நடக்கலாம் வாங்க!
நடை பயிற்சி என்பது அனைத்து வயதினருக்கும் ஏற்ற எளிமையான உடற்பயிற்சி. இதன் பயன் சொல்லி மாளாது. முக்கியமாக, 40 வயதை தொட்டவர்கள் கண்டிப்பாக நடைபயிற்சி செய்தே ஆக வேண்டும் என்று டாக்டர்கள் வலியுறுத்துகின்றனர்.
**எல்லா தசைகளுக்கும் வேலை **
நடக்கும் போது நம் உடலில் உள்ள அனைத்து தசைத் தொகுதிகளும் இயங்குகிறது. இதனால் உடலுக்கு அதிகமான ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால் மூச்சை சற்று அதிகப்படுத்துகிறோம். ரத்த சுழற்சியும் உடலின் எல்லாபாகங்களுக்கும் இயக்கத்தை அதிகப்படுத்தி பின் சரியாக்குகிறது.
**மிதமான வேகம்**
அவரவர்களின் விருப்பப்படி முடிந்த வரை நடக்கலாம். இவ்வளவு தூரம் தான் நடக்க வேண்டும் என்ற வரையறை இல்லை. குறைந்த பட்சம் அரை மணி நேரம் நடக்கலாம். அதிக வேகமோ, மெதுவாகவோ நடக்காமல் மிதமான வேகத்தில், ஒரே சீராக நடக்க வேண்டும்.
**பயன்கள் **
நடைப்பயிற்சி செய்வதால், சாப்பிட்ட உணவு நன்றாக செரிக்கும்.
ரத்த ஓட்டத்தை சீராக்கி, நுரையீரல் சுவாசத்தை சீராகும்.
மூட்டுகள் பலப்படும். இதயம், நுரையீரல் ஆகியவற்றின் இயக்கம் சீராகும்.
மூளைக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உடல் பலமும் உடலின் வலுவும் அதிகரிக்கும். சோர்வு நீங்கும். எடை குறையும். ரெகுலராக செய்து வர மன அமைதி கிடைக்கும்.
யோசிக்காதீங்க. உடனே நடையை கட்டுங்க!
No comments:
Post a Comment