Showing posts with label selling skills trainer in Coimbatore. Show all posts
Showing posts with label selling skills trainer in Coimbatore. Show all posts

Saturday, September 5, 2015

5 சுய தொழில் தங்கள் பகுதியில் செய்து லாபம் சம்பாதிக்கலாம்.

5 சுய தொழில்




1.நூடுல்ஸ் தயாரித்தால் வருவாய் சுவைக்கலாம்!



நூடுல்ஸ் என்றால் குழந்தைகளுக்கு கொள்ளை பிரியம். பெரியவர்களும் வெளுத்துக்கட்டுகின்றனர். இதனால், நூடுல்ஸ் தயாரிப்பு மற்றும் விற்பனை அதிகரித்து வருகிறது. குடிசைத்தொழிலாக நூடுல்ஸ் தயாரித்து நிறைந்த லாபம் பார்க்கலாம்’ என்று கூறுகிறார் கோவை அஜ்ஜனூரை சேர்ந்த பூமாலை. அவர் கூறியதாவது: சொந்த ஊர் ஊட்டி. மதுரை காமராஜர் பல்கலையில் எம்ஏ பொது நிர்வாகவியல் படித்துள் ளேன். திருமணமான பின், கண வர் மற்றும் குழந்தைகளுடன் வசிக்கிறேன். சிறுவயது முதலே  சுய தொழில் செய்து சாதிக்க வேண்டும் என்று ஆசை.

பெரும்பாலானோர் விரும்பும் நூடுல்ஸ் தயாரிக்க முடிவெடுத்தேன். கோவை வேளாண் பல்கலையில் நூடுல்ஸ் தயாரிப்பு பயிற்சி அளிப்பதை அறிந்து அங்கு ஒரு மாதம் பயற்சி பெற்றேன். பின்னர் இத்தொழிலில் ஈடுபட்டேன். கடந்த 10 ஆண்டுகளாக நூடுல்ஸ் தயாரித்து விற்கிறேன். தினமும் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்களை பல்வேறு பிராண்ட் நிறுவனங்களுக்கு விற்கி றேன். அதை வாங் கும் நிறுவனங்கள் தங் கள் நிறுவன பெயரில் விற்கின்றனர்.

சோயா, கம்பு, தக்காளி, கீரை, ராகி என பல்வேறு வகை நூடுல்ஸ்கள் தயாரிக்கிறேன். புதிய சுவைகளிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளேன். புதுப்புது வகைகளை அறிமுகப்படுத்துவதால் ஆர்டர்கள் குவிகின்றன. குறைந்த முதலீட்டில் குடிசைத் தொழிலாக யார் வேண்டுமானாலும் நூடுல்ஸ் தயாரித்து, தங்கள் பகுதியில் விற்பனை செய்து லாபம் சம்பாதிக்கலாம்.

தயாரிப்பது எப்படி?

பெரிய பாத்திரத்தில் 40 கிலோ மைதா, 30 கிலோ கோதுமை மாவு, 7 லிட்டர் தண்ணீர் ஊற்றி புரோட்டா மாவு பதத்தில் பிசைய வேண்டும். மாவை பதப்படுத்தும் இயந்திரத்தில் போட்டால், சன்னமாக தேய்த்து, ரோல் செய்யும். அதை அதே இயந்திரத்தில் பொருத்தினால், தேய்க்கப்பட்ட மாவு வெட்டப்பட்டு நூல், நூலாக வெளியேறும்.  அதைக் கம்பியில் தொங்க விட்டு, வேக வைக்கும் பாய்லருக்குள் வைத்தால், 40 முதல் 50 நிமிடம் வேகும். அவற்றை தேவையான அளவுகளில் எடை போட்டு, டிரேயில் வைத்து வெயிலில் ஒருநாள் உலர்த்த வேண்டும்.

பின்னர், அவற்றை பேக்கிங் செய்தால் நூடுல்ஸ் தயார். பேக்கிங் பாக்கெட்டுக்குள், நூடுல்ஸ் சமைக்கும் போது சுவையூட்டும் மசாலா பொடி பாக்கெட்டும் இணைக்க வேண்டும். கம்பு, ராகி, தக்காளி நூடுல்ஸ் போன்றவை தயாரிக்கவும் இதே முறை தான். சோயா நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமை அளவுகளுடன் கூடுதலாக 30 கிலோ சோயா மாவு, 3 லிட்டர் தண்ணீர் சேர்த்து பிசைய வேண்டும்.

கம்பு, ராகி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் 30 கிலோ கம்பு அல்லது ராகி சேர்க்க வேண்டும். தக்காளி நூடுல்ஸ் தயாரிக்க மைதா, கோதுமையுடன் தக்காளி சாறு குறிப்பிட்ட அளவில் சேர்த்து பிசைய வேண்டும். தக்காளிகளை அவ்வப்போது வாங்கி தோல் நீக்கி, சாறு பிழிந்து பயன்படுத்த வேண்டும்.

கிடைக்கும் இடம்

மாவை பதப்படுத்தி, வெட்டும் இயந்திரம், வேக வைக்கும் பாய்லர் இயந்திரம், உலர்த்தும் டிரையர் ஆகியன வேளாண் பல்கலையின் வணிக மேம்பாட்டு மையம் மூலம் கிடைக்கும். கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வடிவமைத்து நேரிலும் வாங்கலாம்.

தளவாட சாமான்களான எடை போடும் கருவி, பேக்கிங் கவர், பேக்கிங் சீல் மெஷின், கத்தரிக்கோல் ஆகியவை எல்லா இடங்களிலும் கிடைக்கிறது. கோதுமை, மைதா, சோயா, கம்பு, ராகி ஆகியவற்றை மொத்த கடைகளில் மாவாக அல்லது விவசாயிகளிடம் நேரடி யாக கொள்முதல் செய்து அரவை மில்லில் அரைத்து கொள்ளலாம்.

முதலீடு

பதப்படுத்தும் இயந்திரம் ரூ. 1.9 லட்சம், வேகவைக்கும் பாய்லர் இயந்திரம் ரூ.1 லட்சம், 50 கிலோ நூடுல்ஸ் வைக்கும் உலர்த்தும் டிரே 25 எண்ணிக்கை ரூ. 25 ஆயிரம். மற்ற தளவாட சாமான்கள் ரூ. 15 ஆயிரம்.

கட்டமைப்பு 

இயந்திரங்களை நிறுவ, பொருட்களை  இருப்பு வைக்க, ட்ரேயில் அடுக்க, பேக்கிங் செய்ய, மற்றும் அலுவலகத்திற்கு 25க்கு 25அடி நீள, அகலமுள்ள இடம். வாடகை இடமாக இருந்தால் அட்வான்ஸ் ரூ. 20 ஆயிரம்.

உற்பத்தி செலவு 

ஒரு நாளில் 200 கிராம் கொண்ட 600 பாக்கெட்கள் வீதம் (120 கி) 25 நாளில் 15 ஆயிரம் பாக்கெட்கள் (3 ஆயிரம் கிலோ) தயாரிக்கலாம். கோதுமை, மைதா உள்ளிட்ட மாவுப்பொருள்கள், 4 ஊழியர்கள் சம்பளம் (ரூ. 20 ஆயிரம்), மின்கட்டணம் (ரூ. 7 ஆயிரம்), இட வாடகை (ரூ. 2 ஆயிரம்), போக்குவரத்து செலவு (ரூ. 3 ஆயிரம்) என ரூ. 1.50 லட்சம் ஆகும். தொழில் துவங்க துவக்கத்தில் முதலீடு, கட்டமைப்பு மற்றும் உற்பத்திக்கு ரூ. 5 லட்சம் போதும்.

வருவாய்

15 சதவீதம் லாபத்திற்கேற்ப விலை நிர்ணயித்து தனியார் நிறுவனங்களுக்கு விற்பதால் மாதம் ரூ. 22,500 லாபம் கிடைக்கும். சில்லரை விற்பனை நிலையங்களுக்கு நேரடியாக விற்பனை செய்தால்  லாபம் அதிகரிக்கும்.

சந்தை வாய்ப்பு 

அவசர, அத்தியாவசிய உணவு தயாரிப்புக்கு நூடுல்ஸ் தேவை அதிகமாகி வருகிறது.  மணம், சுவை, தரம் ஆகியவற்றை தவறாமல் கடைப்பிடித்தால்  தொடர்ந்து நல்ல லாபம் சம்பாதிக்கலாம். சில்லரை, மொத்த வியாபார பலசரக்கு கடைகள், டிபார்ட் மென்ட் ஸ்டோர்கள், பிராண்டட் நிறுவனங்கள் நூடுல்ஸ் வாங்கள் தயாராக இருக்கின்றன
.




2.காளான் வளர்ப்பு

சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல.. சிறுதொழில் செய்தே சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் ஏராளம். இந்த காளான் வளர்ப்பில் மூலம் நீங்களும் எதிர்காலத்தில் ஒரு சிறந்த தொழிலதிபராக மாறிக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. ஆம் நண்பர்களே! சிப்பிக்
காளான் வளர்ப்பதன் மூலம் நமது வருமானத்தைப் பெருக்குவதோடு வாழ்வில் வளமும் பெறலாம். இனி சிப்பிக்களானின் மருத்துவ பலன்களும் அதன் வளர்ப்பு முறைகளும் உங்களுக்காக..

