Showing posts with label sales communication. Show all posts
Showing posts with label sales communication. Show all posts

Wednesday, February 24, 2016

விவேகானந்தர் உபதேசித்த வேலைமுறை....🌺

🌺சுவாமி விவேகானந்தர் உபதேசித்த வேலைமுறை....🌺

சுவாமி விவேகானந்தர் உபதேசித்த வேலைமுறை....

சுவாமி விவேகானந்தர் உலகிற்கு ஆன்மீக போதனை செய்ததோடு நின்றுவிடவில்லை. தரித்ர தேவோ பவ,மூர்க்க தேவோ பவ, துக்கி தேவோ பவ என்று போதித்தார்.

முழுக்க முழுக்க எல்லா உலகியல் பந்தங்களையும் துறந்தவரே சன்னியாசி.ஆனால், சுவாமிஜியோ நாட்டினையும் அதன் மக்களையும் உயிரினும் மேலாக நேசித்தார்.

வறுமையின் கோரப்பிடியில் சிக்கி மடிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு ஆன்மீக ஞானம் கொடுப்பதைவிட உணவளிப்பதே முக்கியம் என்று முழங்கினார். பேசியது போதும். செயலாற்றுங்கள் என்பதே அவரின் அறைகூவல்.

எப்படிச் செயலாற்றவேண்டும் எனத்திட்டமிட்டு அதற்கு ஒரு வடிவமும் கொடுத்து இந்த நாட்டின் மறுமலர்ச்சிக்கு வித்திட்டார். அவர் உபதேசித்த வேலைமுறை இதுதான்: அமைப்பு ரீதியாக வேலை செய்யுங்கள்.

அமெரிக்காவில் நடந்த சர்வ மத மாநாட்டில் கலந்து கொள்ள சிக்காகோ சென்றடைந்த அவரிடம் கேட்கப்பட்ட முதல் கேள்வி நீங்கள் எந்த ஸ்தாபனத்தின் சார்பில் வந்துள்ளீர்கள் என்பதுதான்.


உலகக் கண்காட்சியில், விஞ்ஞானமும், தொழில் நுட்ப அறிவும் ஏற்படுத்தியிருந்த கண்டுபிடிப்புகள் , விந்தைகள் அவருக்கு பிரமிப்பை ஏற்படுத்தின. உலக வாழ்வில் அவர்கள் அனுபவித்துக்கொண்டிருந்த செழிப்பை நம் நாட்டு மக்களின் வாழ்வோடு ஒப்பிட்டுப் பார்த்து மனம் வருந்தினார்.


1893,செப்டம்பர் 11 அன்று சிக்காகோவில் உரையாற்றி உலகையே வென்றாரே அது அவரது வாழ்வில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. காலியாக நின்று கொண்டிருந்த ரயில் பெட்டியில், தெரு ஓரங்களில், பிச்சைக்காரனைப் போல் தங்கியிருந்த அவருக்காக சிக்காகோ நகரிலிருந்த தனவந்தர்களின், பிரபலங்களின் வீடுகள் வரவேற்புக் கம்பளங்கள் விரித்தன.


மாநாட்டு அமைப்பாளர்களின் ஏற்பாட்டின்படி, ஜான் பி லயன் தம்பதியினரின் வீட்டில் சுவாமி விவேகானந்தர் தங்கினார். அந்த வீட்டில்தான் வரலாற்றுப் பிரசித்திபெற்ற கீழ் கண்ட உரையாடல் நிகழ்ந்தது.


சுவாமி:  என்னுடைய வாழ்க்கையில் இந்த அமெரிக்காவில்தான் மிகப் பெரிய சபலத்திற்கு ஆளாகிவிட்டேன்.

ஸ்ரீமதி லயன்: அப்படிச் சபலிக்கச் செய்தவள் யாரோ?

சுவாமி:  அவள் இலலை. அது. உங்கள் ஸ்தாபனங்கள்தான் என்னை சபல மடையச்செய்துவிட்டன..


சுவாமிஜி தன்னுடைய சீடர் பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில், தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்: (ஞான தீபம் பாகம் 11, பக்கம் 157,கடிதம் 537)


நம்மிடம் ஒரு பெரிய குறை இருக்கிறது. நம்மால் நிரந்தர இயக்கம் ஒன்றை நிறுவ முடியாது.ஏனெனில் நாம் நமது அதிகாரத்தை பிறருடன் பகிர்ந்துகொள்ள ஒருபோதும் விரும்புவதில்லை.நாம் இறந்தபிறகு என்ன நேரிடும் என்பதைப் பற்றியும் ஒருபோதும் சிந்திப்பதில்லை. மனிதனை பணிக்காக தயார் செய்யவேண்டும். யார் இறந்தாலும் யார் இருந்தாலும் இயங்கிச் செல்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.


விவேகானந்தர் தன்னுடைய செயல் திட்டத்தை வகுக்க ஆதாரமாக இருந்தது அவருடைய வெளி நாட்டு (குறிப்பாக அமெரிக்க) அனுபவங்கள்தான்.


மனிதனை உருவாக்க வேண்டும். அவர்களை ஒருங்கிணைத்து அமைப்பு ரீதியாக தேச வேலையைச் செய்ய வைக்கவேண்டும்.அதன் மூலம் நாட்டை உயர்த்த வேண்டும் என்பதை அவர் தனது வாழ்க்கைப் பணியாக ஏற்றுக்கொண்டார். ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க வேண்டும் என்பது அவரின்  கனவாக ஆனது. அந்தக் கனவுதான் ராமகிருஷ்ண சங்கம் என்ற நனவாக மலர்ந்தது..


1897, மே மாதம் 1ந்தேதி ஸ்ரீ.ராமகிருஷ்ண சங்கம் துவக்கப்பட்டது,.சங்கத்தின் முதல் உறுப்பினர்கள் கூட்டம், 1897, மே மாதம் 9ந்தேதி அன்று நடந்தது.. சுவாமிஜி பூத உடலை நீத்தது, 1902, ஜூலை 4 அன்று. இடைப்பட்ட அந்த 5 வருடகாலத்தில் தன்னுடைய முழு சக்தியையும் சங்கத்தை வலுவாக்கும் பணிக்கே அர்ப்பணமாக்கினார். அளவுக்கு அதிகமாக உழைத்ததால் கடும் நோய்க்கு ஆளான போதும் தொடந்து வேலை செய்தார். அகண்டானந்தருக்கு எழுதிய கடிதத்தில், சுவாமிஜி குறிப்பிடுகிறார்: நான் இறக்கும் போதும் கவலைப்படாதே. என் அஸ்திகளே அற்புதங்களைச் செய்யும். பத்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் நாம் பரவிவிடவேண்டும்.இதற்கும் குறைவாகச் செய்தோமானால், அது சுத்த மோசம்.(ஞான தீபம் பாகம் 11, பக்கம் 91,கடிதம் 479). இன்று ராமகிருஷ்ணா மிஷண் 176 கிளைகளோடு உலகெங்கிலும் பரந்து விரிந்து மாபெரும் விருட்சமாக வளர்ந்திருப்பது, ஐந்து வருடங்களில் சுவாமிஜி வேருக்குப் பாய்ச்சிய நீரால்தான்.அவர் இட்ட உரத்தால்தான்.


ஒரு ஸ்தாபனத்தை உருவாக்க, வலுவாக்க, வழிநடத்தத் தேவையான அனைத்துக் குணங்களும், திறமைகளும்,தலைமைப் பண்புகளும்,தொலைநோக்குப் பார்வையும் அவரிடம் அபரிமிதமாக இருந்தன.


