Tuesday, March 31, 2015

குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைகள் என்ன?


குடி நீரை இயற்கையாக சுத்திகரிக்கும் முறைகள் என்ன?
தண்ணீரைக் கொதிக்க வைக்கக் கூடாது. பில்டர் செய்யக் கூடாது. பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரை பயன்படுத்தக் கூடாது. வேறு எப்படித் தான் தண்ணீரை சுத்தப்படுத்துவது என்று கேட்டால், சாதாரணமாக பைப்பில் வரும் அந்தத் தண்ணீரை அப்படியே சாப்பிடலாம். அதை சுத்தம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உலகத்திலேயே மிகப் பெரிய, மிகச்சிறந்த தடுப்பூசி சாதாரண குழாய் தண்ணீர் மட்டுமே. யார் ஒருவர் குழாய் தண்ணீரை நேரடியாகக் குடித்து வாழ்கிறார்களோ அவர்களுக்கு எந்த நோய்க்கிருமியாலும் நோய் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே தயவு செய்து குழாயில் வரும் தண்ணீரை அப்படியே சாப்பிடுங்கள்.
குழாயில் வரும் தண்ணீரை எப்படிக் குடிப்பது? தண்ணீரில் TDS அதிகமாக இருக்கிறது, தாதுப் பொருட்கள் அதிகமாக இருக்கிறது. சாக்கடைநீர் கலந்து வருகிறது என்றெல்லாம் மனதில் எண்ணம் தோன்றும். எங்கள் ஊர் தண்ணீரில் மாசு அதிகமாக உள்ளது என டி.வி., பேப்பர் மூலமாகத் தெரிந்துக் கொண்டோம் என்று பலர் கூறுகிறீர்கள். உங்க ஊரில் மட்டுமல்ல உலகத்தில் உள்ள அனைத்து ஊரிலும் தண்ணீர் கெட்டுவிட்டதாக அந்தந்த ஊரில் உள்ள தண்ணீரைப் பாட்டில் மூலமாக வியாபாரம் செய்யும் கம்பெனிகள் ஒன்று சேர்ந்து பிரச்சாரம் செய்கிறது. அப்பொழுது தானே நீங்கள் குழாய் தண்ணீரைக் குடிக்காமல் பாட்டில் தண்ணீரை வாங்கிக் குடிப்பீர்கள் என்ற எண்ணத்தில் அவர்கள் பிரச்சாரம் செய்க்கிறார்கள்.
மேலும் மருந்து மாத்திரை கம்பெனிகள் தண்ணீரைக் கொதிக்க வைத்து மற்றும் பில்டர் செய்து மற்றும் பாட்டிலில் அடைக்கப்பட்ட நீரைப் பருகுவதால் உலக மக்களுக்கு நோய் வருகிறது என்பதை புரிந்து கொண்டு நல்ல விஷயத்தைப் பிரச்சாரம் செய்வது போல கெட்ட விஷயத்தை பணம் செலவு செய்து பிரச்சாரம் செய்து நம்மை நோயோடு இருக்க வைத்து அதன் மூலமாக மருந்து மாத்திரை வியாபாரம் செய்வதற்குத் திட்டமிட்டு உள்ளார்கள். உண்மையிலேயே குழாய் தண்ணீர் குடித்தால் ஒன்றும் ஆகாது. இருந்தாலும் சில ஊர்களில் சாயப் பட்டறை இருக்கிறது, தண்ணீர் கெட்டிருக்கிறது என்று ஒரு வேளை நீங்கள் நினைத்தால் உங்களது மனத் திருப்திக்காக சில காரியங்களைச் செய்யலாம். நான் கூறுவது போல உங்கள் தண்ணீரைக் கீழ்க்கண்ட முறையில் இயற்கையான முறையில் சுத்திகரிப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.
1. மண் பானை ஒரு மிகச் சிறந்த நீரை சுத்திகரிக்கும் கருவி.
மண் பானையில் குடிதண்ணீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து கெட்ட பொருள்களையும் மண் பானை உறிஞ்சிக் கொண்டு அந்த நீருக்கு மண் சக்தியை அளிக்கிறது. எனவே உலகத்திலேயே மிகச் சிறந்த WATER FILTER மண் பானை ஆகும். நாற்பதாயிரம் ரூபாய் செலவு செய்து உங்கள் வீட்டில் WATER FILTER வாங்கி வைத்திருக்கிறீர்களே நாற்பதாயிரம் ரூபாய்க்கு மண் பானை வாங்கினால் எவ்வளவு பானை கிடைக்கும், தினமும் நாம் ஒரு பானையை உடைத்தால் கூட தீராது. ஆனால் அப்படிப்பட்ட அற்புதமான இயற்கையான ஒரு WATER FILTER ஐ யாரும் பயன்படுத்துவதில்லை. எனவே தயவு செய்து தண்ணீரை மண் பானையில் வைத்துக் குடித்தால் கெட்ட பொருள்களும் அழியும். மண் சக்தியும் கிடைக்கும், பிராண சக்தி அதிகரிக்கும்.
2. வெள்ளை நிற பருத்தித் துணியால் வடிகட்டலாம்.
வெள்ளை நிறத்தில் உள்ள சுத்தமான பருத்தித் துணியால் ஒரு தண்ணீரை பில்டர் செய்தால், வடி கட்டினால் அந்தத் தண்ணீரில் உள்ள அனைத்து நோயை உண்டுசெய்யும் வைரஸ் , பாக்டீரியா போன்றவற்றை இந்தத் துணி உறிஞ்சிக் கொள்கிறது என்ற
உண்மை, அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் அம்மை போன்ற நோய்கள் வரும் பொழுது நமது முன்னோர்கள் எந்த ஒரு மருந்து மாத்திரையும் சாப்பிடாமல் மருத்துவமனைக்குச் செல்லாமல் வெள்ளைத் துணியில் வடிகட்டிய நீரில் குளிப்பாட்டி குணப்படுத்தியிருக் கிறார்கள். எனவே தேவைப்பட்டால் இந்த முறையில் தண்ணீரைச் சுத்தப்படுத்தலாம்.
3. வாழைப்பழத் தோல் மூலம் சுத்தம் செய்யலாம்
நாம் சாப்பிடும் சாதாரண வாழை பழத் தோலை மண் பானைக்குள் இருக்கும் தண்ணீரில் இட்டு அரை மணி நேரத்திற்கு பிறகுவெளியே எடுத்து விட்டால் இந்த வாழைபழத் தோல் மண் பானையில் உள்ள நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும், கெட்ட பொருள் களையும் உறிஞ்சி எடுத்து விடுகிறது. ஆனால் வாழைபழத் தோலை அதிக நேரம் தண்ணீரில் வைத்திருந்தால் அதுவே ஒரு குப்பையாக மாறி விடும். எனவே அரை மணி நேரத்திற்குள் எடுத்து விட வேண்டும். இந்தச் சுலபமான நீரை சுத்திகரிக்கும் முறையையும் பயன்படுத்தலாம்.
4. செம்புக் காசு அல்லது செம்பு பாத்திரம் மூலம் சுத்தப்படுத்தலாம்
செம்பு என்ற உலோக பாத்திரத்தின் மூலமாக செய்யப்பட்ட ஒரு குடத்திலோ அல்லது செம்பிலோ நாம் நீரை இரண்டு முதல் ஐந்து மணி நேரம் வைப்பது மூலமாக தண்ணீருக்கு அதிகப் படியான சக்தி கிடைக்கிறது. அதில் உள்ள கெட்டப் பொருள் அழிக்கப்படுகிறது. எனவே செம்பு என்ற உலோகத்தின் மூலம் செய்யப்பட்ட பாத்திரங்களை தண்ணீர் வைக்க பயன்படுத்தலாம். அல்லது மண் பானையில் செம்புக் காசுகளை போட்டு வைத்தால் அந்த செம்பு காசுகள் தண்ணீரை சுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கும். பழங்காலத்தில் மலைகளில் தவம் செய்து வந்த ரிஷிகள், ஞானிகள், முனிவர்கள் எப்பொழுதுமே அருகில் ஒரு செம்பு கமண்டலத்தில் தண்ணீரை வைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களிடம் சென்று நீங்கள் ஏதாவது வம்பு பேசினால் அந்த தண்ணீரை எடுத்து நீ நாயாக போவாய் என்று சாபமிட்டவுடன் அந்த மனிதன் நாயாக போவதைப் போல நாம் படங்களில் பார்த்திருப்போம். செம்பில் வைக்கப்படும் தண்ணீருக்கு அவ்வளவு சக்தி உள்ளது. எனவே செம்பு என்ற உலோகத்தின் சக்தியின் மூலமாக நாம் தண்ணீரை சுத்தப்படுத்த முடியும். எனவே மேலே கூறப்பட்டுள்ள வகையில் மண்பானை, வெள்ளை பருத்தித் துணி, வாழைப் பழத் தோல், செம்பு என்ற உலோகம் மற்றும் பல இயற்கை முறையில் தண்ணீரை சுத்தப் படுத்துவதற்கு பல உத்திகள் இருக்கும் பொழுது நாம் ஏன் செயற்கை முறையில் சுத்தம் செய்வதற்கு கருவிகளை வாங்க வேண்டும்? வாழ்வோம் ஆரோக்கியமாக !

ஜனாதிபதிய எப்படி தேர்ந்தெடுக்கிறாங்க தெரியுமா?

 -www.v4all.org 










‘இன்னப்பா அலர்ட் ஆறுமுகம், கொஞ்ச நாளா இந்த பக்கம் ஆளே காணோம்’- என்று கேட்டபடியே வந்தார் வக்கீல் வண்டு முருகன். 

‘அதிமுக ஆட்சி அமைச்சு ஒரு வருஷம் ஆச்சில்ல...ஆட்சியை பத்தி மக்கள் என்ன நினைக்குறாங்கனு தெரிஞ்சுக்க ஊர் ஊராக போயிருந்தேன். அதான்...

‘எனக்கு சில டவுட் இருக்கு, கிளியர் பண்ணுவியாப்பா? அலர்ட் ஆறுமுகத்தை பார்த்து கேட்டார் வக்கீல் வண்டு முருகன்.