மருத்துவ பலன்களும், உணவு முறையும்:

இப்போது இந்த காளான் வகைகளை அதிகம் விரும்பி உண்ணத் தொடங்கிவிட்டார்கள். காரணம் அசைவ சுவைக்கு நிகரான சுவையைத் இது தருவதால்தான். மேலும் இதில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் டி , கால்சியம், பாஸ்பேட், பொட்டாசியம் மற்றும் காப்பர் போன்ற தாதுச் சத்துக்களும் நிறைந்திருக்கின்றன.

உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் சரிவிகிதத்தில் கலந்திருப்பதால் இது ஒரு சரிவிகித உணவாகவும் இருக்கிறது.  இதை மருத்துவர்கள் சிபாரிசு செய்கிறார்கள். மேலும் இதன் முக்கியமான மருத்துவ குணம் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவது.

சிப்பிக்களானின் பருவம் மற்றும் இரகங்கள்

இதற்கு பருவம் என்றொரு கால அளவு எல்லாம் இல்லை.  எப்போது வேண்டுமானால் வளர்க்கலாம்.

இத்தொழிலை எப்படிச் செய்வது?

மிகவும் எளிதுதான். நம் வீட்டிலேயே செய்யலாம். கொஞ்சம் இடம் இருந்தால் அதற்காக ஒரு குடில் அமைத்தும் செய்யலாம்.

காளானின் ரகங்கள்:

நம் நாட்டின் காலநிலைக்கு உகந்தது இந்த ரகங்கள் : வெள்ளைச்சிப்பி (கோ-1), சாம்பல்சிப்பி (எம்.டி.யு-2), ஏ.பி.கே.-1 (சிப்பி) ஏ.பி.கே.-2 (பால் காளான்), ஊட்டி-1 மற்றும் ஊட்டி-2 (மொட்டுக்காளான்)ஆகிய காளான் தமிழ்நாட்டிற்கு ஏற்றவை

காளான் குடில் எப்படி அமைப்பது?

ஒன்றும் பிரமாதம் இல்லை. கூரைவேய்ந்த சாதாரண வீடே போதும். 16 அல்லது 18  சதுர மீட்டர் பரப்பு இருந்தால் போதுமானது. இதில் இரண்டு பகுதிகளாக பிரித்துக்கொள்ள வேண்டும். ஒன்று வித்து பரப்பும் அறையாகவும், மற்றொன்று காளான் வளர்க்கவும் தேவைப்படும்.

வளர்ப்பு அறையின் வெப்பநிலை : 23-250 செல்சியஸ் இருக்க வேண்டும்.

வித்து பரப்பும் அறையின் வெப்பநிலை: 25-300 செல்சியசும் வெப்பம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அத்தோடு இந்த இரு அறைகளிலும் இருட்டு இல்லாமல், நல்ல காற்றோட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
குடிலினுள் அத்தோடு 75-80% ஈரப்பதமும் இருக்க வேண்டும். இந்த அளவீடுகளை கணக்கிட தெர்மாமீட்டர் போன்ற ஈரப்பதத்தை கணக்கிட என கருவிகள் Electric shopகளில் கிடைக்கும்.

காளான் வித்து உருவாக்குவது எப்படி?

காளான் வித்து உருவாக்க ஏற்ற தானியங்கள்: மக்காச்சோளம், கோதுமை, சோளம் ஆகியவை முக்கிய பொருள்களாக பயன்படுகிறது.

சரி. வித்துக்களை எப்படி தயார் செய்வது?

மேற்குறிப்பிட்ட தானியங்களை அரை வேக்காடு வேகவைத்து காற்றில் உலர்த்த வேண்டும். அதனுடன் 2% சுண்ணாம்பும் கலந்து-  காலியான குளுக்கோஸ்(Empty clucose bottle) பாட்டில்களில் நிரப்ப வேண்டும். அடுத்து ஒரு தண்ணீர் உறிஞ்சாதப் பஞ்சை கொண்டு அடைக்க வேண்டும்.

அடுத்து அதிலுள்ள நுண்கிருமிகளை அழிக்க குக்கரில் அடுக்கி 2 மணிநேரம் வேகவைக்க வேண்டும்.

வேளாண் பல்கலைக் கழகம் அல்லது வேளாண் துறை உற்பத்தி செய்த தூய்மையான தாய் காளான் வித்தை தானியம் நிரப்பப்பட்ட குளுக்கோஸ் பாட்டிலில் கலந்து, சாதாரண வெப்ப நிலையில் 15 நாட்கள் தனியாக வைக்க வேண்டும்.

பிறகு 15-18 நாட்கள் வயதுடைய காளான் வித்தை காளான் தயாரிப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

குறிப்பு: இத்தனை சிரமத்திற்கு இப்போது காளான் வித்துக்களையும் விற்கிறார்கள். நல்லதரமான வித்துக்களை வாங்கி உபயோகிக்கலாம்.

காளான் படுக்கை எவ்வாறு அமைப்பது?

காளான் படுக்கை அமைக்க ஏற்ற பொருட்கள்:  கரும்புச்சக்கை, உமி நீக்கிய மக்காச்சோளக் கருது, வைக்கோல்

மூலப்பொருள் தயாரித்தல் : முழு வைக்கோலை 5 செ.மீ நீளமுள்ள சிறு துண்டுகளாக வெட்ட வேண்டும். பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துவிட வேண்டும்.  அடுத்து அந்த வைக்கோலை 1 மணி நேரம் வேக வைத்து, தண்ணீரை வடிகட்ட வேண்டும். கைகளால் வைக்கோலை எடுத்து பிழிந்தால் தண்ணீர் வராமல் இருக்க வேண்டும். கிட்டதட்ட 65% ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

காளான் பைகள் - படுக்கைகள் எப்படி தயார் செய்வது?

காளான் படுக்கைகள் தயார் செய்வதற்கு 60 X 30 செ.மீ அளவுள்ள , இருப்பக்கமும் திறந்த பாலீத்தின் பைகளை பயன்படுத்த வேண்டும். இருபக்கமும் திறந்த பைகள் என்றால் பாலீதீன் பையின் மூடிய பகுதியை கிழித்துவிடலாம்.

அந்த பாலித்தீன் பையை ஒருபுறம் கட்ட வேண்டும். 1 செ.மீ அளவில் இடையில் 2 ஓட்டை போடவேண்டும்.

வைக்கோலை ஒரு பக்கம் கட்டப்பட்ட பாலீதீன் பைக்குள் 5 செ.மீ உயரத்திற்கு நன்கு அழுத்தவும். பின்பு 25 கிராம் காளான் வித்தைத் தூவ வேண்டும். இதில் அதிக கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதைப்போலவே மாறி, மாறி பை முழுக்கவும் ஐந்து முறை செய்யவேண்டும்.  ஐந்து அடுக்குகள் வந்தவுடன் பையை நன்றாக இறுக்கி கட்டிவிட வேண்டும். இதற்கு ரப்பர்பேண்டை பயன்படுத்தலாம். பிறகு பாலீதீன் பையை குடிலினுள்   உள்ள பரண் போன்ற இருப்பில் கட்டித் தொங்க விடவேண்டும்.


விதைத்த பதினைந்து , இருபது நாட்களில் காளான் படுக்கை முழுவதும் வெண்மையான காளான் இழைகள் படர்ந்திருப்பதைக் காணலாம்.  பிறகு சுத்தமான கத்தியைக் கொண்டு பாலித்தீன் பையைக் கிழிக்க வேண்டும்.

தினமும் கைத்தெளிப்பான் கொண்டு காளான்படுக்கையில் தண்ணீர் தெளிப்பது அவசியம்.

இப்படி வளர்த்த காளானை எவ்வாறு அடைவடை செய்வது?

பாலீதீன் பைகளை கிழித்த 3 ஆம் நாளில் காளானின் மொட்டுகள் சிறு திறள் போன்று காணப்படும்.

இருபத்துமூன்று நாட்களில் காளான் முழுவளர்ச்சி அடையும். தண்ணீர் தெளிக்கும் முன்னரே காளான் அறுவடை செய்துவிட வேண்டும். தினமும் அறுவடை செய்யலாம். அல்லது ஒரு நாள் விட்டு ஒருநாள் உங்கள் விருப்பம் எதுவோ அப்படி அறுவடை செய்துகொள்ளலலாம்.

முதல் அறுவடைக்கு பின் ஒரு தகடு போன்ற பொருள் கொண்டு காளான் படுகையை இலேசாக சுரண்டுவிடுவதால்,  அல்லது பாலிதீன் பைகளின் நான்கைந்து துளைகளை கூடுதலாக இட வேண்டும். ஒவ்வொரு பெட்டிலிரந்து இரண்டு அல்லது மூன்று முறை அறுவடை செய்து பயன்பெறலாம்.  ஒவ்வொரு பையிலிருந்தும் 600 கிராம் வரை காளானை அறுவடை செய்யலாம்.

எப்படி விற்பனை செய்வது?
(Marketing)

அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். 200 கிராம் இருபது ரூபாய் என்ற விலையில் விற்கலாம். ஒரு கிலோ காளான் 100 ரூபாய்க்கும் விற்கலாம். அருகில் உள்ள ஹோட்டல்களுக்கு கொடுக்கலாம். காளானைக் கொண்டு பலவித உணவுப்பொருட்களை தயாரிக்கிறார்கள். எனவே இந்த காளான்களுக்கு எப்போதுமே அதிக கிராக்கி உண்டு.