சுவாமி விவேகானந்தரின் தொலைநோக்குப் பார்வையைப் புரிந்து கொள்ள ஒரே ஒரு உதாரணம் போதும். யுனெஸ்கோ அமைப்பின் டைரக்டர் ஜெனரலாக இருந்த ஃபெடரிகோ மேயர் 1993ல் நிகழ்த்திய உரையில் அதைப்பற்றி குறிப்பிடுகிறார்.“யுனெஸ்கோ ஆரம்பிக்கப்பட்டது 1945ல்.  மிஷண் ஆரம்பிக்கப் பட்டதோ 1897ல். யுனெஸ்கோவின் அடிப்படைச் சட்ட திட்டம், பிரமிப்பூட்டும் வகையில்  மிஷனோடு ஒத்திருக்கின்றது: இரண்டின் நோக்கம்,செயல்பாடு மற்றும் அவைகளின் அனைத்து முயற்சிகளும் மனித மேம்பாட்டிற்காகவே. இரண்டும், உலகில் ஜனநாயகம் மற்றும் அமைதியை நிலை நாட்டுவதற்காக, சமூகங்களிடையே சகிப்புத்தன்மையை  ஏற்படுத்த வேண்டும் என்பதை முதல் செயல் திட்டமாகக் கொண்டுள்ளன. இரண்டுமே, உலக ஒற்றுமைக்குப் பாடுபடும் அதே வேளையில், வேறுபட்ட பல சமூகங்களும், கலாச்சாரங்களும் உலகில் இருப்பதை அங்கீகரித்து ஏற்றுக் கொள்கின்றன,”


மத்திய இந்தியாவை 1897 ம் ஆண்டு கடும் பஞ்சம் வாட்டிக்கொண்டிருந்தது. அப்போது, மடத்தில் சுவாமிஜியைப் பார்க்க ஒருவர் பசு பாதுகாப்பு சங்கத்திலிருந்து வந்திருந்தார். அவர் தமது சங்கத்துக்கு நன்கொடை கேட்டு வந்திருந்தார். சுவாமிஜி அவரிடம் உங்கள் சங்கம் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு ஏதாவது செய்திருக்கிறதா என்று கேட்டார். அவர், நாங்கள் எதுவும் செய்யவிலை.அவர்கள் அனுபவிப்பது கர்மபலனால்தானே என்று பதிலளித்தார். சுவாமியின் கண்கள் கோபத்தால் ஜொலித்தன. சொந்தச் சகோதரர்கள் பட்டினியில் செத்துக்கொண்டிருக்கும்போது பறவைக்கும் விலங்குக்கும் உணவைத் தரும் சங்கங்களிடம் எனக்கு அனுதாபம் கிடையாது. பசுமாதாவும் தன்னுடைய கர்மபலனினால்தானே கசாப்புக் கடையில் மாட்டிகொண்டிருக்கிறாள் என்று சாடித்தீர்த்துவிட்டார்.எவ்வளவு பரிதாபம்?கர்மநியதிக் கொள்கை எவ்வளவு கேவலமாகப் பயன்படுத்தப் படுகிறது? வேதனையில் துடித்துப் போய்விட்டார். .(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 10). மக்கள் மத்தியில் சேவைப் பணிகளை மேற்கொள்வதற்கே ராமகிருஷ்ணா மிஷனை சுவாமிஜி ஆரம்பித்தார்.


மேலைநாட்டினரிடமிருந்த அபாரமான தன்னம்பிக்கையும், ரஜோ குணமும், வெளிக்கருத்துக்களை ஏற்றுக்கொள்கிற பரந்த மனமும், ஏற்றுக்கொண்ட கருத்தை வாழ்நாள் முழுதும் கடைபிடிக்கின்ற பிடிவாதகுணமும், இணந்து வேலைசெய்கின்ற குணமும்,தலைமைப் பண்புகளும் அவரை வெகுவாக ஈர்த்தன. அதற்கு நேர்மாறாக நம் மக்களைப் பீடித்திருந்த அவநம்பிக்கை, தமோகுணம்,சுய மறதி, பெரும் சுயநலம்,பொறாமை,மூடந்ம்பிக்கைகள்,வேதாந்தத்தினைப் பற்றிய அரைகுறை ஞானம், அயல்நாட்டுமீதான மோகம், காலத்திற்குப் பொருந்தாத பழக்கங்களை கட்டிகொண்டு சாஸ்திரத்தின் பெயரால் சொந்த சகோதரர்களை நிந்திக்கிற,கொடுமைப்படுத்துகிற அரக்க குணம் ஆகியவற்றைக் கண்டு ஆவேசம் கொண்டார்.நமது நாடு வேதாந்தத்தை மேலை நாட்டிற்கு கற்பித்துக் கொடுத்து, அவர்களின் மதிப்பைப் பெற்று அவர்களின் குருவாக இருக்க வேண்டும். பெளதீக விஷயங்களில் நாம் அவர்களை ஆசிரியராக ஏற்றுக்கொள்ள வேண்டும். அப்போது நாம் இருவருமே பயனடைவோம் என்பது அவரின் உறுதியான கருத்து.


சங்கத்தைப் பற்றிய எல்லா விஷயங்களிலுமே இந்த கருத்தின் அடிப்படையிலேயே அவர் முடிவெடுத்தார். மக்களுக்கு கல்வியும், ஆன்மீக ஞானமும் கொடுப்பது மற்றும் நரசேவை ஆகியவை மிஷனின் செயல்திட்டமாக இருந்ததற்கு இதுவே காரணம்.


ஸ்ரீராமகிருஷ்ணர் கோவிலைக் கட்டுவதற்காக ஒரு வரைபடம் தயாரித்து வைத்திருந்தார், சுவாமிஜி. கோவிலின் கதவில் சிங்கமும் ஆடும் ஒன்றின் உடம்பை ஒன்று நக்கிக் கொண்டிருப்பது போன்ற சித்திரத்தை வரையத் திட்டமிட்டிருந்தார். பேராற்றலும்,மென்மையும் அன்பினால் இணைந்திருப்பதைக் குறிப்பதே அதன் நோக்கம்..(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 213).அதாவது, கிழக்கும் மேற்கும் ஒன்றிணைந்த ஒரு உலகம்.


சுவாமிஜி ஒரு அற்புதமான பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்திருக்கும். அவர், ஒரு தேர்ந்த ஓவியருங்கூட.

பெரும் அறிஞர்களால் கலை நயத்திற்காகவும்,அதன் கருத்திற்காகவும் பாராட்டப்படுகின்ற ராமகிருஷ்ணா மிஷனின் சின்nனம் சுவாமிஜி அவர்களால் வரையப்பட்டதே. மிஷன் சம்மந்தப்பட்ட ஒவ்வொரு விஷயத்திலும் அவர் தனிப்பட்ட கவனம் கொடுத்தார். ஓவியரும், ஜூப்லி கலைக் கழகத்தை உருவாக்கியவருமான திரு. ரநாத பிரசாத் தாஸ் குப்தா அவர்களோடு உரையாடும்போது சின்னத்தின் பொருளை அவரே விளக்குகிறார்: “அலைவீசும் தண்ணீர் கர்மத்தையும்,தாமரை பக்தியையும்,உதய சூரியன் ஞானத்தையும்,சுற்றிகொண்டிருக்கும் பாம்பு யோகத்தையும் எழுப்பப்பட்ட குண்டலினி ஆற்றலையும் அன்னம் பரமாத்மாவையும் குறிக்கிறது. அதாவது, கர்மம்,பக்தி,ஞானம்,யோகம் ஆகிய நான்கின் இணைப்பால் பரமாத்மாவின் காட்சியைப் பெறலாம்.” கலை என்பது ஒரு கருத்தை வெளிப்படுத்த வேண்டும். எவ்வளவு அழகோடு இருந்தாலும் கூட, ஒரு கருத்தை வெளிப்படுத்தவிலையென்றால், அது கலையே அல்ல என்பது சுவாமிஜியின் வாக்கு. .(ஞான தீபம் பாகம் 6, பக்கம் 213).


சுவாமிஜிக்கு செயல் திட்டம் பற்றியும், செயல் புரிவோர் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளைப் பற்றியும், நிர்வாகம் பற்றியும் மிகத் தெளிவான கற்பனை இருந்தது. குருபாயிக்களுக்கு 27-04-1896ல் எழுதிய மிக நீண்ட கடிதத்தில் இதைப்பற்றி விவரமாக எழுதுகிறார். .(ஞான தீபம் பாகம் 10, பக்கம் 332,கடிதம் 366).எந்தெந்த நிர்வாகப்பொறுப்புகள் இருக்க வேண்டும் என்பதிலிருந்து, குடிநீர் ஏற்பாடு, சாப்பிடும் இடத்தின் வசதி என எல்லா விஷயங்களையும் அவர் அந்தக் கடிதத்தில் விவாதிக்கிறார். நான் சொல்லுபவற்றை அப்படியே கடைப்பிடியுங்கள் என்று அவர் கூறவில்லை. நான் எழுதியுள்ளவற்றை எல்லோரும் படியுங்கள்; யோசனை செய்யுங்கள்; விவாதம் செய்யுங்கள். சரியென்று தோன்றினால் எனக்கு எழுதுங்கள் என்றே கூறுகிறார்.


அவர் மீண்டும் மீண்டும் சொல்லுகிற விஷயங்கள் இவைதான்: சேர்ந்து வேலை செய்தல், அப்பழுக்கற்ற தூய்மை, விதிமுறைகளுக்குட்பட்ட கட்டுப்பாடான திட்டமிட்ட வாழ்க்கை.கீழ்படிந்து நடப்பதுதான் முதற்கடமை என்று தெளிவாகச் சொல்லுகிறார்.சிறு செடிகளுக்கு வேலி அமைப்பது போல, பக்குவமடையாத நிலையில் நியதிகள் கண்டிப்பாகத் தேவையென்பது சுவாமிஜியின் கருத்து.பத்து பேர் சேர்ந்து பத்து நாள் வாழ முடியாவிட்டால் உலகத்தில் எப்படி அன்பை நிறுவமுடியும் என்பது சுவாமிஜியின் கேள்வி.


