Showing posts with label Sales Coach. Show all posts
Showing posts with label Sales Coach. Show all posts

Wednesday, June 3, 2015

வெல்ல முடியாததை வெல்வது எப்படி?

வெல்ல முடியாததை வெல்வது எப்படி?

பயம் மனித உணர்ச்சிகளில் மிக இயல்பானது. அது தேவையானதும் கூட. பல சந்தர்ப்பங்களில் அது நம் பாதுகாப்பிற்கு உதவுகிறது. முட்டாள்தனமாகவும், கண்மூடித் தனமாகவும் நாம் நடந்து கொள்ளாமல் இருக்க உதவுகிறது. ஆபத்தான சூழ்நிலைகளில் அஜாக்கிரதையாய் இருந்து விடாமல் நம்மைத் தடுக்கிறது. எனவே தான் “அஞ்சுவது அஞ்சாமை பேதைமை” என்றார் திருவள்ளுவர்.
பலரும் குற்றங்களில் ஈடுபடாமல் இருக்க முக்கியக் காரணம் தண்டனைக்குப் பயந்து தான். அந்தப் பயம் இல்லா விட்டால் சமூகத்தில் சீரழிவே ஏற்படும். எனவே பயப்பட வேண்டியதற்கு பயப்பட்டுத் தான் ஆக வேண்டும். தவறுகள் செய்ய அஞ்சவே வேண்டும். விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் ஆபத்தான செயல்களில் ஈடுபட பயப்படுவதே புத்திசாலித்தனம். குற்றங்களில் ஈடுபட அஞ்சவே வேண்டும். இதில் எல்லாம் பயம் ஏற்படுவது இயற்கை நமக்கு அளித்திருக்கும் பாதுகாப்பு அரணே. தோன்றியபடியெல்லாம் நடந்து கொள்ளாமல் தடுத்து நம்மை சிந்திக்க வைப்பதால், நம் வேகத்தைப் பல சந்தர்ப்பங்களில் கட்டுப்படுத்துவதால் பயம் நமக்கு நன்மையை செய்கிறது என்பதில் சந்தேகமேயில்லை.
ஆனால் பயம் ஒரு எல்லையை மீறும் போது, அறிவு சாராமல் இருக்கும் போது அது நமக்கு நன்மையை விட அதிக தீமையையே செய்வதாகிறது. அந்த சமயங்களில் அது பாதுகாப்பு அரணாக இருப்பதற்குப் பதிலாக அடிமைச்சங்கிலியாக மாறி நம்மை செயலிழக்க வைத்து விடுகிறது.
நம்மை செயலிழக்க வைக்கும் பயத்திற்கு மிக முக்கிய காரணம் விளைவுகளைக் குறித்து நமக்கு ஏற்படும் விபரீதக் கற்பனைகளே. என்ன எல்லாம் நேரக் கூடும் என்று ஒருவன் கற்பனைக் குதிரையைத் தட்டி விடும் போது அவன் மனம் வரக் கூடிய பயங்கர விளைவுகளை எல்லாம் பட்டியல் இட ஆரம்பித்து விடுகிறது. இப்படி எல்லாம் ஆனால் என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பிக்கும் போது பயம் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பித்து விடுகிறது. சமாளிப்பது எப்படி என்று தெரியாமல் அவன் ஸ்தம்பித்துப் போகிறான்.
அதே போல் புதியதாக ஒன்றைத் தொடங்கும் முன் மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்கிற பயம், குறைத்து மதிப்பிட்டு விடுவார்களோ என்கிற பயம், தோற்று விட்டால் என்ன செய்வது என்கிற பயம் ஏற்பட்டு அந்த செயலை ஆரம்பிக்கவே விடாமலும் செய்து விடுகின்றது. வெற்றிக்காகவே முயல்கிறோம் என்றாலும் தோல்வி வெட்கப்பட வேண்டிய ஒன்றல்ல.
உலகில் மிக உயர்ந்த வெற்றிகளைக் குவித்த வெற்றியாளர்களை ஆராய்ந்தவர்கள் அவர்கள் கூட 60 சதவீத முயற்சிகளில் தான் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள். அதாவது நாம் போற்றும் பெரிய வெற்றியாளர்களே பத்து முயற்சிகளில் நான்கு முயற்சிகளில் தோற்றுப் போகிறார்கள் என்றால் தோல்வி சாதாரணமான ஒன்று தானே. அதில் வெட்கித் தலைகுனிய என்ன இருக்கிறது?
இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அமெரிக்கா பொருளாதார நிலையில் மிகவும் சீரழிவை சந்திக்க வேண்டி வந்தது. வேலையில்லா திண்டாட்டம், வங்கிகளில் பணமில்லாமை எல்லாம் மக்கள் மனதில் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி பெரியதொரு பயத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர். ”இப்படிப்பட்டவராலேயே நம் நாட்டின் இன்றைய நிலையைத் தவிர்க்க முடியவில்லையே, இனி நம் எதிர்காலம் என்ன?” என்ற பயம் மக்களிடம் பரவி இருந்தது.
அந்த சமயத்தில் தான் ஃப்ராங்க்ளின் டிலானோ ரூஸ்வெல்ட் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அவர் தன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையில் சொன்ன செய்தி வரலாற்று சிறப்பு மிக்கது. “நாம் பயப்பட வேண்டிய ஒரே விஷயம் பயமே. ஏனெனில் அந்த இனம் புரியாத, ஆதாரமற்ற, உண்மையைச் சார்ந்திராத பயம் நம் பின்னடைவை மீறி முன்னேற விடாமல் நம்மை செயலிழக்க வைப்பதில் வல்லதாக இருக்கிறது”
அவர் அதிபராக இருந்த காலத்தில் இரண்டாம் உலகப் போரையும் மீறி அமெரிக்கா பொருளாதாரத்தில் முன்னேறியதோடு வல்லரசு நாடாகவும் உருமாறியது. அதற்கு மிக முக்கிய காரணம் பயத்தை நிராகரித்து தைரியத்தைத் துணை கொண்டு செயல்படும் ஒரு தலைமை அந்த நாட்டிற்கு இருந்தது தான் என்பதில் சந்தேகம் இல்லை.
அதெல்லாம் சரி, பயம் இயல்பாகவே வந்து விடுகிறதே, அதை விலக்கி வெற்றி பெறுவது எப்படி என்று கேட்போருக்கு சில ஆலோசனைகள்-
முதலில் பயத்திற்கான காரணங்கள் கற்பனையா இல்லை உண்மை தானா
என்று அலசுங்கள். அந்த காரணங்கள் உண்மைக்குப் புறம்பான அனுமானத்தின் அடிப்படையில் ஏற்பட்டவையாக இருந்தால் உறுதியான மனத்தோடு புறக்கணியுங்கள். அந்த கற்பனை காரணங்களிலும், அனுமானங்களிலும் அதிக நேரம் எண்ணங்களைத் தங்க விடாதீர்கள். ஏனென்றால் அதிக காலம் அந்த எண்ணங்களிலேயே இருந்தால் அதையே உண்மை என மனம் நம்ப ஆரம்பித்து விடும். பின் பயம் நம்மை ஆட்கொள்ளவும் ஆரம்பித்து விடும்.
ஒருவேளை அந்தக் காரணங்கள் கற்பனை அல்ல, உண்மையின் அடிப்படையில் தான் எழுந்தவை என்றானால் அந்தக் காரணங்களை அங்கீகரியுங்கள். உண்மையை புறக்கணிப்பது எக்காலத்திலும் நல்லதல்ல. ஆனால் பயத்தினால் செயலிழப்பதும் புத்திசாலித்தனமல்ல என்பதை மறந்து விடாதீர்கள். பயப்படும் படியான விளைவுகளையும், சூழலையும் மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவுபூர்வமாக சிந்தியுங்கள்.
மனம் உடனடியாக அந்த செயலை செய்யாமல் இருப்பதே சிறந்தது என்று உடனடியாகச் சொல்லும். அந்த செயல் தேவையற்றதாகவும், எவ்விதத்திலும் நம் முன்னேற்றத்திற்கு உதவாததாகவும் இருந்தால் இரண்டாவது சிந்தனையே தேவையில்லை. அச்செயலைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். ஆனால் அந்த செயல் நம்மை நல்ல சூழலுக்கு மாற்ற உதவுவதாகவும், உண்மையான முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாகவும் இருந்தால் செயல்படாமல் இருப்பது
ஒரு புத்திசாலித்தனமான தீர்மானம் அல்ல என்பதை உணருங்கள். அதிகம் பாதிக்கப்படாமல் செயலைச் செய்து முடிக்கும் வழிகளை சிந்தியுங்கள். இந்த சூழ்நிலைகளை சமாளித்து வென்றவர்கள் என்ன செய்தார்கள், எப்படி சமாளித்தார்கள் என்றும் கவனியுங்கள். அவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள்.
தோல்வியைப் பற்றிய பயம் என்றால் ஒரு உண்மையைத் திரும்பத் திரும்ப மனதில் பதியுங்கள். ”இந்த உலகில் எதிலுமே தோல்வி அடையாதவன் இது வரை தோன்றவில்லை. இனி தோன்றப் போவதுமில்லை”. நீங்களும் விதிவிலக்கல்ல என்பதை உணருங்கள். முன்பு கூறியது போல மாபெரும் வெற்றியாளர் கூட பத்து முயற்சிகளில் சராசரியாக நான்கு முயற்சிகளில் தோல்வி அடைகிறார்கள் என்றால் தோற்பதில் வெட்கப்பட என்ன இருக்கிறது?
மரியோ புஸோ எழுதிய “காட் ஃபாதர்” நாவலில் முக்கிய கதாபாத்திரமான காட் ஃபாதர் பயத்தையே அறியாதவனாக படைக்கப்பட்டது. அதற்கு முக்கியமான காரணம் அவன் ”ஒரு மனிதனுக்கு ஒரு விதி தான் இருக்க முடியும்” என்று விஷயத்தை உறுதியாக நம்பியது தான். என்ன நடக்குமோ அது நடந்தே தீரும் என்றால் பின் பயந்து நடுங்க என்ன இருக்கிறது? இது கூட ஒரு வகையில் பயத்தைப் போக்கும் சித்தாந்தமல்லவா?
நீங்கள் இறை நம்பிக்கை உடையவராக இருந்தால் உங்களுக்கு கடவுளின் துணை என்றும் இருப்பதாக நம்புங்கள். கடவுள் துணையாக இருக்கையில் எது தவறாகப் போக முடியும்? தன்னம்பிக்கையைக் குறைக்க முடிந்த பயம் கடவுள் நம்பிக்கை முன் சக்தியற்றுப் போவது நிச்சயம்.
அப்படியும் பயம் போகவில்லை என்றாலும் பயந்து கொண்டே ஆனாலும் செய்ய வேண்டியதைச் செய்ய ஆரம்பியுங்கள். செயல் புரிய ஆரம்பித்தவுடனேயே பெரும்பாலான பயங்கள் நம்மை விட்டு தானாக அகல ஆரம்பிக்கின்றன. சூரியனைக் கண்ட பனித்துளி போல அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகின்றன.
மொத்தத்தில் எப்படியாவது பயம் உங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முன் பயத்தை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வாருங்கள். முடிவில் பயம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள். - www.v4all.org