முக்கிய குறிப்பு: அறுவடை செய்த காளான்களை ஒரு நாள் வரைக்கும் வெளியில் வைக்கலாம். குளிர்பதனப்பெட்டியில் என்றால் இரண்டு நாட்கள் வரைக்கும் வைக்கலாம். இரண்டிற்கு மேற்பட்ட நாட்கள் வைத்திருந்தால் அவை அழுகி கெட்டுவிடும்.

செலவும் மூலதனமும் மிக குறைவாக இருப்பதால் இது பெண்களுக்கு ஏற்ற தொழிலாக இருக்கிறது. வீட்டிலிருந்தபடியே நமது வருமானத்தை பெருக்கிக்கொள்ள இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகவும், சிறுதொழிலாகவும் விளங்குகிறது.

காளன் வளர்ப்பு முறைகளை காணொளியில் கண்டு தெளியுங்கள்..!!


தயவு செய்து முழுமையாக இந்தக் காணொளியைக் காணவும். அப்பொழுதுதான் காளான் வளர்ப்பு முறையில் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுக்கொள்ள முடியும்.




 

3.சுய தொழில் துவங்கி முன்னேற கொடுவா மீன் வளர்ப்பு பயிற்சி

காரைக்கால் : காரைக்காலில் சுய தொழில் துவங்கி முன்னேற, ராஜிவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம், "கொடுவா மீன் வளர்ப்பு பயிற்சி' அளித்து வழிகாட்டுகிறது.
காரைக்கால் கருக்கலாச்சேரியில் மத்திய அரசின் ராஜிவ்
காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையம் உள்ளது. இங்கு, ஆராய்ச்சி அடிப்படையில் நோய் தாக்காத டைகர் இறால், வெளிநாட்டினர் விரும்பி சாப்பிடும் மெத்தை நண்டு, விற்பனைக்காக கல் நண்டுகள், கொடுவா மீன்கள் வளர்க்கப்படுகின்றன. வேலையில்லாத இளைஞர்கள் சுய தொழில் துவங்க வேண்டும் என்ற நோக்கில், கொடுவா மீன் மற்றும் நண்டு வளர்ப்பு குறித்து இம்மையம் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறது. நாகை மாவட்ட வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, கூண்டுகளில் கொடுவா வளர்ப்பு குறித்த பயிற்சி நேற்று முன்தினம் துவங்கியது. 5 செ.மீ., அளவு, 2 கிராம் எடையுள்ள கொடுவா மீன் குஞ்சுகள் கூண்டுகளில் வளர்க்கப்படுகின்றன. ஆறு மாதங்களுக்கு பின், 500 கிராம் முதல் ஒரு கிலோ வரை வளர்ந்து விற்பனைக்கு தயாராகிறது. வெளி மார்கெட்டில் 250 முதல் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது.
கடந்த இரண்டு தினங்களாக நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தில் தொழில்நுட்ப முயற்சிகள், கொடுவா மீனின் வாழ்க்கை முறைகள், தாய் மற்றும் சினை மீன்களை சேகரித்தல், முட்டையிடுதல், குஞ்சுகளை வளர்த்தல், கூண்டில் வளர்க்கப்படும் கொடுவா மீன் வளர்ப்பு முறைகள், நாற்றாங்கால் முறையில் கொடுவா வளர்த்தல், தண்ணீரின் தர அளவீடுகள், மீன் வளர்ப்பதற்கான கூண்டுகள் அமைத்தல், மீன்களை பேக்கிங் செய்தல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடந்தன. தொடர்ச்சியாக நேற்று கொடுவா மீனின் இனப்பெருக்க முறைகள் குறித்தும், கரு முட்டைகளை ஆய்வு செய்வது குறித்தும் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. திட்ட மேலாளர் பாண்டியராஜன், பண்ணை மேலாளர் கணேஷ், கணபதி, ராஜேந்திரன், அருள்ராஜ், சுந்தரேசன், குணசேகரன், ஜான் சாமுவேல் உட்பட பலர் பயிற்சி அளித்தனர். இறுதியில், தமிழ் வழியில் உள்ள கொடுவா வளர்ப்பு பயிற்சி புத்தகம் மற்றும் பயிற்சி குறித்து "சிடி'யும் மகளிர் குழுவினருக்கு வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற விரும்புவோர், சீர்காழி ராஜிவ் காந்தி நீர்வாழ் உயிரின வளர்ப்பு மையத்தை, 04364-291502 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.



4.புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் - பல ல‌ட்ச‌ம் வருமான‌ம்


பெ‌ற்ற தா‌ய் சொ‌ல்லை கே‌ட்காதவ‌ர்க‌ளு‌ம் கூட புகை‌ப்பட‌க்கார‌ர்க‌ள் சொ‌ன்னா‌ல் த‌ட்டாம‌ல் கே‌ட்பா‌ர்க‌ள். வா‌ழ்‌க்கை‌யி‌ல் ந‌ல்லதோ, கொ‌ட்டதோ அதை ப‌திவு செ‌ய்து தருபவ‌ர்க‌ள் புகை‌ப்பட‌க்கார‌ர்க‌ள்தா‌ன். ந‌ம்மை யா‌ர் எ‌ன்று உண‌ர்‌‌த்துவத‌ற்கு புகை‌ப்பட‌ம் தா‌ன்
ஆதரமாக ‌திக‌ழ்‌கி‌ன்றன. வ‌ா‌ழ்‌க்கையோடு ‌பி‌‌‌ண்‌ணி‌ப் பிணை‌ந்து‌வி‌ட்ட புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல் க‌ற்பனை ச‌க்‌தி ‌மிகு‌ந்தவ‌ர்களு‌க்கு கதவை ‌திற‌ந்து கா‌த்‌‌திரு‌க்‌கிறது.

மு‌க்‌கிய நகர‌ங்க‌ளி‌ல் ம‌‌ட்டு‌மி‌ல்லாம‌ல் ‌ஸ்டூடியோ தொ‌‌ழி‌லை ‌கிராம‌ங்க‌ளிலு‌ம் செ‌ய்ய முடியு‌ம். 30 ஆ‌ண்டுகளு‌க்கு மேலாக இ‌த்துறை‌யி‌ல் இரு‌ப்போ‌ர் த‌ங்களை வள‌ர்‌த்து‌வி‌ட்ட தொ‌ழிலையே வா‌ழ்‌க்கையாக எடு‌த்து‌ச் செ‌‌ய்‌கி‌ன்றன‌ர். 50 வயது வரை வ‌ற்றாம‌ல் வருமான‌ம் தரு‌வதாக உ‌ள்ளது புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல்.

‌‌ஸ்டூடியோ ஆர‌ம்‌பி‌க்க ‌சி‌றிய இடமு‌ம், குறு‌கிய கால ப‌யி‌ற்‌சியு‌‌ம் இரு‌ந்தாலே போது‌ம். ஆ‌ர்வ‌த்துட‌ன் க‌ற்கு‌ம் 6 மாத ப‌யி‌ற்‌‌‌சிய‌ி‌ன் முடி‌வி‌ல் ‌விரு‌ம்‌பியபடி இ‌த்துறை‌யி‌ல் எ‌ந்தவொரு தொ‌ழிலையு‌ம் தே‌ர்‌ந்தெடு‌த்து‌க் கொ‌ள்ள முடியு‌ம். வாடி‌க்கையாள‌ர்க‌ளி‌ன் தேவை‌க்கு ஈடுகொடு‌த்து ‌அவரை திரு‌ப்‌திபடு‌த்து‌ம் படியான வேக‌ம் இ‌த்தொ‌ழிலு‌க்கு தேவை. ஒ‌ளி‌ப்பட தொ‌ழி‌லி‌ல் செ‌ய்ய‌ப்படு‌ம் முத‌லீ‌ட்டைபோ‌ல் குறை‌ந்தப‌ட்ச‌ம் 20 சத‌‌‌வீத இலாப‌த்தை பெற முடியு‌ம்.

‌ஸ்டுடியோ வை‌ப்பத‌ற்கு அமை‌ப்பு, பகு‌தியை பொறு‌த்து ஒரு ல‌ட்ச ரூபா‌ய் முத‌லீடு இரு‌ந்தாலே போது‌ம். தொ‌ழி‌லி‌ன் வேக‌த்‌தி‌ற்கு ஏ‌ற்ப அடு‌த்தடு‌த்து முத‌லீடுகளை மே‌ற்கொ‌ள்ள முடியு‌ம். முத‌லீடு பெருக பெருக வருமானமு‌ம் உயரு‌ம். இத‌ற்கு வ‌ங்‌கி‌க் கட‌ன்களு‌ம் ‌கிடை‌க்‌கி‌ன்றன.

எ‌னினு‌ம் ‌பிற‌ரிட‌ம் தொ‌ழி‌ல் க‌‌ற்றா‌ல் அவருடைய சாயலு‌ம், அணுகுமுறையு‌ம் ஒ‌ட்டி‌க்கொ‌ள்வது இய‌ல்பாகு‌ம். தொ‌ழி‌ல்நு‌ட்ப ‌‌ரீ‌தியாக இ‌த்துறை அடை‌ந்‌திரு‌க்கு‌ம் மு‌ன்னே‌ற்ற‌த்தை குறு‌கிய கால‌த்‌தி‌ற்கு‌ள் அ‌றி‌ந்து கொ‌ள்ள உதவு‌கி‌ன்றன ப‌யி‌ற்‌சி ‌நிலைய‌ங்க‌ள். இவை உயர‌ங்களை எ‌ட்ட ‌கிடை‌த்து‌ள்ள எ‌ளிய வா‌ய்‌ப்புகளாக தெ‌ரி‌கி‌ன்றன. கா‌ன்‌ஸ்‌ட‌பி‌ள் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து தொட‌ங்குவதை ‌விட ஐ.‌பி.எ‌‌ஸ் படி‌‌த்து ஏ.‌சி.யாக ப‌ணியை தொட‌‌ங்குவது ந‌ல்ல அடி‌த்தள‌ம் எ‌ன்பது போ‌ன்றது இதுவாகு‌ம்.