‘வக்கீலுக்கெல்லாம் படிச்சிருக்க...அரசியல்ல வேறு நுழைஞ்சிருக்க...உனக்கே டவுட்டா, கேளு! தெரிஞ்சதை சொல்றேன்’- அலர்ட்டின் முகத்தில் பெருமை பொங்கியது.

*‘ஜனாதிபதி தேர்தலை பத்தி சொல்லேன்?’

இது நம் நாட்டோட 14வது ஜனாதிபதியை தேர்ந்தெடுக்குற தேர்தல்.  ஜூலை மாசம் நடக்குது.
இந்தியாவின் முதல் குடிமகன், முப்படைகளின் தளபதினு சொன்னாலும், இந்த பதவியில இருக்கிறங்க பொம்ம மாதிரிதான். 5 வருஷம் இவங்க பதவியில இருப்பாங்க.

* ஜனாதிபதிய எப்படி, யார் தேர்ந்தெடுப்பாங்க? 

பிரதமர், மாநில முதல்வர்களை போல ஜனாதிபதிய மக்கள் நேரடியாக தேர்ந்தெடுங்க மாட்டாங்க. எம்.எல்.ஏ.,க்கள், லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கள் தான் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுப்பாங்க.
நம் நாட்ல மொத்தம் 776 எம்.பி.,க்களும்(லோக்சபா 543 + ராஜ்யசபா 233) , 4,120 எம்.எல்.ஏ.,க்களும் உள்ளனர்.
28 மாநிலங்கள் மற்றும் டில்லி, புதுச்சேரி யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே இத்தேர்தல்ல கணக்குல எடுத்துக்கிறாங்க.


* இவங்க எல்லாம் எங்க ஓட்டுப் போடுவாங்க?  

எம்பிக்கள் எல்லாம், டில்லியில் உள்ள பார்லிமென்ட் வளாகத்திலும், எல்எல்ஏக்கள் எல்லாம் அந்தந்த மாநில சட்டசபை வளாகத்துல இருக்கிற பூத்துல ஓட்டுப் போடுவாங்க.

* யார் வேணாலும் ஜனாதிபதி ஆயிடலாமா? 

ஏன் நீ ஆவப் போறீயா? ஆசையப் பாரு!
இந்தியக் குடிமகனாக இருக்கனும், 35 வயது முடிஞ்சிருக்கனும்.  சம்பளம் வாங்கும் அரசு ஊழியரா இருக்க கூடாது. லோக் சபா எம்பி ஆவதற்கான தகுதி இருக்கனும்.
துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர்கள், மத்திய, மாநில அமைச்சர்கள் இந்த தேர்தல்ல போட்டியிடலாம். அவங்க  ஜனாதிபதியா தேர்ந்தெடுக்கப்பட்டா, முந்தைய பதவியை ராஜினாமா செதிடனும்.

* ஜனாதிபதிக்கு ரொம்ப அதிகாரமோ? 

இவர் எந்த முடிவையும் சுயமா செய்ய முடியாது.
எலக்ஷன்ல பெரும்பான்மை பெற்ற கட்சிய, ஆட்சியமைக்க (பிரதமராக பதவியேற்க) கூப்பிடுறது, பிரதமரின் ஆலோசனைப்படி மத்திய அமைச்சர்களை நியமிப்பது, பார்லிமென்ட் கூட்டத் தொடரைக் கூட்டுவது, அதில்  பேசுவது போன்றவை தான் இவரது வேலை.

இதத்தவிர, பார்லிமென்ட்டில் ஓ.கே. ஆகும் எல்லா மசோதாக்களும், ஜனாதிபதி ஓ.கே. சொன்னாத்தான்  சட்டமாகும்.

பிரதமரின் அறிவுரைப்படி(?!) மாநில கவர்னர்கள், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் தலைமை நீதிபதிகள், மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், தலைமைத் தேர்தல் ஆணையர், வெளிநாட்டு தூதர்கள் போன்றவர்களை நியமிப்பார்.

அரசியல் சட்டப் பிரிவு 352ன் படி நெருக்கடி நிலை பிரகடனம் செய , லோக்சபாவை கலைக்க, பிரிவு 356ன் படி மாநில அரசைக் கலைக்க ஜனாதிபதிக்கு அதிகாரம் இருக்கு.

சுப்ரீம் கோர்ட்டில் விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை குறைக்கவும், தூக்கு தண்டனை விதிச்சவங்களுக்கு மன்னிப்பு வழங்கவும் இவருக்கு அதிகாரம் இருக்கு. ஆனா, இதுக்கெல்லாம் காலக்கெடு எதுவுமில்லை.


‘அம்மாடியோவ்! ஜனாதிபதி தேர்தல் இவ்வளவு விஷயம் இருக்கா!. சரி ஆறுமுகம்’....‘வண்டு முருகனின் பேச்சை இடையில் வெட்டிய ஆறுமுகம், ‘ஹலோ வண்டு, வெறும் ஆறுமுகம் இல்ல...அலர்ட் ஆறுமுகம்....இந்த ஆறுமுகம் அடை தின்னாம இருந்தாலும் இருப்பான். ஆனா, அடைமொழி இல்லாம இருக்கமாட்டான்’ கோபத்தில் அலர்ட் ஆறுமுகத்தின் முகம் சிவந்தது.

‘கோவிச்சுக்காத அலர்ட் ஆறுமுகம்,  லாஸ்ட்டா ஒரு கேள்வி, ஜனாதிபதியா வர யாருக்கு வாய்ப்பிருக்கு?’

‘என்ன இவ்வளவு  சாதாரணமா கேட்கிற. ஒட்டு மொத்த இந்திய அரசியல்வாதிகளே இந்த கேள்விக்கான விடையைத்தான் தேடிக்கிட்டு இருக்காங்க. மீட்டிங், ரகசிய சந்திப்பு, வேண்டுகோள்னு ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய தூள் கிளப்பிட்டு இருக்காங்க..
இப்ப இருக்கிற துணை ஜனாதிபதி அன்சாரி, நிதி அமைச்சர் பிரணாப், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், இவங்க பேரெல்லாம் அடிபடுது.



 பிரதமர் மன்மோகனை கூட கேட்டாங்க. அவரு ‘ஆளை விடுங்கப்பா, நான் ரெஸ்ட் எடுக்கனும்’னு சொல்லிட்டாரு.
கொஞ்சம் பொறு. அடுத்த முறை நாம சந்திக்கிற போது யாரு வேட்பாளரு, யாருக்கு வெற்றி வாய்ப்பிருக்குனு சொல்லிடறேன்’.

அலர்ட் ஆறுமுகம் சொல்லி முடிக்கவும், ‘ஸ்நேக்’ பாபு உள்ளே நுழையவும் சரியா இருந்தது. 

கொஞ்ச நேரம் அவரு கூட பேசிட்கிட்டு இருந்துட்ட கிளம்பிட்டாங்க அலர்ட் ஆறுமுகமும், வண்டு முருகனும்.  


பாக்ஸ் மேட்டர்

வண்டு முருகன்:  எப்படி எம்எல்ஏ, எம்பிக்களின் ஓட்டுகளை கணக்கிடறாங்க?

அலர்ட் ஆறுமுகம்: தமிழகத்தையே உதாரணமா வைச்சு சொல்றேன். அப்பத்தான் ஈஸியா புரியும்.

தமிழகத்தில ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு 176 ஓட்டு. இந்த 176 ஐ  எப்படி கணக்கிடறாங்கனு சொல்றேன்.

தமிழகத்துல இருக்கிற மொத்த எம்.எல்.ஏ.,க்கள் எண்ணிக்கை 234. இத ஆயிரத்தால பெருக்கனும். அப்ப விடை 2,34,000. இத நம்ப மாநிலத்தில இருக்கிற மொத்த மக்கள் தொகையால வகுக்கணும்.

(‘1971 சென்செஸ்’ மக்கள்தொகை தான், ஜனாதிபதி தேர்தலில் கணக்கில் கொள்ளப்படுகிறது.  தமிழகத்தின் மக்கள் தொகை 4,11,99,168 பேர்).

அதாவது,

மாநிலத்தின் மக்கள்தொகை(4,11,99,168)
= -         =176
எம்.எல்.ஏ.,க்களின் எண்ணிக்கை(234) * 1000

ஒரு எம்.எல்.ஏ.,வுக்கு 176 ஓட்டு.

அப்ப, தமிழக எம்.எல்.ஏ.,க்களின் மொத்த ஓட்டு மதிப்பு 234 * 176= 41,184.
இந்த கணக்குபடி, எல்லா மாநிலங்களையும் சேர்த்து எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு 5,49,474.


வண்டு : அப்ப எம்பிக்களின் ஓட்டுகளை எப்படி கணக்கிடறாங்க?

எல்லா மாநிலத்துல இருக்கிற எம்எல்ஏக்களின் ஓட்டு மதிப்பை மொத்த எம்பிக்களின் எண்ணிக்கையோடு வகுக்கனும்.
அதாவது,

அனைத்து மாநில எம்.எல்.ஏ.,க்களின் ஓட்டு மதிப்பு (5,49,474)
----------------------------------------------------------------------------------------------  = 708
அனைத்து மாநில மொத்த எம்.பி.,க்களின் எண்ணிக்கை(776)

இதன் மூலம் ஒரு எம்.பி.,யின் ஓட்டு மதிப்பு 708. நம்ம நாட்டின் ஒட்டுமொத்த எம்.பி.,க்களின் ஓட்டுமதிப்பு (776*708)  =5,49, 408

வண்டு: மொத்த ஓட்டு எவ்வளவு:

ஜனாதிபதி தேர்தலுக்கான மொத்த ஓட்டு மதிப்ப எப்படி கணக்கிடறாங்கன்னா,
மொத்த எம்எல்ஏக்களின் ஓட்டுகளையும், எம்பிக்களின் ஓட்டுகளையும் கூட்டி, இதில் யாருக்கு மெஜாரட்டியோ அவங்கதான் ஜனாதிபதி.

அதாவது, எம்.எல்.ஏ.,க்கள்(5,49,474 ) + எம்.பி.,க்களின் ஓட்டு(5,49,408) = 10,98,882.

