Thursday, March 12, 2015

வாடிக்கையாளர் உங்களை பெருமளவில் தேடி வர

வாடிக்கையாளர் உங்களை பெருமளவில் தேடி வர "சிவசம்புவராகி யந்திரம்"

வியாபாரத்துறை எப்போதும் போட்டி நிறைந்த ஒன்றாகவே இருக்கும். நாம் எத்தகைய வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தாலும் நாம் செய்யும் அதே வியாபாரத்தை பலர் செய்வது தவிர்க்க முடியாததாகும். ஒவ்வொரு வியாபாரியும் மற்றவர்களை விட நன்றாக நடக்க வேண்டும் என்று தான் விரும்புவார். தன் கடையில்/தொழிலில் மட்டுமே வாடிக்கையாளர் நிரம்பி வழிய வேண்டும் என்பது பொதுவாக அனைவரின் விருப்பம். நேர்மை தவறாத வியாபாரிகள்/தொழில் அதிபர்கள் இறைவனை தக்கவாறு வழிபட்டு பூஜைகள் நடத்தினால் இயல்பாகவே அவர்கள் தொழில் வளர்ச்சி அடையும். தொழில் விருத்தி அடைய, எதிரிகளின் சூழ்ச்சி, இடையூறுகளை மீறி வளர்ச்சியடைய 'சிவசம்புவராகி யந்திரம்' தயார் செய்து பூஜையில் வைத்து வழிபடலாம். யந்திரம் செம்பு, வெள்ளி அல்லது பஞ்சலோகத்தில் செய்து வழிபட வேண்டும்.
மூல மந்திரம் : ஓம் ஐம் க்லீம் சௌம் சிவ சம்புவராகி வா வா
ஹூம் பட் ஸ்வாகா

No comments:

Post a Comment