Monday, March 30, 2015

நம் தாய்மொழியாம் தமிழை தவிர

உண்மையான செல்வம் என்பது என்ன ? குறைவிலா உணவு , ஆரோக்கியமான உடல் நலம் , பெரிய வீடு , மகிழுந்து , நகை , கட்டுக்கட்டாய் பணம் , என ஏராளமானவற்றை குறிப்போம் , ஆனால் திருஞானசம்பந்தர் செல்வம் என்பது என்ன என்பதை மிக அழகாக விளக்குகிறார் .
திருஞானசம்பந்தர் தேவாரம்
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
செல்வ வளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச் செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.
இப்பபாடலில் செல்வம் என்ற வார்த்தையை 7 முறை பயன் படுத்தியுள்ளார் . இந்தளவு நுட்பங்கள் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழை தவிர வேறு மொழிகளில் இல்லை . தமிழையும் தமிழ் வேதங்களையும் கொண்டாடுவோம் 

Saturday, March 21, 2015

Gayatri Mantra Produces Sound Waves Hoax And Real Study

Gayatri Mantra Produces Sound Waves Hoax And Real Study
In the year 1969, when I was studying in the Vivekananda College,Chennai, I had a professor of Indian Philosophy, Dr.Radha Krishnan.
He demonstrated an experiment on the Mantras,
He had learned Veda Pandit to recite the Beeja Mantras.
Effect of Gayntri Mantra on Human Body.Image.jpg
Effect of Gayntri Mantra.
The Mantra on Ganesha produced an outline of Ganesha as we see Him in Temples appeared on the TV Screen, though the details were not very distinctively seen.
Similar results were for Devi and Subrahmanya and Rudra.
But when the Gayatri Mantra was recited, the picture tube blew up.
We left it at that.
What is certain is that the Mantras unleash energy, at highest levels.
I had posted an article as to how the first two lines of The Purusha Suktha produce electricity and a Bangalore based Company has developed the technology.
And there are reports that Shiva Linga spewed DNA.
Consider the points of similarity between D.N.A. and Shiva.
It is well known that Shiva is Ugra and his name also is Ugra. Ugra means an acid. D.N.A. is also an acid. Vedanta calls that Hiranyagarbha as Sutratma.
Sutratma means an Atma in the form of Sutra i.e. a thread or filament.
The modern science admits that a DNA molecule is really like a thread or filament.
“In a single human germ-cell this filament of DNA is about one metre in length”, says Watson in his book ‘The Double Helix’.
The Yoga-science calls it Mahan, the great. It is really great because it is present in all the living things.
Its molecular weight is one million, so the scientists call it ‘great’. It has no birth. It develops from itself. DNA also duplicates, that means develops from itself. Mr. J. D. Watson describes this as ‘self replication’.

Tuesday, March 10, 2015

பலி பீடம்

பலி பீடம்

பலி பீடம்
கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி
கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு
தெரியாது ஒளிந்திருக்கும் காமம், ஆசை, குரோதம்,
லோபம், மோகம், பேராசை, மத, மாச்சர்யம் எனும்
எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி
செய்துக்கொள்ளுமிடம்.
வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும்
வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான
இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க
வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு
பலியிட வேண்டும்.மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது.
மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.
ஆண்கள் இங்கு தலை, கையிரண்டு, இருசெவிகள்,
இரு முழங்கால், மார்பு, ஆகிய உறுப்புகள் பூமியில்
படும்படி அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரத்தில் தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என ஐந்து அங்கங்களே நிலத்தில் படியக்கூடியதாக இருக்கவேண்டும்.
அவ்வாறு கீழே வீழ்ந்து
வணங்கும் போது வடக்கு பக்கம் தலை வைத்து
வணங்க வேண்டும்.