இந்த மொத்த ஓட்டுல யார் அதிக ஓட்டு வாங்குறாங்களோ அவங்கதான் ஜனாதிபதி. ஓ.கே.வா.

குபேர வாழ்வருளும் குசேல சரித்திர ஸ்லோகம்

குபேர வாழ்வருளும் குசேல சரித்திர ஸ்லோகம்



அபூர்வ ஸ்லோகம்

பால்ய நண்பனான கண்ணனை தன் மனைவி கொடுத்தனுப்பிய அவலுடன் சென்று குசேலன் சந்தித்தது அட்சய த்ருதியை அன்று. அந்த நண்பன்   கொண்டு சென்ற அவலை கண்ணனும் ருக்மிணியும் உண்டு குசேலனை குபேரனாக்கிய பொன்னாள் இது. இத்துதியை அட்சய த்ருதியை தினத்தன்று   பாராயணம் செய்தால் வறுமை நீங்கும். சர்வ சௌபாக்கியங்களும் கிட்டும். உத்யோக லாபம், வியாபார லாபம், அனைத்து செயல்களிலும் வெற்றி   என்று எல்லா நன்மைகளும் வந்து சேரும். இந்த குசேல சரித்திரத்தை நாராயண பட்டத்திரி குருவாயூரப்பனிடம் ஒவ்வொரு ஸ்லோகமாகக் கூறி, ‘‘அப்  படியா?’’ எனக் கேட்க, அதற்கு குருவாயூரப்பன் ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ‘‘ஆமாம், அப்படித்தான் நடந்தது’’ என்று சொல்வதுபோல தலையாட்டி  னார் என்பது வரலாறு. அட்சய த்ருதியை அன்று (13.5.2013) இந்த ஸ்லோகங்களை உளமாற சொல்லி வந்தால் பொருள் வளர்ச்சி, மன வளர்ச்சி  எல் லாம் கூடும்.

குசேலநாமா பவதஸ்ஸதீர்த்யதாம்
கதஸ்ஸ ஸாந்தீபனிமந்திரே த்விஜ:
த்வதேகராகேண தனாதிநிஸ்ப்ருஹோ
தினானி நின்யே ப்ரஸமீ க்ருஹாஸ்ரமீ

ஓ குருவாயூரப்பா! சாந்தீபினி முனிவரின் ஆஸ்ரமத்தில் அந்தணனான குசேலர் உன்னுடன் வேதங்களைப் பயின்றார். உன்னிடத்தில் கொண்ட பரிபூ  ரண பக்தியினால் எந்தப் பொருளின் மீதும் பற்றற்றவராக, சாந்த சொரூபியாக, குடும்ப வாழ்க்கையையும் மேற்கொண்டு குசேலன் வாழ்ந்தாரல்லவா?   கிரகஸ்த தர்மத்தை மேற்கொண்டாலும் எளிமையாக வாழ்ந்து வந்தாரல்லவா?

ஸமான ஸீலாபி ததீயவல்லபா
ததைவநோ சித்தஜயம் ஸமேயுஷீ
கதாசிதூசே பத வ்ருத்திலப்தயே
ரமாபதி: கிந்நஸகா நிஷேவ்யதே

குசேலருடைய பத்தினியானவள் அவரைப் போன்ற கூச்ச சுபாவமுள்ளவளாக இருந்த போதிலும் குடும்பப் பெண்ணுக்குரிய கவலையோடும் இருந்  தாள். ஜீவனத்திற்கு ஏதேனும் செய்துதானே ஆகவேண்டும் என்கிற எண்ணம் அவளிடம் இருந்தது. அதனாலேயே ‘லக்ஷ்மீபதியான  கோபாலன் தாங்  களுக்கு நண்பனாயிற்றே, தாங்கள் ஏன் அவரை தரிசித்து விட்டு வரக்கூடாது?’ என்று ஒரு நாள் கேட்டாள். அது மிகவும் ஆச்சரியமான விஷயம் அல்  லவா?

இதீரிதோயம் ப்ரியயா க்ஷுதார்த்தயா
ஜுகுப்ஸமானோபி தனே மதாவஹே
ததா த்வதாலோகன கௌதுகாத்யயௌ
வஹன் படாந்தே ப்ருதுகானுபாயனம்
குசேலரின் மனைவி இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டதால் குசேலர்  கிருஷ்ணனை காண புறப்பட்டார். லௌகீகமான பொருளைப் பெறும் ஆசையும்   பேராசையான மதமும் அவரிடத்தில் இல்லை. ஆனாலும் உன்னைத் தரிசிக்கக் கிடைத்த வாய்ப்பாகவே மனைவியின் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்  டார். அவலை தன் வேட்டியின் உத்திரியத்தில் முடிந்து கொண்டு உன்னைக் காணப் புறப்பட்டார் அல்லவா? 

உறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்

உறக்கத்தை தரும் உணவுப் பொருட்கள்

சில உணவுப் பொருட்கள் நல்ல உறக்கத்தைக் கொடுக்க உதவி செய்கின்றன. உறக்கம் வருவதில் பிரச்சினை இருப்பவர்கள் முதலில் உங்கள் உணவுக் கட்டுப்பாடு குறித்து அக்கறை செலுத்த வேண்டும்.
உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்னர் சரியான உணவினை உட்கொள்வதன் மூலம் நல்ல உறக்கத்தைப் பெற்றுக்  கொள்ள முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாதாம்: பாதாமில் உள்ள மெக்னீசியம் தசை தளர்விற்கும், உறக்கத்திற்கும் உதவி செய்கிறது. அதோடு பாதாமில் உள்ள புரதங்கள் நீங்கள் உறங்குகின்ற போது இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது.
இந்த படுக்கை நேர சிற்றுண்டியை முயற்சித்துப் பாருங்கள். ஒரு கரண்டி பாதாம் பட்டர் அல்லது ஒரு அவுன்ஸ் பாதாமினை சாப்பிட்டுவிட்டு உறங்கச் செல்லுங்கள்.
தேநீர்: உறங்கச் செல்வதற்கு முன்னர் தேநீர் அருந்துவதைத் தவிர்ப்பது நல்லது தான். ஆனால் சில தேநீர் வகைகள் உறக்கத்தைக் கொடுக்கக் கூடியவை. அந்த வகையில் தூங்கச் செல்வதற்கு சிறிது நேரத்தின் முன்னர் கிரீன் டீ அருந்துவது நல்லது. இதில் தியனைன் எனும் பொருள் உள்ளது. இது நல்ல உறக்கம் ஏற்பட உதவி செய்கிறது.
வாழைப்பழம்: மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் அடங்கிய சிறந்த பழம் வாழைப்பழம் தான். இது அதிக தசை இறுக்கத்தைத் தளர்த்த உதவி செய்கிறது. அத்தோடு இதில் ட்ரிப்டோபன்னும் உள்ளது.
இந்த ட்ரிப்டோபன் செரடோனின் ஆகவும் மெலடோனின் ஆகவும் மாற்றப்படுகிறது. இந்த இரண்டும் மூளையின் அமைதியான ஹோர்மோன்களுக்கு அவசியமானவை. ஒரு கப் பாலில் ஒரு வாழைப் பழத்தை மசித்து சேர்த்து அருந்தவும்.
பால்: பால், யோகட், பாலாடைக்கட்டி(சீஸ்) போன்றவற்றில் ட்ரிப்டோபன் அடங்கியுள்ளது. இது தவிர இந்த மூன்று பொருட்களிலும் அடங்கியுள்ள கால்சியம் மன அழுத்தத்தைக் குறைப்பதற்கு உதவி செய்வதுடன் நரம்பிழைகளின் உறுதித் தன்மைக்கும் உதவி செய்கிறது.
ஆகவே நீங்கள் உறங்க ச்செல்வதற்கு முன்னர் யோகட் சாப்பிடுவது நல்ல உறக்கத்திற்கு உதவி செய்கிறது.
ஓட்ஸ்: நீங்கள் பொதுவாக இந்த ஓட்ஸ் உணவுப் பொருளினை காலை நேரத்தில் மட்டும் தான் உட்கொள்வீர்கள். ஆனால் ஒரு கோப்பை வெதுவெதுப்பான ஓட்ஸ் உணவுப் பதார்த்தம் உறக்கம் வருவதற்கும் உதவி செய்கிறது.
இதில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், சிலிக்கன் மற்றும் பொட்டாசியம் ஆகியவையும் உறங்கச் செய்வதற்கு ஒத்துழைக்கின்றன. ஆனால் அதிகமாக ஓட்ஸில் சீனி சேர்த்து சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு அதற்குப் பதிலாக வாழைப்பழம் போன்ற பழங்களை சேர்த்துக்கொள்ளப் பாருங்கள்.
செர்ரிபழம்: மிக வேமாக உறங்க வேண்டுமானால் ஒரு கிளாஸ் செர்ரிப்பழரசம்(ஜூஸ்) அருந்திவிட்டுப் படுக்கைக்குச் செல்லுங்கள் என பல்கலைக்கழக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இன்சோம்னியா பாதிப்புக்குள்ளானவர்களுக்கு உதவக்கூடிய மெலடொனின் செர்ரிப்பழங்களில் அதிகம் காணப்படுகிறது.

