# “வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் ..
அதில் நாம் செய்யும் அட்ஜஸ்ட்களோ கோடிகள் இருக்கும்...!"
அதில் நாம் செய்யும் அட்ஜஸ்ட்களோ கோடிகள் இருக்கும்...!"
ஆம்... ...பாலுக்கு ஏங்கி அழும் குழந்தை ,அது கிடைக்காமல் விரல் சூப்பி அட்ஜஸ்ட் செய்து கொண்டு அழாமல் இருப்பதிலிருந்து வாழ்வில் முதல் முதலாக அட்ஜஸ்ட் அத்தியாயம் ஆரம்பமாகிறது....
# நீண்ட நாட்களுக்கு முன் நடந்தது இது....!
ஒரு முறை ஜெயலலிதா சி.எம்.மாக இருந்தபோது அரசு சம்பந்தப்பட்ட ஒரு படத்துக்கு இசை அமைக்க இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவுக்கு வந்தார்.. அப்போது அங்கே பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் , முதல்வர் உள்ளே இருக்கிறார் என்பதால் பாதுகாப்பு காரணம் கருதி இளையராஜாவின் காரை வழியிலேயே நிறுத்தி நடந்து போக சொல்ல...

“ராஜா கார் மேல கைய வச்சது ..ராங்கா போய் விட்டது ..”
சீறிய இளையராஜா உடனே காரைத் திருப்பச் சொல்லி விட்டார் ....
“இத்தனை காலம் நான் இசையமைத்து வரும் ஒரு ஸ்டுடியோவில் என்னை வழி மறித்து இறங்கச் சொல்வதா?” என்று கடும் கோபத்துடன் வெளியேறிய ராஜா , அரசு எடுத்த அந்த படத்துக்கு இசை அமைக்கவில்லை.

# அதே இளையராஜா ..சில ஆண்டுகளுக்கு முன் முதல்வர் ஜெயலலிதா நடத்திய விழாவில் பேசிய பேச்சு :
. “அந்தக் காலத்தில் டைரக்டர் ஸ்ரீதர்சார்தான் எங்களுக்கு ஹீரோ. அவர் நடத்திய வெண்ணிற ஆடை ஷூட்டிங்கில் ஜெயலலிதாதான் கதாநாயகி. அந்த படப்பிடிப்பு பார்ப்பதற்கு அன்றைக்கு அங்கே நின்றிருந்தவன் நான்”
# அப்புறம் “என்றென்றும் ராஜா “ என்று ஒரு நிகழ்ச்சி ஜெயா டிவியில் வர ஆரம்பித்தது...
# இளையராஜாவுக்கு ஏற்பட்டது போலவே ஒரு சோதனை , ரஜினிக்கும் ஏற்பட்டது...
போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு ரஜினி திரும்பிய ஒரு நாளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது கார் தடுத்து நிறுத்தி சோதிக்கப்பட்டது ..கடுப்பானார் ரஜினி...
போயஸ் கார்டனில் உள்ள தனது வீட்டுக்கு ரஜினி திரும்பிய ஒரு நாளில், பாதுகாப்புக் காரணங்களுக்காக அவரது கார் தடுத்து நிறுத்தி சோதிக்கப்பட்டது ..கடுப்பானார் ரஜினி...
காலம் கூட கூட ..கடுப்பும் கூடியது...!
உச்சகட்டமாக 96 தேர்தலில் "இந்தம்மா மீண்டும் ஆட்சிக்கு வந்தா தமிழ்நாட்டை அந்த ஆண்டவனால் கூட காப்பாத்த முடியாது"ன்னு சொல்லி கைதட்டல்களையும் விசில்களையும் ,கூடவே ஜெயலலிதாவின் கடும் கோபத்தையும் அள்ளிக் குவித்தார் ரஜினி...

# ஆனால்..அதே ரஜினி ...வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டவுடன் ஜெயலலிதாவுக்குச் சூட்டிய பெயர் : 'தைரியலட்சுமி' ..!
சினிமாவுக்கு ஜெயலலிதா செய்த சேவைக்காக நடந்த பாராட்டு விழாவில் பொன்னாடையின் ஒரு பக்கத்தை கமல் பிடித்திருக்க இன்னொரு பக்கத்தை ரஜினி பிடித்திருந்தார்....
# “எப்படி இருந்த இவங்க இப்படி அட்ஜஸ்ட் ஆயிட்டாங்க ..?”
# உண்மையைச் சொல்லப் போனால் ரஜினியோ,இளையராஜாவோ ...அட்ஜஸ்ட் ஆகிப் போகவில்லை ...
வாழ்க்கையை அக்செப்ட் செய்துக்கிட்டாங்க ..!
அவ்வளவுதான்...!
வாழ்க்கையை அக்செப்ட் செய்துக்கிட்டாங்க ..!
அவ்வளவுதான்...!
# “ஆம்..நாம் , நம்முடைய உறவுகளிலோ ,நட்புக்களிலோ அட்ஜஸ்ட் செய்து கொண்டு வாழ்வதால் மட்டும் ,ஒரு பிரயோஜனமும் இல்லை..அது நீண்ட நாள் நீடிப்பதும் இல்லை..!
எப்போது மற்றவர்களின் குறைகளோடும் , குற்றங்களோடும் அவர்களை நாம் அக்செப்ட் செய்து கொள்ள ஆரம்பிக்கிறோமோ...
அப்போதுதான் வாழ்க்கை நம் வசப்பட ஆரம்பிக்கிறது..! from -John - FB
No comments:
Post a Comment