Wednesday, March 4, 2015

பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - ஈரோடு

ஈரோடு
1. அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்,
பவானி
அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்
மூலவர்:சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்)
அம்மன்/தாயார்:வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் பவானி இருக்கிறது.
போன்:+91- 4256 - 230 192, +91- 98432 48588
பிரார்த்தனை:குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் ...
சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. ...
2. அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்,
கொடுமுடி
அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்
மூலவர்:மகுடேஸ்வரர்
அம்மன்/தாயார்:திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.
இருப்பிடம்:ஈரோடு - கரூர் ரோட்டில் கொடுமுடி உள்ளது. ஏராளமான பஸ்வசதி இருக்கிறது. ஈரோட்டிலிருந்து 47 கி.மீட்டரும், கரூரிலிருந்து 34 கி.மீட்டர் தூரமும் உள்ளது.
போன்:+91- 4204-222 375.
பிரார்த்தனை:ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை ...
சிறப்பு:இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. ...
3. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்,
பண்ணாரி
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்
மூலவர்:மாரியம்மன்
இருப்பிடம்:சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. சத்திய மங்கலத்திலிருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சத்தியமங்கலம் 15 கி.மீ., ஈரோடு 77 கி.மீ., கோவை 82 கி.மீ., சேலம் 170 கி.மீ., மைசூர் 127 கி.மீ., திருப்பூர் 65 கி.மீ.,
போன்:+91-4295-243366, 243442, 243 289
பிரார்த்தனை:கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை ...
சிறப்பு:இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் ...
4. அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்,
பிரப் ரோடு
அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்
மூலவர்:பெரிய மாரியம்மன்
இருப்பிடம்:ஈரோடு பிரப் ரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
போன்:+91-424-2258670
பிரார்த்தனை:வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.

பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து ...
சிறப்பு:இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. ...
5. அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்,
சென்னிமலை
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
மூலவர்:சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
அம்மன்/தாயார்:அமிர்த வல்லி, சுந்தர வல்லி
இருப்பிடம்:ஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 18 கி.மீ., திருப்பூர் 40 கி.மீ.,
போன்:+91-4294 - 250223
பிரார்த்தனை:கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், ...
சிறப்பு:கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் ...
6. அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்,
பாரியூர்
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்
மூலவர்:ஆதிநாராயணர்
அம்மன்/தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் கோபி சென்று அங்கிருந்து 5 கி.மீ., தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ்வசதி உண்டு.
போன்:+91- 4285 - 222 010, 222 080.
பிரார்த்தனை:இங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் ...
சிறப்பு:இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் ...
7. அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்,
பாரியூர்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்
மூலவர்:காளியம்மன் (கொண்டத்துக்காரி )
இருப்பிடம்:கோபிசெட்டிபாளையத்துக்கு மிக அருகில் பாரியூர் இருப்பதால் கோபியிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. கோபிசெட்டிபாளைம் 3 கி.மீ.,
போன்:+91-4285-222 010
பிரார்த்தனை:இத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லிசூன்யம், செய்வினை ஏவல் பகை ஆகியவற்றால் ...
சிறப்பு:இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் ...
8. அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்,
ஈரோடு
அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்
மூலவர்:மகிமாலீஸ்வரர்
அம்மன்/தாயார்:மங்களாம்பிகை
இருப்பிடம்:ஈரோடு நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
போன்:+91-424- 2267578
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு:இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல்சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. 63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு ...
9. அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்,
திண்டல்மலை
அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்
மூலவர்:வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது.
போன்:+91-424-2430114, 94439 44640
பிரார்த்தனை:செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய ...
சிறப்பு:கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ...
10. அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்,
பவளமலை
அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்
மூலவர்:முத்துகுமார சுவாமி
அம்மன்/தாயார்:வள்ளி தெய்வானை
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 35 கி.மீ., தூரம் கோபிசெட்டிப்பாளையம். அங்கிருந்து அந்தியூர் டவுன் பஸ்சில் 3 கி.மீ., சென்றால் முருகன்புதூர் பஸ் ஸ்டாப். அருகில் கோயில்.
போன்:+91 97157 40960
பிரார்த்தனை:திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு கிடைக்க,  அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல், செவ்வாய் தோஷம் நீங்க, நோய் குணமடைய இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு:இங்குள்ள கைலாசநாதர் லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பது ...

Wednesday, August 6, 2014

சிறந்த விற்பனையாளர் ஆவதற்கான தகுதிகள்:

சிறந்த விற்பனையாளர் ஆவதற்கான தகுதிகள்:

ஒரு சிறந்த விற்பனையாளருக்கு தோற்றம் முக்கியமான அம்சமாகும். சிலருக்கு பிறவியிலேயே நல்ல நிறம் மற்றும் உடலமைப்பு அமைந்துவிடுவதுண்டு. அப்படியில்லாதவர்கள் தங்களுடைய உடை மற்றும் நடைகளில் நன்கு கவனம் செலுத்தி பொலிவனா தோற்றதை உருவாக்கலாம்.

இரண்டாவது பேச்சுத்திறன். தம்முடைய விற்பனைப் பருட்களை வாடிக்கையாள் ஏற்குமாறு வெளிப்படுத்தும் பேச்சுத்திறன், அப்பொருட்ளின் நிற மற்றும் குறைகளை நன்கு அறிந்து அதனுடைய நிறைகளை சாமர்த்தியத்துடன் பரப்பும் ஆற்றலுக்கு தகவல் தொடர்புத் துறையில் (Communication skills) பயிற்சி பெறுதல்.



வாடிக்கையாளருக்கு எந்த மொழியில் பிடிக்குமோ அந்த மொழியில் நன்கு உரையாடுகிற பழக்கம்.

வாடிக்கையாளரின் தேவைகளை அறிந்து, அவரின் உணர்வுகளை மதித்து, அவருடைய தேவைகள நிறைவேற்றவோம் என்ற நம்பிக்கையை உருவாக்குதல்.

எல்லா தரப்பு மக்களிடமும் சுமூகமாக பழகும் ஆற்றல் அத்துடன் மனதில் பணிவு.

வாடிக்கையாளர் கோபமாக பேசினாலும் நிதானமாக செயல்படும் சகிப்புத்தன்மை.

பொருளை பிறர் தாழ்த்திப் பேசினாலும், வாங்க மறுத்தாலும் மனத் தளராமல் உறுதியுடன் வலியுறுத்தும் விடாமுயற்சி.

கற்பனைத்திறன்; வாடிக்கையாளரின் மன உணர்வுகளை முன்னரே கணித்து அதற்கேற்ப செயல்படும் ஆற்றல்.

தொழிலில் தளராத ஆர்வம்

வாடிக்கையாளர்களை ஒன்றாகச் சேர்த்து அவர்களுக்கு விருந்தளித்தல்; அதன் மூலம் தம்முடைய பொருட்களை அறிமுகப்படுத்துதல். (Organising Ability)

வாடிக்கையாளர்களுக்கு ஒரு புறமும், உற்பத்தியாளர் அல்லது நிர்வாக இயக்குநருக்கு மறுபுறமும் பாலமாக இருந்து அந்த கம்பெனியின் வளர்ச்சிக்கு உதவுதல்.

பல்வேறு விளம்பர யுக்திகளின் மூலம் மக்களிடையே தம்முடைய வியாபாரத்தைப் பரப்புதல்.

இறுதியாக, பணத்த கையாளுதலில் நாணயம். அதிக தொகையை பார்க்கும்போது அதில் ஒரு சின்ன அளவு எடுத்து கொண்டாலென்ன? என்ற சபலம், மற்றும் கம்பெனி பணம்தானே, செலவழிப்போம் என்ற ஊதாரித்தனம், இவ்விரண்டும் இல்லாமலிருத்தல்.