click - www.v4all.org 

மனதை உலுக்கிய கட்டுரை.... மனைவியிடம் பேசுங்கள் ! - திருச்சி சிவா M.P

மனதை உலுக்கிய கட்டுரை....
மனைவியிடம் பேசுங்கள் ! - திருச்சி சிவா M.P

பன்னிரெண்டாம் வகுப்புப் படிப்பை பாதியோடு விட்டுவிட்டு, பதினேழு வயதில் என்னை மணமுடித்து, 32 ஆண்டுகள் வாழ்ந்து, 49 வயது முடியும் நேரத்தில் என்னை தனி மனிதனாக தத்தளிக்க விட்டு என் மனைவி போய் விட்டாள்.
அவளுடைய முழு ஒத்துழைப்பு, வாழ விரும்பி நடத்திய போராட்டம், மருத்துவர்களின் முயற்சி, இத்தனையும் மீறி இன்னும் வளர்ந்து நிற்கும் மருத்துவத்திற்கு கட்டுபடாத நோய் ஒன்று, எல்லோரையும் தோற்கடித்து விட்டு அவளை கொண்டு போய் விட்டது.
இதுநாள் வரை என் வாழ்வில், கடந்த காலத்தில் நான் செய்த, அல்லது செய்யத் தவறிய எதையும் எண்ணி வருந்தியதேயில்லை. காரணம் எல்லாம் தெரிந்தே, தெளிந்தே செய்ததுதான்.
ஆனால் கடந்த ஒரு வார காலமாக ஒரு குற்ற உணர்ச்சி என்னை வாட்டி வதைக்கிறது. வாழ்வின் எல்லா நிலைகளிலும், வசந்தம் எட்டிப்பார்க்காத ஆரம்ப காலத்திலும், வளம் குறைந்திருந்த நாட்களிலும் மகிழ்ச்சியோடு என்னோடு வாழ்ந்தவள் அவள்.
பொன் நகைகளை கழட்டிக் கொடுத்து விட்டு, புன்னகையோடு மட்டும் வலம் வந்த நாட்கள் உண்டு. அரசியல் வெப்பம் தகித்தபோதும், தனிமனித வாழ்வின் துன்பங்கள் சூழ்ந்தபோதும், என் அருகே ஆறுதலாய், ஆதரவாய் இருந்தவள்.
எந்த நிலையிலும் தலை தாழ்ந்து வாழ்ந்திட கூடாது என்கின்ற என் குணத்திற்கு இயைந்து, இணைந்து நடந்தவள். சுயமரியாதையை காப்பதில் என்னையும் தாண்டி நின்றவள்.
மூன்று குழந்தைகளும் பிறக்கும் நேரத்தில், இடைதேர்தல் பனி, பிரச்சாரப்பணி, போராட்டங்கள் என்று அவள் அருகே இருக்காமல் சுற்றி கொண்டுஇருந்தபொது சிறிதும் முகம் சுளிகாதவள்.
1982 செப் 15 முரசொலியில் ' என் கண்கள் உன்னை தேடுகின்றன ' என்று கலைஞர் எழுதிய கடிதம் உங்களுக்காகவே என சொல்லி நிறைமாத கர்ப்பிணியாக இருந்தும் என்னை பெரியகுளம் இடைத்தேர்தலுக்கு அனுப்பிவிட்டு செப்17 குழந்தை பிறந்து, இரண்டு நாட்கள் கடந்து 19 ந்தேதி நான் பார்க்க வந்தபோது ஒரு சிறிதும் முகம் சுழிக்காமல் ஒருமணி நேரத்திலயே என்னை மீண்டும் தேர்தல் களம் அனுப்பி வைத்த கற்பனை செய்ய முடியாத குணம் கொண்ட குலமகள். இரண்டாவது குழந்தை பிறந்து மருத்துவமனையில் இருந்து நேராக அப்போது ஒரு போராட்டத்தில் கலந்து கொண்டு போலீஸ் நிலையத்தில் காவலில் இருந்த இடத்தி பிள்ளையை காட்டி விட்டு பத்திரமாக இருங்கள் என்று சொல்லி விட்டு போன இலட்சியவாதியின் சரியான துணை.
விருந்தோம்பல் , உபசரிப்பு, இன்முகம், எண்ணைக்கான வருவோர் அதனை பேருக்கும் அன்னபூரணி. இரவு இரண்டு மணிக்கு எழுந்து சுடச்சுட தோசையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த பழைய துவையலை ஒதுக்கி புதிதாக அரைத்து பசியாற்றி பின்னர் சுருண்டு உறங்கும் அன்பு தெய்வம், தாய் போன துயரம் தெரியாமல், தாயின் இடத்தையும் நிரப்பி, ஒருபொழுதும், எதன் பொருட்டும் முகம் வாடுவது பொறுக்காமல் துடிக்கும் உள்ளம் கொண்ட உத்தமி;
பொது வாழ்க்கையில் நான் நெறி பிறழாமல் நடப்பதற்குப் பெரிதும் துணையாய், ஊக்கமாய், பக்கபலமாய், இருந்தவள்.
பண்டிகைகளும், திருநால்களும், கோலாகலமாய், கூட்டம் கூட்டமாய் கொண்டாடுவதற்கு அவள்எடுத்துக் கொள்ளும் முயற்சிகளும், காட்டும் ஆர்வமும் அளவிடற்கரியவை.
இத்தனை கருத்துக்களை அவள் மீது நான் கொண்டிருந்தன ஒருநாளும் வாய்விட்டு வார்த்தையில் சொல்லியதேயில்லை. ஆண்செருக்கு என்பார்கள், நிச்சயமாக அது இல்லை. இருந்திருந்தால் இந்த உறுத்தல் வந்துருக்காது.
நேரம்இல்லை என்பார்கள், பொய் 32 ஆண்டுகளில் பத்து நிமிடம் கூடவா கிடைக்காமல் போயிருக்கும். தானாகவே புரிந்து கொள்வார்கள் என்பார்கள். என்றால் மொழி எதற்கு? மொழியின் வழியில் ஒரு பொருளுக்கு பல சொற்கள் எதற்கு? பேசுவதற்குதானே? உணர்துவதற்குதானே? ஒரு சொல் ஓராயிரம் புரியவைக்குமே.
காலம் கடந்து பயன்படுத்தினால் பயனத்துப்போவது பதார்த்தங்கள் மட்டுமா? வார்த்தைகளும் தானே. சரியான நேரத்தில் வெளிபடுதாவிட்டால், 'மன்னிப்பு', 'நன்றி' , ' காதல் ' என்ற எந்த சொல்லுக்கும் உயிர் இருக்காது.விளையும் இருக்காது.
இத்தனை கற்றும் கடமை தவரியதாகவே கருதுகிறேன். ஒருநாள் ஒரே ஒரு தடவை தனியாக அவளிடம், உன்னால் தான் உயர்வு பெற்றேன் என்று கூட அல்ல, உன்னால்தான் இந்த பிரச்சனை தீர்ந்தது, உன் துணைதான் இந்த துன்பமான நேரத்தை கடக்க வைத்தது. உன் ஆலோசனைதான் என் குழப்பத்திற்கு தீர்வு தந்தது. என் வேதனையை பகிர்ந்து கொண்டு என்னை இலேசகினாய் என்று ஒருமுறையாவது கூறியிருந்தால் எவ்வளவு மகிழ்ந்திருப்பாய். கோடிரூபாய் கொட்டிகொடுத்தாலும் கிடைக்காத உற்சாகத்தை அடைந்திருபாயே.
ஊட்டிக்குப் பொதுக்கூட்டத்திற்கு சென்றிருந்த நேரத்தில் அவளின் உடல் நலம் மோசமடைததாக செய்தி கிடைத்தது வரும் வழியெல்லாம் இப்படியே யோசித்து இன்று அவளிடம் எப்படியும் உள்ளத்தை திறந்து இத்தனை நாள் சேர்த்து வைத்துஇருந்ததைஎல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று வந்து பார்த்தல் முற்றிலும் நினைவிழந்து மருத்துவமனையில் படுத்திருக்கிறாள்.
நினைவு திரும்ப வாய்ப்பேயில்லை என மருத்துவர்கள் உறுதியாக சொன்னபிறகு, மெல்ல அவள் காதருகே குனிந்து 'மும்தாஜை' ஷாஜகான் 'தாஜ்' என்று தனிமையில் அழைத்ததைபோல தேவிகாராணியை 'தேவி' என அழைத்தபோது , மூன்றாவது அழைப்பில் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் இரண்டும் மருத்துவத்தை கடந்த அதிசயமாக புருவங்கள் 'என்ன' என்று கேட்பது போல மேல உயர்ந்து வலது விழியோரம் ஒரு துளி கண்ணீர் உருண்டோடியபோது நான் உடைந்துபோனேன்.
பேசியிருக்க வேண்டிய நாட்களில் மனதில் கொள்ளையாய் இருந்தும் பேசாமலே வீணாக்கி, உணர்வுகள் இழந்து கிடந்தவளிடம் அழுது, இன்று அவள் படத்திற்கு முன் உட்கார்ந்து கதறுகிறேன். வருகிரவரிடமெல்லாம் அவள் உயர்வுகளை நாளெல்லாம் உணர்கிறேன். ஒரே ஒருமுறை, அவள் கம்பீரமாய் உலவிய நாட்களில் உட்கார வைத்து பேசிஇருந்தால்...........
இவர் நம்மை முழுதாக புரிந்து கொண்டாரோ, இல்லையோ என்ற குழப்பத்திலேயே போய்இருப்பாளோ என்று நாளும் துடிக்கிறேன்.
எனக்கு ஆறுதல் கூறவந்த திரு.இவிகேஎஸ். இளங்கோவன், "வருதப்படதீர்கள் இதெல்லாம் அவர்களுக்கு சொல்லாமலே புரிந்திருக்கும் " என்று சமாதானப் படுத்தினார்.
நான் அவரிடம் கேட்டேன் , " நீங்களோ நானோ பொதுக்கூட்டத்தில் பேசுகிறபொழுதே, நம்முடைய பேச்சு சிறப்பாக இருந்ததோ இல்லையோ, என்பதை கூடத்தில் எழும் கரவொலி மூலம், முகக்குரிப்பின் மூலம், ஆதரவாளரின் மூலம் உணர்ந்து கொள்ள முடிகிறது.
ஆனாலும், நிகழ்ச்சி முடிந்து, காரில் ஏறியவுடன் உடன் பயனிபவர்கள் அந்த உரை குறித்து ஏதாவது சொல்லவேண்டும் என ஏன் எதிர் பார்க்கிறோம். பாராட்டினால் பரவசமடைகிறோம் . அதுபற்றி எதுவுமே பேசாமல் கூட வருபவர்கள் அமைதி காத்தால் கோபம் கொள்கிறோமே ஏன்? அது போலதான் வீட்டில் இருக்கிற பெண்களும் தங்கள் செயல்களுக்கும், சேவைகளுக்கும், பணிகளுக்கும், ஒரு வார்த்தை அன்பாக , கனிவாக, பாராட்டு சொல்லாக, கணவன் சொன்னால் மகிழ்வார்கள். இதில் நாம் இழப்பது எதுவுமேஇல்லையே என சொன்னேன்.
ஏழு நாட்களுக்கு மேலாகி விட்டது, அவள் படத்தை பார்க்கிறபோதெல்லாம் நெஞ்சிலே இருந்து எதோj ஒன்று கிளம்பி கண்களில் நீராய் முட்டுகிறது.காலங்கடந்து நான் உணர்கிறேன்.
தோழர்களே! தயவு செய்து மனைவியிடம் பேசுங்கள். அவர்களின் துணையினை, அன்பினை, பொறுப்பினை, பொறுமையினை, பெருமையினை, வாய்விட்டு வார்த்தைகளால் சொல்லுங்கள்.
என் மனைவிக்கு என்னை உணர்தாமலே, என் உள்ளதை திறக்காமலே, பேச்சையே தொழிலாக கொண்டவன் பேசி மகிழவைகாமலேயே அனுப்பி வாய்த்த கொடுமை இனி வேறெங்கும் நிகழவேண்டாம்.. வேண்டி கேட்கிறேன்
உங்களுக்காகவே
உங்கள் பிள்ளைகளை,
உங்கள் பிரச்சனைகளை,
உங்கள் உறவுகளை, சுமந்து உங்கள் தேவைகளைப் புரிந்து தீர்த்து, எல்லாவற்றையும் பகிர்ந்து கொண்டு, பொருள் தேடி, புகழ்தேடி நாம் வெளியே சுற்றுகிரபோதேல்லாம், காவல் தெய்வமாய் குடும்பத்தைக் காக்கும் அந்த பெண்களை புரிந்து கொண்டோம் என்பதன் அடையாளமாய், அங்கிகரமாய் நாலு வார்த்தைகள் தயவு செய்து பேசுங்கள்!
நான் சந்தித்து கேட்டவர்களில் 95 விழுக்காட்டினர் என்னைப் போலவே பேசுவதில்லை என்றே சொன்னார்கள். இது மாறட்டும்... என் மனைவியின் பிரிவு தரும் வேதனையை விட இந்த உறுத்தல் தரும் வேதனை மிக அதிகமாக இருக்கிறது. என் அனுபவம் சிலருக்காவது உதவட்டும் என்றே இதை எழுத முனைகிறேன். சில வீடுகளாவது நிம்மதியில், மகிழ்ச்சியில் நிலைக்கட்டும்.