ஒ‌ளி‌ப்பட‌த் தொ‌ழி‌ல் பல ‌கிளைகளுட‌ன் ‌வி‌ரி‌ந்து ‌கிட‌க்‌‌‌கிறது. இ‌தி‌‌ல் இற‌‌ங்கு‌ம் மு‌ன்பு த‌ங்க‌ளி‌ன் ஆ‌ர்வ‌ம் ‌விள‌ம்பர‌த்துறையா, ‌‌‌சி‌னிமா‌வா, சொ‌ந்த ‌ஸ்டூடியோவா எ‌ன்பதை உண‌ர்வது அ‌வ‌சிய‌ம். துறையை தே‌ர்‌ந்தெடு‌த்து அ‌தி‌ல் ம‌ட்டு‌ம் ‌சிற‌ப்பு ப‌யி‌ற்‌சி பெறுவது இல‌க்கை எ‌ளிதா‌க்கு‌ம் எ‌ன்பது இளைய தலைமுறை‌யி‌ன் ந‌ம்ப‌ி‌க்கை.

பா‌ஸ்போ‌ட் அளவு பட‌ம் எடு‌ப்பது, ‌திருமண கவரே‌‌ஜ் எ‌ன்று ம‌ட்டுமே இரு‌ந்தது புகை‌ப்பட‌த் தொ‌ழி‌ல். ஆனா‌ல் குள‌த்த‌ி‌ல் எ‌றிய‌ப்ப‌ட்ட தொ‌ழி‌ல் நு‌ட்ப‌ க‌‌‌ல்போ‌ல் பல வ‌ட்ட‌ங்க‌ள் ‌வி‌ரி‌ந்து வள‌ர்‌ச்‌சி அடை‌ந்து‌வி‌ட்டது. இதன‌ா‌ல் ஆ‌ர்வமு‌ள்ள இளைஞ‌ர்களு‌க்கான தேவை அ‌திக‌ம் கொ‌ண்ட தொ‌ழிலாக இது மா‌றியு‌ள்ளது.

புகை‌ப்பட‌‌ம் வா‌ழ்‌க்கை‌யி‌ன் அ‌ங்கமாகவே மா‌றி‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல் அத‌ன் வருமான வா‌ய்‌ப்புகளு‌ம் பல ‌கிளைகளாக ‌‌பி‌ரி‌ந்து நி‌‌ற்‌கி‌ன்றன. புகை‌‌ப்பட‌த்துட‌ன் தொட‌ர்புடைய ல‌ே‌மிசே‌ன், ‌பிரே‌ம்க‌ள், ‌ஆ‌ல்ப‌ம், வி‌‌சி‌ட்டி‌ங் கா‌ர்டு எ‌ன்று தொட‌ர்பு தொ‌ழி‌ல்க‌ள் ஏராள‌ம்.

சா‌ப்‌பிடு‌ம் அ‌ரி‌சி‌யி‌‌ல் பெய‌ர் எழு‌தி இரு‌ப்பதாக ‌சில‌ர் கூறுவது ‌உ‌ண்டு. இ‌ங்கே த‌‌ட்டி‌ல் பட‌த்தையே பொ‌றி‌த்து‌ நமதா‌க்‌கி கொ‌ள்ள முடி‌கிறது. பே‌ப்ப‌ரி‌ல் ம‌ட்டும‌ல்லாம‌‌ல் ‌கா‌க், பிளே‌ட் எ‌ன்று பொரு‌ட்க‌ள் எ‌ன்று ‌விரு‌ம்பு‌ம் பொரு‌ட்க‌ள் மே‌ல் ‌பி‌ரி‌ண்‌ட் போடு‌ம் தொ‌ழி‌ல் நு‌ட்பமு‌ம் உ‌ள்ளது. இறக்கும‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்ட எ‌ந்‌திர‌ங்க‌ள் வ‌ந்து‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல்‌ ‌சி‌றிய பட‌ம் முத‌ல் ‌பிரமா‌ண்ட பட‌‌ங்க‌ள் வரை ‌பி‌ரி‌ண்‌ட் போட‌ப்படு‌கி‌ன்றன.

புகை‌ப்பட தொ‌ழிலு‌க்கு அடி‌ப்படை கே‌மிரா எ‌ன்றாலு‌ம் பு‌திய டி‌ஜி‌ட்ட‌ல் தொ‌‌ழி‌‌ல்நு‌ட்ப‌ம் அதை ப‌ல்வேறு தள‌ங்களு‌க்கு எடு‌த்து‌ச் செ‌ன்று கொ‌ண்டிரு‌க்‌கிறது. குறை‌ந்தப‌ட்ச வருமான‌ம் ‌நி‌ச்ச‌ம் எ‌ன்பத‌ா‌ல் ஆ‌ர்வ‌த்தையு‌ம், ‌திறமையையு‌ம் கல‌ந்து உழை‌த்தா‌ல் பல ல‌ட்ச‌ம் வருமான‌ம் தருவதாக உ‌ள்ளது புகை‌ப்பட‌‌த் தொ‌ழி‌ல்.

5.சிறிய முதலீட்டில் தொடங்கலாம் “ஹோம் மேட் சாக்லேட்” தொழில்

  அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய , இந்தத் தொழிலில் இருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி அனுபவ பயிற்சி
பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம்.

ஹோம் மேட் சாக்லேட்
தேவையான முதலீடு :
குறைந்த பட்சம் 10,000
லாபம்: 
15 முதல் 20 சதவீதம் வரை
சாதகமான அம்சம்கள் :
  • பெரிய அளவில் இடவசதியோ, முதலீடுகளோ தேவையில்லை.
  • ஒரு சில நாள் பயிற்சியே போதும்.
  • மூலப் பொருள் தருபவர்களே பயிற்சியும் தருகிறார்கள்.
  • மூலப் பொருட்கள் எளிதாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைக்கும்.
  • தரமாக செய்தால் ஒரு வருடம் வரை வைத்து விற்பனை செய்யலாம்.
பாதகம் :
  • 24 மணிநேரமும் குளிர்சாதன வசதி வேண்டும் அதற்கு தடையில்லா மின்சாரம் தேவை.
  • சரியாக பேக்கிங் செய்யாவிட்டால் காற்று புகுந்து சாக்லேட் வீணாகிவிடும்.
  • முன்னணி சாக்லேட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மார்க்கெட்டிங் செய்வது.
எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது  என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ்  அம்சம். வழக்கமான சாக்லேட்களை மட்டுமே தராமல் , புதுப்புது சுவைகளை எல்லோரையும்  கவரும் வகையில் பேக்கிங் செய்து , வித்தியாசமான டிசைனில் சாக்லேட்களை செய்து விற்றால் வெற்றி நிச்சயம்.
கொஞ்சம் வித்தியாசமான வடிவமைப்புகளில் சாக்லேட்களை நாம் தயாரிக்க வேண்டும். சாக்லேட் தயாரிக்க தேவையான வித விதமான அச்சுகள்  சந்தியிலேயே கிடைக்கின்றன. சக்கரை நோயாளிகளுக்கேற்ப சாக்லேட்கள் , ஹெல்த்கேர் சாக்லேட்கள் என வெளிநாடுகளில் சாக்லேட் சந்தைகள் வேகமாக மாறிவருகிறது. சந்தையில் பிராண்டட் சாக்லேட்கள் பல இருந்தாலும் வீட்டில் தயாராகும் சாக்லேட்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எனவே தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம்.

ஒரு கிலோ 300 முதல் 400 வரை விற்ப்பனையாகிறது.
- WWW.V4ALL.ORG

Friday, July 10, 2015

பாம்பன் சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம்.