இன்று நாம் சொல்லுகிற Organisation Structure பற்றி அப்போதே  திட்டமிட்டிருந்தார். அமைப்பிற்கு தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் இருக்க வேண்டும் என வகுத்திருந்தார். பொறுப்பாளர்களை வாக்கெடுப்பு  முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும் என தெளிவான நியதியை விதித்திருந்தார். ஒருவர் பொறுப்பில் ஒரு வருடத்திற்கு மேல் இருக்கக்கூடாது.முதல்  வருடத்திற்கு மட்டும் சுவாமி பிரம்மானந்தர் தலைவராகவும் நிர்மலானந்தர் பொருளாளராகவும் செயலாளராகவும் இருக்கட்டும் என குறிப்பிடுகிறார்.


எப்படித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் எனவும் தெளிவாகத் திட்டமிட்டிருந்தார். ஒருவர் இந்த ஆண்டு இவர் தலைவராக இருக்கலாம் என முன்மொழிய வேண்டும். மற்றவர்கள் அந்த யோசனையை சரி அல்லது கூடாது என்று காகிதத்தில் எழுதி குடத்தில் இடவேண்டும். யாருக்கு வாக்குகள் அதிகமாக இருக்கிறதோ அவர் தலைவர் ஆவார்.


சுவாமிஜி நிதி நிர்வாகத்திற்குக் கொடுத்த முக்கியத்துவம் பிரமிக்க வைக்கிறது. அது இன்றைக்கும் நமக்கு ஒரு பாடமாக இருக்கக்கூடியது. சுவாமிஜி 12-10-1897ல் சுவாமி பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில் சிறு சிறு விஷயங்கள் என நாம் எண்ணுகின்றவற்றை அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தி எழுதுகிறார்..( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 115,கடிதம் 498 ).


1.        பணம் வசூலித்து அனுப்புபவர்களுக்கு மடத்திலிருந்தே ரசீது அனுப்ப வேண்டும். ( அதாவது ரசீது புத்தகத்தை மடத்தில்தான் வைத்திருக்க வேண்டும். பிறரிடம் கொடுத்து வைத்திருக்கக்கூடாது.)

2.        ரசீதிற்கு நகல் இருக்க வேண்டும்.( அதாவது கூப்பன் முறைகளை அவர் ஏற்றுக்கொள்ளவிலை.)

3.        ரசீதிற்கான நகலை மடத்தில் வைத்திருக்க வேண்டும். ரசீதை பணம் அனுப்பியவருக்கு அனுப்ப வேண்டும்.

4.        ஒரு பதிவேட்டில் நன்கொடையாளர்களின் பெயரையும் முகவரியையும் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

5.        வசூலாகின்ற பணத்தின் ஒவ்வொரு பைசாவிற்கும் கணக்கு வைத்திருக்க வேண்டும்.

6.        யாருக்கேனும் பணம் கொடுத்தால் அவர்களிடமிருந்து முழு கணக்கையும் பெற்றுக் கொள்ளவேண்டும்.

7.        இந்தக் கணக்கு பின்னால் பிரசுரிக்கப்பட வேண்டும்.

8.        நான் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என ஏசப்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.


இந்தக் குறிப்புகள் நவீன தணிக்கை விதிமுறைகளோடு ( Audit Principles)அப்படியே ஒத்துப் போகின்றன. அமைப்பினர் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குமுறைகளையும் ( Internal Controls ) தெளிவாக வரையறுக்கின்றது.


சுவாமிஜி உலகியல் வாழ்க்கையில் ஈடுபட்டவரல்ல. சொல்லப் போனால் அவருடைய குருநாதரைப் போலவே அவருக்கும் பணத்தைக் கண்டால் ஒவ்வாமையே. பரிவிராஜகராக நாட்டைச் சுற்றிவரும்போதுகூட பணம் வைத்துக்கொண்டதில்லை. யாரிடமும் பணம் கேட்டதில்லை.  பசியோடு இருந்தபோதுகூட பிறரிடம் உணவு கேட்க கூச்சப்பட்டவர். யாராவது டிக்கெட் எடுத்துக் கொடுக்காவிட்டால் நடந்தே பயணம் செய்துவந்தார். ஏன்? வறுமையில் வாடிய தன் குடும்பத்தாருக்கு ஒரு வழி காட்டு தாயே என காளிமாதாவிடம் கேட்கவே வெட்கப்பட்டார். 1898 நவம்பர் 22ந்தேதி மற்றும் டிசம்பர் 1ந்தேதி அவர் கேத்ரி மகாராஜாவுக்கு எழுதிய கடிதங்களைப்   .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 171,கடிதம் 550 ) படித்தால் கண்ணீர் வந்துவிடும். மிகவும் வெட்கப்பட்டு எழுதுகிறார். இது உங்கள் பார்வைக்கு மட்டுமே என்று கூட எழுதுகிறார். நான் உங்களுக்கு அதிக காலம் துன்பம் கொடுக்க மாட்டேன். ஏனென்றால் நான் இன்னும் சில வருடங்களே உயிர் வாழ்வேன் என்ற பீடிகையோடு அவர் எழுதியுள்ள அந்தக் கடிதங்களை பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்ள அனைவரும், அமைப்புகளை நிர்வகிக்கிற அனைவரும் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.


இப்படிப் பட்ட சுவாமிஜி பின்னாளில் பணம் திரட்டுவதற்காகவே உலகெங்கும் பயணம் செய்திருக்கிறார் என்பதை நம்பக் கூட முடியாது. சொற்பொழிவுகளுக்கு பணம் வாங்கியிருக்கிறார். சில சமயங்களில் தன்னுடைய சீடர்களிடம் “கறாராக”  வசூல் செய்திருக்கிறார்.அவர் எழுதிய பல கடிதங்களில் பணம் திரட்டும்போது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதுகிறார். சில கடிதங்களில் என்னால் இன்னும் பணம் திரட்டமுடியவில்லையே என்ற ஏக்கத்தைப் பகிர்ந்துகொள்கிறார். அமைப்பிற்கென்று பணம் கேட்கவேண்டி வரும்போது அவர் தயவு தாட்சண்யமே பட்டதில்லை. வெட்கப்பட்டதில்லை.


ஆனால் ஒரு விஷயத்தில் – அதாவது அமைப்பு வேறு தான் வேறு என்பதில் - அவர் தெளிவாக இருந்தார். பணிக்காக திரட்டிய பணத்திலிருந்து ஒரு காசைக்கூட அவர் தனக்காகவோ தன் குடும்பத்திற்காகவோ செலவு செய்ததில்லை. .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 196,கடிதம் 573 ) அவருடைய தனிப்பட்ட செலவுகளுக்காக கேத்ரி மகாராஜா மாதாமாதம் பணம் அனுப்பிவந்தார். அமைப்பும் அதை நடத்துபவரும் வேறு வேறு என்பதும் ( concept of Separate Entity )  நவீன நிர்வாக இயலின் அடிப்படைக் கோட்பாடே.


அதனால், பணத்திற்கான செலவு கணக்குகளை சரியாக வைத்திருக்கவேண்டும் என்பதில் அவர் குறிப்பாக இருந்ததில் வியப்பேதும் இல்லை.எல்லா செலவுகளுக்கும் நிர்வாகக் குழுவின் அனுமதியைப் பெறவேண்டும்.அவர்களுடைய கையெழுத்தையும் பெறவேண்டும்.இல்லாவிட்டால் உன்பெயரும் கெட்டுப்போய்விடும் என தனது சீடருக்கு விவரமாக அறிவுரை கூறுகிறார். அவ்வப்போதே செலவுகளுக்கான கணக்கை எழுதி வைத்துவிடவேண்டும் என நியதியை வகுத்திருந்தார். ஆரம்பத்தில்  இதை சோம்பேரித்தனத்தினால்  செய்யாமல்  இருப்பவர்கள் நாளடைவில் ஏமாற்றுப்பேர்வழிகளாக மாறிவிடுவர் என்பது அவரின் கணிப்பு. .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 201, கடிதம் 575 ).


பணத்தை வங்கியில் போட்டு வைக்க வேண்டும் அதுவும் இரண்டு பேரின் பெயரில் கூட்டுக்கணக்கில் போட்டு வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டிருந்தார். இந்த விதிமுறையானது, இன்றைக்கு , தணிக்கை விதிமுறைகளின் கீழ் நிதி நிர்வாக மேலாண்மையை மதிப்பீடு செய்யும்போது கண்டிப்பாக நடைமுறையிலிருக்க வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றது.