என் வேதனை,
நான்படும் துயரம்
வேறெவர்க்கும் எதிர்காலத்தில் வேண்டாம்
அவளோடு வாழ்ந்த நாட்களின் இனிமையான தருணங்களின்
நினைவுகளே துணையாக அந்த நினைவுகளே சுமையாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.............
இதனை இப்போது சொல்லும் நான் வாழ்ந்த நாட்களில் ஒரு நாள் கூட வாய்விட்டு வார்த்தைகளில் ஒருமுறை கூட சொன்னதில்லை என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று.

சுந்தர மகாலிங்கத்தின் வரலாறு

சிவன்மலை, மூலிகை தோட்டம், சித்தர்கள் மலை எனப்பல பெயர்களால் அழைக்கப்படும் மலைக்கோவில் தான் அருள்மிகு சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில். இக்கோவில், மேற்கு தொடர்ச்சி மழையின் ஒரு பகுதியான வத்றாயிருப்பு (watrap) பகுதியில் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஒரு நுளைவுவாயிலும், வரசரநாடு மற்றும் சாப்டூர் வழியிலுமாக மொத்தம் மூன்று பாதைகளை (மலைபதையாக) கொண்டுள்ளது. பதினென்ன சித்தர்கள் வாழும் மலை. அமாவாசை மற்றும் பிரதோஷம் தேதிகளில் விஷேச பூஜையுடன் பக்தர்கள் கூட்டத்தையும் காணலாம். ஆடி மற்றும் தை அமாவாசையில் வரும் பக்தர்கள் படையினை எண்ண இயலாது. அடிவாரத்தில் இருந்து ஏழு மைல் உயரத்திற்கு மலை பாதையில் நடந்து சென்று சிவன் தரிசனம் பெரும் மக்கள் அடையும் ஆனந்த பரவசத்தையும், சிவபெருமானை கண்ட திருப்தியில் திரும்பும் பக்தர்களை காணும் போதும் நாம் கடக்கும் பாதை மிகநீளமாக தெரிவதில்லை. பாதை முழுவதும் கல், பாறை, மரவேர், வழுக்குபாறை, சமவெளி, நீரோட்டம் எனக் கரடு முரடாக இருப்பினும் அயராது நடந்து சென்று மக்கள் சிவபெருமானின் தரிசனம் பெறுகின்றனர். மழைக்காலங்களில் நீரோட்டத்தோடு இப்பாதை காட்சியளிக்கும். அதில் குளித்து நீராட, வசதியாக சில பாறைகள் இயற்கையாய் அமைந்திருக்கும். இவற்றிக்கும் மேல் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, வழிநெடுக இலவசமாக உணவு, நீர் மற்றும் ஊககப்போருட்கள் தரும் பக்தர்களிடம் மனிதநேயத்தை மறைமுகமாகவோ / வெளிப்படையாகவோ காணலாம். மேலும் இரவில் அடர்ந்த காட்டில் தங்க விரும்பும் பக்தர்களுக்கு, இலவசமாக எந்த எதிர்பார்ப்புமின்றி வழங்கப்படும் இடமும், உணவும், கவனிப்பையும் சொல்ல வார்த்தைகள் கிடையாது... அமாவாசை தேதியில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு, டி மற்றும் காபி வழங்க தனியாகவே சில அமைப்புக்கள் கட்டிடம் அமைத்து சேவை புரிகின்றது. இச்சேவையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், உணவோ அல்லது தின்பண்டங்களோ எட்டிய இடத்தில கிடைக்காத காட்டுப்பகுதியில், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஊர்களில் வாங்கி, அவற்றை மலை உச்சிக்கு எடுத்து சென்று, சமைத்து மக்களுக்கு தரத்தில் குறைவின்றி இலவசமாக இன்முகத்தோடு அளிக்கின்றனர். இவ்வாறு சிவனை தரிசிக்க வரும் மக்களின் எண்ணிக்கையும், வரும் வழியில் அவர்கள் தொய்வின்றி பயணம் செய்ய உதவும் அமைப்புகளை காணும் போதே நாம் வியக்கின்றோம் என்றால் அச்சிவனின் பெருமை எத்தகையானதாக இருக்க கூடும்? ஆம், உங்கள் சிந்தனைக்கு பதில் இன்னும் உங்களை ஆச்சரியமூட்டும் . தரையிலிருந்து 14 கி.மீ உயரத்தில் இருக்கும் சிவன் கொவிக்குசெல்ல நாம் ஏழு மலைகளை தாண்டிச்செல்ல வேண்டும். செல்லும் வழியில், விநாயகர், மாரியம்மன், ரெட்டை லிங்கம், துர்க்கை அம்மன், பலாடிகருப்பசாமி (பலாப்பழ மரத்தடி) எனப்பல சிறுசிறு ஆலயங்களையும் காணலாம். பலாடி கருப்பசாமி கோவிலுக்கு மேல் சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கம் என இரு ஆலயங்கள் அமைந்துள்ளன. இவை இரண்டிற்கும் தனித்தனி வரலாறு உண்டு. சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில், சிவலிங்கம் சாய்வான வடிவில் அமைந்திருக்கும். சந்தன மகாலிங்கத்தில் சிவலிங்கம் சந்தனத்தால் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். சந்தன மகாலிங்கத்தில், பத்தினெட்டு சித்தர்களின் திருவுருவச்சிலைகள் அழகாய் அமைந்திருக்கும். மேலும், சந்தன மகாலிங்கம் கோவிலில், முருகன், விநாயகர் மற்றும் அம்மன் சன்னதியும் அமைந்திருக்கும். சுந்தர மகாலிங்கத்தின் அழகைகாணவும், அருளை பெறவும் கூடும் கூட்டத்தின் அர்த்தத்தை கோவில் சென்று திரும்பிய பின் நம் அனைவராலும் உணர முடியும். அத்தனை நிம்மதி மற்றும் தெளிவும் நம் மனதில் காணலாம். சந்தன மகாலிங்கம் ஆலயத்தில் வற்றாத ஆகாய கங்கை தீர்த்தம் வலிந்தோடும். இத்தீர்த்தம் பல மூலிகை செடிகளை கடந்து வருவதால், பருகுவோர்க்கு எந்த நோய் இருந்தாலும் குணமடையும் என்றுரைக்கின்றார்கள். சுந்தர மகாலிங்கத்தின் வரலாறு: எலி பிடிக்க மலைக்காட்டுப்பகுதிக்கு சென்ற ஒருவன், எலி பொந்தை கம்பியால் குத்தியபோது இரத்தம் பீரிட்டு வந்ததாகவும், பின் தோண்டிப்பார்ததில் சிவலிங்கம் கிடைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. மேலும் அக்கம்பி குத்தியதால் சாயப்பட்டு, இன்றும் சாய்ந்தவடிவிலேயே சிவன் காட்சி அளிக்கிறார் என்கின்றனர். இவ்விரு ஆலயத்திற்கு மேலே பெரிய மகாலிங்கம் அமைந்துள்ளது. பெரிய மகாலிங்கம் சென்று தரிசிக்க பலர் செல்வதுண்டு. அனால், அப்பாதை மிகவும் அபயம் நிறைந்ததாக கூறப்படுவதுண்டு. காரணம், அடர்ந்த காடு மற்றும் காட்டு விலங்குகளின் நடமாட்டமும். மேலும், தவசிப்பாரை - சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் செல்லும் பாதையை இரண்டாய் பிரிக்கும் மையத்தில் நின்று பார்த்தால், எதிரில் உள்ள மலையின் உச்சியில் தெரியக்கூடியது. நன்றாக உற்று நோக்கினால் அங்கும் சில மனிதர்களின் நடமாட்டத்தை காணலாம். அமாவாசை இரவுகளில் சித்தர்கள் இங்கு பூஜை நடத்துவதாக கூறப்படுவதுண்டு. அங்கும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். கோவில் செல்லும் வழியில் இருக்கும் அடர்ந்த காட்டு பகுதி, மேற்கு தொடர்ச்சி மழையின் இயற்கை வளத்தை எடுத்துரைக்கும். இம்மலைககாட்டில் எங்கும் கிடைக்காத மூலிகை பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சித்தர்கள் மூலிகை தேடி இக்காட்டிற்கு வந்து, பின் இங்கு குடி கொண்டு சிவனை வழிபடுவதாகவும் கூறப்படுகிறது. இங்கு மாவூத்து என்னும் இடமும் சிறப்பு பெற்றது. தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சற்று தூரம் சென்றால் இக்கோவிலை தரிசிக்கலாம்.