பாம்பன் சுவாமிகள் அருளிய துவிதநாக பந்தம்.
(share) செய்யுங்கள்)
நாம் காண்பது ஞானபானு பாம்பன் சுவாமிகள் இயற்றிய துவிதநாக பந்தம் ஆகும்.
துவிதம் என்பதன் பொருள் இரண்டு ஆகும். இரண்டு நாகங்கள் ஒன்றொடொன்று பின்னி இருக்கும் தோற்றமே நாம் மேலே காணும் தோற்றம் ஆகும்.
நாகதோஷம் உள்ளவர்களுக்கு பரிகாரமாக இரண்டு பாம்புகள் பிணைந்திருக்கும் சிலையை நாக பஞ்சமி தினத்தன்று பிரதிஷ்டை செய்தால் நாகதோஷம் நீங்கும் என்பது நம்பிக்கை.
அதற்கு பொருள் செலவு அதிகம். செலவில்லாமல் நாகதோஷம், காலசர்ப்ப தோஷம் நீங்க வழி இருக்கிறது. நாகதோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு வகையில் தீராத பிரச்சனை ஒன்று தவிர்க்க முடியாததாகிறது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும். மேற்கண்ட துவிதநாகபந்த படத்தினை அச்சிட்டு பூசையறையில் வைத்துக்கொள்ளவும்.
வசதி படைத்தவரகள் வெள்ளியில் நாகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதன் முதலில் ஆரம்பிக்கும் போது அசுவினி, மகம், மூலம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ அல்லது திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாளிலோ ஆரம்பிக்கவும்.
அவ்வாறு இயலவில்லை எனில் செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 27 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 27 முறை பாராயணம் செய்யவும். திருவாதிரை நட்சத்திரம் வரும் நாளும், மகம் நட்சத்திரம் வரும் நாளும் மிக மிக சிறப்பானவை.
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 27 முறை பாராயணம் செய்யவும். துவிதநாகபந்த படம் உடன் இருத்தல் மிக நன்று.
அதன் பின்பு தினமும் 27 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும். நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம்.
அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.
ஐந்து எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டு திரியையும், பருத்தி பஞ்சு திரியையும் ஒன்றாக முறுக்கி திரியாகக் கொண்டு இரண்டு தீபங்கள் ஏற்றி தினமும் பாராயணம் செய்யவும். முருகரின் படம் கிழக்கு நோக்கியும் தீபங்கள் மேற்கு நோக்கியும் இருத்தல் வேண்டும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும். முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று விரதம் இருப்பது நன்று.
முதன்முதலில் ஆரம்பிக்கும் நாளன்று கண்டிப்பாக உடலுறவு கூடாது.
தினமும் 27 முறை பாராயணம் செய்யவும். சர்ப்ப தோஷம், காலசர்ப்ப தோஷம், பாம்புகளின் தொல்லை, பாம்புகளை அடித்ததால் வந்த தோஷம், குழந்தைகள் மாலை சுற்றி பிறந்த தோஷம், பிரசவ கால துன்பம் மற்றும் ராகு, கேது கிரகங்களின் தோஷங்கள் நீங்கி என்றும் நியம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
Mantric   மாந்திரீகம்'s photo.

Tuesday, June 23, 2015

HAPPY SELLING workshop

Everyone in business has heard the old saying: 80 percent of our sales are produced by 20 percent of our people. Unfortunately, few seem to know what the 20 percent are doing that the 80 percent are not. 

Here's the TRUTH - The 20 percent are using a system and the 80 percent are not. 

And we've all seen such systems produce 100 percent to 500 percent increases in sales in almost no time! 

HAPPY SELLING -  Sales & Prospecting Persuasion & Influence Program is that system!

Dr.Star Anand  walk you step-by-step through the process he uses to consistently and effortlessly make sale after sale.

This system has been shared with thousands of people all over the india to help them become more persuasive and produce better results. This program will help you to generate more leads, set more appointments, effortlessly handle any objection with confidence and ease.

In this 17-Part Sales & Prospecting Persuasion & Influence Program You will learn:

- How to have the mindset of an influence master
- How to generate unlimited leads
- How to set unlimited appointments
- How to build trust and rapport
- How to identify customer needs
- How to share the benefits of your product or service
- How to close
- How to handle every objection
- How to follow up
- How to break out of a sales slump
- How to expand your comfort zone

Do you want to dramatically increase your results now? 

Are you ready for a sales breakthrough?

Dr.Star Anand Ram  is a Master Sales Trainer who has taught his proven sales systems to thousands of professionals around the India.

In this program, We will teach you what to do, to increase your results and breakthrough to success!

For details visit - www.v4all.org call- 9790044225 

Thursday, June 11, 2015

நிம்மதியாக இருக்க

நிம்மதியாக இருக்க முடியவில்லையா? - www.happy4all.org 
நிம்மதியாக இருக்க!!!
பலருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது.
வாழ்க்கையில் நிம்மதி என்பது எங்கே இருக்கிறது. நம்மால் நிம்மதியாக இருக்கவே முடியவில்லையே என்று எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதுண்டு. மனதில் எழும் இந்த ஆதங்கம் சாதாரண ஏழை முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் இதற்கு விதிவிலக்கல்ல.
இதே எண்ணம் தொடருமானால் வாழ்வில் விரக்தியும், சலிப்புமே மிஞ்சும். ‘எதுவாக இருந்தாலும் வாழ்க்கையை நேசித்து வாழ்ந்து விடு’ என்றான் ஒரு தத்துவ ஞானி. வாழ்வில் நிம்மதி எப்போது கிடைக்கும்?
இதற்கான விடையை சீனதத்துவ ஞானியான லா வோ த் ஸ வின் ஒரு கதை மூலம் பார்க்கலாம்.
‘என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை’ என்றான் ஒரு அரசன் ஞானியிடம்.
‘உன் கடமையை நீ சரியாக செய்கிறாயா’ என்று ஞானி கேட்டார்.
‘என் நாட்டிற்கு அன்னியர் பகை இல்லை. கள்வர் பயம் இல்லை. அதிக வரிகள் விதிப்பதில்லை. முறையாக நீதி செலுத்தப்படுகிறது. நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை’ என்றான்.
‘அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்து விடு’ என்றார் ஞானி.
‘எடுத்துக் கொள்ளுங்கள்’என்றான் மன்னன்.
‘நீ என்ன செய்வாய்’ என்றார் ஞானி.
‘நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன்’ என்றான் அரசன்.
‘எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதை விட என்னிடமே வேலை செய். உனக்கு தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன்.’ என்றார். சரி என்றான் மன்னன்.
ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனை காண வந்தார். அரசன் இப்போது மகிழ்ச்சியாக காணப்பட்டான். அவரை வரவேற்று உபசரித்தவன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் எடுத்து நீட்டினான்.
‘அது கிடக்கட்டும்’ என்ற ஞானி ‘நீ இப்போது எப்படி இருக்கிறாய்’ என்று கேட்டார்.
‘நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்’
‘முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?’
‘இல்லை’
‘அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?’ விழித்தான் அரசன். ஞானி சொன்னார்.
‘அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதி தான் என்று எண்ணுகிறாய். அந்த மனம் தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்து கொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல.. (இது) எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்கு கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் நீ இந்த நாட்டை நீயே ஆட்சி செய்’ என்று கூறி விடைபெற்றார் ஞானி.
ஐம்புலன்களையும் இடைவிடாமல் நெறிப்படுத்துபவன் மனம் ஒருமித்தவன் ஆகிறான். அவனிடம் சலனங்கள் ஏற்படுவதில்லை. மூலாதாரத்தில் ஒருமுகப்படுத்தி மென்மையான சக்தியை எழுப்புகிறான் அவன். விருப்பு, வெறுப்பு அற்ற அவனது மனம் சிறு குழந்தையினுடையது போன்றது. இயேசுவிடம் சீடர்கள் கேட்கின்றனர். ‘விண்ணரசு யாருக்கு உரியது. நாங்கள் விண்ணுலகில் நுழைய என்ன செய்ய வேண்டும் என்று.’
‘ஒன்றும் செய்ய வேண்டாம். ‘ என்கிறார் இயேசுநாதர். ஒரு குழந்தையை சுட்டிக்காட்டி ‘உங்கள் மனம் இந்த குழந்தையினுடையது போல் ஆகி விட்டால் விண்ணரசு உங்களுடையது’ என்றார்.
குழந்தை அனைத்தையும் நம்பும். அனைத்தையும் ஏற்கும். கண்டதை அப்படியே சொல்லும். குழந்தையிடம் அறியாமை உண்டு. நாம் அறியாமையில் இருந்து அறிந்த நிலைக்கு வந்தோம். பின்பு அதையும் கடந்து விடல் வேண்டும். அதுவே ஞானத்திற்கு மேலான நிலை.
ராமகிருஷ்ண பரமஹம்சர் கூறுகிறார் ‘காலில் ஒரு முள் தைத்தால் மற்றொரு முள்ளால் அதனை அப்புறப்படுத்துவோம். அந்த முள் இருந்த இடத்தில் இந்த முள்ளை வைப்பதில்லை. இரண்டையும் தூக்கி தூரப் போடுவோம். அது போல் அஞ்ஞானம் என்ற முள்ளை ஞானத்தால் எடு. பிறகு இரண்டையுமே தூக்கி எறிந்து விடு’ என்று.
அத்தகையவன் செயல்படுவான். ஆனால், அவன் செயல்களால் அவனுக்கு எந்த பலனும் இருக்காது. அவன் தகுதி அவனை தலைமையிடத்தில் வைக்கும். ஆனால் அவன் ஆதிக்கம் செலுத்த மாட்டான். அவனிடம் நேசித்தல் என்பது மட்டும் இருக்கும்.
ஆழ்ந்த உள்ளுணர்வினால் அவன் அனைத்து மாசுகளும் நீங்கியவனாக இருப்பான். ‘இத்தகையவன் தான் சுவர்க்கத்தின் கதவுகளை மூடித்திறக்கும் தாய் பறவை போன்றவன்’ என்று லா வோத் ஸ கூறுகிறார். நான்கு திக்குகளையும் ஊடுருவும் பிரகாசம் அவனிடம் உண்டு. உள்ளும், புறமும் ஊடுருவிய ஒரு வெட்டவெளியை உணர்ந்தவன் அவன். இதையே சிவவாக்கியரும் சொல்கிறார். அல்லல் வாசல் ஒன்பதும் அறுத்தடைத்த வாசலும் சொல்லு வாசல் ஓரைந்தும் சொம்மி விம்மி நின்றதும் நல்ல வாசலைத் திறந்து ஞான வாசல் ஊடுபோய் எல்லை வாசல் கண்டவர் இனி பிறப்பதில்லையே.
ஆழ்ந்த தியானம் அமைதியை கொடுக்கும். அது புதிய கதவுகளை திறக்கும்.