2008ல் வெளிவந்த சத்யம் ஊழல் நமக்கெல்லாம் ஞாபகத்திலிருக்கும். அதன் தலைவர் கம்பெனிக்கு வந்த பணத்தை நிலங்களில் முதலீடு செய்து அப்போது நிகழ்ந்த பொருளாதாரச் சரிவின் காரணமாக பெருத்த நஷ்டத்தினைச் சந்தித்து சிக்கலில் மாட்டிக்கொண்டார். விசாரணையில், தான் பேலன்ஸ் ஷீட்டை மாற்றி பணத்தை துஷ்பிரயோகம் செய்து, மக்களை ஏமாற்றியதை ஒப்புக்கொண்டு சிறைக்குச் சென்றார். இந்த ஊழலின் சாரமே, ஒன்றிற்கென்று பெறப்பட்ட பணத்தை விதிக்கு முரணாக இன்னொன்றிற்குச் செலவளித்ததுதான். இதற்காகத்தானோ என்னவோ சுவாமிஜி மிகத் தெளிவாக நியதியை வகுத்திருந்தார். அவர், சுவாமி பிரம்மானந்தருக்கு எழுதிய கடிதத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடுகிறார்: “ பஞ்ச நிவாரண நிதியில் எஞ்சியுள்ளதை ஒரு நிரந்தரப் பணிக்கென வைத்துவிடு. வேறு எதற்கும் அதைச் செலவு செய்யாதே.ப`ஞ்ச நிவாரணப் பணிக்கான எல்லா கணக்குகளையும் சரிசெய்த பின்னர் இவ்வாறு எழுதி வை: ‘எஞ்சியது இவ்வளவு,இது .( ஞான தீபம் பாகம் 11, பக்கம் 123, கடிதம் 508 ).இன்னொரு நற்பணிக்காக.’“ அவருடைய தீர்க்க தரிசனத்தையும் முன்ஜாக்கிரதையையும் போற்றாமலிருக்க முடியவில்லை.


அவருடைய கடிதங்களைப்படித்துப் பார்த்தாலே போதும். ஒரு வரவு செலவு கணக்கை எப்படிப் பதிவு செய்வது என்று ஒரு குறிப்பேடையே ( Accounts Manual )தயார் செய்துவிடலாம். மனிதர்களை எப்படி உருவாக்குவது / கையாள்வதுஎன்பது பற்றியும் ( Personal Manual ) ஒரு குறிப்பேடு தயார் செய்துவிடலாம்.

பல பிரபல நிர்வாக வல்லுனர்கள் விவேகானந்தரின் நிர்வாகத் திறமையை, வழிநடத்தும் திறமையை, தொலைநோக்குப் பார்வையை, தலைமைப் பண்பை வியந்து பாராட்டியுள்ளார்கள். மெக்கின்சே அன்ட் கம்பெனியின் நிர்வாக இயக்குனரான இருந்த திரு. ரஜத் குப்தாவினுடைய அலுவலக அறையினை  விவேகானந்தரின் படம் அலங்கரித்துக்கொண்டிருந்தது.நோபல் பரிசு பெற்ற ரொமைன் ரோலன்ட் விவேகானந்தரை கதாநாயகன் ( HERO )  என்றே அழைத்தார்.


விவேகானந்தர் வாழ்ந்தது வெறும் 39 வருடங்களாக இருக்கலாம். ஆனால் அவர் விட்டுச்சென்ற கருத்துக்கள்,அவை ஏற்படுத்தும் தாக்கம், நம்மை இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தும் சக்தி வாய்ந்தவை.


சுவாமிஜி,  உலகுதழுவிய பார்வையோடு கிழக்கிற்கும் மேற்கிற்கும் ஒரு பாலமாக இருந்தார். வேத காலக் கருத்துக்களை நவீன காலத்திற்குப் பொருந்தும் வகையில் எடுத்துரைத்தார்.


இந்தக் கலியுகத்தில்,ஒன்றிணைந்த சக்தி ஒன்றே வெற்றி தரும் என்ற பொருள் பொதிந்த “சங்க சக்தி கலே யுகே” என்ற வேத வாக்கிற்கு அமைப்பு ரீதியாக வேலை செய்யுங்கள் என்று அர்த்தம் சொல்லி அதற்கு முதன்முதலில் செயல் வடிவம் கொடுத்தவர் அவர்.


சுவாமி விவேகானந்தரை ஒரு செயல் முறை வேதாந்தி என்றழைப்பது முற்றிலும் பொருத்தமானதே.

🌷 தொகுப்பு🌷

🌺 மல்லூர் சித்தர்🌺

Thursday, October 15, 2015

இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்

ஜன்னல்..

அந்த இளம் தம்பதி புதிதாக ஒரு இடத்திற்குக் குடி போனார்கள்.

அதிகாலை காபி குடித்தபடி ஜன்னல் வழியே இருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். 

பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து விட்டு துணிகளை உலர்த்திக் கொண்டிருந்தாள்.

பார்த்துக் கொண்டே இருந்த மனைவி சொன்னாள்,

“அந்தம்மாவிற்குத் துவைக்கவே தெரியவில்லை போல் இருக்கிறது. துணியில் அழுக்கே போகவில்லை பாருங்கள்”

கணவனும் பார்த்தான். 

ஆனால் பதில் எதுவும் சொல்லவில்லை. 

தினமும் அவர்கள் எழுந்து காபி குடிக்கும் நேரமும், பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைக்கும் நேரமும் ஒன்றாகவே இருந்ததால் மனைவி தினமும் அடுத்த வீட்டு சலவை சரியில்லாதது பற்றி தினமும் சொல்லிக் கொண்டேயிருந்தாள்.

திடீர் என்று ஒரு நாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி துவைத்து உலர வைத்த போது பளிச்சென்று சுத்தமாக உலர்வதைப் பார்த்த மனைவி சொன்னாள்,

“அப்பாடா, இப்போது அந்தம்மாள் துவைக்கக் கற்றுக் கொண்டு விட்டாளா..?

இல்லை நல்ல சோப்பை பயன்படுத்த ஆரம்பித்து விட்டாளா என்று தெரியவில்லை... 

இன்று தான் துணிகள் பளிச்சென்று சுத்தமாக இருக்கின்றன..”

கணவன் அமைதியாகச் சொன்னான்,

“இன்றைக்கு அதிகாலையில் தான் நான் நம் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைச் சுத்தம் செய்தேன்”

இப்படித்தான் நாட்டில் நடக்கின்றன. 
நம் வீட்டுக் கண்ணாடி சுத்தமில்லாத போது அடுத்தவர் வீட்டுத் துணிகள் அழுக்குப் படிந்தே காட்சி அளிக்கின்றன. 

ஆனால் நாம் நம் வீட்டுக் கண்ணாடியை சந்தேகிப்பதே இல்லை.

ஒருவேளை அடுத்தவரிடம் உண்மையாகவே குறைகள் 
இருந்தாலும் கூட அவை உடனடியாக நம்மால் கவனிக்கப்படுகின்றன. 

அதற்கு ஏதாவது நியாயமான காரணம் இருக்கலாம் என்று கூட நம்மால் யோசிக்க முடிவதில்லை...

Think and react...🙇🏽🙇🏽
...

Sunday, July 12, 2015

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை தரும் சிம்பிளான யோகாக்கள் !!!

ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாளில் பலமுறை சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் மலச்சிக்கல். இநத் மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான். கண்ட கண்ட உணவுகளின் மீது ஆசைப்பட்டு அவற்றை வாங்கி நன்கு வயிறு நிறைய சாப்பிட்டு, பின் அது வெளிவராமல் அவஸ்தைப்படுவோம். ஏனெனில் அந்த உணவுகள் செரிமான மண்டலத்தில் எளிதில் செரிமானமாகாதது மற்றும் செரிமானத்தின் செயல்பாட்டை சீராக வைத்துக் கொள்ள தினமும் போதிய உடற்பயிற்சிகளை செய்து வராததே காரணம் ஆகும். 

ஆகவே உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்க வேண்டுமெனில், கண்ட கண்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து, தினமும் ஒருசில யோகாக்களை செய்து வாருங்கள். ஆனால் பலரும் யோகா என்ன செய்யும் என்று அதனை செய்வதில்லை. இருப்பினும் மற்ற செயல்களை விட, உடல் ஆரோக்கியமாக இருக்க யோகா பெரிதும் உதவியாக இருக்கும். இதை ஒவ்வொருவரும் உணர்ந்து, அதனை தவறாமல் செய்து வர வேண்டும். 

இங்கு மலச்சிக்கல் பிரச்சனை வராமல் இருக்கவும், அந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கவும் செய்ய வேண்டிய யோகா நிலைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் பார்ப்போமா!!!

