Sunday, April 12, 2015

கடவுளை அடைவது எப்படி? ராமகிருஷ்ண பரமஹம்சர்


கடவுளை அடைவது எப்படி? - www.v4all.org


பக்தர் : கடவுளை அடைவது எப்படி?
ராமகிருஷ்ண பரமஹம்சர் : நல்லவனாக வேஷம் போடுவதாலோ, நல்லவற்றைப் பேசுவதால் மட்டுமோ கடவுளை அடைந்து விட முடியாது. எண்ணம், வாக்கு, செயல், சிந்தனை என அனைத்திலுமே தூய்மை, நேர்மை, உண்மையைக் கடைப்பிடிப்பவர்களே அவன் திருவடிகளை அடைகின்றனர். பல மனிதர்களும் இப்படித்தான். தான் தேடுவது தங்களிடம் இருப்பதையே அறியாது அதனை வெளியிலியே தேடிக் கொண்டிருக்கின்றனர்.
ramakrishnar1
இரவு வேளையில் தன் வீட்டில் படுத்துக் கொண்டிருந்த ஒருவனுக்கு திடீரென்று சுருட்டுப் புகைக்க வேண்டும் என்ற ஆவல் உண்டாயிற்று. உடனே படுக்கையில் இருந்து எழுந்து கொண்ட அவன், நள்ளிரவில் அடுத்த வீட்டுக்காரனின் கதவைத் தட்டினான். கதவைத் திறந்த பக்கத்து வீட்டுக்காரனிடம் தன்னுடைய சுருட்டைப் பற்ற வைக்க வேண்டும் என்று கூறி அதற்கு நெருப்பு கேட்டான்.
பக்கத்து வீட்டுக்காரனோ, அதைக் கேட்டு போபத்துடன், “உன் கையில் எரிந்து கொண்டிருக்கும் லாந்தரை வைத்துக் கொண்டு என்னிடம் வந்து நெருப்பு கேட்கிறாயே, நீ என்ன முட்டாளா?” என்று கூறி விட்டு, கதவை வேகமாகச் சாத்திவிட்டு உள்ளே சென்று விட்டான்.
இப்படித்தான் பலரும், கடவுளை நம்மிடம் தேடுவதை விட்டுவிட்டு, தங்களிடம் இருப்பது என்ன என்று தெரியாமலேயே வெளியில் தேடிக் கொண்டிருக்கும் முட்டாளாக இருக்கின்றனர்.

No comments:

Post a Comment