Wednesday, June 3, 2015

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!

ஒரு பலம் உங்களை உயர்த்தி விடலாம்!
ஒரு பலவீனம் ஒருவரை அழித்து விடலாம் என்பதைப் போலவே ஒரு பலம் ஒருவரை மிகவும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தியும் விடலாம். அப்படி உயர்த்தப்பட்ட மனிதரின் பலத்தை மட்டுமே உலகம் பார்த்து சிலாகிக்கிறதே ஒழிய அவருடைய குறைபாடுகளை உலகம் கண்டு கொள்வதில்லை.
விஸ்வநாதன் ஆனந்திற்கு கிரிக்கெட் விளையாடத் தெரியுமா என்றோ நன்றாகப் பாடத் தெரியுமா என்றோ உலகம் கவலைப்பட்டதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி எப்படி சமைப்பார் என்பதோ அவருக்கு வரலாறு எந்த அளவுக்குத் தெரியும் என்பதோ எவருக்கும் தேவையில்லாத விவரங்களாக இருக்கின்றன. ஒரு துறையில் ஒருவர் முத்திரை பதித்த பின் அந்த நபரின் மற்ற பலவீனங்கள் அந்தப் பலத்தையே தகர்த்து விடுவதாக இல்லாத வரையில் அலட்சியப் படுத்தத் தக்கவையாகவே இருந்து விடுகின்றன.
எனவே ஒருவனுக்குப் பல பலங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலவீனம் அவனை அழித்து விடலாம் என்பது போலவே, பல பலவீனங்கள் இருந்தாலும் ஒரு மிகப்பெரிய பலம் அவனை சிறப்பாக உயர்த்தியும் விடலாம் என்பதும் உண்மை. ஒரு சாதாரண மனிதனுக்கு மட்டுமல்ல ஒரு அரசனுக்கே இது பொருந்தும் உண்மை என்பதை ஒரு வரலாற்று உதாரணம் மூலமாகவே விளக்கலாம்.
சத்ரபதி சிவாஜியின் பேரன் ஷாஹூஜி தன் ஏழாம் வயதிலிருந்து இருபத்தைந்தாம் வயது வரை முகலாயர்களின் பிடியில் இருந்தவர். சிவாஜியின் மூத்த மகன் சாம்பாஜியைக் கொன்ற முகலாயர்கள் அவர் மனைவியையும், மகன் ஷாஹூஜியையும் தங்கள் வசமே சிறைப்படுத்தி வைத்திருந்தனர். கிட்டத்தட்ட தன் விளையாட்டுப் பருவத்தையும், இளமைப்பருவத்தையும் எதிரிகளான முகலாயர்கள் வசத்தில் இருந்து தொலைத்து விட்ட ஷாஹூஜி பின் அவர்களால் விடுவிக்கப்பட்டு மராட்டிய மன்னராக ஆனார். அப்போதும் மராட்டிய மண்ணில் ஒரு பகுதி அவர் சித்தப்பா மனைவி தாராபாய் ஆட்சியில் இருந்தது. ஷாஹூஜியின் தாயையோ முகலாயர்கள் இன்னும் தங்கள் பிடியிலேயே வைத்திருந்தனர். ஷாஹுஜி தங்களுக்கு எதிராக நடந்து கொண்டால் அவருடைய தாயை அழித்து விடுவதாக பயமுறுத்தியும் வைத்திருந்தனர்.
இப்படி பல்வேறு சிக்கல்களில் ஆட்சியில் அமர்ந்த ஷாஹுஜி பெரிய போர்வீரர் அல்ல. முகலாயர் பிடியிலேயே இளமையைக் கழிக்க வேண்டி இருந்ததால் ஒரு இளவரசனாக வளராததால் போர்வீரனாக அவர் பயிற்சிகளால் உருவாக்கப்படவில்லை. ஒரு அரசருக்குத் தேவையான வீரமோ, போர்த்திறமையோ இல்லாத ஷாஹூஜியிற்கு ஒரே ஒரு திறமை இருந்தது. ஒரு மனிதரை எடை போடுவதில் அவர் வல்லவராக இருந்தார். எதிரிகளிடமே வளர்ந்ததால் எவனை எதில் நம்பலாம், எது வரை நம்பலாம், எதில் நம்பக்கூடாது என்கிறதெல்லாம் கணிக்கக் கூடிய திறமையை அவர் இயல்பாகவே பெற்றிருந்தார். அந்த ஒரு திறமை அவருடைய மற்றெல்லா பலவீனங்களையும் ஒரு பொருட்டல்லாதவையாக ஆக்கி விட்டது.
நம்பிக்கைக்குப் பாத்திரமான திறமையான மனிதர்களைத் தனக்கு உதவியாக வைத்துக் கொண்டு ஆட்சி நடத்த ஆரம்பித்த அவர் சிறிது சிறிதாக தன் அரசைப் பலப்படுத்தினார். மராட்டியத்திலேயே தனக்கு எதிராக ஒரு பகுதியை ஆட்சிபுரிந்த தாராபாயை அப்புறப்படுத்தி ஒரே மராட்டிய அரசாக்கித் தானே சக்கரவர்த்தியானார். முகலாயர் பிடியிலிருந்த தாயைத் தன் பக்கம் வரவழைத்துக் கொண்டார். திறமைசாலிகளை சமூகத்தின் எல்லா பாகங்களில் இருந்து கண்டறிந்து அவர்களை ஆட்சிப் பொறுப்பில் முக்கிய இடம் கொடுத்து அதிகாரத்தையும் வழங்கி மாபெரும் மராட்டிய சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்கினார். அவர் காலத்தில் தான் மராட்டிய சாம்ராஜ்ஜியம் இந்தியாவில் மிகப்பெரிய விஸ்தீரணத்தைக் கண்டது. அவர் காலத்தில் கல்வி, சட்டம், சமூகநிலை போன்ற எல்லாத் துறைகளும் பெரிய சீர்திருத்தம் கண்டன. திறமையானவர்கள் பெரும் பொறுப்பும் அதிகாரமும் பெற்றனர். அதே சமயத்தில் அவர்கள் சக்கரவர்த்திக்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தனர்.
தன்னை விடப் பெரிய திறமைசாலிகளையும், பலசாலிகளையும் உதவியாக வைத்து அரசாண்டதுமல்லாமல் அவர்கள் தன்னிடம் மாறாத விசுவாசத்துடன் எப்போதும் இருக்கும்படி அவர்களைத் தன் இனிய குணத்தாலும், புத்திசாலித்தனத்தாலும் வைத்துக் கொண்டது தான் சத்ரபதி ஷாஹுவின் ஒரே பலம் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகிறார்கள். இப்படி ஒரு மிகப்பெரிய பலத்தை வைத்து ஒரு சாம்ராஜ்ஜியத்தையே நடத்த முடியும் போது ஒரு வாழ்க்கையை சிறப்பாக நடத்துவது தானா கஷ்டம்? யோசியுங்கள்.
உங்கள் குறைகளும், பலவீனங்களும் உங்கள் வாழ்க்கையையே சீரழிக்கும் அளவுக்குப் பெரிதாக இல்லாதவரை நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. சிலவற்றில் நீங்கள் பூஜ்ஜியமாகக் கூட இருக்கலாம். உங்களைச் சுற்றியுள்ள பலரும் அவற்றில் பெரிய திறமையாளர்களாகக் கூட இருக்கலாம். யாராவது அதுபற்றிக் கேட்டால் சொல்ல தர்மசங்கடமாக இருக்கக் கூடும் என்றாலும் உங்கள் வாழ்க்கை அந்த ஒன்றிலேயே தீர்மானிக்கப்பட்டு விடுவதில்லை என்பதை உறுதியாக அறிந்திருங்கள். உங்கள் இயல்பிலேயே இல்லாத திறமை, எவ்வளவு முயன்றாலும் புளியங்கொம்பாக இருக்கின்ற திறமை என்றால் அது உங்களுக்கானதல்ல என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டு விடுங்கள். அதற்காக நீண்ட காலம் போராடி வாழ்க்கையை வீணாக்காதீர்கள்.
உங்கள் உண்மையான திறமைகளின் பக்கம் உங்கள் கவனத்தைத் திருப்புங்கள். எது உங்களுக்கு மற்றவர்களை விட சுலபமாகவும் இயல்பாகவும் வருகிறதோ எதைச் செய்யும் போது உற்சாகமாகவும் திருப்தியாகவும் உணர்கிறீர்களோ அது உங்கள் உண்மையான பலம். அது ஒன்றாக இருக்க வேண்டும் என்பதில்லை. அது ஒன்றை விட அதிகமாகக் கூட இருக்கலாம். அவற்றில் ஏதோ ஒன்று உங்களை இந்த உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.
விஸ்வநாதன் ஆனந்தை செஸ் அடையாளம் காட்டியது போல, சச்சின் டெண்டுல்கரை கிரிக்கெட் அடையாளம் காட்டியது போல, ஏ.ஆர்.ரஹ்மானையும், இளையராஜாவையும் இசை அடையாளம் காட்டியது போல, சுஜாதாவை எழுத்து அடையாளம் காட்டியது போல, ராமானுஜத்தை கணிதம் அடையாளம் காட்டியது போல உங்களையும் ஒரு திறமை உலகத்திற்கு அடையாளம் காட்டலாம்.
அப்படி உலகத்திற்கு அடையாளம் காட்டா விட்டாலும் கூட ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை வாழ அந்த ஒரு திறமை உங்களுக்கு வழி காட்டலாம். கணக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதில் மிகத் திறமையான ஒரு ஆசிரியர் ப்ளஸ் டூ மாணவ மாணவியருக்கு சில மணி நேர டியூஷன் எடுப்பதன் மூலமாக வெற்றிகரமான ஒரு சாஃப்ட்வேர் இன்ஜீனியரை விட அதிகமாக சம்பாதிப்பதை நான் பார்த்திருக்கிறேன். வித்தியாசமாகவும், கச்சிதமாகவும் தைக்கத் தெரிந்த ஒரு பெண்மணி பெண்களுக்கு ஜாக்கெட் தைத்துக் கொடுத்தே கைநிறைய சம்பாதிப்பதையும் பார்த்திருக்கிறேன். இதே போல எத்தனையோ தனித் திறமைகளால் வெற்றிகரமாக வாழும் மனிதர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
எனவே உங்களுக்கு என்னவெல்லாம் தெரியாது என்று உலகம் கேட்கப் போவதில்லை. அதைப் பற்றி அது கவலைப்படுவதுமில்லை. உங்களுக்கு என்ன தெரியும், எந்த அளவு தெரியும், அதில் கூடுதலான உங்கள் தனித்திறமை என்ன என்று தான் உலகம் பார்க்கிறது. அதை வைத்தே உலகம் உங்களை உபயோகப்படுத்துகிறது. எனவே எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறேன் என்று எல்லாவற்றையும் ஓரளவு தெரிந்து கொள்வதை விட உங்கள் உண்மையான திறமையைக் கண்டு பிடித்து அதை நன்றாக வளர்த்துக் கொள்ளுங்கள். அது தான் உங்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் பலம். அப்படி ஒரு பலம் உங்களுக்கு உறுதியாகக் கிடைத்து விட்டால் உலகிற்கு நீங்கள் கண்டிப்பாகத் தேவைப்படுவீர்கள். அதற்கான விலையாக உங்களுக்கு வேண்டியதை இந்த உலகம் கண்டிப்பாக கொடுத்தே தீரும்.