பவனமுக்தாசனம்

பவனமுக்தாசனம் (Pawanmuktasana) பவனமுக்தாசனம் செய்வதற்கு முதலில் தரையில் படுத்துக் கொண்டு, முழங்கால்களை மடித்து, மார்பை தொடும் வண்ணம் தூக்கி, பின் இரு கைகளால் முழங்கால்களைப் பிடித்து,க் கொண்டு, தலையால் முழுங்காலைத் தொட முயற்சிக்க வேண்டும். இந்த ஆசனத்தின் போது மூச்சை சீராக விட வேண்டும். இந்த ஆசனம் செய்து வருவதன் மூலம், மலச்சிக்கல் நீங்கி, தொடைகளில் உள்ள கொழுப்புக்கள் கரைந்து, சீரற்ற மாதவிடாய் சுழற்சி நீக்கி, இனப்பெருக்க மண்டலம் ஆரோக்கியமாக இருக்கும்.

ஹலாசனம் (Halasana) 

இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் தரையில் நேராக படுத்துக் கொண்டு, கால்கள் இரண்டையும் மேலே தூக்கி, கைகளால் உடலைப் பிடித்துக் கொண்டு, பின் மெதுவாக கால்களை தலைக்கு பின்புறம் உள்ள தரையை தொட வேண்டும். பின் கைகளை மெதுவாக தரையில் நீட்ட வேண்டும். இந்த நிலையில் 20 நொடிகள் இருக்க வேண்டும். இதேப்போன்று 3 முறை செய்து வர வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் செரிமானம், பசி, இரத்த ஓட்டம் மற்றும் மன நிலை போன்றவை ஆரோக்கியமாக இருக்கும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், உடனே நிவாரணம் கிடைக்கும்.

திரிகோணாசனம் (Trikonasana) 

முதலில் நேராக நின்று கொண்டு, வலது காலை சற்று பக்கவாட்டில் தள்ளி வைத்து, பின் கைகள் இரண்டையும் பக்கவாட்டில் நீட்டி, வலது கையால் வலது காலைத் தொட்டுக் கொண்டு, இடது கை மேல் நோக்கி நீட்டியிருக்க வேண்டும். இதேப்போன்று மற்றொரு காலிலும் செய்ய வேண்டும். இப்படி ஒவ்வொரு பக்கமும் மூன்று முறை என ஆறு முறை செய்ய வேண்டும்.

பாலாசனம் (Balasana) 


பாலாசனம் என்பது தரையில் உட்கார்ந்து கொண்டு, கால்களை பின்புறம் மடக்கி, கால்களின் மேல் அமர்ந்து, கைகளை பின்புறம் கட்டிக்கொண்டு, நெற்றி தரையை தொடும் படி குனிய வேண்டும். இந்த ஆசனத்தின் மூலம் மலச்சிக்கல் மட்டுமின்றி, மன அழுத்தம், சோர்வு, நீங்கி, இடுப்பு, தொடை போன்றவை வலிமையடையும். முக்கியமாக இதனை தொடர்ந்து செய்து வந்தால், முதுகு வலி இருந்தாலும் குணமாகிவிடும்.

சாவாசனம் (Savasana) 

ஆசனங்களிலேயே மிகவும் சிம்பிளானது என்றால் அது சாவாசனம் தான். இதற்கு தரையில் படுத்துக் கொண்டு, கைகளை உடலை ஒட்டியோ அல்லது பக்கவாட்டிலோ வைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக உள்ளங்கை மேல் நோக்கி இருக்க வேண்டும். இந்த நிலையில் 15-20 நிமிடம் இருக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், மலச்சிக்கல் மட்டுமின்றி, வேறு சில நோய்களும் குணமாகும்.

Wednesday, June 3, 2015

தோல்வியாளர்கள்!! வெற்றியாளர்கள்!! :நாலு வித்தியாசங்கள்

தங்கள் வாழ்வில் தொடர்ந்து தோல்விகளையே சந்திப்பவர்களையும், ஒருகட்டத்திற்குப் பிறகு சுதாரித்துக் கொண்டு வெற்றி பெறுபவர்களையும்இருபதாண்டுகளாக சந்தித்து வரும் மனவியல் பயிற்சி நிபுணர் ஒருவர்,இருதரப்பினருக்கும் இருக்கிற நான்கு வித்தியாசங்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அவை என்ன தெரியுமா?
தோல்வியாளர்கள்
இவர்கள், அச்சத்தின் பிடியில் தவிப்பவர்கள். உலகமே இவர்களுக்கு அச்சமூட்டுகிற இடமாய் இருக்கிறது.
சராசரி வாழ்க்கையையும் பயந்து கொண்டே செய்பவர்களாக இருக்கிறார்கள். தங்கள் எதிர்காலத்தைக் காட்சிப்படுத்தும் திறமை இவர்களுக்கு இல்லை. அப்படிமுயன்றாலும் எதிர்மறைக் காட்சிகளை ஏற்படுத்திக் கொண்டு மனச்சோர்வைவளர்த்துக் கொள்கிறார்கள்.
தங்கள் இலக்குகளை நோக்கித் தீவிரமாக எண்ணங்களைக் குவிக்க இவர்களுக்குத்தெரியாது. “ஏதோ செய்யறோம்! பார்க்கலாம்” என்பார்கள். “உங்கள் கனவுகள் என்ன?”என்று திரும்பத் திரும்பக் கேட்டால் ஒரு கொட்டாவியைத் தான் பதிலாகத்தருவார்கள். தங்கள் முயற்சிகளை ஒரு காகிதத்தில் எழுதச் சொன்னால்,எழுதுவார்கள். வரிசைப் படுத்துவார்கள். முதல் அடிகள் சிலவற்றை எடுத்து வைப்பார்கள். போகப் போகக் கைவிடுவார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதைதான்.
வெற்றியாளர்கள்
இவர்கள் துணிச்சல் காரர்களாய் இருக்கிறார்கள். ஒழுங்குபடுத்தப்பட்ட திறமை,திறமை மீது நம்பிக்கை இரண்டும் இருக்கிறது. சில விஷயங்களுக்கு பயந்தாலும் உலகம் ஓர் அற்புதமான இடமாக இவர்களுக்குத் தெரிகிறது.
எதிர்காலம் பற்றிய தெளிவான காட்சிகளைக் கொண்டிருக்கிறார்கள். சுயமரியாதை,சுயகௌரவம் கொண்டு வாழ்கிறார்கள். தங்கள் இலட்சியங்களை மதிக்கிறார்கள். அவை நிச்சயம் வெல்லும் என்று மனதார நம்புகிறார்கள். அதைக் குறித்து உற்சாகமாய்ப் பேசுகிறார்கள்.
தங்கள் வாழ்க்கைப் பயணத்தை புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு எதிர்காலக் கனவுகளும் உண்டு. கனவுகளை அடைவதற்கான நடைமுறைகள் பற்றிய தெளிவும் உண்டு. பல மகத்தான இலட்சியங்களை எளிய மனிதர்களால் எட்ட முடியும் என்கிற உறுதி கொண்டு வாழ்கிறார்கள்.
தங்கள் கடமைகளைக் காகிதத்தில் நிரல்பட எழுதுவதோடு நடைமுறைப்படுத்தவும்தெரிந்து வைத்திருக்கிறார்கள். முதல்படியில் இருந்த உற்சாகம், முழுமையானஅளவில் வளரும்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்கள். தங்கள்இலட்சியங்களையும் அணுகுமுறைகளையும் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

அர்ச்சனை பொருட்களும், அவற்றின் அர்த்தங்களும் !!!

அர்ச்சனை பொருட்களும், அவற்றின்
அர்த்தங்களும் !!!
நாம் அனைவ்ரும் கோயிலுக்கு
செல்லும்போது, தெய்வத்திற்கு
அபிஷேகத்திற்காகவும்,அர்ச்சனை செய்யவும்
பூஜை பொருட்கள் வாங்கி செல்வோம்.
ஆனால் நாம் வாங்கி செல்லும் பூஜை பொருட்கள்,எதற்க்காக வாங்குகின்றோம்
அதன் அர்த்தமும், தத்துவமும் என்னவென்று
நம்மில் பலருக்கு தெரியாது.
சில பூஜை பொருட்களுக்கான அர்த்தத்தையும்,
தத்துவத்தையும் சொல்கிறேன்.
தேங்காய்:
தேங்காயின் ஓடு மிகவும் வலுவாகவும்,கடின
மாகவும் இருக்கும்.அதை இரண்டாக உடைக்கும்போது
வெண்மையான தேங்காய் பருப்பும்,இனிமை
யான தண்ணீரும் கிடைக்கின்றது.அதுபோல்
அகம்பாவம் என்னும் ஓட்டை
உடைக்கும்பொழுது வெண்மையான
மனமும்,அதிலிருந்து உருவாகும் எண்ணங்கள்
இனிமையாகவும்,அன்பாகவும் இருக்கும்.
விபூதி(திருநீரு):
சாம்பலின் மறுபெயரே விபூதி ஆகும்.நாமும்
இதுபோல் ஒரு நாளைக்கு சாம்பல் ஆகப்போகிறோம்
ஆதலால் நான் என்ற அகம்பாவமும்,சுய
நலம்,பொறாமை இருக்ககூடாது என்ற
எண்ணத்தையும்,சிந்தனையும் நமக்கு உணர்த்தவே,விபூதியை நெற்றியிலும், உடம்பிலும்
பூசிக்கொள்கிறோம்.
வாழைப்பழம்:
வாழைப்பழத்தின் நடுவே கருப்பு கலரில்
மிகச்சிறியதாக விதைகள் இருக்கும்.ஆனால்
முளைக்காது.ஏனென்றால் உலகத்தில் உள்ள
எந்த வாழைப்பழ விதையும் பெரும்பாலும்
முளைக்காது.ஆதலால் எனக்கு இந்த பிறவியிலேயே
முக்தியை கொடு வேறு பிறவி வேண்டாம் என
அருள் பெறவே வாழப்பழத்தை இறைவனுக்கு
சமர்ப்பிக்கிறோம்.
அகல் விளக்கு:
ஒரு மின்சார விளக்கினால் மற்றோரு மின்சார
விளக்கை ஒளிர வைக்கமுடியாது ஆனால் ஒரு அகல்
விளக்கினால் மற்றோரு அகல் விளக்கை ஒளிர
வைக்கமுடியும். அதுபோல் நாம் வாழ்ந்தால் மட்டும்
போதாது, அடுத்தவரையும் வாழ வைக்கவேண்டும் என்பதை
நாம் உணர்ந்து கொள்ளவே அகல் விளக்கை ஏற்றுகின்றோம்.
நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு செயலுக்கும் அர்த்தம் உள்ளது.