சிவன்மலை, மூலிகை தோட்டம், சித்தர்கள் மலை எனப்பல பெயர்களால் அழைக்கப்படும் மலைக்கோவில் தான் அருள்மிகு சுந்தர மற்றும் சந்தன மகாலிங்கம் கோவில். இக்கோவில், மேற்கு தொடர்ச்சி மழையின் ஒரு பகுதியான வத்றாயிருப்பு பகுதியில் தாணிப்பாறை மலை அடிவாரத்தில் ஒரு நுளைவுவாயிலும், வரசரநாடு மற்றும் சாப்டூர் வழியிலுமாக மொத்தம் மூன்று பாதைகளை (மலைபதையாக) கொண்டுள்ளது. பதினென்ன சித்தர்கள் வாழும் மலை.
அமாவாசை மற்றும் பிரதோஷம் தேதிகளில் விஷேச பூஜையுடன் பக்தர்கள் கூட்டத்தையும் காணலாம். ஆடி மற்றும் தை அமாவாசையில் வரும் பக்தர்கள் படையினை எண்ண இயலாது. அடிவாரத்தில் இருந்து ஏழு மைல் உயரத்திற்கு மலை பாதையில் நடந்து சென்று சிவன் தரிசனம் பெரும் மக்கள் அடையும் ஆனந்த பரவசத்தையும், சிவபெருமானை கண்ட திருப்தியில் திரும்பும் பக்தர்களை காணும் போதும் நாம் கடக்கும் பாதை மிகநீளமாக தெரிவதில்லை.
பாதை முழுவதும் கல், பாறை, மரவேர், வழுக்குபாறை, சமவெளி, நீரோட்டம் எனக் கரடு முரடாக இருப்பினும் அயராது நடந்து சென்று மக்கள் சிவபெருமானின் தரிசனம் பெறுகின்றனர். மழைக்காலங்களில் நீரோட்டத்தோடு இப்பாதை காட்சியளிக்கும். அதில் குளித்து நீராட, வசதியாக சில பாறைகள் இயற்கையாய் அமைந்திருக்கும்.
இவற்றிக்கும் மேல் சிவனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு, வழிநெடுக இலவசமாக உணவு, நீர் மற்றும் ஊககப்போருட்கள் தரும் பக்தர்களிடம் மனிதநேயத்தை மறைமுகமாகவோ / வெளிப்படையாகவோ காணலாம். மேலும் இரவில் அடர்ந்த காட்டில் தங்க விரும்பும் பக்தர்களுக்கு, இலவசமாக எந்த எதிர்பார்ப்புமின்றி வழங்கப்படும் இடமும், உணவும், கவனிப்பையும் சொல்ல வார்த்தைகள் கிடையாது...
அமாவாசை தேதியில் வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு இலவச உணவு, டி மற்றும் காபி வழங்க தனியாகவே சில அமைப்புக்கள் கட்டிடம் அமைத்து சேவை புரிகின்றது. இச்சேவையின் சிறப்பு அம்சம் என்னவென்றால், உணவோ அல்லது தின்பண்டங்களோ எட்டிய இடத்தில கிடைக்காத காட்டுப்பகுதியில், பக்தர்களுக்காக அருகில் உள்ள ஊர்களில் வாங்கி, அவற்றை மலை உச்சிக்கு எடுத்து சென்று, சமைத்து மக்களுக்கு தரத்தில் குறைவின்றி இலவசமாக இன்முகத்தோடு அளிக்கின்றனர்.
இவ்வாறு சிவனை தரிசிக்க வரும் மக்களின் எண்ணிக்கையும், வரும் வழியில் அவர்கள் தொய்வின்றி பயணம் செய்ய உதவும் அமைப்புகளை காணும் போதே நாம் வியக்கின்றோம் என்றால் அச்சிவனின் பெருமை எத்தகையானதாக இருக்க கூடும்? ஆம், உங்கள் சிந்தனைக்கு பதில் இன்னும் உங்களை ஆச்சரியமூட்டும் .
தரையிலிருந்து 14 கி.மீ உயரத்தில் இருக்கும் சிவன் கொவிக்குசெல்ல நாம் ஏழு மலைகளை தாண்டிச்செல்ல வேண்டும். செல்லும் வழியில், விநாயகர், மாரியம்மன், ரெட்டை லிங்கம், துர்க்கை அம்மன், பலாடிகருப்பசாமி (பலாப்பழ மரத்தடி) எனப்பல சிறுசிறு ஆலயங்களையும் காணலாம். பலாடி கருப்பசாமி கோவிலுக்கு மேல் சந்தன மகாலிங்கம் மற்றும் சுந்தர மகாலிங்கம் என இரு ஆலயங்கள் அமைந்துள்ளன. இவை இரண்டிற்கும் தனித்தனி வரலாறு உண்டு.
சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலில், சிவலிங்கம் சாய்வான வடிவில் அமைந்திருக்கும். சந்தன மகாலிங்கத்தில் சிவலிங்கம் சந்தனத்தால் முழுவதுமாக அலங்கரிக்கப்பட்டிருக்கும். சந்தன மகாலிங்கத்தில், பத்தினெட்டு சித்தர்களின் திருவுருவச்சிலைகள் அழகாய் அமைந்திருக்கும். மேலும், சந்தன மகாலிங்கம் கோவிலில், முருகன், விநாயகர் மற்றும் அம்மன் சன்னதியும் அமைந்திருக்கும். சுந்தர மகாலிங்கத்தின் அழகைகாணவும், அருளை பெறவும் கூடும் கூட்டத்தின் அர்த்தத்தை கோவில் சென்று திரும்பிய பின் நம் அனைவராலும் உணர முடியும். அத்தனை நிம்மதி மற்றும் தெளிவும் நம் மனதில் காணலாம். சந்தன மகாலிங்கம் ஆலயத்தில் வற்றாத ஆகாய கங்கை தீர்த்தம் வலிந்தோடும். இத்தீர்த்தம் பல மூலிகை செடிகளை கடந்து வருவதால், பருகுவோர்க்கு எந்த நோய் இருந்தாலும் குணமடையும் என்றுரைக்கின்றார்கள்.
சுந்தர மகாலிங்கத்தின் வரலாறு:
எலி பிடிக்க மலைக்காட்டுப்பகுதிக்கு சென்ற ஒருவன், எலி பொந்தை கம்பியால் குத்தியபோது இரத்தம் பீரிட்டு வந்ததாகவும், பின் தோண்டிப்பார்ததில் சிவலிங்கம் கிடைத்ததாகவும் கூறப்படுவதுண்டு. மேலும் அக்கம்பி குத்தியதால் சாயப்பட்டு, இன்றும் சாய்ந்தவடிவிலேயே சிவன் காட்சி அளிக்கிறார் என்கின்றனர்.
இவ்விரு ஆலயத்திற்கு மேலே பெரிய மகாலிங்கம் அமைந்துள்ளது. பெரிய மகாலிங்கம் சென்று தரிசிக்க பலர் செல்வதுண்டு. அனால், அப்பாதை மிகவும் அபயம் நிறைந்ததாக கூறப்படுவதுண்டு. காரணம், அடர்ந்த காடு மற்றும் காட்டு விலங்குகளின் நடமாட்டமும். மேலும், தவசிப்பாரை - சந்தன மற்றும் சுந்தர மகாலிங்கம் செல்லும் பாதையை இரண்டாய் பிரிக்கும் மையத்தில் நின்று பார்த்தால், எதிரில் உள்ள மலையின் உச்சியில் தெரியக்கூடியது. நன்றாக உற்று நோக்கினால் அங்கும் சில மனிதர்களின் நடமாட்டத்தை காணலாம். அமாவாசை இரவுகளில் சித்தர்கள் இங்கு பூஜை நடத்துவதாக கூறப்படுவதுண்டு. அங்கும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
கோவில் செல்லும் வழியில் இருக்கும் அடர்ந்த காட்டு பகுதி, மேற்கு தொடர்ச்சி மழையின் இயற்கை வளத்தை எடுத்துரைக்கும். இம்மலைககாட்டில் எங்கும் கிடைக்காத மூலிகை பொருட்கள் அனைத்தும் கிடைக்கின்றன. சித்தர்கள் மூலிகை தேடி இக்காட்டிற்கு வந்து, பின் இங்கு குடி கொண்டு சிவனை வழிபடுவதாகவும் கூறப்படுகிறது.
இங்கு மாவூத்து என்னும் இடமும் சிறப்பு பெற்றது. தாணிப்பாறை அடிவாரத்தில் இருந்து சற்று தூரம் சென்றால் இக்கோவிலை தரிசிக்கலாம்.

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015: உச்சகட்டம் சொல்லும் பாடங்கள் என்ன?

உலகக் கோப்பை கிரிக்கெட் 2015: உச்சகட்டம் சொல்லும் பாடங்கள் என்ன?