Sunday, April 19, 2015

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

திறமைகளை கண்டுபிடிப்பது எப்படி?

ஒவ்வொருவரிடமும் பல்வேறு திறமைகள் ஒளிந்துள்ளன. அவற்றை எவையென்று தேடிக்கண்டுபிடிக்கும் போது தான் அவர்களுக்குள் புதிய மறுமலர்ச்சியை உருவாக்க முடியும். அவர்களிடம் இருக்கும் ஒவ்வொரு விதமான ஆற்றலும் உள்ளொளியாக இருந்து பிரகாசிக்கிறது. அந்த ஆற்றலை அவரவர் சூழ்நிலை, சக்தி, அறிவு போன்ற அம்சங்களுக்கேற்ப, அவரவர் மட்டுமே வளர்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு முதலில் தங்கள் இயல்பான திறமை என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். திறமையை மதிப்பிடும் போது நமக்குள் இருக்கும் ஆசைகள் மற்றும் கனவுகளையும் திறமை தான் என்று அதனுடன் சேர்த்துவிடக் கூடாது.

உதாரணமாக, சர்க்கஸ், சினிமா, நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகளை பார்க்கும் போது, அதில் வரும் கதாநாயகர்களை போல நாமும் செய்து பார்க்க ஆசைபடுவதுண்டு. இந்த மாதிரி ஆசைபடும் ஒரு சிலர் வேண்டுமானால், பிற்காலத்தில் சினிமா நட்சத்திரங்களாகலாம். அல்லது சர்க்கஸ் வீரர்களாகலாம். அல்லது சந்தர்ப்பமும், சுயமுயற்சியும் சேர்ந்து அவர்கள் விரும்பும் எதிர்காலம் அமைய உதவுகிறது. ஆனால், சினிமா நடிகர்களாக வரவேண்டும் என ஆசைபடும் அனைவருக்குமே எதிர்காலத்தில் அவர்கள் ஆசை நிறைவேறுவது இல்லை. காரணம், நடிப்புத்திறமை அவர்களுக்கு இயல்பான ஆற்றலாக இல்லாமல் இருப்பது தான் காரணம்.

இதே போல் பல துறைகளிலும் நமது ஆசையும் கனவும் விரிந்து பரந்திருந்தாலும், எதிர்காலத்தில் அவரவர் திறமை, ஆற்றலுக்கு ஏற்பதான் அவை நிறைவேறும். அதனால், நமது திறமையை மதிப்பிடும்போது அவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, பொறியியல் துறையில் மாணவன் அடிப்படை பயிற்சிகளை பெற்று வருகிறான். உண்மையில் அவனுக்கு அதில் ஆர்வம் இருந்தால், அந்த ஆர்வம் பயிற்சியின் போதே தெளிவாகத் தெரிந்துவிடும். ஒரு துறையில் சிறிதும் ஆர்வமில்லாதவர்களுக்கு அந்த துறையானது, அவர்கள் வேலைசெய்யும் போதே, தெரிந்து விடும். அவர்களுக்கு அந்த வேலை பெரிய சுமையாகத் தோன்றும்.

குறிப்பாக, எந்த துறையில் நமக்கு நீடித்த ஆர்வமும், உற்சாகமும் தொடர்ந்து இருக்கிறதோ அதில் தான் நமது திறமை உள்ளது என்பதை உணர்ந்து அந்த வழியில் முயற்சி செய்ய வேண்டும். திறமைக்கான தேடல்கள் ஒரு குறிப்பிட்ட காலம் வரை தான் இருக்க வேண்டும். அதுவே வாழ்நாள் முழுவதும் நீடித்து விடக்கூடாது. திறமையை கண்டுபிடித்தவுடன் அதை வளர்ப்பது எப்படி என்பது குறித்த திறமையை வளர்த்துக் கொள்ளவேண்டும்.

இரண்டு முறையான பயிற்சிகளின் முலம் திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். அவற்றில் ஒன்று நேரடிபயிற்சி முறை. மற்றொன்று சுயமுயற்சி. நேரடிபயிற்சி முறைபடி கற்க வசதி மற்றும் வாய்ப்புகள் இல்லாதவர்கள் சுயமாக கற்றுக்கொள்ளலாம். `சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம்’, `கண்டதும் கற்க பண்டிதன் ஆவான்’ போன்ற பழமொழிகள் பயிற்சியின் அடிப்படையை நமக்குக் கற்றுத்தருகிறது. விடாபிடியாகத் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடும்போது எவருக்கும் எந்தக்கலையிலும் தானாகவே சரியான பயிற்சி கிடைத்துவிடும் என்பதே பழமொழிகள் உணர்த்தும் உண்மை. குறிப்பாக, கலைத்துறையினருக்கு இது பொருத்தமாக இருக்கும். சரியான வசதி வாய்ப்புகள் இல்லாவிட்டாலும், முறையான முயற்சியிருப்பின் பயிற்சி உங்களுக்கு எளிமையாகவே இருக்கும்.

Saturday, April 18, 2015

SWOT ANALYSIS in tamil

SWOT ANALYSIS

நம் தொழிலின் ஒவ்வொரு கட்டத்தையும் வெற்றி கரமாக எடுத்துச் செல்வதற்கு பல்வேறு ஆய்வுகள்(Researches) மற்றும் பகுப்பாய்வுகள் (Analysis) தேவைப் படுகின்றன . இன்றைய உலகமயமாக்கல் காலக்கட்டத்தில் சிறிய நிறுவனத்தை நடத்தி வந்தாலும்  பல்வேறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வுகளைச் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது . இத்தகைய ஆய்வுகளை செய்யாமல் புது யுக்திகளை புகுத்த முடியாது , புது யுக்திகளை புகுத்தாமல் இன்றைய தொழில் யுத்தத்தில் வெற்றி பெற முடியாது . 

அந்த வகையில் தொழிலுக்கு மிகவும் பயன்படக்கூடிய ஒரு பகுப்பாய்வு SWOT Analysis.

SWOT Analysis இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் , திட்டங்களை தீட்டுவதற்கு தேவையான தகவல்களை அளிக்கவும் , இலக்கை அடைவதற்கான தேவையான சாதக மற்றும் பாதகங்களை ஆராய்வதற்கும் ,  புது தொழிலை தொடங்குவதற்கு தேவையான தகவல்களை அளிப்பதற்கும் SWOT Analysis பயன்படுகிறது .

SWOT Analysis

 Strengths(பலங்கள்)  Weaknesses(பலவீனங்கள்)Opportunities (வாய்ப்புகள் )Threats (அச்சுறுத்தல்கள்)

SWOT Analysis பலங்கள் ,பலவீனங்கள் மற்றும் வாய்ப்புகள் , அச்சுறுத்தல்களை கண்டறிய இந்த பகுப்பாய்வு  பயன்படுகிறது .

நாம் பலவித கேள்விகளை தொடுத்து அதற்கான பதில்களை அளிப்பதன் மூலம் நமது நிறுவனத்தின்  பலங்கள் ,பலவீனங்கள் மற்றும் வாய்ப்புகள் , அச்சுறுத்தல்களை கண்டறியலாம்.  

