உடற் பயிற்சியால் மூளைக்கு நல்லது. கிராண்ட் மாஸ்டரின் வெற்றி சூத்திரம்.
www.v4all.org
இரும்பினில் செய்த தசைகளும், நிரம்புகளும் கொண்ட உடல் வேண்டும் என்றார். சுவாமி விவேகானந்தர். 15 வயதில் ஒரு முரட்டு குதிரையை தனி ஒருவனாக அடக்கி. அந்த குதிரை வண்டியில் வந்த கர்ப்பிணி பெண்ணை காப்பாற்றியவர் விவேகனந்தர். அவர். கடைசி வரை. உடற் பயிற்ச்சியை விட வில்லை. பல ஊர்கள், நாடுகள் அவர் சென்ற பொழுதும். டம்பிள்ஸ். அவர் கூடவே பயணம் செய்தது.
இதற்கு முன். அதாவது. நமது தாத்தா, பாட்டி காலத்தில். உடற் பயிற்ச்சி என்பது. ஏதோ. விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதை போல் ஒரு எண்ணம் இருந்தது. அதை அன்றைய காலத்தில் தவறு என்று சொல்ல முடியாது. காரணம்.
அன்று 3,4 கிலோ மீட்டர் துரம் என்றாலும். மக்கள் நடந்தே தான் சென்றனர். பைக்கில் செல்லவில்லை. அன்று, ஆன், பெண் அனைவருக்குமே கடினமான வேலைகள் இருந்தது. இன்று. இயந்திர தனமான இந்த உலகில் எல்லாமே தலை கீழாக ஆகி விட்டது. அன்று மனிதர்கள் செய்த வேலைகளை. இன்று machines தான். செய்கிறது. அதனால். இன்று ஆரோக்யமாக வாழ. உடற் பயிர்ச்சி மிக, மிக அவசியமான ஒன்று. நாம். எந்த வேலை செய்வதாக இருந்தாலும். அதை. இந்த உடலை கொண்டே செய்கிறோம். ஆரோக்கியம் இல்லாத மனித உடலின் மனமும் ஆரோக்கியம் இன்றியே இருக்கும். மன நலனிற்கு உடல் நலன் மிக, மிக அவசியம்.
கிரான்ட் மாஸ்டர் விஸ்வநாத் ஆனந்த் சொல்வதை சற்று கேளுங்கள்.
நான் தினமும் ஜிம்மிற்க்கு சென்று உடற் பயிற்ச்சி செய்து எனது உடலை கட்டுபாடுடன் வெய்த்து உள்ளேன். எனது உடல் கட்டுப்பாட்டுடன் இருந்தால் தான். மனமும் கட்டுபாடுடன் இருக்கும். உடல் ஆரோக்யமாக இல்லாமல் செஸ் போட்டியில் சவால்களை எதிர் கொள்வது என்பது. கடினமான செயலாகி விடும்.
நீங்கள். வீடுகளில், அலுவலகங்களில் கடின வேலை செய்பவர்களாக இருந்தாலும். ஒவ்வொரு குறிப்பிட்ட உடல் பாகத்திற்கு என்று பிரத்யேகமாக செய்யும் உடற் பயிற்ச்சி. அதிக பலனை தரும்.
சரி. இப்பொழுது. உடற் பயிற்ச்சி செய்வதன் மூலம். உடலில், மனதில், மூளையில், ஏன்? மரபணுவில் கூட சில நல்ல மாற்றங்கள் நடக்கிறது. அது சம்பந்தமாக அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வை பற்றி, ஆரோக்யத்திற்கு என்றே வரும். பிரபல .Cell Metabolism என்னும் ஆங்கில இதழில் வந்த. கட்டுரை ஒன்றை பாப்போம்.
உடற்பயிற்ச்சி செய்தால் உடலுக்கு நல்லது. ஆனால்? மூளைக்கு நல்லதா. ஆம். இது சம்பந்தமாக நடந்த பல ஆராய்ச்சிகள் இதை நிரூபித்து உள்ளன.
உடற்பயிற்சி எப்படி மூளை செயல்பாட்டுக்கு உதவுகிறது, எப்படியெல்லாம் நன்மை செய்கிறது என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. கடுமையான உடற்பயிற்சி செய்யும் போது மூளையில் ‘ஐரிசின்’ (irisin) என்ற மூலக்கூறு உற்பத்தியாகிறது என்று அடையாளம் காட்டியிருக்கிறது அந்த ஆய்வு. அதோடு, அந்த மூலக்கூறு, நரம்புகளைப் பாதுகாக்கிறது என்றும் உறுதியாக எடுத்துச் சொல்லியிருக்கிறது.
இந்த ஆய்வை தலைமை ஏற்று நடத்தியவர் டாக்டர் புரூஸ் ஸ்பீஜெல்மேன் (Dr.Bruce Spiegelman). அமெரிக்காவில் இருக்கும் டானா ஃபார்பர் கேன்ஸர் இன்ஸ்டிடியூட் மற்றும் ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலில் பேராசிரியர். அவர் தலைமையிலான குழு, ஒரு எலியை வைத்து ஆராய்ச்சி செய்ததில்தான் இந்த உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது.
உடற்பயிற்சி செய்வதால், செயற்கை முறையில் ரத்தத்தில் இருக்கும் ‘ஐரிசின்’ அளவை அதிகரிக்க முடியும். அது, கற்றல் மற்றும் ஞாபகம் தொடர்பான மரபணுவை செயல்பட வைக்கும் என்றெல்லாம் பட்டியல் போடுகிறது இந்த ஆய்வு. சுருக்கமாக, ‘உடற்பயிற்சி, மூளையில் அறிவாற்றல் தரும் செயல்பாட்டை மேம்படுத்தும். நரம்புத் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும்’ என்று அடித்துச் சொல்கிறார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அதாவது, மன அழுத்தம், பக்கவாதம், அல்ஜீமெர்ஸ் நோய் (Alzheimer’s disease) போன்ற நரம்பியல் நோய்கள் நெருங்குவதற்கான வாய்ப்பை உடற்பயிற்சி தடுத்துவிடும் என்கிறார்கள்.
No comments:
Post a Comment