Ankhamuthu Kumar's photo.

Wednesday, April 15, 2015

ரகசிய மாந்திரீக முறைகள்

ரகசிய மாந்திரீக முறைகள்
(share) செய்யுங்கள்)
அரச மரத்தை சனிக்கிழமை காலை 8 மணிக்குள் 108 முறை வலம் வந்து பின்பு தூப,தீபம்-நிவேதனம் செய்து வலைப்பட்டால் பண புழக்கம் அதிகரிக்கும். தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் செய்து வரலாம்.
செவ்வாயின் பாகமான தெற்கில் 7 நல்லெண்ணை விளக்கு (மண்) வைத்து தூபம் காட்டி வேண்டி வர, வருடக்கணக்கில் வராத கடன்களும் வந்து சேரும். ஏமாற்றப்பட்ட பொருட்களும் திரும்ப சேரும்.வீட்டிலேயே செய்யலாம்.
7 பற்கள் மட்டுமே உள்ள வெள்ளை பூண்டு வாங்கி வந்து அதுதான் 7 காய்ந்த மிளகாகளையும் சேர்த்து ஒரு நூலில் கட்டி வீடு,கடை,ஆபீஸ் வாசல்களில் தொங்க விட திருஷ்டிகள் சகலமும் விலகி நன்மை சேரும்.
வீட்டை விட்டு வெளியே கிளம்பும் பொழுது அருகம் புல் நுனி ஒன்று பறித்து எடுத்து பாக்கெட்டில் வைத்து செல்ல செல்லும் காரியம் வெற்றி அடையும்.
ஆரஞ்சு மரத்தில் வேரை பாக்கெட்டில் வைத்து செல்ல எதிரிகளும் வசியமாவார்கள்.
படிக்கும் பிள்ளைகள் இடது கையை டேபிள் மீது வைத்து படிக்க,எழுத தொடங்கினால் படித்த பாடங்கள் நினைவில் நிற்கும். தேர்வெழுதும் போதும் இதை செய்யலாம்

Monday, March 30, 2015

நம் தாய்மொழியாம் தமிழை தவிர

உண்மையான செல்வம் என்பது என்ன ? குறைவிலா உணவு , ஆரோக்கியமான உடல் நலம் , பெரிய வீடு , மகிழுந்து , நகை , கட்டுக்கட்டாய் பணம் , என ஏராளமானவற்றை குறிப்போம் , ஆனால் திருஞானசம்பந்தர் செல்வம் என்பது என்ன என்பதை மிக அழகாக விளக்குகிறார் .
திருஞானசம்பந்தர் தேவாரம்
செல்வ நெடுமாடஞ் சென்று சேணோங்கிச்
செல்வ மதிதோயச் செல்வ முயர்கின்ற
செல்வர் வாழ்தில்லைச் சிற்றம் பலமேய
செல்வன் கழலேத்துஞ் செல்வஞ் செல்வமே.
செல்வ வளம்மிக்க பெரிய மாடவீடுகள் வானளாவ ஓங்கி உயர்ந்து அழகிய மதியினைத் தோயப் பல்வகை அழகு நலன்களும் உயர்ந்து விளங்கிவருவதும், ஞானச் செல்வர்கள் பலர் வாழ்வதுமாகிய தில்லையிலுள்ள சிற்றம்பலத்தில் எழுந்தருளியுள்ள, வீடுபேறாகிய செல்வத்திற்குரிய பெருமான் திருவடிகளை வாழ்த்தும் செல்வமே, ஒருவருக்குச் செல்வமாம்.
இப்பபாடலில் செல்வம் என்ற வார்த்தையை 7 முறை பயன் படுத்தியுள்ளார் . இந்தளவு நுட்பங்கள் கொண்ட நம் தாய்மொழியாம் தமிழை தவிர வேறு மொழிகளில் இல்லை . தமிழையும் தமிழ் வேதங்களையும் கொண்டாடுவோம் 

Saturday, March 21, 2015

Gayatri Mantra Produces Sound Waves Hoax And Real Study

Gayatri Mantra Produces Sound Waves Hoax And Real Study
In the year 1969, when I was studying in the Vivekananda College,Chennai, I had a professor of Indian Philosophy, Dr.Radha Krishnan.
He demonstrated an experiment on the Mantras,
He had learned Veda Pandit to recite the Beeja Mantras.
Effect of Gayntri Mantra on Human Body.Image.jpg
Effect of Gayntri Mantra.
The Mantra on Ganesha produced an outline of Ganesha as we see Him in Temples appeared on the TV Screen, though the details were not very distinctively seen.
Similar results were for Devi and Subrahmanya and Rudra.
But when the Gayatri Mantra was recited, the picture tube blew up.
We left it at that.
What is certain is that the Mantras unleash energy, at highest levels.
I had posted an article as to how the first two lines of The Purusha Suktha produce electricity and a Bangalore based Company has developed the technology.
And there are reports that Shiva Linga spewed DNA.
Consider the points of similarity between D.N.A. and Shiva.
It is well known that Shiva is Ugra and his name also is Ugra. Ugra means an acid. D.N.A. is also an acid. Vedanta calls that Hiranyagarbha as Sutratma.
Sutratma means an Atma in the form of Sutra i.e. a thread or filament.
The modern science admits that a DNA molecule is really like a thread or filament.
“In a single human germ-cell this filament of DNA is about one metre in length”, says Watson in his book ‘The Double Helix’.
The Yoga-science calls it Mahan, the great. It is really great because it is present in all the living things.
Its molecular weight is one million, so the scientists call it ‘great’. It has no birth. It develops from itself. DNA also duplicates, that means develops from itself. Mr. J. D. Watson describes this as ‘self replication’.

Wednesday, March 4, 2015

பார்க்க வேண்டிய பத்து கோயில்கள் - ஈரோடு

ஈரோடு
1. அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்,
பவானி
அருள்மிகு சங்கமேஸ்வரர் கோயில்
மூலவர்:சங்கமேஸ்வரர் ( அளகேசன், சங்கமநாதர், மருத்துவலிங்கம், வானிலிங்கேஸ்வரர், வக்கிரேஸ்வரன், நட்டாற்றீஸ்வரன், திருநண்ணாவுடையார்)
அம்மன்/தாயார்:வேதநாயகி, பவானி, சங்கமேஸ்வரி, பண்ணார் மொழியம்மை, பந்தார் விரலம்மை, மருத்துவ நாயகி, வக்கிரேஸ்வரி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., தூரத்தில் பவானி இருக்கிறது.
போன்:+91- 4256 - 230 192, +91- 98432 48588
பிரார்த்தனை:குழந்தை பாக்கியம் பெறவும், நினைத்த காரியங்கள் நடக்கவும் நதியில் குளித்து விட்டு இங்குள்ள அமிர்த லிங்கத்தை கையில் எடுத்து ஆவுடையை 3 தடவை சுற்றி வந்து தரிசித்தால் சிறந்த பலன் ...
சிறப்பு:இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் ஆண்டுதோறும் மாசி மகம் ரதசப்தமிக்கு மூன்றாவது நாள் சூரியனின் ஒளி சங்கமேஸ்வரர், வேதநாயகி, சுப்ரமணியர் மீது விழுகிறது. ...
2. அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்,
கொடுமுடி
அருள்மிகு மகுடேஸ்வரர் கோயில்
மூலவர்:மகுடேஸ்வரர்
அம்மன்/தாயார்:திரிபுர சுந்தரி, மதுரபாஷினி.
இருப்பிடம்:ஈரோடு - கரூர் ரோட்டில் கொடுமுடி உள்ளது. ஏராளமான பஸ்வசதி இருக்கிறது. ஈரோட்டிலிருந்து 47 கி.மீட்டரும், கரூரிலிருந்து 34 கி.மீட்டர் தூரமும் உள்ளது.
போன்:+91- 4204-222 375.
பிரார்த்தனை:ராகு கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தலத்தில் பரிகாரங்கள் செய்து திருமணத்தடை நீங்குதல், குழந்தைப்பேறு ஆகியவை அடையப்பெறுகிறார்கள்.