உள் மற்றும் வெளிப்புற காரணிகள்  (Internal and external Factors):-

உள்ப்புற காரணிகள் — பலங்கள் மற்றும் பலவீனங்கள் ( நிறுவனத்திற்கு உற்பட்ட காரணிகளை சார்ந்தது- விலை (Price) ,பொருட்கள் (Product) ,சந்தை(Marketting) ,விற்பனை (Sales) ,நிதிகள் (Finance),உற்பத்தி(Production) ,ஊழியர்கள் (Employees) … போன்றவைகள் ).

 வெளிப்புற காரணிகள் — வாய்ப்புகள்  மற்றும்  அச்சுறுத்தல்கள்  (நிறுவனத்திற்கு வெளிப்புற  காரணிகளை சார்ந்தது -தொழில்நுட்ப மாற்றம் (Technological Change), பொருளாதாரம் (Economy) ,அரசாங்கம்(Government), போட்டியாளர்கள் (Competitors), சமூகம் (Social) … போன்றவைகள்).

பலங்கள் (Strength):-

நிறுவனங்கள் ஒரு திட்டத்தை தீட்டும் முன்பு தங்களது பலங்களை அறிந்து கொள்வது அவசியமாகும். நிறுவனத்திற்கு அனுகூலமாக  உள்ள பல விஷயங்கள்  நிறுவனத்தின் பலங்கள் ஆகும்.

நமது நிறுவனத்தில்  மற்ற நிறுவனத்தை விட சிறந்ததாக என்ன விஷயங்கள் உள்ளன ?

மற்ற நிறுவனத்தின் பொருட்களை விட நம் நிறுவனத்தின் பொருட்களில் உள்ள தனித்தன்மைகள் (Unique)  என்னென்ன?

என்ன வளங்களை மற்றவர்களை விட குறைவான விலையில் கொள்முதல் செய்ய முடியும் ?

நமது நிறுவனத்தின் பலங்களாக நுகர்வோர் மற்றும் மக்கள் கருதுவது என்ன ?
மற்ற நிறுவனத்தின் ஊழியர்களிடம் இல்லாத என்ன திறமை மற்றும் ஆற்றல் நம் நிறுவனத்தின் ஊழியர்களிடம் உள்ளது ?

மற்ற நிறுவனத்தின் பொருட்களை விட நமது நிறுவனத்தின் பொருட்கள் எந்த வகையில் வேறுபட்டது ?

நம்மிடம் என்ன   தனித்தன்மையான விற்பனை முறைகள் உள்ளன?

இந்த வகை கேள்விக்கான பதில்கள் நமது  பலங்களே.

உயர்ந்த தரம்(High quality), மலிவான  விலை ,பிரபலமாக இருக்கும் பிராண்ட் பெயர் (Brand Name) ,நிதி ஆதாரம் (Finance Resources) ,கடன் இல்லாமை (No Debt), திறமையான ஊழியர்கள் ,சிறந்த நிர்வாகம் ,மேம்படுத்தப்பட்ட   தொழில்நுட்பம் , விரைவான உற்பத்தி போன்றவைகள் பலங்களே .

நாம் பலங்களாக பார்த்தவையெல்லம் நமது போட்டியாளர்களுடன் தொடர்புபடுத்த வேண்டும் . நம் போட்டியாளரும் உயர்ந்த தரத்தில்(High Quality) பொருட்களை விற்பனை செய்தால் தரம் என்பது நமது பலங்கள்(Strength) அல்ல . 
பலவீனங்கள் (Weaknesses):

நமது பலவீனங்களை அடையாளம் காண்பதால் தொழிலை நிர்வகிப்பதற்கும்,மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது. நமது நிறுவனத்திற்கு ஏற்படும்  பாதகங்கள் போன்றவை  நிறுவனத்தின் பலவீனங்கள் ஆகும்.

பலவீனங்களை நிறுவனத்தின் பார்வையில் இருந்து  மட்டும் பார்க்காமல் , நுகர்வோர் மற்றும் மக்களின் பார்வையிலிருந்தும்  பார்க்க வேண்டும்.

நம் விற்பனையை பாதிக்கும் காரணிகள் என்ன ?
நாம் மற்றவர்களை விட மேம்படுத்தபட வேண்டியவைகள் என்ன ?
எந்த வகையில் நாம் மற்றவர்களை விட பின்தங்கியுள்ளோம் ?
என்ன காரணிகள் நம்மை பாதிக்கின்றன ?
நமது நிறுவனம் மற்றும் நமது பொருட்களின் பலவீனங்களாக   நுகர்வோர் மற்றும் மக்கள் கருதுவது என்ன ?

இது போன்ற பல கேள்விகளை எழுப்பும் போது கிடைக்கும் பதில்களே நமது பலவீனங்கள். நம் போட்டியாளர் நம்மை விட செய்யும் சிறந்தது எல்லாம் நம் பலவீனங்களே.

அதிகமான விலை (High Price), குறைவான தரம் (Low quality),அதிகமான கடன் , போதிய நிதி ஆதாரம் இல்லாமை (Lack of Finance Resources),ஊழியர்களின் திறமையின்மை ,தலைமையின் நிர்வாகதத்  திறமையின்மை , பலவீ னமான மார்க்கெட்டிங் , பழைய தொழில்நுட்பம், உற்பத்திக்கான செலவு அதிகரித்து கொண்டே போகுதல் போன்ற பலவும்  பலவீனங்களே.

வாய்ப்புகள்(Opportunities):

நிறுவனங்கள் ஒரு திட்டத்தை தீட்டும் முன்பும், இலக்கை நிர்ணயிக்கும் முன்பும் வாய்ப்புகளை  அறிவது  அவசியமாகும். இந்த வாய்ப்புகளுக்கு  நமது இலக்கையும் ,திட்டமிடுதலையும் முடிவு செய்வதில் பெரும் பங்கு உண்டு.

விரிவடைந்து கொண்டே போகும் சந்தை(Broad Market) ,
தொழில்நுட்ப மாற்றம் (Changes in Technology ),
சந்தையில் ஏற்படும் மாற்றம் ( Changes in Market)
அரசாங்க கொள்கையில் மாற்றம் (Changes in Government Policy Related to Our field.) ,
பணப் புழக்கம் மக்களிடம் அதிகமாக இருத்தல் ,    
இளைஞர்களின் எண்ணிக்கை  அதிகரித்துக்  கொண்டே போகுதல் ,
மக்களின் ஊதியத் தொகை அதிகரித்தல ( Salary Hike) ,
மக்களின் வாழ்க்கை முறை ,பழக்கவழக்கள் , சமூகம் போன்றவற்றில்  ஏற்படும் மாற்றம் (lifestyle changes, population profiles, Changes in social patterns, and so on.)

இவை போன்றவையெல்லாம் வாய்ப்புகளே . ஐஸ்க்  கிரீம்(Ice Cream) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு கோடைக்காலம் என்பது ஒரு வாய்ப்பு , Pulsar போன்ற இரு சக்கர வாகனங்களுக்கு இளைஞர்களின் எண்ணிக்கை  அதிகரிதல்  என்பது ஒரு வாய்ப்பு. நகைக் கடைகளுக்கு பண்டிகை காலம் என்பது ஒரு வாய்ப்பு .

அச்சுறுத்தல்கள்(Threats) :

வெளிப்புறச் சுழ்நிலையில் நாம்  சந்திக்கும்  தடைகள் , பாதிப்புகள் எல்லாம் நமக்கு அச்சுறுத்தல்களே . இந்த அச்சுறுத்தல்களை நாம் கருத்தில் எடுத்து கொள்ள வேண்டும்.
  
மாறிவரும் தொழில்நுட்ப நமக்கு அச்சுறுத்தல்களாக அமையலாம்   (Changes in Technology maybe Threats to Us),
மோசமான உள்கட்டமைப்புகள் (Poor Infrastructures-Roads,Ports,Power and so on..),
புதிய போட்டியாளர்களின் வரவு ( Entry of New Competitors),
பண வீ க்கம் (Inflation),
பொருளாதாரம் மந்த நிலை(Economy Recession),
பாதகமான அரசாங்கத்தின் கொள்கைகள் (Adverse Government Policies),
மக்கள் செலவு செய்வதற்கு தயங்குதல்,
 இவை போன்றவையெல்லாம் அச்சுறுத்தல்களே.

ஒரு சில பொருட்களுக்கு வாய்ப்புகளாக  உள்ளவை மற்ற நிறுவன பொருட்களுக்கு  அச்சுறுத்தல்களாக அமையலாம் .

குடை(Umbrella)  தயாரிக்கும் நிறுவனங்களுக்கு மழைக் காலங்கள் என்பது வாய்ப்பு ,ஆனால் ஐஸ் கிரீம்(Ice Cream) தயாரிக்கும் நிறுவனங்களுக்கு அதுவே அச்சுறுத்தல்கள்.

SWOT Analysis என்பது இலக்கு நிர்ணயிப்பதற்கு மற்றும் திட்டங்களை தீட்டுவதற்கு தொழிலுக்கு SWOT Analysis பயன்படுவது போலவே  நமது சுய வாழ்க்கைக்கும் இலக்கு நிர்ணயிப்பதற்கு பயன்படுகிறது .

நாம் பலவீ னங்களை பலங்களாகவும் , அச்சுறுத்தல்களை வாய்ப்புகளாகவும்  மாற்ற முயற்சிப்போம்!