இவையாவும் சிறந்த விற்பனையாளரின் தகுதிகளாகும்.

Yours happily

Dr.Star Anand Ram
www.v4all.org
cell- 9790044225 


Thursday, July 31, 2014

உங்கள் ஜாதகப்படி என்ன தொழில் செய்யலாம்

ஜாதக அடிப்படையில் ஒரு மனிதன் இந்த தொழிலுக்கு / வியாபாரத்திற்கு தான் பொருத்தமானவர் என்பதை நிர்ணயிப்பது பின்வரும் காரணிகள் தான்.
  • ஜாதகத்தில் எந்த கிரகமானது வலிமை போருந்தியிருகின்றதோ அதர்க்கேற்பவே அந்த ஜாதகனுடைய தொழிலானது அமைகின்றது.
  • ஒருவனின் உத்தியோகம் சம்மந்தம்பட்ட விஷயங்கள் வலிமையாக அமைய ஜாதகனின் ஜென்ம லக்னம் வலிமை வாய்ந்ததாக அமைய வேண்டும். இந்த லக்னதைப் பெற்றவர்களுக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது, அதனை ஆராய வேண்டும்.
  • லக்னத்திற்கு பத்தாம் இடம் தான் தொழில் ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்றது. இந்த பத்தாம் இடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். எந்த ராசி பத்தாம் இடமாக அமைகின்றதோ அந்த ராசிக்கு இந்தந்த தொழில் அமையும் என்று பொதுவான விதி உள்ளது, அதனை ஆராய வேண்டும்.
  • பத்தாம் இடதில் இருகின்ற கிரகத்தின் வலிமையையும், அதன் காரகங்களையும் முக்கியமாக தொழில் சம்மந்தப்பட்ட காரகங்களை அறிந்து கொள்ள வேண்டும்.
  • பத்தாம் இடதின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
  • பத்தாம் இடதின் அதிபதி தங்கி இருக்கின்ற வீட்டின் அதிபதி யார், அவர் எங்கு இருக்கின்றார் என்று அறிய வேண்டும். அவரது வலிமையையும், காரகங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
  • பத்தாம் வீட்டை யார் யார் பார்கிறார்கள் என்பது மிகவும் முக்கியமானது. கால், அரை, முக்கால் மற்றும் முழு பார்வை என்று ஜாதகத்தில் உள்ளது. எந்த கிரகம் எந்த பார்வையில் பத்தாம் வீட்டைப் பார்கின்றது என்று அறிந்து அந்த கிரகத்தின் வலிமையையும், காரகதுவமங்களையும் அறிந்து கொள்ள வேண்டும்.
மேலே சொன்ன காரணிகளை ஆராய்ந்து அணைத்து தொழில் காரகங்களையும் பட்டியலிட்டுக் கொண்ட பிறகு, ஜாதகரின் மனது எந்தெந்த தொழில்களில் ஈடுபாடு கொள்கின்றது என்று அறிந்து கொள்ள வேண்டும். மேலும் ஜாதகர் ஏற்கெனெவே சில காலம் தொழில்/வியாபாரம் செய்திருப்பாரேயானால் அவற்றில் எவ்வேவ்வற்றில் அதிகம் சோபித்தார் என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
இறுதியாக எந்த கிரகம் அல்லது கிரகங்கள் தொழிலுக்கு உகந்ததாக வலிமை பெற்று இருகின்றன என்று உறுதி செய்து அந்த கிரகத்தின் தொழில் காரகங்களை பரிந்துரைக்க வேண்டும்.
ஒவ்வொரு கிரகத்தின் காரகமும் கீழே விவரிக்கப் பட்டிருக்கின்றது.
சூரியனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
  • அரசியலில் ஈடுபடலாம்
  • அரசாங்க வேலை
  • மாணிக்க வியாபாரி ஆகலாம்
  • சிவப்பு வண்ண கற்களை விற்கலாம்
  • தங்க ஆபரணங்களை தாயாரிக்கலாம், விற்பனை செய்யலாம்.
  • தர்க்கம் செய்வதில் வல்லவராகலாம்
  • மாந்த்ரீகத்தில் ஈடுபடலாம்
  • நூற்பாலை சம்பந்தப் பட்ட வேலைகள் செய்யலாம்
  • கட்டுமான துறைகளில் ஈடுபடலாம்
  • மிளகாய் வியாபாரம்
  • வெங்காய வியாபாரம்
  • புகையிலை வியாபாரம்
  • மர வியாபாரம்
  • காகிதம் வியாபாரம்
  • விபூதி வியாபாரம்
  • தாவர பொருட்கள் வியாபாரம்
  • கற்பூரம் வியாபாரம்
  • மருந்து வியாபாரம்
  • இரசாயன வியாபாரம்
  • வழக்கரிஞ்சர்

சந்திரனின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

ஒரு மனிதனின் ஜாதகத்தில் பத்தாம் இடத்திற்க்குரியவனாக சந்திரனோ, பத்தாம் இடத்திற்கு உரியவன் உள்ள இடமானது சந்திரனின் வீட்டுக்கு உரியதாகவோ அமைந்திருந்தது என்றால் அது சந்திரனின் காரகத்துவத்தை பெற்றது என்று கூறலாம்.
சந்திரன் வெண்மையானவன். எனவே வெள்ளை நிறமுடைய பொருட்களை கொண்டு எந்த வியாபாரம் செய்தாலும் அது வெற்றியாக அமையும்.
  • முத்து வியாபாரம்
  • உப்பு வியாபாரம்
  • சுண்ணாம்பு வியாபாரம்
  • சங்கு வியாபாரம்
  • மீன் பிடித்தல்
  • பால், தயிர், மோர், வெண்ணை வியாபாரம்
  • படகு, பரிசல்
  • டிராவல் ஏஜென்சி
  • வேளாண்மை
  • நீர்பாசன துறை வேலைகள்
  • ஈரப்பசையுள்ள பழவகை வியாபாரம்
  • பெண்கள் விருப்பப்படும் எந்த தொழிலையும் செயாலாம்.
  • பேன்சி ஸ்டோர்
  • தங்கம், வெள்ளி மற்றும் கவரிங் கடைகள்
  • சீட்டு பிடிகலாம்
  • அரசாங்க துறையில் வேலை கிடைக்கும், முயன்றால் பெறலாம்
  • டாக்டர் ஆகலாம்
  • புகழ்பெற்ற நடிகர்கள் ஆகலாம்
  • ஜோதிடம் கற்று தொழில் செய்யலாம்
  • எழுத்தாளர், பாடலாசிரியர் ஆகலாம்
  • எதற்கும் தகுதியற்றவராக கருதபடகூடியர் கூட சில பணக்கார வீடுகளில் அவ்வீட்டின் பெண்கள் இடக்கூடிய வேலைகளை செய்யக் கூடிய வேலைக்காரர்களாக ஆகின்றனர்.