ஒருவருக்கு எத்தனை வயதோ, அத்தனை ...
சிறப்பு:இத்தலத்தில் உள்ள வன்னிமரத்தின் வயதை கணக்கிட முடியவில்லை. மிகவும் பழமையான இந்தமரத்தில் பூ பூக்கும். ஆனால் காய் காய்க்காது. ஒரு பக்கம் முள் இருக்கும். மற்றொரு பக்கம் முள் இல்லை. ...
3. அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்,
பண்ணாரி
அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில்
மூலவர்:மாரியம்மன்
இருப்பிடம்:சத்தியமங்கலம் மைசூர் சாலையில் மேட்டுப்பாளையம் இருப்பதால் போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. சத்திய மங்கலத்திலிருந்து பேருந்து மூலம் கோயிலை அடையலாம். முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : சத்தியமங்கலம் 15 கி.மீ., ஈரோடு 77 கி.மீ., கோவை 82 கி.மீ., சேலம் 170 கி.மீ., மைசூர் 127 கி.மீ., திருப்பூர் 65 கி.மீ.,
போன்:+91-4295-243366, 243442, 243 289
பிரார்த்தனை:கண்பார்வை இல்லாதவர்கள், அம்மை நோய் தீர, குழந்தை வரம், வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது. இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை ...
சிறப்பு:இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு விபூதி கிடையாது. புற்று மண்தான் விபூதி பிரசாதமாக தரப்படுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் அம்மன் கோயில் ...
4. அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்,
பிரப் ரோடு
அருள்மிகு பெரிய மாரியம்மன் கோயில்
மூலவர்:பெரிய மாரியம்மன்
இருப்பிடம்:ஈரோடு பிரப் ரோட்டில் பெரிய மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
போன்:+91-424-2258670
பிரார்த்தனை:வெப்பு சம்பந்தமான அம்மை, கொப்புளம் போன்ற நோய்கள் வராமல் பெரிய மாரியம்மன் அருள்பாலிக்கிறாள்.

பிள்ளையில்லா குறைதீரவும் அம்மனை தொடர்ந்து வெள்ளிக்கிழமைகளில் அர்ச்சனை செய்து ...
சிறப்பு:இந்நகரில் சின்ன மாரியம்மன், வாய்க்கால் மாரியம்மன், கொங்கலம்மன் கோயில், கருங்கல்பாளையம். சின்னமாரியம்மன், சூரம்பட்டிவலசு மாரியம்மன் என ஏராளமான மாரியம்மன் கோயில்கள் உள்ளன. ...
5. அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்,
சென்னிமலை
அருள்மிகு சுப்ரமணியசுவாமி கோயில்
மூலவர்:சுப்ரமணியசுவாமி ( தண்டாயுதபாணி)
அம்மன்/தாயார்:அமிர்த வல்லி, சுந்தர வல்லி
இருப்பிடம்:ஈரோடு பழநி சாலையில் காங்கேயம் அடுத்து சென்னிமலை இருப்பதால் ஈரோடு பழநி, பேருந்து போக்குவரத்து வசதி அதிகம் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : ஈரோடு 27 கி.மீ., காங்கேயம் 18 கி.மீ., திருப்பூர் 40 கி.மீ.,
போன்:+91-4294 - 250223
பிரார்த்தனை:கல்யாணத்தடை நீங்குகிறது. குழந்தை பாக்கியம் கைகூடுகிறது. தவிர செவ்வாய் தோஷம் நீங்குகிறது. இத்தலம் பிரார்த்தனைத் தலங்களில் முக்கியமானது. நோய் நீக்கம், துன்ப நீக்கம், ஆயுள் பலம், ...
சிறப்பு:கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். இரட்டை மாட்டு வண்டி மலையேறிய அதிசயம் மலை மீதுள்ள கோயிலுக்கு அடிவாரத்திலிருந்து தினந்தோறும் திருமஞ்சன தீர்த்தம் பொதிகாளைகள் மூலம் ...
6. அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்,
பாரியூர்
அருள்மிகு ஆதிநாராயணப்பெருமாள் கோயில்
மூலவர்:ஆதிநாராயணர்
அம்மன்/தாயார்:ஸ்ரீதேவி, பூதேவி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 40 கி.மீ., தூரத்தில் கோபி சென்று அங்கிருந்து 5 கி.மீ., தூரம் சென்றால் இத்தலத்தை அடையலாம். பஸ்வசதி உண்டு.
போன்:+91- 4285 - 222 010, 222 080.
பிரார்த்தனை:இங்கு அனைத்து பிரார்த்தனைகள் நிறைவேறவும் ...
சிறப்பு:இக்கோயிலில் யோக ஆஞ்சநேயர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது வால், இரண்டு காலுக்கும் நடுவே கீழே இருக்கிறது. வாலில் மணியும் உள்ளது. பொதுவாக ஆஞ்சநேயரின் திருவடி, வால் தரிசனம் ...
7. அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்,
பாரியூர்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோயில்
மூலவர்:காளியம்மன் (கொண்டத்துக்காரி )
இருப்பிடம்:கோபிசெட்டிபாளையத்துக்கு மிக அருகில் பாரியூர் இருப்பதால் கோபியிலிருந்து பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உள்ளது. கோபிசெட்டிபாளைம் 3 கி.மீ.,
போன்:+91-4285-222 010
பிரார்த்தனை:இத்தலத்தின் கொண்டத்துக்காரியை வணங்குவோர்க்கு திருமண பாக்கியம், குழந்தை வரம், விவசாய செழிப்பு ஆகியவற்றைத் தருவதோடு பில்லிசூன்யம், செய்வினை ஏவல் பகை ஆகியவற்றால் ...
சிறப்பு:இத்தலத்தில் அம்மன் ருத்ரகோலத்தில் அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் அக்னிகுண்டம் இறங்கல் சிறப்பாகும். இது 40 அடி நீளம் ...
8. அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்,
ஈரோடு
அருள்மிகு மகிமாலீஸ்வரர் கோயில்
மூலவர்:மகிமாலீஸ்வரர்
அம்மன்/தாயார்:மங்களாம்பிகை
இருப்பிடம்:ஈரோடு நகரின் மத்தியில் கோயில் அமைந்துள்ளது.
போன்:+91-424- 2267578
பிரார்த்தனை:திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு:இக்கோயிலின் விமானம் 35 அடி உயரத்துடன் நிழல்சாயாமல் கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது. 63 நாயன்மார்கள் சிலைகளும், 16 வகை லிங்கங்களும் அமைக்கப்பட்டுள்ளது கோயிலின் மற்றொரு ...
9. அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்,
திண்டல்மலை
அருள்மிகு வேலாயுத சுவாமி கோயில்
மூலவர்:வேலாயுத சுவாமி, குழந்தை வேலாயுத சுவாமி, குமார வேலாயுத சுவாமி
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து பெருந்துறை செல்லும் வழியில் எட்டு கி.மீ., தொலைவில் திண்டல் மலை அமைந்துள்ளது.
போன்:+91-424-2430114, 94439 44640
பிரார்த்தனை:செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டல் வேலாயுதசாமி கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை முருகனின் காலடியில் வைத்து வேண்டிக் கொள்கின்றனர். இதனால் எண்ணிய ...
சிறப்பு:கொங்கு நாட்டு ஆலய அமைப்பில் தனிப்பட்ட ஓர் அமைப்பு தீபஸ்தம்பத்தைக் கோயில் வெளியே நிறுத்திக் கட்டுவதாகும். திண்டல் மலையில் இதுபோன்ற தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பு. ...
10. அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்,
பவளமலை
அருள்மிகு முத்துகுமார சுவாமி கோயில்
மூலவர்:முத்துகுமார சுவாமி
அம்மன்/தாயார்:வள்ளி தெய்வானை
இருப்பிடம்:ஈரோட்டில் இருந்து 35 கி.மீ., தூரம் கோபிசெட்டிப்பாளையம். அங்கிருந்து அந்தியூர் டவுன் பஸ்சில் 3 கி.மீ., சென்றால் முருகன்புதூர் பஸ் ஸ்டாப். அருகில் கோயில்.
போன்:+91 97157 40960
பிரார்த்தனை:திருமணத்தடை நீங்க, குழந்தைப்பேறு கிடைக்க,  அரசியல் வெற்றி, தொழிலில் அபார வளர்ச்சி, எதிரிகளை முறியடித்தல், செவ்வாய் தோஷம் நீங்க, நோய் குணமடைய இங்கு பிரார்த்தனை ...
சிறப்பு:இங்குள்ள கைலாசநாதர் லிங்கம் சுயம்புவாக தோன்றியது என்பது ...