இந்தியா வெற்றிமேல் வெற்றி பெற்றுக்கொண்டிருந்த போது சமூக வலைதளங்களில் சில செய்திகளும் காட்சித் துணுக்குகளும் வெறிபிடித் தாற்போலப் பரவிக்கொண்டி ருந்தன. பாகிஸ்தானை அடுத்துத் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய பிறகு ஒரு செய்தி பரவியது. “யார் பச்சை சட்ட போட்டாலும் அடிப் போம்”. பாகிஸ்தானைப் போலவே தென்னாப்பிரிக்க அணியினரும் பச்சை நிறச் சீருடை அணிபவர்கள்.
காலிறுதியில் வங்கதேசம் என்றதும் “மறுபடியும் பச்ச சட்டயா?” என சுரேஷ் ரெய்னா எக்காளத்துடன் சிரிக்கும் காட்சித் துணுக்கு பரவியது. பச்சையைக் கண்டால் சீறி அடிக்கும் வீரர்கள் மஞ்சளைக் கண்டதும் பயந்து பம்முவது ஏன் என ரசிகர்கள் இப்போது கேட்கிறார்கள்.
கிரிக்கெட்டைப் பற்றி ஓரளவு அறிந்தவர்கள்கூட ஆஸ்திரேலிய அணியை வெல்வது எளிதல்ல என்று சொல்லிவிடுவார்கள். கள நிலவரம் அறிந்தவர்களுக்கு இந்தியா அரையிறுதியில் ஆஸ்தி ரேலியாவை வெல்லும் என்ற நம்பிக்கை வந்திருக்காது. இந்தியா இந்தத் தொடரில் நன்றாகவே ஆடியது. குறிப்பாக அதன் பந்து வீச்சு வழக்கமான தவறுகளைத் திருத்திக்கொண்டு கூர்மை பெற்றிருந்தது. முதல் ஆறு மட்டையாளர்களில் ஒவ்வொரு வரும் ஏதேனும் ஒரு போட்டியில் முக்கியப் பங்காற்றினர்.
ஆனால் கறாராகப் பார்த்தால் பாகிஸ்தான், தென்னாப்பிரிக்க அணிகளைத் தவிர வேறு எந்த அணியும் இந்தியாவுக்கு சவால் விடக்கூடிய அணி அல்ல என்பது புரியும். இந்த இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தாலும் இந்தியா காலிறுதிக்கு வந்திருக்கும்.
எல்லாப் போட்டிகளிலும் வென்றதால் முதலிடம் பெற்று, ஒப்பீட்டளவில் பலவீனமான அணியுடன் காலிறு தியில் மோதும் வாய்ப்புக் கிடைத் தது. எனவே இந்தியா புதிய தொரு அணியாக, பெரிய அணி களைப் பெரிய போட்டிகளில் வெல் லக்கூடிய அணியாக உருவாகி விட்டது என்பதைச் சொல்ல இந்த வெற்றிகள் போதாது.
வெற்றிகளின் பலன் என்ன?
ஆனால் தன்னம்பிக்கையைக் கூட்ட இந்த வெற்றிகள் போதும். தன்னம்பிக்கையும் முனைப்பும் உள்ள அணிகள் தங்களது திற மையை முழுமையாக வெளிப் படுத்தி ஆடும். சில சமயம் எல்லை களையும் விரிவுபடுத்தும். ஆனால் அதுதான் அரையிறுதியில் நடக்க வில்லை. தொடர்ந்து ஏழு போட்டி களில் வென்ற அடையாளமே தெரியவில்லை. டாஸில் தோற்றுப் பந்து வீசத் தொடங்கியதுமே இந்தியாவின் தன்னம்பிக்கை காணாமல்போனது.
ஏழு போட்டிகளில் எழுபது விக்கெட்டுகளை எடுத்த பெருமையுடன் சிட்னிக்கு வந்த இந்திய வீச்சாளர்களிடம் அத்தனை விக்கெட்களை எடுத்த தெம்பைக் காண முடியவில்லை. தறிகெட்ட வீச்சாக இல்லை என்றாலும் எந்தத் தொந்தரவையும் தராத வீச்சாகவே அமைந்தது.
ஆஸ்திரேலியாவும் அதிரடி ஆட்டத்தில் இறங்காமல் நிதானமாகவே அணுகியது. பதற்றமில்லாமல் ரன் குவித்தது. கையில் விக்கெட் இருந்ததால் பையில் ஸ்கோர் தானாக வரும் என்பதை உணர்ந்து ஆடியது.
ஆஸ்திரேலியப் பந்து வீச்சின் வலிமையை வைத்துப் பார்க்கும்போது 328 என்பது எந்த அணிக்கும் எந்தக் களத்திலும் சவாலான இலக்குதான். 300, 307 ஆகிய இலக்குகளை வைத்து முறையே பாகிஸ்தான், தென்னாப் பிரிக்காவை இந்தியாவால் மிரட்ட முடியும் என்றால் 328 என்னும் இலக்கை வைத்து ஆஸ்திரேலி யாவால் இந்தியாவை முடக்க முடியாதா?
அண்மைக் காலமாகச் சற்றே தொய்வடைந்திருந்த மிட்செல் ஜான்சன் இந்தப் போட்டியில் மீண்டும் தன் ஆட்டத் திறனைப் பெற்றுவிட்டார். மிட்செல் ஸ்டார்க்கின் வீச்சில் நிஜமாகவே பொறி பறந்தது. இவர்களுக்குத் துணையாக ஹேஸில்வுட்டும் ஜேம்ஸ் ஃபாக்னரும் கூர்மையாகப் பந்துவீச, இந்தியா மிரண்டது.
கோலி செய்த தவறு
இந்தியா தோற்றதில் தவறில்லை. ஆனால் தோற்ற விதம்தான் தவறு. இந்தியப் பந்து வீச்சு 300 ரன்களுக்கு மேல் கசியவிட்டதில் எந்த ஆச்சரியமும் இல்லை. இந்திய மட்டையாளர்கள் போராடாமல் வீழ்ந்ததுதான் அவமானம். அதிருஷ்ட வாய்ப்புகளால் தப்பிப் பிழைத்த ரோஹித் ஷர்மாவும் ஷிகர் தவனும் இன்னும் சிறிது பொறுப்புணர்வுடன் ஆடியிருக்கலாம். விக்கெட்டைக் காப்பாற்றிக்கொண்டால் பிறகு அடித்து ஆடலாம் என்பதால் விராட் கோலி அவசரப்பட்டு புல் ஷாட் அடிக்காமல் இருந்திருக்கலாம்.
அயல் நாடுகளில் சிறப்பாக ஆடிவரும் அஜிங்க்ய ரஹானே மேலும் தன்னம்பிக்கையுடன் ஆடியிருக்கலாம். இந்த நால்வரும் இந்தத் தொடரில் அவ்வப்போது பிரகாசித்தார்களே தவிர யாருமே சீராக ஆடவில்லை. அயல் மண்ணில் வலுவான அணிகளுக்கு எதிராகப் பெரிய போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவின் ஆட்டம் அதிகம் எடுபட்டதில்லை. இந்தப் போட்டியும் அவரது போதாமையைக் காட்டிவிட்டது. மகேந்திர சிங் தோனி ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்தான். ஆனால் தொடக்கமே இல்லாத போது எங்கிருந்து முடிப்பது?
ஜடேஜா தேவையா?
ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மட்டையாலோ பந்தினாலோ சொல்லிக்கொள்ளும்படி எந்தப் பங்களிப்பும் செலுத்தவில்லை. அவரைத் தேர்வுசெய்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பிவிட்டார்கள். தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருந்ததால் இந்தக் குறை தெரியவில்லை. முக்கியமான போட்டியன்று எல்லாக் குறைகளும் அம்பலமாயின. இந்தியா பெரிய அணிக்கெதிரான பெரிய போட்டிக்குத் தயாராக இல்லை என்னும் கசப்பான உண்மை வெளிப்பட்டது.
ஆஸி அணித் தலைவர் மைக்கேல் கிளார்க் ஆட்டமிழந்தது தவறான ஷாட்டினால்தான். ஆனால் அவரது அணியினர் அந்தத் தவறை மறக்கச் செய்தார்கள். அதிரடி மேக்ஸ்வெல் நெடுநேரம் நீடிக்கவில்லை. ஆனால் ஜான்சன் வந்து 9 பந்துகளில் 27 ரன் எடுத்தார். ஒவ்வொருவரும் தன்னால் எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்குப் போராடினர்.
இந்திய மட்டையாளர்கள் ஆடிய விதத்தை இதோடு ஒப்பிட்டுப் பாருங்கள். திறமையைக் காட்டிலும் பெரிய பிரச்சினை தீவிர முனைப்பின்மை என்பது புரியவரும். 328 ரன்களை எடுக்க முடியாமல்போயிருக்கலாம். ஆனால் தீரமாகப் போராடி 250 ரன்களையாவது கடந்திருக்கலாம். கடைசிவரை போராடும் முனைப்பு இல்லாமல்போனதுதான் அவலம்.
நியூஸிலாந்தின் அதிர்ச்சி
இந்தியாவாவது ரன் மழை பொழியும் ஆடுகளத்தில் முதலில் மட்டையாடும் வாய்ப்பை இழந்தது. நியூஸிலாந்துக்கு அந்த வாய்ப்பு கிடைத்தும் அதைக் கோட்டை விட்டது. மட்டை வீச்சைத் தேர்ந் தெடுத்த பிரென்டன் மெக்கல்லம் தான் சந்தித்த மூன்றாவது பந்தில் ஸ்டார்க்கின் பந்துக்குப் பலியா னார். வெற்றிகரமான இன்னொரு மட்டையாளரான மார்ட்டின் கப்டில் 15 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இன்னொரு நல்ல மட்டையாளரான கேன் வில்லியம்ஸனும் விரைவில் ஆட்டமிழந்தார்.
39-3. இந்த அதிர்ச்சியிலிருந்து நியூஸிலாந்து மீளவே இல்லை. ராஸ் டெய்லரும் கிராண்ட் எலியட்டும் நான்காவது விக்கெட்டுக்கு 111 ரன் எடுத்தாலும் அதில் வேகமோ ஆதிக்கமோ இல்லை. ஸ்கோர் 150ஆக இருந்தபோது டெய்லர் வீழ்ந்தார். அதன் பிறகு 183 ரன்னுக்குள் 10 விக்கெட்களும் வீழ்ந்தன. இறுதிப் போட்டியில் போட்டியே அற்ற நிலை உருவானது.
அதீத தன்னம்பிக்கை எதுவும் இல்லாமல் ஆஸ்திரேலியா கவனமாகவே ஆடி வென்றது. முதல் சுற்றில் நியூஸிலாந்திடம் தோற்றதற்குப் பழிதீர்க்கப்பட்டது. ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்ற கிளார்க் தன் கடைசிப் போட்டியை மறக்க முடியாததாக ஆக்கிக்கொண்டார்.
ஆஸியின் அற்புத ஆட்டம்
ஆஸ்திரேலிய அணியின் ஆட்டம் ஒரு தேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரைப் போன்றது. உயிருள்ள உடலில் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் கத்தியைச் செலுத்துவதுபோன்ற தேர்ச்சியும் லாகவமும் கொண்ட ஆட்டம் அது. இதற்கு ஈடுகொடுக்க வேண்டுமானால் எதிரணி தன் மொத்தத் திறமையையும் காட்ட வேண்டும். ஒருவரேனும் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்.
இவை இரண்டுமே அரையிறுதி, இறுதிப் போட்டிகளில் நடக்கவில்லை. விளைவு, நியூஸிலாந்து முதல் முறையாக இறுதிப் போட்டிவரை வந்த திருப்தியுடன் வீடு திரும்பியிருக்கிறது. இந்தியாவோ கோப்பையைப் பணிவுடன் திருப்பிக் கொடுத்துவிட்டுத் திரும்பியிருக்கிறது.
இந்தியா அரை இறுதிக்கு வரும் என்று பிப்ரவரி 14-ம் தேதிக்கு முன்பு யாராவது சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்கள். அந்த நிலையிலிருந்து இந்த நிலைக்கு வந்ததே பெரிய விஷயம். தொடர் வெற்றிகள் தந்த நம்பிக்கை இந்தியாவின் குறைகளை மறக்கச் செய்துவிட்டது. மறந்துபோன விஷயங்களெல்லாம் மறைந்து போன விஷயங்களாகிவிடாது. குறைகளை மறையச் செய்ய வேண்டுமென்றால் தீவிரமாக உழைக்க வேண்டும்.
From - The hindu