செவ்வாயின் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

செவ்வாய் காரகத்துவம் பெற்ற கிரகமாக இருக்குமேயாயின், அவர்கள் பின்வரும் தொழில் செய்ய ஏற்றவர்களாக மாறுகின்றனர்.
  • ரியல் எஸ்டேட் துறை இவர்களுக்கு சிறந்தது. வீடுகள், நிலபுலன்கள் விற்பனை செய்து வருமானம் பெறலாம்.
  • எங்கெங்கு நெருப்பின் துணை அவசியமோ அங்கெல்லாம் இவர்கள் உண்டு. உதாரணமாக செங்கல் சூளை, கொள்ளுப்பட்டறைகள், மின் வாரியங்கள், பயங்கர கருவிகள் தயார் செய்யும் இடங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்கும். அல்லது இவர்களே அவ்வேலையை செய்வார்கள்.
  • இவர்களில் மிகப்ப்ரும்பாலோர்க்கு சமையல் தொழில் செய்யத் தெரியும். ஹோட்டல் துறை இவர்களுக்கு வாய்க்கும்
  • குயவர்கள் ஆகலாம்
  • சிற்பிகள் ஆகலாம்
  • ஓவியர் ஆகலாம்
  • காவல்துறை / இராணுவத்தில் பனி கிடைக்கும்
  • விளையாட்டு வீரர்கள் ஆகலாம்.
  • சிலம்பம், குத்துசண்டை வீரர் ஆகலாம்.
  • பவள வியாபாரம்
  • மாயாஜாலம், ஏவல், பில்லி, சூன்யம் எல்லாம் சர்வ சதாரணமாக அமையும்
  • சர்கஸில் வேலை கிடைக்கும்
  • பெரிய தோப்புகள் மூலம் லாபம் பெறலாம்
  • விவசாயத்திற்கு ஏற்ற நிலத்தை குத்தகைக்கு விடுவதாலும், துவரைப்பயிரிடுவதாலும் நன்மை அடையலாம்.

புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • புதன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு பத்திரிகை துறை ஏற்றது. நிருபராகவோ, துணை ஆசிரியர், ஆசிரியர் ஆகா பணி ஆற்றலாம்
  • ஜோதிடத்தில் வல்லவர்களாக இருப்பார்கள்
  • இன்சூரன்ஸ் துறை சிறந்தது
  • இவர்கள் கல்வியில் சிறந்தவர்கள் ஆதலால் கல்வித்துறை சம்மந்தமாக வேலை கிடைக்கும்.
  • புதன் காரகதுவம் பெற்றவர்கள் புகழ் பெற்ற ஏழுத்தாளர்களாக வருவார்கள்.
  • பட்டிமன்றம், கதா காலோட்சபம், சொற்பொழிவு ஆற்றுவதில் வல்லவர்கள்
  • வழக்கரிஞ்சர் ஆகலாம்
  • அக்ககௌடன்சி எனப்படும் கணக்குப் பதிவியல் துறை மிக சிறந்தது.
  • அமைச்சர்களுக்கு ஆலோசகராகவோ, அயல் நாட்டு தூதராகவோ ஆகலாம்.
  • மென்போருள் துறை மிக ஏற்றது.
  • ரேடியோ, தொலைக்காட்சி துறைகளில் நல்ல வேலை கிடைக்கும்
  • கடவுள் மேல் பக்தி உள்ளவர்கள் வேத சாஸ்திரங்களை கற்று அர்ச்சகர் ஆகலாம்.
  • வியாபாரியாக ஆகா விரும்புவோர்கள் இலைகள் பச்சை பயிறு போன்றவற்றை கொள்முதல் செய்து விற்றால் அதிக லாபம் பெறலாம்.
  • தபால் துறையில் வேலை கிடைக்கும்
  • ஆசிரியர் ஆகலாம்
  • கணித மேதைகளாக மாறலாம்.

குரு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • ஆன்மீக துறையில் நாட்டம் கொண்டு அதன் வாயிலாக சிலருக்கு ஜீவனம் அமையும்.
  • சிலர் மாகத்துமாவாக மாறி பிறர் மூலம் காப்பாற்றப்படுகின்றனர்.
  • நகை வியாபாரமும், புஸ்பராக வியாபாரமும் ஏற்றது.
  • எலுமிச்சை, ஊதுவத்தி, தென்னை, பாக்கு, கரும்பு வெல்லம் வியாபாரம் ஏற்றது
  • பொதுவாக யாகங்கள், புரோகித தொழிலில் ஈடுபடுதல், கதா கலோட்சபம் செய்தல், தெய்வீக காரியங்களில் ஈடுபடுதல், மதப் பிரசாரம் செய்தல், ஆலயங்களில் மதப் பிரச்சாரம் செய்தல், ஆலயங்களில் அறங்காவல் துறையில் ஈடுபடுதல், மடங்களில் இருத்தல், தொண்டு செய்தல், ஆலய குருக்களாக இருத்தல் போன்ற முழுவதுமான ஆன்மீகத் தொழிலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தைப் பெருகிக் கொள்ளலாம்.
  • வேறு சிலர் குறிப்பட்ட இனம், மதம், பிராந்தியம் போன்றவற்றிற்க்கு தலைவராகி அதன் மூலம் வாழ்க்கை நடத்துவர்.
  • இன்சுரன்சு துறை ஏற்றது
  • எங்கெங்கு காசு, பணம் புழங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாக இருக்க தகுதி வாய்க்கும்.
  • இவர்கள் தேர்தலில் நின்றால் சட்டமன்ற உருப்பினராகவோ, மந்திரிகளாகவோ கூட ஆகலாம்.
  • இவர்களில் பலருக்கு வக்கீலாகவும், நீதிபதி ஆகவும் தகுதி உண்டு
  • அரசியலில் இவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • பிறர்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும் பொது, அந்த விசாரணை கமிசனில் இவர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.
  • இவர்கள் நிர்வாக துறையில் சிறப்பாக ஈடுபட முடியும்.
  • மளிகை கடை வைத்தால் இலாபத்தை அடையக்கூடியவர்களாக சிலர் விளங்குவார்கள்.
  • தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தகுதி சிலருக்கு வாய்க்கும்.
  • தொழிலார்களின் தலைவர்களாகவும் சிலர் விளங்குவர்

சுக்ரன் காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • தங்க கடை வைக்கலாம்
  • வெள்ளி நகைகளை தயாரித்து விற்கலாம்
  • வெண்கல வியாபராம் செய்யலாம்
  • செயற்கை கற்கள் விற்பனை செய்யலாம்
  • ஆடைகள் வியாபாரியாகலாம்
  • மணல் லோடு ஏற்றி வந்துசப்ளை செய்யலாம்
  • பால் பண்ணை அமைக்கலாம்
  • லாண்டரி நடத்தலாம்
  • தறி போட்டு நெய்யும் தொழிலை செய்யலாம்
  • படங்களுக்கு கண்ணாடி சட்டமிட்டு தரும் கடையினை வைக்கலாம்
  • முகம் பார்க்கும் கண்ணாடி கடை நடத்தலாம்.
  • கோயில் வாசலில் தேங்காய், பூ, பழம் வெற்றிலை பாக்கு கடை வைக்கலாம்.
  • தனியாக வெற்றிலைப் பாக்கு கடை வைக்கலாம்
  • பூ வியாபாரம் செய்யலாம்
  • சந்தன வியாபாரம் செய்யலாம்
  • புளி மண்டி வைக்கலாம்
  • கரும்பை விளைவித்து விற்கலாம்
  • மணிலாவை பயிர் செய்து விற்பனை செய்யலாம்
  • தோட்டங்கள் இட்டு இலாபம் அடையலாம்
  • விறகு கடை நடத்தலாம்
  • பலகார கடை நடத்தலாம்
  • சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் வியாபாரம் செய்யலாம்.
  • பாத்திர வியாபாரம் செய்யலாம்.
  • சங்கீதம் சம்பந்தப்பட்ட மேள, தாளங்களை விற்பனை செய்யும் கடை வைக்கலாம்.
  • இலவம் பஞ்சு வியாபாரம் செய்யலாம்
  • கட்டில், மெத்தை வியாபாரம் செய்யலாம்
  • பால், தயிர் போன்றவற்றை விற்பனை செய்யலாம்
  • கால் நடை பண்ணை வைக்கலாம்
  • சென்ட் வியாபாரம் செய்யலாம்
  • வாகனங்களை வாடகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தலாம்
  • இசை அமைக்கலாம்
  • கலைஞ்சர்கள் ஆகலாம்
  • பின்னணி பாடலாம்
  • கவிஞர்களாக ஆகலாம்.
  • பொதுவாக கலைத்துறையில் இவர்கள் பெரிதாக சாதிக்கலாம்
  • கேளிக்கைகளில் நாட்டம் கொண்ட இவர்களுக்கு கேளிகைகளின் மூலமே வாழ்க்கையானது நடை பெரும்