Tuesday, March 3, 2015

நீங்கள் நீங்களாகவே இருங்கள்

என்னுடைய தோழி ஒருத்தி இப்போ மிகப் பெரிய ஒரு பதவியில், எழுத்து துறையில், சமூக சேவையில், குடும்பத்தில் என, எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருப்பதை பார்க்க பார்க்க ஆச்சரியமாக இருக்கும். 
'எப்படி இவளால் எந்த வேலையும் வேண்டாம் என ஒதுக்கித் தள்ளாமல், இப்படி புத்துணர்ச்சியுடன் செய்ய முடிகிறது?' என, எங்கள் நட்பு வட்டாரத்தில் ஒரு சந்தேகம் உண்டு. ஓய்வு எடுக்கக் கூட நேரமில்லாமல், இப்படி ஓடி ஓடி வேலை செய்து கொண்டே இருந்தால், உடல் ஆரோக்கியம் என்னவாகும் என்ற கவலையும் எங்களுக்கு உண்டு. 
மற்றொரு தோழி உண்டு. அவளுக்கு, வேலைக்கு போய் விட்டு வந்து ஓய்வு எடுப்பது மட்டும் தான் வேலை. ஆனால், அந்த முதல் தோழிக்கு இணையாக உற்சாகமோ, பல பணிகளில் ஈடுபடுத்திக் கொள்ளும் ஆர்வமோ, இவளிடம் இல்லாததும் எங்களுக்கு புலப்பட்டது.

ஆலமரத்து பஞ்சாயத்து: இது என்ன மந்திரம், ரகசியம் என, தெரிந்து கொள்ள கூட்டினோம், ஆலமரத்து பஞ்சாயத்தை!
'ஓய்வு என்பது நாம் எப்போதும் செய்கிற வழக்கமான வேலைகளிலிருந்து, சற்று மாற்றி வேறு வேலைகளை செய்வது!'
தினமும், ஒரே மாதிரியான வேலைகளையே செய்யும் போது, நம் திறனில் ஒரு குறைபாடும், அலுப்பும், ஆயாசமும் வந்து விடுகிறது. அதே வேலையை கொஞ்சம் மாற்றிச் செய்ய முற்பட்டால், ஒரு உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்ளும்.
ஓய்வெடுக்கிறேன் பேர்வழி என்று சும்மா படுத்து, 'டிவி' பார்ப்பது, நீண்ட நேரம் தூங்கிக் கொண்டு இருப்பதல்ல ஓய்வென்பது.
அனுதினமும் புதிய புதிய நிகழ்வுகளால், மனம் ஓய்வின்றி செயல்படுகிறது. மனதிற்கான ஓய்வு வெளிப்படையாக தெரிவதில்லை. மன ஓய்வுத் தேவையை சரியாக நெறிபடுத்துவதும் இல்லை. இசை, தியானம், பிடித்ததை செய்வது, இதமான சூழலில் இருப்பது ஆகியவை, மனதை ஓய்வெடுக்க வைக்கும்.
உடல் ஓய்வென்பது, செயலற்று இருப்பது, மிதமான உடற்பயிற்சி, குளியல் போடுவது ஆகியவை. மனம், உடல் இரண்டும் ஓய்வெடுக்க ஒரே வழி, தூக்கம். இவையெல்லாம், இதுவரை சொல்லப்பட்டு வந்த மன, உடல் ஓய்வு சம்பந்தப்பட்ட செய்திகள். ஆனால், கொஞ்சம் 
மாற்றி யோசித்தாள் எங்கள் தோழி.

பேப்பர் படியுங்கள்:
ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போது, கொஞ்சம் இடைவேளை விட்டு, வேறு மாதிரியான புதுப்புது வேலைகள் செய்யும்போது, நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வது போல் இருக்கும். ஒருநாள் ஓய்வு கிடைத்தது என்றால் கூட, தாமதமாக தூங்கி எழுந்து, இருப்பதை சாப்பிட்டு, 'டிவி'யே கதி என்றில்லாமல், என்றைக்கு வீட்டில் யாருமேயில்லாமல் ஒரு முழுநாள் ஓய்வு கிடைக்கிறதோ... உருவாக்கிக் கொள்ளலாம்; தவறில்லை... 
அன்று விடியற்காலையிலேயே எழுந்திருந்து, பிடித்தமான பாடலை ஓடவிட்டு, மிக மெதுவான, நிதானமாக, அந்நாளை துவக்குங்கள்.
நீண்ட நாள் ஆசைகளை அன்று நிறைவேற்றுங்கள். நிதானமாக பேப்பர் படிப்பது, செடிகளுக்கு தண்ணீர் விடுவது, கோலம் கொஞ்சம் பெரிதாக போடுவது, நிதானமாக குளித்து, பிடித்த மாதிரி உடையணிவது, வழக்கமான உணவு வகைகளிலிருந்து விலகி வேறு உணவு உண்பது என, மாற்றி யோசியுங்கள்.
அன்று, சின்ன சின்ன ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளுங்கள். முக்கியமாக, ரொம்ப நாளாக செய்ய நினைத்து செய்யாமல் விட்ட, சின்ன சின்ன வேலைகளை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள்; கேலிக்குரியதாக தோன்றும். 

அன்புடன் பழகுங்கள்:
ஆனால், 'மாடியில் ஒரு கொடி அதிகமாக கட்டணும்; பழைய செருப்பு, ஷூக்கள் சுத்தம் செய்து வைக்கணும்; பழைய சேலைகளை யாருக்காவது கொடுக்க எடுத்து வைக்கணும்; கால்களை வெந்நீரில் ஊற வைத்து சுத்தம் செய்யணும்; ரொம்ப நாளாக பேசாத ஒரு உறவினரிடம் பேசணும்' என்று ஒரு பேப்பரில் எழுதிக் கொண்டே வரும் போதே, உற்சாகம் மனதில் வந்து ஒட்டிக் கொள்ளும்; இந்தப் பட்டியலில் பாதி வேலை முடிந்து விட்டது போல் ஒரு தெளிவு வரும்.
'நம்மைச் சுற்றி ஒரு குழப்பமும் இல்லை. நான் மிகச் சரியாக, தெளிவாகவே இருக்கிறேன். சின்ன சின்ன குறைகள் என்னிடம் உண்டு; அதையும் என்னால் சரி செய்து விட முடியும் என்ற தைரியமும் எனக்கு உண்டு' என்கிற மாதிரியான எண்ணங்கள் நம்மை உற்சாகப்படுத்தும். அடுத்து என்ன வேலை என்று மனம் துள்ளும். கண்டிப்பாக அசதியோ, அலுப்போ வரவே வராது.
'சோம்பலும், ஓய்வும் தற்கொலைக்கு சமம்' என்று சொல்லி இருக்கிறார் ஒரு பெரியவர்.

நீங்கள் நீங்களாகவே இருங்கள்:
ஓய்வை, சோம்பலோடு சம்பந்தப்படுத்தவே கூடாது. ஓய்வெடுப்பது சோம்பலை விரட்டி அடிக்கத்தான். ஒரு ஓய்விற்கு பின் மனமும், உடலும் உற்சாகமாய் இருக்கணும்; தூங்கி வழிந்தபடி இருக்கக் கூடாது. தினம் தினம் உற்சாகமாய், பிரகாசமாய் இருப்பது, நாயகியர் கையில் தான் உள்ளது. 
ஆயிரம் வேலைகள், கடமைகள் நம்மை சூழ்ந்து அழுத்தம் கொடுத்தாலும், எல்லாவற்றுக்கும், 'பிளீஸ் வெயிட்...' என்று ஒரே ஒரு நாள் அவகாசம் கேட்டு காத்திருக்க செய்து விட்டு, உங்களுக்கே உங்களுக்கு என்று, உங்கள் விருப்பப்படி, எவ்விதமான முகமூடியும் இல்லாமல், நீங்கள் நீங்களாக இருந்து பாருங்கள். அந்த ஒருநாள் மலர்ச்சி, உற்சாகம் நம்மை இன்னும் இன்னும் வேகமாக, திறமையாக செயல்பட வைக்கும்.
இவையெல்லாமே தன் அனுபவத்தின் மூலம் எங்கள் தோழி கூற, நாங்களும் இப்போது பின்பற்ற ஆரம்பித்து விட்டோம். நீங்கள்...?
www.v4all.org