Wednesday, April 22, 2015

தீதும், நன்றும் பிறர் தர வாரா

தவத்திரு குன்றக்குடி அடிகளார்
வாழ்க்கை வாழ்வதற்கே! ஆயினும் வாழ்தல் என்பது எளிதன்று. வாழ்க்கையில் எத்தனையோ இடர்பாடுகள் வரும்! துன்பம் வரும்! அப்படியானால் நமது வாழ்க்கையில் குறுக்கிடும் இடர்பாடுகள் இயற்கையா? துன்பங்களும், துயரங்களும் இயற்கையா? இல்லை, இல்லை! நாம் அனுபவிக்கும் துன்பங்கள், துயரங்கள்இயற்கையல்ல! நன்று இயற்கை; இன்பம் இயற்கை; தீமை இயற்கை; துன்பம் செயற்கை; அறியாமை, இடர்ப்பாட்டுக்குக் காரணம் துன்பத்திற்குக் காரணம், அறியாமை என்றால் என்ன்? அறியாமை என்றால் ஒன்றும்
தெரியாமை அல்ல.ஒன்றும் தெரியாதவர் ஒருவரும் இலர். ஆனால் தெரிந்து கொள்ளவேண்டியதை தெரிந்து கொள்ளாதவர்கள் தான் மிகுதி. மேலும் நல்லதாகவும் இன்பத்தைத் துன்பமாகவும், துன்பத்தை இன்பமாகவும் முறை பிறழ அறிதலைத்தான் அறியாமை என்று கூறுதல் வேண்டும்.
மனிதன், துன்பம் வரும் பொழுது தனக்கு முன் ஒரு நிலைக்கண்ணாடியை வைத்துக்கொண்டு தன்னையே நோக்கி ஆய்வு செய்தால், தன்னுடைய வாழ்க்கையை விமர்சனம் செய்து கொண்டால், அத்துன்பத்திற்கு அவனுடைய சொந்த அறியாமையே காரணம் என்பது புலப்படும்.ஆம்! மாமேதை லெனின் ஒருமுறைக்கு ஏழு முறை அளக்காமல் வெட்டாதே! என்றார்.
அதுபோல மனிதர்கள் பலர் பலகாலும் சிந்திக்காமல்- எண்ணாமல் இலக்குகளை நிர்ணயித்துக்கொள்வது, நண்பர்களைச் சேர்த்துக்கொள்வது, அலுவலர்களைத்தேர்வு செய்து கொள்வது
போன்றவைகளைச்செய்து விடுகின்றனர். அதனால்தான் தோல்விகளும், துயரங்களும், துன்பங்களும் வரும்பொழுத் புலம்புகின்றனர் சோர்ந்து போகின்றர். தொடர்ந்து தொழிற்படும் துணிவை
இழந்து விடுகின்றனர்.உனக்குற்ற துன்பம் உன்னுடைய தவறான அளவை முறையினாலேயே வந்தது.ஆதனால், நாள்கள் மீதும் கோள்கள் மீதும் பழி போடதே! குற்றத்தைச் சுமத்தாதே! மனிதன்
தன்னை, தன்னுடைய வாழ்க்கையை, தான் செயற்பட்ட பாங்கினை அணுகிய முறைகளைத் தற்சலுகையின்றி ஆய்வு செய்வானாயின் அந்தத்துன்பங்களுக்கு அவனே, அவனுடைய அறியாமையே
காரணமாக இருப்பதை உணர்வான். எப்போது ஒரு மனிதன் தன்னுடைய அறியாமையை உணர்கின்றானோ அந்த நேரம் முதல் அவனுடைய வாழ்க்கை திசை திரும்பும். தோல்வுகள் குறையும்; இருள்
அகலும்; வெற்றிகள் குவியும்; இன்பம் பெருகும்.அவன் மற்றவர்களைப் பார்த்து சிரிக்காமல் தன்னை நோக்கி சிரித்துக்கொள்வானாயின் அவனுடைய வாழ்க்கையில் திருப்புமையம் தோன்றும்.அதற்குப்
பிறகு அவன் அடையும் வெற்றிகளுக்கு இந்த உலகில் ஈடு இல்லை இணை இல்லை.
ஆதனால், மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கும்பொழுதும் நன்றாக ஆராய்ந்து வைப்பானாக!தன்னை, தன்னுடைய குணாதிசயங்களை அடிக்கடி விமர்சனம்
செய்து கொள்வானாக! மனிதன் அவனுடைய வாழ்க்கையை அவனே கட்டுமானம் செய்கின்றன். அவனுடைய வெற்றிக்கும் தோல்விக்கும் அவனே பொருப்பு.

No comments:

Post a Comment