சனி காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • இரும்பு, இரும்பு சம்மந்தப் பட்ட தொழில்களில் தான் இவர்கள் வல்லுனர்கள் ஆக இருப்பார்கள்.
  • கடினமாக உழைக்க வல்ல இவர்களுக்கு அம்மாதிரியேதொழில் அமையும்.
  • இவர்கள் நீல வண்ணமுடைய சரக்குகளை விற்பனை செய்தால் இலாபம் உண்டு
  • தோல் வியாபாரம் செய்யலாம்
  • எண்ணெய் வியாபாரி ஆகலாம்
  • எள் பயிரிட்டு விற்பனை செய்யலாம்
  • தரகர்களாக தொழில் நடத்தலாம்
  • மர வியாபாரம் செய்யல்லாம்
  • இரும்பு வியாபாரம் ஏற்றது
  • அழுகும் பொருட்கள் வியாபாரம் செய்யலாம்
  • கசாப்பு கடை நடத்தலாம்
  • கால்நடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து இலாபம் பெறலாம்
  • காவல் துறை ரகசியப்பிரிவில், உளவுத்துறையில் பணியாற்றலாம்
  • மர வேலைசெய்யலாம்
  • விவசாயம் செய்யலாம்
  • கூலி வேலை செய்யலாம்
  • மறு சுழற்சி தொழில்களில் ஈடுபடலாம்
  • தண்டல், வரி வசூல் செய்யல்லாம்
  • மருந்தாளுனராகலாம்
  • அகழ்வாராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம்
  • பொறியியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உண்டு
  • வெடி குண்டு தயாரிப்பு கிடங்குகளில் வேலை கிடைக்கும் 

ராகு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • இவர்கள் உளவுத் துறையில் இரகசிய கண்காணிப்பாளராக விளங்ககூடிய பதவிகளைப் பெற்றிருப்பார்கள்
  • மிக சிறந்த மத போதகம் செய்து வாழ்பவர்களாக இவர்கள் இருப்பார்கள்
  • பழைய கிழிந்து போன ஆடைகளை வாங்கி, விற்று வியாபாரம் செய்யல்லாம்
  • அடகு வியாபாரம் செய்யலாம்
  • மாணிக்கம், கோமேதகம் போன்ற கற்களை விற்பனை செய்யலாம்
  • ஈய வியாபாரம் செய்யலாம்
  • கேப்பை, உளுந்து போன்ற தானியங்களை உற்பத்திசெய்து விற்கலாம்
  • ஒயின் ஷாப், கள்ளுக்கடை, சாராயக் கடை நடத்தலாம்
  • மருந்து கடை நடத்தலாம்
  • தரகர் ஆகலாம்
  • மூங்கில், கருங்கல் வியாபாரம் செய்யலாம்
  • கடலில் இருந்து எடுக்கப்படும் எப்பொருளையும் கொண்டு வியாபாரம் செய்யலாம்
  • தையல்காரர் ஆகலாம்
  • எருமை மாட்டின் மூலம் வியாபாரம் செய்யலாம்
  • தறி நெய்து தொழில் செய்யலாம்
  • கப்பல் படை, விமானப்படையில் வேலை கிடைக்கும்
  • மந்திரவாதம் கற்றுக் கொள்ளலாம் 

கேது காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

  • ஆன்மீகத் துறையில் ஈடுபடலாம்
  • அறிவியல் துறையில் ஈடுபடலாம்
  • ஜோதிடத்தில் ஈடுபடலாம்
  • தொழில் நுட்பங்களை பிறருக்கு செய்வதன் மூலம் பலன் பெறலாம்
  • அலுமினிய பாத்திரங்கள் விற்கலாம்
  • ஈயம், தகரம் வியாபாரம் செய்யலாம்
  • தரகு வியாபாரம் செய்யலாம்
  • கோமேதகம், மாணிக்கம் விற்பனை செய்யலாம்
  • நீல நிற சரக்குகளாக வங்கி விற்கலாம்
  • பட்டாசு தயாரிப்பில் ஈடுபடலாம்
  • லாகிரி வஸ்துகளை கொண்டு வியாபாரம் செய்யலாம்
  • ஒயின் ஷாப் நடத்தலாம்
  • மீன் பிடிக்கலாம்
  • தூர் வாரலாம்
  • முத்துக் குளிக்கலாம்
  • கசாப்புகடை வைக்கலாம்
  • ரசவாதம் செய்யலாம்
  • மந்திரவாத தொழில் செய்து அதன் மூலம் பொருளை சம்பாதிக்கலாம்
  • இந்தக் காரகத்துவம் பெற்றவர்கள் திருட்டில் வல்லவர்களாக இருப்பார்கள்.
  • கொலை செய்வதில் அஞ்சாதவர்களாக இருப்பார்கள்
  • ஆண்டிப் பண்டாரமாகவும் மாற வாய்ப்பு உண்டு
  • மதப் பிரசாரம் செய்வார்கள்

பிறந்த லக்னத்தின் அடிப்படையில் தொழில் அமையக்கூடிய வாய்புகள்

மேஷ லக்னத்தைப் பெற்றவர்கள்

ஒரு மனிதன் மேஷ ராசியை தனது ஜென்ம லகினமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான்.
இந்த மேஷத்திற்கு பத்தாம் இடம் மகரம். பத்னோன்றாமிடம் கும்பம். இந்த இரண்டு வீடுகளையும் தனது வீடுகளாக கொண்டு சனி திகழ்கின்றார். ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி, பதினொன்றுக்குடைய இலாபாதிபதி சனி.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • இரும்பு சம்மந்தப்பட்ட தொழிற்சாலைகளில் பணி கிடைக்கும்
  • விவசாயிகளாகவும் மாறலாம்
  • நெருப்பினால் எவை எல்லாம் இயங்குகின்றதோ அந்த இடங்களில் எல்லாம் எளிதில் வேலை கிடைக்கும்.
  • பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருட்களான தங்கம், வெள்ளி, கனிம பொருட்கள், நிலக்கரி, தாது உப்புகள் ஆகிய தொழிற்சாலைகளில் பணி கிடைக்கலாம்.
  • மருத்துவ துறையில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கும்.
  • இராணுவத்திற்கு முயற்சி செய்தால் அதில் உத்தியோகம் பெறலாம்
  • காவல் துறையில் வேலை கிடைக்கும்
  • பொதுவாக பத்துக்கு உரியவர் சனியாக இருக்கும் பட்சத்தில் எத்தொழிலை செய்த போதிலும் அதில் கடினமான உழைப்பை செய்ய வேண்டியது வரும்.
  • பத்துக்குடைய சனி சரியான இடத்தில் அமர்ந்திருந்தாரேயானால் அவர்கள் பிறரிடம் அடிமைஉத்தியோகம் செய்யாமல் தங்களாகவே சொந்த தொழிலை செய்வார்கள்.