Yours Happily
Dr.Star Anand Ram
www.v4all.org

Monday, March 30, 2015

பலன் தரும் ஸ்லோகம் : (எல்லா ஆபத்துகளும் நீங்க, கண் திருஷ்டிகள் அகல...)

பலன் தரும் ஸ்லோகம் : (எல்லா ஆபத்துகளும் நீங்க, கண் திருஷ்டிகள் அகல...)



ரக்த ஜ்வால ஜடாதரம் ஸுவிமலம் ரக்தாங்க தேஜோமயம்
த்ருத்வா சூல கபால பாச டமருத் லோகஸ்ய ரக்ஷாகரம்
நிர்வாணம் கந வாஹனம் த்ரிநயனம் ஆனந்த கோலாஹலம்
வந்தே ஸர்வ பிசாசநாத வடுகம் க்ஷேத்ரஸ்ய பாலம் சிவம்.
                     
பொதுப்பொருள்:  

சிவந்த சிகையும் ஒளிமிகுந்த தேகத்தையும் கொண்ட பைரவரே, நமஸ்காரம். சூலம், கபாலம், உடுக்கை  தரித்து உலகத்தைக்  காப்பவரே, நன்றியின் வடிவமான நாயை வாகனமாகக் கொண்டவரே, முக்கண்கள் கொண்டவரே, ஆனந்த வடிவினராக பூத, பிரேத, பிசாசுக் கூட்டங்க ளைக் கட்டுப்படுத்தும் தலைவரே, அனைத்து புண்ணிய க்ஷேத்திரங்களையும் ரக்ஷிப்பவரே, பைரவரே, நமஸ்காரம்.

(தேய்பிறை அஷ்டமி தினத்தன்று இத்துதியை பாராயணம் செய்து பைரவரை தரிசித்தால் எல்லா வகையான ஆபத்துகளும் நீங்கும்; கண் திருஷ்டிகள்  அகலும்.)
 Logged

ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய ஜெய சாய்

நினைத்தது நிறைவேற, அனைத்து லாபங்களும் கிட்ட...)

நினைத்தது நிறைவேற, அனைத்து லாபங்களும் கிட்ட...)



காருண்யபூர்ணநயனே கலசோபிமாலே
பத்மாலயே மதுரகோமள வாக்விலாஸே
ஸத்பக்தகல்பலதிகே புவனைகவந்த்யே
ஸௌந்தர்யவல்லி சரணம் ப்ரபத்யே
(ஸௌந்தர்யவல்லி அஷ்டகம்)

பொதுப்பொருள்:

கருணை ததும்பும் கண்களைஉடையவளே, ஒளி மிகுந்த முத்துமாலையை அணிந்தவளே, தாமரை மலரில் வீற்றிருப்பவளே, வாக்கி னிலே இனிமையும் அழகும் கொண்டவளே, எளியவர்களான பக்தர்களுக்கு கற்பக விருட்சமாகத் திகழ்பவளே, உலகோர் அனைவராலும் வணங்கத்  தக்கவளே, சௌந்தரவல்லித் தாயே, நமஸ்காரம்.

(இத்துதியை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பாராயணம் செய்தால் திருமகள் திருவருளால் நினைத்தது நிறைவேறி ஐஸ்வர்யம், வியாபார விருத்தி,  உத்தியோகத்தில் உயர்வு, சந்தான பாக்யம் என்று அனைத்துவித லாபங்களும் கிடைக்கும்.)

நவராத்திரியை ஏன் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடுகிறோம்

நவராத்திரியை ஏன் வருடத்திற்கு இரண்டு முறை கொண்டாடுகிறோம்




நவராத்திரி வருடத்தில் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது என்பது பலருக்கும் தெரியாது. குளிர் கால தொடக்கத்தில் (செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களின் இடைப்பட்ட காலத்தில்) கொண்டாடப்படும் அஷ்வினா நவராத்திரி தான் புகழ்பெற்றதாகும். வெகு சிலருக்கே சைத்ர நவராத்திரியை பற்றி தெரியும். கோடைக்கால தொடக்கமான மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களின் இடைப்பட்ட காலத்தில் இது கொண்டாடப்படும். இந்த இரண்டு நவராத்திரிகளுமே துர்கை, பார்வதி என பல இடங்களில் பல விதமாக அழைக்கப்படும் கடவுள்களின் தாயான சக்தி தேவிக்காக ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் கொண்டாடப்படும் நவராத்திரியின் வகைகள்!!! நவராத்திரியை ஒன்பது நாட்களுக்கு கொண்டாடுவதற்கும். வருடத்தில் இரண்டு தடவை கொண்டாடுவதற்கும் சில முக்கியமான காரணங்கள் உள்ளது. ஆன்மிகம், இயற்கை மற்றும் புராண காரணங்கள் இதில் அடக்கம். இந்த அனைத்து காரணங்களால் தான் நவராத்திரி ஒவ்வொரு வருடமும் இரண்டு முறை கொண்டாடப்படுகிறது.



வானிலை மாற்றம் வானிலை மாற்றத்தின் போது தான் இரண்டு நவராத்திரியும் கொண்டாடப்படுகிறது என்பதை கூர்ந்து கவனித்தால் புரியும். கோடை மற்றும் குளிர் காலம் தொடங்குவதற்கு சற்று முன்பாக தான் இயற்கை அன்னை பெரிய மாற்றங்களுக்கு உள்ளாவார். அதனால் தான் அதனை கொண்டாடும் விதமாக, இயற்கையாக கருதப்படும் சக்தி தேவியை வழிபட்டு நவராத்திரி கொண்டாடப்படுகிறது.


பகல் மற்றும் இரவின் நீளம் விஞ்ஞானத்தின் படி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு நடுவே உள்ள நாட்களிலும், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு நடுவே உள்ள நாட்களிலும், பகல் மற்றும் இரவின் நீளம் சரிசமமாக இருக்கும். அதனால் கோடைக்காலம் மற்றும் குளிர்காலம் தொடங்கும் வேளையில் சரியாக நவராத்திரி கொண்டாடப்படுகிறது என்பது விஞ்ஞான ரீதியாக புலப்படுகிறது.



இனிமையான வானிலை இரண்டு நவராத்திரிகளும் வானிலை இனிமையாக இருக்கும் போது கொண்டாடப்படுகிறது. கொளுத்தும் வெயிலையும் அனுபவிக்க தேவையில்லை; அதே போல் உறைய வைக்கும் குளிரையும் அனுபவிக்க வேண்டும். வானிலை மிதமாக இருப்பதால், இந்த இரண்டு நேரமும் கொண்டாட்டத்திற்கு சரியான நேரமாக இருக்கும்.


ராமபிரானின் பூஜை கோடை தொடங்குவதற்கு சற்று முன்பாக தான் நவராத்திரி கொண்டாடப்படுகிறது என இந்து மத புராணத்தில் நம்பப்படுகிறது. ஆனால் ராவணனுடன் போரில் ஈடுபட்டு கொண்டிருந்த போது, துர்கை அம்மனின் ஆசீர்வாதத்தை வாங்க இன்னொரு 6 மாதங்களுக்கு காத்திருக்க ராமபிரான் விரும்பவில்லை. அதனால் குளிர் காலத்திற்கு முன்பாக நவராத்திரி கொண்டாடும் பழக்கத்தை அவர் கொண்டு வந்துள்ளார். இலங்கைக்கு செல்வதற்கு முன்பாக அவர் துர்கை பூஜை புரிந்து, திரும்பி வரும் போது வெற்றியுடன் வந்தார். நவராத்திரியின் முக்கியத்துவம் இரண்டு நேரத்திலும் ஒரே மாதிரி தான் உள்ளது. அந்த காலமே இயற்கையின் வெளிப்பாடாகும். 




நம் தாய்மொழியாம் தமிழை தவிர

உண்மையான செல்வம் என்பது என்ன ? குறைவிலா உணவு , ஆரோக்கியமான உடல் நலம் , பெரிய வீடு , மகிழுந்து , நகை , கட்டுக்கட்டாய் பணம் , என ஏராளமானவற்றை குறிப்போம் , ஆனால் திருஞானசம்பந்தர் செல்வம் என்பது என்ன என்பதை மிக அழகாக விளக்குகிறார் .
திருஞானசம்பந்தர் தேவாரம்
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
செல்வ வளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச் செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.
இப்பபாடலில் செல்வம் என்ற வார்த்தையை 7 முறை பயன் படுத்தியுள்ளார் . இந்தளவு நுட்பங்கள் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழை தவிர வேறு மொழிகளில் இல்லை . தமிழையும் தமிழ் வேதங்களையும் கொண்டாடுவோம்