுவனம் சிறு சேவை நிறுவனமாகும் (The investment in equipment is more than Rs.10 lakhs but does not exceed Rs.2 Crores).
நடுத்தர சேவை நிறுவனங்கள் (Medium Service Enterprises):
சேவை நிறுவனங்களின் உபகரணங்களின் மதிப்பு ரூ.2 கோடிக்கு மேற்பட்டும் ரூ.5 கோடிக்குள்ளும் இருந்தால் அந்த நிறுவனம் நடுத்தர சேவை நிறுவனமாகும் (The investment in equipment is more than Rs.2 Crores but does not exceed Rs.5 Crores).
No comments:
Post a Comment