ரிஷப லக்னத்தைப் பெற்றவர்கள்

ஒரு மனிதன் ரிஷப லக்னத்தை தனது ஜென்ம லக்னமாக பெற்றால் அந்த லக்னத்திற்கு உரியவனாக சுக்ரன் திகழ்கின்றான்.
ரிஷபத்திற்கு பத்தாம் இடம் கும்பம், பதினொன்றாம் இடம் மீனம். இந்த இரண்டு வீடுகளில் கும்பத்தை தனது சொந்த வீடாக கொண்டவர் சனி. மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. ஆக பத்துக்குடைய ஜீவனாதிபதி சனி. பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • உணவு விடுதி வைத்து நடத்தலாம்
  • சினிமா, நாடகம் போன்ற கலை துறைகளில் ஈடுபடலாம்
  • அழகு சாதன பொருகள் சம்மந்தப்பட்ட துறைகளில் ஈடுபடலாம்
  • பெண்கள் விரும்பக்கூடிய ஆடைகள், ஆபரணங்கள், கற்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்

மிதுன லக்னத்தைப் பெற்றவர்கள்

மிதுன லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான்.
மிதுனத்திற்கு பத்தாம் இடம் மீனம். பதினொன்றாம் இடம் மேஷம். மீனத்தை சொந்த வீடாக கொண்டவர் குரு. மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • கம்ப்யூட்டர் துறை இவர்களுக்க்கு மிகவும் ஏற்றது.
  • பொறியியல் துறை ஏற்றது
  • விமான துறை பிரிவுகளில் வேலை தேடலாம்
  • பதிப்பகத் துறையில் நூல் வெளியீடு செய்வது நல்ல பலன் தரும்
  • ரேடியோ, தொலைகாட்சி போன்ற துறைகளில் வேலை கிடைக்கும்
  • செய்தி ஸ்தாபனங்களில் பணி புரியலாம்.
  • தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பணி கிடைக்கும்
  • எங்கெங்கு பணம் புலங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாகஇருக்க வாய்ப்பு கிட்டும்.
  • கணக்காளராக பணி கிடைக்கும்

கடக லக்னத்தைப் பெற்றவர்கள்

கடக லக்னத்திற்கு உரியவனாக சந்திரன் திகழ்கின்றான். கடகத்திற்கு பத்தாம் இடம் மேஷம். பதினொன்றாம் இடம் ரிஷபம். மேஷத்தை சொந்த வீடாக கொண்டவர் செவ்வாய். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் சுக்கிரன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • தண்ணீர் சம்மந்தப்பட்ட எந்த தொழிலும் இந்த லக்னத்திற்கு நல்லது.
  • கப்பல் போக்குவரத்து துறையில் வேலை கிடைக்கும்
  • மீன் பிடி தொழில் ஏற்றது.
  • உப்பு வியாபாரம் ஏற்றது
  • இராணுவத்தில் வேலை கிடைக்கும்
  • காவல் துறையில் வேலை கிடைக்கும்
  • ஜவுளி வியாபாரம் பலன் தரும்

கடக லக்னத்தைப் பெற்றவர்கள்

சிம்ம லக்னத்திற்கு உரியவனாக சூரியன் திகழ்கின்றான். சிம்மத்திற்கு பத்தாம் இடம் ரிஷபம், பதினொன்றாம் இடம் மிதுனம். ரிஷபத்தை சொந்த வீடாக கொண்டவர் (ஜீவனாதிபதி) சுக்கிரன். மிதுனத்தை சொந்த வீடாக கொண்டவர் (லாபாதிபதி) புதன்,
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • போலிஸ், செக்யுரிட்டி முதலான காவல் பணி கிடைக்கும்.
  • வனத்துறை பணிகள் கிடைக்கும்
  • கணினி துறையில் வேலை கிடைக்கும். குறிப்பாக சிஸ்டம் அட்மினிஸ்டிரேடர், நெட்வொர்க் அட்மினிஸ்டிரேடர் போன்ற பணிகள் சுலபமாக கிடைக்கும்.
  • அரசாங்க துறையில் எளிதில் வேலை கிடைக்கும்
  • அரசியலில் இவர்கள் ஈடுபட்டால் வெகு விரைவில் முன்னுக்கு வருவர்
  • நிலத்துக்குக் அடியில் உள்ள நன்நீரை வரவழைத்தல், சுரங்கம் தோண்டுதல், அகழ்வாராய்ச்சி பணிகள் முதலானவை கிடைக்கும்

கன்னி லக்னத்தைப் பெற்றவர்கள்

கன்னி லக்னத்திற்கு உரியவனாக புதன் திகழ்கின்றான். பத்துக்குடைய ஜீவானாதிபதி புதன், பதினோன்ருகுடைய லாபாதிபதி சந்திரன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • லக்னத்திற்கும், பத்திற்கும் உரியவனாக இரு வீட்டு ஆதிபத்தியம் பெற்ற புதன் முழுவதுமாக பிறரை அதிகாரப்படுத்தும் தொழிலையே பெற்றவனாகின்றான். எனவே மற்றவர்களை அதிகாரபடுத்தி வேலை வாங்கும் எத்தொழிலும் இவர்களுக்கு ஏற்றதாக அமைகின்றது.
  • மேலும் நுண்மையான கலைதொடர்புடைய பணிகள் பலவற்றைச் செய்யலாம்.
  • இசை பாடியோ, பயிற்றுவித்தோ வாழ்க்கை நடத்தலாம்.
  • எழுத்தாளர்கள் ஆகலாம்
  • நாட்டியம் ஆடுவதன் மூலம் ஜீவனம் செய்யலாம்
  • கலை சம்மந்தப்பட்ட தொழில்களை செய்யலாம்
  • கல்வி சம்மந்தப்பட்ட பல்வேறு பணிகளிலும் இவர்கள் ஈடுபடலாம்.

துலாம் லக்னத்தைப் பெற்றவர்கள்

துலாம் லக்னத்திற்கு உரியவனாக சுக்கிரன் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் கடகம். பதினொன்றாம் இடம் சிம்மம். பத்துக்குடைய ஜீவனாதிபதி சந்திரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சூரியன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • பெண்கள் எவை எல்லாம் விரும்புகின்றார்களோ, அத்தகைய பொருட்களை வியாபாரம் செய்யலாம்.
  • பேன்சி ஸ்டோர் வைக்கலாம்.
  • வீட்டுக்கு உபயோகமான அரிசி, பருப்பு, புளி விற்கும் மளிகை வியாபாரம் செய்யலாம்.
  • காய்கறி, பூ வியாபாரம் செய்யலாம்
  • மாட்டின் மூலம் கிடைக்க கூடிய பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் போன்றவற்றை விற்பனை செய்யலாம்.
  • வெள்ளை நிறமுள்ள பொருட்களை விற்பனை செய்யலாம்.

விருச்சிக லக்னத்தை பெற்றவர்கள்

விருசிக லக்னத்திற்கு உரியவனாக செவ்வாய் திகழ்கின்றான். லக்னத்திற்கு பத்தாம் இடம் சிம்மம். பதினோன்றாம் இடம் கன்னி. பத்துக்குடைய ஜீவனாதிபதி சூரியன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி புதன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • ஜோதிடம் சொல்லி இவர்கள் சம்பாதிக்கலாம்
  • மந்திரவாதங்கள் செய்து, மந்திரவாதிகள் என்று புகழ் பெற்று அதன் மூலம் சம்பாதிக்கலாம்
  • செப்படி வித்தை, மாயா ஜாலம், கண்கட்டு வித்தைகள் ஆகியவற்றை செய்தும் வருமானம் பண்ணலாம்.
  • நீதி துறையில் இவர்களுக்கு வேலை கிடைக்கும்
  • மக்களுக்கு பயன்படும் எதையாவது கண்டுபிடித்து புகழ் அடைந்து அதன் மூலம் பலன் பெறுவர்.
  • ரசாயன துறைகளில் ஈடுபடுவர்.
  • மருத்துவ துறையில் இவர்களில் பலர் ஈடுபடுபவர்.

