குதம்பை சித்தர் பாடல் இரவு நேரத்தில் படிக்கும் போது தலை ஜிவ்வுனு இருக்கு. பாடல் படிக்கும் போதே இறையாற்றல் தலைக்குள் இறங்கிறது. நீங்களும் இரவு 1 மணிக்கு படித்து பாருங்கள் . இறையாற்றலை உணர முடியும்
ஆறாறு காரமும்
நூறுமே சேர்ந்திடில்
வீறான முப்பாமடி - குதம்பாய்
வீறான முப்பாமடி.
நூறுமே சேர்ந்திடில்
வீறான முப்பாமடி - குதம்பாய்
வீறான முப்பாமடி.
விந்தொடு நாதம் விளங்கத்
துலங்கினால்
வந்தது வாதமடி - குதம்பாய்
வந்தது வாதமடி.
துலங்கினால்
வந்தது வாதமடி - குதம்பாய்
வந்தது வாதமடி.
அப்பினைக் கொண்டந்த உப்பினைக்
கட்டினால்
முப்பூ வாகுமடி - குதம்பாய்
முப்பூ வாகுமடி.
கட்டினால்
முப்பூ வாகுமடி - குதம்பாய்
முப்பூ வாகுமடி.
உள்ளக் கருவியே உண்மை வாத
மன்றிக்
கொள்ளக் கிடையாதடி - குதம்பாய்
கொள்ளக் கிடையாதடி.
மன்றிக்
கொள்ளக் கிடையாதடி - குதம்பாய்
கொள்ளக் கிடையாதடி.
பெண்ணாலே வாதம்
பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி - குதம்பாய்
மண்ணாலே இல்லையடி.
பிறப்பதே அல்லாமல்
மண்ணாலே இல்லையடி - குதம்பாய்
மண்ணாலே இல்லையடி.
ஐந்து சரக்கொடு விந்துநா தம்
சேரில்
வெந்திடும் லோகமடி - குதம்பாய்
வெந்திடும் லோகமடி.
சேரில்
வெந்திடும் லோகமடி - குதம்பாய்
வெந்திடும் லோகமடி.
No comments:
Post a Comment