தனுசு லக்னத்தை பெற்றவர்கள்

தனுசு லக்னத்திற்கு உரியவனாக குரு திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் கன்னி ஆகும். பதினோன்றாம் இடம் துலாம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி புதன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி சுக்ரன்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • இவர்கள் மரத்தினாலான பொருட்களை இலாபகரமான முறையில் விற்பனை செய்யலாம்.
  • ரசாயான பொருட்களை உற்பத்தி செய்து விற்பனை செய்யலாம்.மருத்துவ சம்மந்தபட்ட தொழிலில் பணியாற்றலாம்.
  • கட்டடம் சம்மந்தப்பட்ட வேலைகளில் ஈடுபடலாம்,
  • கட்டடம் சம்மந்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபடலாம்.

மகர லக்னத்தை பெற்றவர்கள்

மகர லக்னத்திற்கு உரியவனாக சனி திகழ்கின்றான். லக்னதிறகு பத்தாம் இடம் துலாம் ஆகும். பதினோன்றாம் இடம் விருசிகம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி சுக்ரன். பதினோன்றுக்குடைய லாபாதிபதி செவ்வாய்.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • இவர்கள் இரசாயன சம்மந்தப் பட்ட துறைகளில் பணியாற்ற வாய்ப்பு உள்ளவர்கள்
  • சட்டத்தால் குற்றம் என்று ஒதுக்கப்படும் பலவித பணிகளை செய்யும் வாய்ப்பு கிடைக்கும்
  • தண்ணீர், திரவம் போன்ற பொருட்களினால் தங்கள் நடத்தலாம்.
  • இவர்கள் காவல் துறையின் கண்காணிப்பில் இருக்க வாய்ப்பு உண்டு.

கும்ப லக்னத்தை பெற்றவர்கள்

கும்ப லக்னத்திற்கு உரியவானக சனி திகழ்கின்றான். லக்னதிற்கு பத்தாம் இடம் விருசிகம் ஆகும். பதினோன்றாம் இடம் தனுசு ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி செவ்வாய். பதினோன்றுக்குடைய லாபாதிபதி குரு.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • விளையாட்டுத் துறைகளில் ஈடுபடுவதன் மூலமாக பொருள் குவிப்பர்.
  • காவல் துறையில் உத்தியோகம் கிடைகின்றது.
  • இராணுவத்தில் சேர முயற்சித்தால் பலன் கிடைக்கும்.
  • குத்து சண்டை முதலான பல்வேறு சண்டைகளின் மூலம் பலன் கிடைக்கும்.
  • முரட்டுத் தனத்தின் மூலம் வருவாயை பெறக் கூடிய பாக்கியத்தை இவர்கள் அடைகின்றனர்.

மின லக்னத்தை பெற்றவர்கள்

மீன லக்னதிறகு உரியவனாக குரு திகழ்கின்றார், லக்னதிற்கு பத்தாம் இடம் தனுசு ஆகும். பதினோன்றாம் இடம் மகரம் ஆகும். பத்துக்குடைய ஜீவனாதிபதி குரு. பதினோன்றுக்குடைய லாபாதிபதி சனி.
சரி இவர்களுகுடைய தொழிலை கவனிக்கலாம்.
  • இவர்கள் எத்தொழில் செய்தாலும், மற்றவர்கள் கௌரவமாக கருதும் தொழிலாகவே அது அமையும்.
  • ஆசிரியர்களாக இருக்கலாம்
  • மதபோதனையாளராக இருக்கலாம்
  • பிறரை வழிகாட்டி செல்லலாம்
  • ஆன்மீக துறையில் செல்லலாம்
  • இவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாகவே வாழ்க்கை நடத்துவார்கள்.
  • புனிதமான வேலையே கிடைக்கும்

பத்தாம் இடதில் கிரகங்கள் நிற்கும் பலன்

சூரியன் நிற்கில் :- வேந்தனாய், தனாவானாய், தேவப் பிராம்மண பக்தி விசுவாசமுள்ளவனாயிருப்பார். தாய்க்கு வியாதியால் தொந்தரவு.
சந்திரன் நிற்கில் :- புத்திமான், சூரன், சுகித்து வாழ்வான். புண்ணிய காரியங்களில் சிந்தை, பந்துக்களால் சுகம், ராசமூலதனம், ப்ராப்தி, தாய்க்கு தோஷி, தீர்த்த யாத்திரை செய்வான். எடுத்த காரியம் முடிப்பார்.
செவ்வாய் நிற்கில் :- பூமியை ஆளுவான், பிரதானி, சூரன், சுகவான், பராகிரமம், சகல காரியசித்தி, சிப்பந்திகளை வைத்து ஆளுவான். அயிஸ்வரியன், வெகுஜன பூஜிதன், ஆயுத அக்கினியால் பயமுள்ளவனாம்.
புதன் நிற்ககில் :- சிற்ப வித்தை அறிவான். ஞானமறிவார், சத்திவாசகர், காவிய கணித மறிந்தவன். குசல வித்தை அறிந்தவர், வினோத வஸ்திர அலங்காரன், ஆசார சீலன், மிதமான வார்தையுரைபான்.
குரு நிற்கில் :- செல்வமுடையவன், அபிமானி, குல வித்தை, [பறிக்கும் குணம் உள்ளவன், ராஜ சேவை, பிரதாப முடையவன், சபையில் புகழ் பெற்றவர். விசேச தனத்தை சேகரிப்பான். புதிரகளிடத்தில் அற்பது வேஷம்.
சுக்ரன் நிற்கில் :- சூரன், அபிமானி, கீர்திவான், புதியுள்ளவன், நாளுக்கு நாள் விருத்தியடைவார், தனவான், பிரதாப சீலன், சுகமனுபவிபவன், சந்தான விருத்தியில்லை, நீதி, குணம், கல்வி, ஸ்திரி, மூலதன லாபமுடையவன்.
சனி நிற்கில் :- தன்வான், சூரன், பிரபு செவையுடையவன், பக்திவைராக்கிய முள்ளவன். தனம் தேடுவதில் சமர்த்தன். தாய்க்கு கண்டம். அற்பகுணம், பரஹிம்சை செய்வார்.
ராகு நிற்கில் :- நீச கர்மத்தை செய்வான். புத்திர சுகமில்லான். குரூர குணத்தால் அதிக ஆசை. அற்பசுகம். அஜாகிரதையால் தன நஷ்டம். நடன சங்கீதங்களில் ஆர்வம். சபையில் கர்வ குணமுடையவன்.
கேது நிற்கில் :- உற்சாகமுள்ளவான். ஞானப்பெருஞ்செல்வன், சௌக்கிய குறைவு, துக்கம், பிதாவுக்கு வறுமை. ரிசபம், மேஷம், கன்னி, விருசிகம் இதில் ஒன்று லக்கினத்திற்கு பத்தாம் இடம் ஆனால் சத்துரு ஜெயம்; விரோதியிஸ்தன்

Yours Happily
'விஸ்வயோக ஸ்ரீ டாக்டர் ஸ்டார் ஆனந்த்ராம்' 
Life Skills Trainer 
www.v4all.org 
cell -9790044225